சிம்புவின் படங்களை எப்போதும் நான் தியேட்டர் ல பாக்கணும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதே நம்பிக்கையில் சிலம்பாட்டம் பார்க்க போனேன்.. முதல் சீனே காளை part 2 என்று சொல்லிற்று.. அந்த நம்பிக்கையை படம் முடியும் வரை பொத்தி பொத்தி பாதுகாத்திருக்கிறார்கள்.
தாவதாரம், பில்லா போன்ற படங்கள் சிம்புவுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்படியே சில சீன்களை காப்பியடித்திருக்கிறார்.
படத்தில் இனி வரும் மொத்த தமிழ் சினிமாவும் பின்பற்றவேண்டிய முன்னுதாரணம் ஒன்றும் இருக்கிறது. வழக்கமாக பாடல்களில் பெண்கள் மட்டும் டிக்கியை ஆட்டும் பிற்போக்கு தனத்தை எதிர்த்து ஆணும் பெண்ணும் சரி நிகர் சமன் என்று அடித்து சொல்லும் விதமாக ஆண்களும் தங்கள் டிக்கியை ஆட்டுகிறார்கள். என்னே முன்மாதிரி. தமிழ் சினிமா உருப்படும் இனி.
இனி விஜய குமார் பென்ஷன் வாங்கிட்டு வீட்ல இருக்கலாம். பிரபு அந்த ரோல் க்கு அட்வான்சே கொடுத்து புக் பண்ணியிருக்கிறார்..
படம் ஆரம்பித்ததிலிருந்து where is the party பாட்டு எப்படி இந்த படத்தில் வரும் என்று மண்டையை பிய்க்காத குறையாக யோசித்து கொண்டிருந்த எனக்கு அந்த பாடலை உள் நுழைக்க இயக்குனர் கையாண்ட சமயோசிதம் புல்லரிக்க வைத்தது..
மத்தபடி படத்துல பெருசா கத இல்ல.. இயக்குனர் பேரரசு ஒரே கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்துறவரு என்று ஹிஷாம் சொன்னதுக்கு மறுதலிப்பாக இந்த பட இயக்குனரும் பழைய கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்த நினைத்திருக்கிறார்..
ஆனா என்ன இருந்தாலும் சிம்புவின் படங்களை எப்போதும் தியேட்டர்ல பாக்கணும் என்ற என் அசையாத நம்பிக்கைக்கு பங்கம் வரவில்லை..
ஏன்னா ....
இந்த படத்த குடும்பத்தோடு பார்த்தா செருப்பு அடி நிச்சயம்!
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment