Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மதுவும் பௌத்த அரசியலும்


இலங்கை அரசியலில் ஒரு உத்தியோகபூர்வமற்ற அங்கமாக இருந்துவந்த மது இந்த ஜனாதிபதித்தேர்தலில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.

இலங்கை; அரசியல் யாப்பின் படி ஒரு பௌத்த நாடாகும். பௌத்த சாசனத்தை காப்பது அரசின் கடமையாகும். இதுவரை பல பௌத்த நண்பர்களிடம் விசாரித்ததில் ஒரு சிலர் மாத்திரம் மது பௌத்த தர்மத்தில் தடை என கூறியபோதும் பலரும் கூறும் விடயம் கொஞ்சமாக பாவிக்கலாம் என்பதே. பௌத்தத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறியும் நிலை இதுவரை எனக்கு கிட்டவில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம், பௌத்த புனித நாளான பூரணை நாளில் மது விற்பது சட்ட விரோதம் என்பதே.

அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்தின் சுதந்திர்க்கட்சி அமைப்பாளரானதும், செய்த முதல் காரியம் அப்பிரதேசத்தில் இருந்த மாட்டிறைச்சிக்கடைகளை அகற்றியதே. இது தொடர்பாக COFFEE WITH LAHIRU நிகழ்ச்சியில் சாராயத்தவறணைகள் இப்பிரதேசத்தில் இருந்தபோதும் மாட்டிறைச்சிக்கடைகள் மட்டும் ஏன் அகற்றப்பட்டன என் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் "எப்பவாவது மது அருந்தலாம் கொஞ்சம் fun எடுக்கலாம்" என்றிருந்தது. (இவ்வாறான விடயங்கள் தமிழின் முதன்மை ஊடகங்களில் வெளிவரவேயில்லை. என்பது கவனிக்கத்தக்கது)

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது தனது அடுத்த இலக்கு மதுவை நாட்டில் இருந்து இல்லாதொழிப்பது என்றார்.

இதன் பின், ஜெனரல் சரத் பொன்சேக்காவின் முதல் ஊடகவியலாளர் மாநாட்டில் மது தொடர்பான அவரது நிலைப்பாடு கேட்கப்பட்டது. அவரும் கொஞ்சமாக அடிக்கலாம் என்றார்.

(இக்கருத்தை அவ்ர் தெரிவித்தபின் மேர்வின் சில்வா அக்கருத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார் என்பது ஒரு சுவாரசியம்.)

அத்துடன் அரச தமிழ் ஊடகங்களில் பொன்சேக்காவின் கருத்துக்கெதிராக மக்கள் (முஸ்லிம்கள்) எதிர்ப்புத்தெரிவிப்பதாக காண்பிக்கப்பட்டது.

அண்மையில் எதிர்கட்சி முக்கியஸ்த்தர் மங்கள சமரவீர அன்னதான சாலையாக மாறிய அலறி மாளிகையில் வெளிநாட்டு மதுவும் தாராளமாக புழங்குவதாக குற்றஞ்சாட்டி இதுதான் மதுவை ஒழிக்கப்போவதாக கூறும் அரசின் இலட்சணமா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மது பாவனை தொடர்பாக பௌத்தம் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனக்காட்டுகிறது.

ஒரு மாதத்திற்குமுன் பிரபல பொருளியலாளர் ஹர்ஷா; 31st night உம் பூரணை தினமும் ஒன்றாக வருவதை ஞாபகமூட்டியிருந்தார். பிரபல ஹொட்டேல் வர்த்தக புள்ளியான ஹார்ப்போ மது தொடர்பாக அரசு இன்னும் இறங்கிவருவது சுற்றுலா வணிகத்திற்கு மிக அவசியமானது என்றார்.

இன்று பத்திரிகைகளில்; அரசு ஹோட்டல்களுக்கு இந்த 31st night பூரணை தினத்திற்காக விசேட அனுமதிகளை ஒரு சிறு கட்டணத்திற்கு வழங்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பௌத்த கடும்போக்காளர்களிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வெளியாகவில்லை என்பது கவனத்திற்குள்ளாகவேண்டிய விடயமாகும்.

இவ்வாறான நிலமையில் பௌத்தத்தின் முக்கிய விடயங்கள் மாட்டிறைச்சி, சுகமளிக்கும் ஆராதனைகள், மதமாற்ற தடை சட்டம், அத்துமீறிய / திட்டமிட்ட குடியேற்றங்கள் தானா என்ற கேள்வி உருவாகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

அ. யாத்திரிகன் said...

"இவ்வாறான சம்பவங்கள் மது பாவனை தொடர்பாக பௌத்தம் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனக்காட்டுகிறது".

பௌத்தம் மது தொடர்பில் இருக்கமான போக்கை கடை பிடிக்கவில்லை என்பதை விட, இலங்கை அரசியலில் மது தொடர்பான தீர்மானங்கள் பெரியளவில் தாக்கம் செலுத்தும் காலம் வரவில்லை என்று நினைக்கின்றேன்.

மதமாற்றத் தடைச் சட்டம், மாடறுப்புக்குத் தடை உள்ளிட்ட சிங்கள சமூகத்தின் உண்ர்வுகளை கிளரி விடும் ஒரு அம்சமாக மதுவும் மாறினால், கண்டிப்பாக மதுவும் பௌத்தத்தில் மிக முக்கிய அம்சமாக மாறும்.

தற்போதைக்கு 'குடி' மக்களின் நலனை அரசியல் வாதிகள் காக்க நினைக்கிறார்கள்.

EKSAAR said...

நன்றி அரசியல் யாத்திரிகன் உங்கள் வருக்கைக்கும் கருத்துக்கட்கும்.

//மது தொடர்பான தீர்மானங்கள் பெரியளவில் தாக்கம் செலுத்தும் காலம் வரவில்லை //

அதற்கான காரணம் மது தொடர்பான இறுக்கமான சட்டங்களை கொண்டுவந்தால் அரசியலில் மட்டுமல்ல பௌத்தத்திலும் பின்னடைவுகள் ஏற்படும் என்பதே.. இதை தவிர்ந்துகொள்ள பௌத்தம் கண்டும் காணாததுபோல் இருக்கிறது.

பௌத்தத்திற்காக மாடறுப்பை எதிர்க்கும் பௌத்தர்கள் ஏன் மதுவை எதிர்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?