சுவர்ணவாஹினியில் சனிக்கிழமை 7.30க்கு ஒளிபரப்பாகும் அரசியல் நிகழ்ச்சி And Company. சமகால இலங்கை அரசியலை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி. தேர்தல் காலங்களில் அரசுக்கு சாதகமாக செயற்பட்டாலும் மற்றைய நாட்களில் இது சிறந்த நிகழ்ச்சியே.
கடந்த 10ஆம் திகதி ஒளிபரபான நிகழ்ச்சியில் புதுவருடப்போட்டிகளையும் அரசியலையும் கலந்து சிறப்பாக செய்திருந்தார்கள். அதன் videoஐ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்நிகச்சியில்
பணிஸ் சாப்பிடும் போட்டியில் ரணில் பணிஸ் சாப்பிட தெரியாமல் தடவிக்கொண்டிருப்பார். அவருக்கு உதவ மங்கள சென்றாலும் அவரையும் விடமாட்டார். ஆனால் விமல் வீரவன்ச சம்பிக்க, மேர்வின் என எல்லோருடைய பணிஸையும் சாப்பிடுவார்.
கயிறிழுத்தல் போட்டியில் கயிறிழுக்கும்போது சோமவன்ச, தனக்கும் வாய்ப்பு வழங்குமாறும் ஆனால் ரணிலின் தலைமையின் கீழ் கயிறிழுக்க முடியாது எனவும் கூறுவார்.
இன்னும்
- யானைக்கு கண்வைத்தல் போட்டியில் கண்ணைத்திறந்துகொண்டாவது யானைக்கு கண் வைக்க தடுமாறும் ரணில்
- பொய்சொல்லும்போட்டியில் ஒரே விடயத்தையே கூறும் வீரவன்ச, சம்பிக்க
- ரணில் மஹிந்த இடையே தலையணை சண்டை
- முட்டியுடைக்க முயற்சிக்கும் ரணில் மற்றவரின் மண்டையை உடைப்பது
- விநோத உடைப்போட்டியில் வெற்றி பெற்ற பொதுஜனம்

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment