இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐமசுமு அபேட்சகர் கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்ட விடயம் மக்களிடம் தனக்கு ஆதரவு இருந்தபோதும் தான் தோற்றமைக்கு காரணம் எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்ததே என்பதாகும்.
இவர் மட்டுமல்ல, இவரைப்போல் பல அபேட்சகர்கள் தனது கட்சியைச்சேர்ந்த (ஆளும் ஐமசுமு) வேறுசில அபேட்சகர்கள் மக்களால் தமக்கு அளிக்கப்பட்டிருந்த விருப்பு வாக்குகளை தாண்டியும் தோற்கடித்துவிட்டார்கள் என்பதே. ஏற்கெனவே இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த நிலையில், இன்னும் பலர் பல ரகசியங்களை போட்டு உடைக்க வாய்ப்பிருக்கிறது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாத் சாலியின் பிரத்யேக அலுவலர் கூட இவ்வாறான ஒரு கருத்தையே பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். இன்று வெற்றி பெற்றிருக்கும் சிலர் முதல் தடவை விருப்பு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தன்னை விட பின்தங்கி இருந்ததாகும் மீள கணக்கிடப்படும்போது அவர்கள் தன்னை தாண்டி சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆடத்தெரியாதவன் கூடம் கோணலென்ற கதைபோல தோன்றினாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் கூட அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமமானதும் கூட. குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள்மீது கட்சியின் தலைமைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றிந்தாலும் அதையும் மீறு குற்றச்சாட்டுக்கள் வருவது இதில் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இதற்கு முந்தைய தேர்தலில் நடந்திருக்காது என்று எப்படி நம்புவது என்ற கேள்வியும் எழுகிறது.
விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் - 1
இவ்வாறான பிரச்சினைகளை குறைப்பதற்கு நவீன தொழிநுட்பம் உதவும் என்று நம்புகிறீர்களா? அப்படியாயின் இந்த பக்கத்தில் இணையுங்கள்.
http://www.facebook.com/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment