Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

வேட்டைக்காரனும் கவிக்கோ ரகுமானும்


கவிக்கோ ரகுமான் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
"ஒரு சட்டையின் அழகு சட்டையில் வந்த துணியில் மட்டுமல்ல. சட்டைக்காக வெட்டி நீக்கப்பட்ட துணியிலும் இருக்கிறது"

யதேச்சையாக இன்று காலை இவ்வரிகளை வாசிக்கச்செய்த விதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விஜய் படம் பார்க்கப்போகும்போது நம்மை சில தயார்படுத்தல்கட்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது. முதலில் சகிப்புத்தன்மை. விஜய் சுத்தி சுத்தி அடிப்பதையும் ஆப்பு வைப்பதையும் தோட்டாக்களுக்கு லாவகமாக டாட்டா காட்டுவதையும் இடுப்பில் கைவைத்தவாறு கம்பீரமாக குதிரைச்சவாரி செய்வதையும் பஞ்ச் வசனங்களையும் சகித்துக்கொள்ள எம்மனதை பக்குவப்ப்படுத்த வேண்டும். ரஜனிக்கு இதை செய்யும் நாம் ஏன் இலங்கையில் பெண்ணெடுத்த விஜய்க்கு செய்யக்கூடாது? எனவே நான் படத்துக்கு ஆஜர்.

உலகநாடுகளில் இலங்கைத்தமிழர்கள் வேட்டைக்காரனுக்கு எதிர்ப்பை காட்டப்போவதாக பதிவுலகம் அல்லோலகல்லோலப்பட்டாலும் இங்கு இலங்கையில் எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிரம்பிய காட்சிதான். வரிசையில் கூட்டம்தான்.

என்னைப்பொறுத்தவரையில் போக்கிரி அளவுக்காவது படம் இருக்கவேண்டும். அதே வகையான கதை அதே வகையான காட்சியமைப்பு. ஆனால் எதோ போக்கிரியில் இருந்தது இதில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். (முமைத் கான் என்று யாரும் நினைக்கவேண்டாம்).

வில்லன் தமிழில் சைலன்ஸ் சொல்ல விஜய் "சாக்கடைக்கு முன் அமைதியாய் இருக்கமாட்டேன்" என உறுமினார் பாருங்கள். அட விஜய் அன்று சொன்ன சைலன்ஸ்க்கு அர்த்தம் இன்றுதான் புரிந்தது போங்க.. எனவே சாக்கடை ஊடகவியலாளர்கள் இனி விவேக்குக்கு செய்வதுபோல் எதிர்ப்பை காட்டுவார்களா?

காட்சிகள் அழுக்கில்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. சின்னத்தாமரை பாடலில் வரும் "என் ரோமக்கால்கள்" என்ற வரி வரும்போது அனுஷ்க்காவின் கால்களை (ரோமமில்லாத) காட்டும் படப்பிடிப்பின் நுணுக்கங்கங்கள் அருமை அருமை..

இருந்தாலும் ஸ்கூட்டியில் போகும் அனுஷ்க்கா திரும்பிப்பார்ப்பது, (அயன் ஞாபகம் வருகிறது) கண்டதும் கனவில் குடும்பம் நடாத்தி பிள்ளை குட்டிகளுடன் நிற்பது (தூம் - உதய் சோப்ரா - அலி) போன்ற நேரடியான கொப்பி பேஸ்ட்களையாவது தவிர்த்திருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை விஜய் ரசிகர்கட்கு வெற்றிப்படம். விஜய் எதிரிகட்கு தோல்விப்படம்.

படம் முடிந்த பின் ரகுமானின் தத்துவம் ஞாபகம் வந்தது. படத்தில் வராத வைக்காத காட்சிகளை நினைத்தேன். 300/- க்கு படம் பரம திருப்தி..


சம்பந்தமில்லாமல் ஒரு எக்ஸ்ட்ரா பிட்
தமிழ் ரசிகர்கள் ஒருவரை புகழ்வதில் உலகுக்கே உதாரன புருஷர்கள். இந்தவாரம் ரஜனியின் சிறப்பை வெற்றி வானொலியில் ரசிகர்கள் சொன்னார்கள். அதில் ஒன்று "ரஜனியின் நாவடக்கம்". ஆம் அவர் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. அப்படித்தான் இலங்கைத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் பேசினார். "30 வருஷமா வெல்ல முடியல, நீங்களெல்லாம் ஆம்பளயா?".

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

6 comments:

Anonymous said...

ellaam sari.
kadaisiya antha Rajini bit thevai thana?
nee yaar, entha inam endu kaatittiye thuveshi.
ungalaip pola thoppi purattikalaal thaan engal inam ippidik kidakku.

Anonymous said...

அந்த நிகழ்ச்சியை நான் கேட்டபோது என் மனதில் தோன்றியதை பதிய நினைத்தேன். வரலாறு முக்கியம் அல்லவா? ஆனால் அது ஒரு தனிப்பதிவிற்கான விஷயமும் அல்ல. ஒரு காலத்தில் விஜய்க்கும் இவ்வாறு சொல்லக்கூடும்.

வேட்டைக்காரன் புறக்கணிப்பையே புறக்கணித்த அனைத்து இலங்கைத்தமிழர்களும் துரோகிகளா?

என்ன கொடும சார் said...
This comment has been removed by a blog administrator.
jp said...

nice comments man...keep it up....

subra said...

சும்மா கதைவிட வேண்டாம் ,அவன் எல்லாம் தமிழனாக
இருக்க முடியாது ,இது நிச்சயம்

என்ன கொடும சார் said...

வேட்டைக்காரன் பாக்காதவன் தான் தமிழன் என்றால் இலங்கை சனத்தொகையில் 1% கூட தேறாது.