Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரபல் ஆய்வாளர்களின் கருத்து


இலங்கையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று (10.04.2010) BBC தமிழோசை சில ஆய்வாளர்களிடம் பேட்டிகண்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு


தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்படல்

BBC
தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அல்லது முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டிருக்கவேண்டும். அப்படி போட்டியிட்டிருந்தால் இரு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றாக வந்திருக்ககூடிய நிலையில் இருவருக்கும் அது அனுகூலமாக அமைந்திருக்கும் என்றும் சில கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விமர்சனங்கள் கருத்துக்கள் எந்த அளவுக்கு ஏற்புடையது? யதார்த்த்மானது என்று நீங்க் நினைக்கிறீங்க?

DBS ஜெயராஜ்
இரு தரப்புமே கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு சில பொதுபிரச்சினைகள் இருப்பதையும் தங்களுடைய இருப்புக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு கொண்டிருப்பதையும் உணர்ந்து இதைப்பற்றி சொல்கிறார்கள். ஆனால் இதிலே ஒரு பிரச்சினை வரப்போகிறது என்னவென்றால் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை எவ்வளவுதூரம் தமிழர் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்துகின்றதோ அது கணிசமான் அளவு முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒருங்கிணைவதை கொஞசம் தடுத்துகொண்டுதான் இருக்கும்.


ரங்காவின் வெற்றி எதை காட்டுகிறது

BBC
மலையக பகுதியை சாராத ஒருத்தர், அதுவும் ஒரு ஊடகவியலாளர், அங்கு வெற்றி பெற்றிருக்கின்றார். இதற்கு என்ன காரணம்?

பே. முத்துலிங்கம்
இதற்கு குறிப்பாக ஒரு வகையிலே வேதனைக்குரிய விடயம். அதாவது ஒரு ஊடகவியலாளர் மலையகத்தின் அரசியல் தலைவர்கள் என்று கூறப்படுகின்றவர்களை கொண்டுவந்து ஊடக ரீதியில் அவர்கள் மத்தியில் கேள்வியெழுப்புவதனூடாக அவர்கள் இயலாமையை வெளிப்படுத்துவதின் மூலமாக, அவர் ஒரு மீட்பராக அந்த மக்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். மலையகத்தை சார்ந்த பாமர மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? அவர்கள் கடந்த பலவருடங்களாக நலிந்து வருகின்ற நிலையிலிருந்து மீட்பதற்கு யாராவது ஒருவர் வந்தால் போதும் என்ற நிலையில் இருக்கின்ற நேரத்திலே இவ்வாறு ஊடகவியல்மூலம் பிரச்சினைகளை எழுப்புவதன்மூலம் தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ளும்பொழுது அந்த மக்கள் அவரை மீட்பராகத்தான் கவனிக்கிறார்கள். அது மிகவும் வருந்ததக்க தன்மைதான். அவர் யார் என்று பிரச்சினை அல்ல. ஏதோ ஒரு ஊடகவியலாளராக இருந்தாலும் எங்கிருந்து வந்திருந்தாலும்கூட அந்த மக்கள் மத்தியிலே வந்து வேலைசெய்து அவர்கள் வந்திருந்தால் அது பாராட்டத்தக்க கூடியதாக இருக்கும். மலையகத்தில் இவர் மட்டுமல்ல அதேபோல்தான் அவர்கள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை பற்றி அக்கறை செலுத்தாது பெரும்பான்மை இன வாக்களார்களுக்கு கூட வாக்களிக்கின்ற ஒரு தன்மையை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தவகையிலே கூறுவதென்றால் இது மலையகத்தில் காணப்படுகின்ற ஒரு வறுமை. சிந்தனாரீதியான வறுமையைத்தான் இது வெளிப்படுத்தி நிற்கின்றதே ஒழிய இது பெரிய ஒரு மாற்றத்தை வெளிப்படுத்தும் என்பதாக நாங்கள் கருதுவது தவறு என்றுதான் நான் நினைக்கின்றேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: