Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?


தேவையான பொருட்கள்

இன்றைய பத்திரிகை – 4

இந்த நாளில் – 10

Jingles – 25

விளம்பரம் – 25

தலைப்பு – 1

பாடல்கள் - 30

நட்ஷத்திர பலன் - விரும்பினால்


இனி ஒவ்வொரு பொருளையும் தயார் செய்யும் விதத்தை பார்ப்போம்.


இன்றைய பத்திரிகை தலைப்பு செய்திகள் மட்டும் போதுமானது. முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி எல்லாம் சேர்த்து வாசிக்கவும். Comments என்ற பெயரில் உங்கள் இஷ்ட அரசியலை செய்யலாம். அல்லது காற்று வாக்கில் கேட்ட செய்திகளை கூட சொல்ல முடியும்.. பேப்பர் வாசிக்க வேறு ஒருவரை arrange பண்ணுவது நல்லது. அவர்கள் வழமையாக பேசும் குரலில் அல்லது கொஞ்சம் குரலை மாற்றி செய்யவும். Fax வருது, வேண்டுமானால் வெள்ளை வேன் follow பண்ணுது என்று சொல்லி எதோ பெரிய அரசியல் செய்தது போல் buildup கொடுத்து இன்னும் கொஞ்சம் காரம் கூட்டலாம்


இந்த நாளில் - இன்றைய தேதியில், லக வரலாற்றில் முக்கிய சம்பவங்களை தேடி எடுக்கவும். உதாரணமாக விமானம் முதல் பரிசோதனை செய்த நாள், 2ம், 3ம்.. பரிசோதனை நாட்கள், முதல் வர்த்தக பயணி பயணித்த நாள், முதல் ராணுவ பயன்பாட்டு நாள், முதல் விபத்து நடந்த நாள் என்று உங்கள் இஷ்டத்துக்கு வருடம் 365 நாளும் வருவது மாதிரி செய்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.. ஒன்றும் இல்லாவிட்டால் உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் கூட சொல்லலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். யாராவது அதை காது கொடுத்து கேட்டால்தானே! (At least அவங்களாவது இதை கேட்க செய்யலாம். சிறுவர்கள் எல்லாம் வானொலி மாமா நிகழ்ச்சி கேட்பதுமாதிரி கையில் ஒரு note book, pen உடன் குறிப்பெடுக்க காத்திருக்க இது என்ன அந்த காலமா?)


Jingles - எல்லா அறிவிப்பாளர்களினது வாழ்க்கையும் பாடல்களோடு நெருங்கியது.. கொஞ்சகாலம் பாடல் கேட்டு பழகியபின் பல பாடல்கள் ஏறத்தாள copy and paste style இல் இருப்பதை உணர்வீர்கள். அந்த நேரத்தில் ஏன் நாமும் முயற்சிக்க கூடாது என்று தோன்றி உங்கள் கைவண்ணம் காட்டும் போது குறை பிரவசமாக வளர்ச்சியற்ற ஒரு பாடல் பிறக்கும். இவ்வாறு பிறக்கும் பாடல்களை இலவசமாக கொடுத்தாலும் வேறு யாரும் ஒலிபரப்பி தன்கையை சுட்டு கொள்ளமாட்டார்கள் என்பதால் உங்கள் radio இல் மட்டும் ஒலிபரப்ப வேண்டிவரும். எனவே இனி அதை jingles என்று safety ஆக அழைக்கவும். இதன் மூலம் பாடல் எழுதுவது இசையமைப்பது (அதுதான் வெட்டி ஒட்டுவது) பாடுவது என பல ஆசைகளை பூர்த்தி செய்யமுடியும். இதை யாரும் ரசிப்பார்களா ? அதற்கான தரத்தில் இருக்கிறதா என்றெல்லாம் வீணான கவலைகள் உங்களுக்கு வேண்டாம்.


விளம்பரம் வரும் விளம்பரம் எதையும் விட்டுவிடாமல் கபால் என்று பிடித்து கொள்ளவும். அதில் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லாம் நமக்கு தேவையற்ற விஷயம். யாரவது கேட்டால் ஆனானப்பட்ட கவிப்பேரரசு கூடசீனா தானா எழுதவில்லயா என்று உதாரணம் காட்டி நியாயம் கற்பிக்கலாம்.


தலைப்பு - உங்கள் இஷ்டத்துக்கு ஒரு தலைப்பை எடுத்து விடுங்கள். பழையதாக இருந்தால் தூசு தட்டி புது look கொடுக்கவும். பழைய தலைப்புகள் தேறாது என்றால் TAMILISH இல் தேடி ஒரு தலைப்பு எடுக்கவும். இதில் மிகவும் இலகுவானது கருத்து கணிப்பு நடத்துவதே.. உதாரணத்துக்கு சாப்பாட்டில் பிடிக்காத பொருள் வெள்ளைப்பூடு வெங்காயம் கறிவேப்பிலை இதில் எது என்று கருத்துக்கணிப்பு நடத்தலாம். உங்கள் radio இன் முதன்மை வருமான வழி sms ஆக இருந்தால் இன்னும் அபத்தமான தலைப்புகளை கொடுக்கவும். அப்போதுதான் wide reach கிடைத்து கூடுதல் sms வரும். தலைப்பில் சில துண்டுகளை garnishக்காக சீவி வைக்கவும்.


பாடல்கள் - பாடல்கள் எதுவாக இருந்தாலும் புதிதாக இருப்பது நல்லது.. அப்போதுதான் இந்த பாடலை முதலில் தந்தது உங்கள்... என்று போடலாம். உங்கள் என்று சொன்னதற்காக எனக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று எந்த listeners உம் வரமாட்டார்கள். என்வே அச்சம் தவிர்க்க. இனி உங்களுக்கு பிடித்த அந்த பாடலை பல முறை ஒலிபரப்பி அது hit ஆகிவிட்டது என்று சொல்லி கொள்ளவும். CD இல் யார் யார் பாடினார்கள் என்று விபரம் இருக்கும். வேண்டுமானால் அதை கூட புதிர் ஆக போடலாம்.


நட்ஷத்திர பலன் - தயாரிப்பதற்கு மிக இலகுவானது இதுதான்.. நலம், சிறப்பு, பயணம், நஷ்டம் போன்ற சில சொற்களை துண்டு காகிதத்தில் எழுதிக்கொள்ளவும். உங்கள் vocabulary அந்த அளவுக்கு இல்லை என்றால் ஒரு pocket dictionary வாங்கி அதில் உள்ள பொருத்தமான சொற்களை கிழித்து ஒரு fish bowl இல் போடவும். இனி இந்த ராசிக்கு என்று நினைத்து கொண்டு ஒரு துண்டு சீட்டை எடுக்கவும். இனியென்ன ஆனானப்பட்ட சிம்ம ராசிக்கு வரும் பலன் கூட உங்கள் கையில்! இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட வேண்டும் என்றால் யாராவது ஒரு மரத்தடி ஜோசியரை தொலைபேசியில் அழைத்து live ஆக நிகழ்ச்சி செய்யவும். இனியென்ன அவர்கூட புகழ் ஜோசியர் ஆக விளம்ம்பரப்படுத்தி காசு தேடலாம்.


எல்லா பொருட்களையும் தயார் செய்து முடித்து விட்டீர்கள். ஒரு பெரிய அண்டாவை எடுத்து முதலில் பாடல்களை சிந்தாமல் ஊற்றவும். அதற்குள் மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து போட்டுக்கொள்ளவும். நன்றாக ஊறியபின் ஒரு beater எடுத்து நன்கு நுரை வரும் வரை beat பண்ணவும். இனி வரும் order இல் glass களில் (அதுதாங்க time! ) ஊற்றவும். மறக்காமல் garnishக்காக் இருக்கும் தலைப்பு சீவல்களை glass இல் அழகாக பொருத்தவும். இனிய குரல் வளத்துடன் பரிமாறவும்.


காலை நேர FM நிகழ்ச்சி” JUICE குடித்தவர்கள் பின்னூட்டம் இடவும், TAMILSIH இல் vote போடவும் மறக்கவேண்டாம்.. இல்லாவிட்டால் அஜீரணம் ஆகக்கூடும்..


தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதாக நினைக்க வேண்டாம்.


தையும் வாசிங்க..

நுளம்புகளை (MOSQUITO)கொல்லும் இலகு சாதனம் - நீங்களும் தயாரிக்கலாம்



EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 comments:

Feros said...

Nice Post

ARV Loshan said...

ஒரு பத்து வருஷமாவது வானொலி நேயரா இருந்திருப்பீங்கன்னு விளங்குது.. நல்ல வழிமுறை தான்.. சில உணவகங்களில தொலைபேசியையும் மிக்ஸ் பண்ணுவாங்கப்பா.. எல்லாம் சரி இதெல்லாம் ஒழுங்கா கலக்கலேன்னா வயிற்றோட்டம் வாந்திபேதி எல்லாம் வந்து பிடுங்கித் தள்ளும்.. பார்த்து பக்குவமாக் கலந்தா தான் கடை களை கட்டும்.. பி.கு - monday காலை வாங்க.. கவனிக்கிறேன்.. ஹீ ஹீ

EKSaar said...

நன்றி Feros வருகைக்கு

நன்றி LOSHAN. நீங்கள் சொல்வது நிச்சயமான உண்மை.. அதுதான் நாங்கள் HYGIENE ஆன கடைக்கு போறோம்..

//monday காலை வாங்க.. கவனிக்கிறேன்.. ஹீ ஹீ//

நான் வர மாட்டேனே.. வர மாட்டேனே ..