Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்

கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் எண்ணிவதில் பல குழறுபடிகள் இடம்பெற்றதாக இலங்கையில் வெளிவரும் ஆங்கில பத்திரிகையான The Sunday Times இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குஎண்ணும் நிலையத்தில் ஆளும் ஐமசுமு இன் வேட்பாளர்களிடையேயே சூடான வார்த்தப்பிரயோகங்களும் கைகலப்பும் இடம்பெற்றுள்ளது. நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியைப்பேண பொலிஸ் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு ஐமசுமு இன் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த முதலில் கோரியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இல்லாமல், அல்லது கடை இடத்துக்கான போட்டியில் இருந்ததாக தெரிகிறது.

வேட்பாளர் கத்திரியாராச்சி, முதல் முறையாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தான் 6 ஆவது இடத்தில் இருந்ததாகவும் சில முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து மீள மீள எண்ணிக்கொண்டிருக்க, கடைசியில் தான் 11 ஆம் இடத்தில் முடிந்ததாக கூறுகிறார். ஒவ்வொருமுறையும் எண்ணும்போதும் புது புது எண்ணிக்கைகள் வந்தது என்று முன்னாள் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்துகிறார். இறுதி முடிவு எட்டப்படுவதற்கு அதிகாரிகளுக்கு 5 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம சில வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகளை மீள எண்ணுமாறு கேட்டபோதும் அதே கட்சியைச்சேர்ந்த துமிந்த சில்வா அதற்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்தார்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட குழறுபடிகளில் முன்னாள் அமைச்சர்கள் சரத் அமுனுகம, அளுத்கமகே ஆகியோர் முறுகலில் உள்ளனர்.

திகாமடுல்லயில் ஆரம்பத்தில் பேரியல் அஷ்ரப் முன்னிலை வகித்ததாக கூறப்பட்டபோதிலும் கடையில் அவர் தோல்வியடந்தார். இவருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐதேக இலிருந்து கட்சி மாறிய பலர் தோல்வியடைந்திருந்தபோதிலும் கடைசியாக கட்சிமாறிய ஜோன்ஸ்டன் பெனான்டோ, மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தார், இவர் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வழக்கில் முக்கிய சாட்சியாவார்.

வேட்புமனுவில் குழறுபடிகள் செய்ததற்காக ஐதேக வினால் ஓரம்கட்டப்பட்ட, மத்தும பண்டார கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஐதேக தனது இறுதி பிரசார கூட்டத்தில் கூறியிருந்தது.

தொடரும்..

நீங்கள் இலங்கையில் வாக்களிப்பில் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? facebook இல் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.  நல்லதொரு மாற்றத்திற்காக ஒன்றுசேர்வோம்.
http://www.facebook.com/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: