கடந்த பதிவில் யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் உல்லாசப்பிரயாணிகள் பயன்படுத்தக்கூடிய கடற்படை கப்பல் சேவை பற்றி பார்த்தோம். இப்பதிவில் சாதாரண பொதுமக்களால் பயன்படுத்தப்படக்கூடிய விமானப்படையின் விமான சேவைகள் பற்றி பார்ப்போம்.
விமானப்படை
விமானப்படை திருகோணமலையின் சீனன்குடா பிரதேசத்திற்கும், யாழ்ப்பாணத்தின் பலாலிக்கும் விமான சேவையினை ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் வழங்குகின்றது.
பலாலிக்கான சேவை காலை 8 மணிக்கு கொழும்பு - ரத்மலானை விமான நிலையத்தில் ஆரம்பிக்கிறது. பலாலியிலிருந்து கொழும்புக்கு பி.ப. 4 மணிக்கு திரும்பும். இதற்கு ஒரு வழி கட்டணமாக 9,550/- அறவிடப்படுகிறது.
திருகோணமலைகான சேவை மு.ப.8 மணிக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கான சேவை பி.ப. 2 மணிக்கும் இருக்கிறது. இச்சேவைக்கு நீங்கள் செலுத்த வேண்டியது 4,100/- மட்டுமேயாகும்
திருகோணமலைக்கான சேவையை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமாக இருக்கின்றபோதும், பலாலிக்கு பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் கிளியரன்ஸ் அவசியமாகும்.
விமானத்தில் விமானப்படை அதிகார்களுடன் பயணிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.
திருகோணமைக்கான பயணம் 40 நிமிடம் எடுக்கிறது. விமானம் அதிக உயரத்தில் பறக்காமல் இருப்பது இலங்கையின் இயற்கை அழகினை ரசிப்பதற்கு சிறந்ததாக அமைகிறது.
இவ்விமான சேவைக்கான பயணச்சீட்டுக்களை சின்னமன் லேக்சைட் ஹோட்டலுக்கு முன் அமைந்துள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். வெறும் அரை மணி நேரத்தில் பயணச்சீட்டு உங்கள் கைக்கு கிடைக்கும்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment