முகாவுடன் இணைந்து செயற்பட ததேகூ விருப்பம் தெரிவித்துள்ளது. ஒருபுறத்தில் நாங்கள் இருக்கிறோம், ஒரு சமிக்ஞை மட்டும் காட்டுங்கள், சரணாகதி ஆக ஓடிவருகிறோம் என்பதுபோல் அடிக்கடி அரசுக்கு ஊடகங்களினூடாகவும் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கும் ததேகூ இன்னொரு புறத்தில் இப்படியான செய்திகளையும் தருகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இப்படியான பேச்சுவார்த்தை நடந்தபோது கடைசிதருணத்தில் "வட கிழக்கு" இணைப்பு பற்றி பேசி அதை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஏதோ முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படாமல் இருப்பதன் மூலம் வட கிழக்கை இணைத்து விடப்போகிறமாதிரி..
இனி பேச்சுவார்த்தை நடத்தினால்கூட இதே பிரச்சினையை கடைதருணத்தில் பேசமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி இருக்கையில் எந்தூத்தரவாதத்தில் பேசப்போவது?
அரசாங்கத்திற்கு வெறும் 6 உறுப்பினர்களைமாத்திரம் எதிர்த்தரப்பில் இருந்து பிடுங்கவேண்டிய நிலையில் அந்த 6 பேருக்குள் இடம்பிடிக்க ததேகூ இடம்பிடிக்க முண்டியடிப்பது தெரிகின்றது. அதற்கிடையில் முகா இணைந்துவிடுமோ என்ற பயத்தில்தான் இந்த இணைந்து செயற்படுதல் பற்றி பேசப்படுகிறது. அதுவும் அமைச்சரவை அமைக்கப்பட முன் ஓடவேண்டும் என்ற அவசரம் தெளிவாகவே தெரிகிறது.
தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் அசாத் சாலி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் முஸ்லிம்வாக்குகள் ஐதேமுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் தனக்கு முழு ஆதரவு தந்ததாகவும், தனது தீவிர பிரச்சாரம் காரணமாக ஐதேமு இல் போட்டியிட்ட 3 பேரும் தோல்வியடைந்ததாகவும் மார்தட்டிகொள்ளும் அவர்; ஐதேமு இன் வாக்கு வங்கியில் இருந்து தனக்கு கிடைத்த வாக்குகளில் 30ஆயிரம் கொள்ளையிடப்ப்ட்டுள்ளதாக பத்திரிகைகளில் ஒப்பாரி வைக்கிறார்.
இது உங்களுக்கு நடக்கும் என்பது எப்போதோ எங்களுக்கு தெரியும்.. திருடனுக்கு தேள் கொட்டினா வாய்திறக்க கூடாது ராசா..
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment