இலங்கை பதிவர்கள் கச்சதீவு விடயத்தில் கண்மூடிய பூனையாக இருப்பது ஏன்?
இந்திய தொடரில் நடுவர்களின் குழறுபடி! கண்டுகொள்ளாத இந்திய வலைப்பதிவர்கள்
நேற்று இலங்கை அணியுடன் டுவன்டி 20 போட்டியில் இந்தியா தோற்றுப்போனது. இந்தபோட்டியிலும் நடுவர்களின் தரம் கேள்விக்குரியதாயினும் இந்திய வீரர்களால் இலங்கைக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் இந்தியாவில் நடப்பதே டுவன்டி 20க்கு ஒரு விஷேசம். தென்னாபிரிக்க, இந்திய மண்ணில் ரசிகர்களும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைகளும்; ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் இப்போட்டிகளுக்கு மிகுந்த ஆதரவு வழங்கிவருகின்றனர்.
இதே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையே டெஸ்ட் கிரிக்கட்டுக்கும் ஈமைக்கிரியைகளை நடாத்த தயாராவதுபோல் தோன்றுகின்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் பொருத்தமற்ற ஆடுகளம், ரிபரல் சிஸ்டத்துக்கு இந்திய வீரர்கள் ஆதரவினமை, அதனை காரணம்காட்டி அம்முறைமையை இலங்கைத்தொடரில் பிரயோகிக்காமை, இதை இந்தியாவுக்கு சாதகமாக்கிய நடுவர்களின் குருட்டு முடிவுகள் என எல்லாமே இந்திய கிரிக்கட் சபையின் professionalismஐ கேள்விக்குள்ளாக்குகிறது.
இதேவேளை ஸ்டீவ் பக்னருக்கு எதிராக கொதித்தெழுந்தவர்கள்
இதையெல்லாம் மௌனிகளாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியர்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகின்றது.
நேற்று போட்டி முடிந்தபின் ITN இலும் அதன்பின் Eye Channel இலும் இலங்கை கடற்படையின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விவரண நிகழ்ச்சிகள் காட்டப்பட்டன. இதில் இலங்கை கடற்படை பாவிக்கும் நவீன தொழிநுட்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
இதன்போது ரேடார் திரையில் 60க்கும் மேற்பட்ட இந்திய வள்ளங்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவது தெளிவாக தெரிந்தது.
இலங்கையின் மூவின ஏழை மீனவர்கட்குச்சொந்தமான (முக்கியமாக வடமேற்கு பகுதியில் செறிந்துவாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான ) இலங்கையின் வடமேற்கு பகுதி மீன்வளம் இந்தியமீனவர்களால் அபகரிக்கப்படுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவு பற்றி பேசி நியாயப்படுத்துகிறார்கள்! இந்த மீன்வள திருட்டுக்கு ஆதரவாக இந்திய வலைபூ எழுத்தாளர்கள் அதிகளவு எழுதியபோதும் அதற்கு எதிராக எமது நியாயத்தை உரத்துச்சொல்ல இலங்கயின் எந்தப்பதிவரும் முன்வராதது வெட்கக்கேடாகும். அரசாங்கமோ புலிகளோ இந்திய மீனவர்களின் இப்பகல் கொள்ளையை அனுமதித்ததில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்!. BBC இல் இந்தியமீனவர்கள் புலிகளால் கைதுசெய்யப்பட்டனர் என செய்திகள் வெளிவந்திருந்தன என்பதை ஆதாரமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மீனவர்களின் கொள்ளையை விமர்சிக்காமல் இருப்பதன்மூலம் இலங்கையின் தமிழ்மக்கட்கு சில சலுகைகளை பெற்றுத்தர இலங்கப்பதிவர்கள் நாடினால் அது முட்டாள்தனமானதும் வெட்கக்கேடானதுமாகும்.
நடுவர்கள் விடயத்தில் இந்திய வலைப்பூ எழுத்தாளர்களின் மௌனமும் இந்திய மீனவர்களின் கடற்கொள்ளை விடயத்தில் இலங்கை வலைப்பதிவர்களின் மௌனமும் வலைப்பதிவர்களின் நாணயத்திலும் நியாயத்திலும் கேள்வியெளுப்புகிறது.
இனியாவது பயனுற பதிவெழுதுவோம்..
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment