உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தெரிந்த வானொலி எது? சந்தேகம் இல்லாமல் BBC தான்.
நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ஆக உலக நடப்புகளின் மீது ஈடுபாடு காட்ட ஆரம்பிக்கும் போது எம்மை அறியாமலே நம் வாழ்க்கையில் BBC இடம்பிடிக்கிறது. எந்த ஒரு செய்தியையும் நிகழ்வையும் இலகு தமிழில் எழிதாய் புரியும்படி தேவையற்ற இழுவைகள் இல்லாமல் தருவதில் முன்னணி எப்போதும் BBCக்கே.
எந்த நாட்டவரை விடவும் இலங்கையருக்கும் BBCக்குமான உறவு மிக வலிது. பின்னிப்பிணைந்தது. யுத்த நாடொன்றில் பிறந்த எமக்கு உண்மை செய்தி சொல்ல எங்கோ ஒரு கோடியில் இருக்கும் BBC தான் துணை.
BBC பிடிப்பது (அதுதாங்க TUNE பண்ணுதல்) ஒரு விஷேட திறமையாகவும் கருதப்பட்ட காலமும் இருந்தது. யுத்த சூழலில் அடிக்கடி TRANSFORMERகள் மின் கம்பங்கள் தகர்க்கப்பட்ட இருண்ட யுகத்தில் BATTERRY போட்டு கேட்டு ஊருக்கே செய்தி சொல்லி பிரபலமான மனிதர்களும் உண்டு.
அத்துடன் எப்போதும் தெளிவில்லாமலும் தெரியாத ஒலிகளுடன் சேர்ந்ததாகவே BBC வரும். அதில் வரும் செய்தியை மாத்திரம் கவனித்து கிரகிப்பது கூட கஷ்டமானதாக இருந்த போதும் ஒருபோது BBC எம் வாழ்க்கையை விட்டு விலகிவிடவில்லை.
சில வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியின் தமிழ் தேசிய சேவை (SLBC) FM அலைவரிசையில் BBC ஐ ஒலிபரப்பும் வாய்ய்ப்பை பெற்றது. இது தெள்ளத்தெளிவாக BBC கேட்கும் வாய்ப்பை / சுகானுபவத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியது.
இருந்தும் இவ்வருடம் SLBCக்கு இருந்த மீழ் ஒலிபரப்பும் உரிமையை BBC ரத்துசெய்தது. சில நாட்கள் சோகமாக கழிந்தது. கடந்த சில வருடங்களில் நம்மில் பலர் வீட்டில் இருந்த பழைய RADIOக்கள் VRS வாங்க; அந்த இடத்தை MOBILE PHONEகள் பிடித்துகொண்டன. என்னதான் வசதிகள் இருந்தாலும் இந்த MOBILE PHONEகளில் BBC பிடிக்க வசதி இல்லை. எனவே நான், BBC கேட்பதற்காக முதலாம் இரண்டாம் குறுக்கு தெரு முழுக்க தேடி ஒரு RADIO வாங்கினேன். வீட்டுக்கு RADIOஐ கொண்டுபோனதும் வீடெங்கும் வெகுநாளுக்கு பின் நெருங்கிய உறவினரை கண்டது போல் சந்தோஷம். மீண்டும் இரைச்சலுடனும் விநோத சத்தங்களுடனும் எங்கள் வாழ்க்கையில் BBC இணைந்துகொண்டது. இந்த புதிய RADIO எங்கள் வீட்டில் BBC RADIO என்று அழைக்கப்படலாயிற்று.
இப்போது சில நாட்களாக BBC கேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி எதுவுமில்லை என்பதில் மாற்றுக்கருத்துக்கு ஒருவரும் இல்லை. உலக நடப்புகளை, தொலைந்த விமானம் பற்றிய செய்திகளை கேட்டு அறிய ஆர்வம் இருந்தாலும் இதுவரை சகித்து வந்த இரைச்சல்கள் எல்லாம் இனியும் சகிக்குமளவுக்கு பொறுமை இல்லை.
இனி இந்த BBC RADIOஐ என்ன செய்வது என்று யோசித்த போதுதான்......
இப்போது மீண்டும் ஒரு தடவை தலைப்பை வாசிக்கவும்.
இதையும் வாசிங்க
காலை நேர வானொலி நிகழ்ச்சி செய்வது எப்படி?
EXTRA
என் MOBILE PHONE இல் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் சதுரம் சதுரமாக மாறுகிறது. தயவு செய்து யாராவது NOKIA MOBILE PHONEஇல் தமிழ் WEB SITE களை வாசிக்க என்ன செய்யலாம் என்று சொல்லி தரவும்
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
5 comments:
எப்படிங்க??? உங்களால மட்டும் இப்படி?????? .................
"என்னா கொடும சார் ....."
சரி, அந்த BBC ரேடியோவ நானே Free யாக எடுத்துக் கொள்கிறேன். (Free என்கிற சொல்லில் அதிகம் கவனம் செலுத்துக. )
வாழ்த்துக்கள்,....... தொடருங்க சார்.........
உங்கள் பதிவு படிக்கச் ரொம்ப சிரமமாக உள்ளது.எழுத்துகள் ரொம்ப சிறிது.
என்ன கொடும சார்
//இனி இந்த BBC RADIOஐ என்ன செய்வது என்று யோசித்த போதுதான்......//
நான் வாங்குறேன் ஆனால் வேலை செய்யாட்டி .....
ஹிட் கொடுக்கிறதுக்கு இப்பிடி எல்லாம் எழுதிறாங்கப்பா. நடக்கிற உண்மை எழுதுப்பா. பொய்யை எப்படி சொன்னாலும் உண்மையாகாது. நண்பன் என்றால் யார்? நீங்களா ராஜா? அப்புறம் வேற என்ன உங்கள் அந்தரங்க வாழ்க்கையையும் எழுதுங்களன். இதென்ன பிழைப்பு மாமு. போய் வேற வேலைய பாருங்க.
Post a Comment