Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தாழங்குடா - தமிழ் முஸ்லிம் உறவில் வரிசலுக்கான முயற்சி


அண்மையில் சக பதிவர் முஹமட் அஸ்பர் இன் தமிழ், முஸ்லிம் உறவில் என்ற தலைப்பிலான பதிவை படிக்க நேர்ந்தது. இப்பதிவிற்கு கருத்துரையிட்டிருக்கும் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்கள் இன சௌஜன்யத்தை வலியுறுத்தி தான் பெற்ற கல்வியின் படி நடந்து காட்டியுள்ள அதேவேளை bshakthy என்ற நபர் பொறுப்பற்ற விதத்தில் கருத்துரைத்துள்ளார்.

அதேவேளை ஊடகங்களால் இந்த பண்பற்ற நடைமுறை அம்பலப்படுத்தப்படாமல் இருப்பது ஊடகங்களின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலமையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான ஊடகங்களால் என்ன பயன். எனவேதான் எனக்கு கிடைத்த சில தகவல்களை பதிவிடுவதன் மூலம் இன நல்லுறவில் நம்பிக்கை வைத்திருக்கும் சக பதிவர்களை சிந்திக்கவும் இது தொடர்பாக எழுதவும் தூண்டுவதுமே இந்த பதின் நோக்கம்.

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக்கூடாது என்று சக தமிழ் மாணவர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள 16 கல்லூரிகளில் எவ்வித தடையும் இன்றி அவரவர் மத கலாச்சார மரபுகட்கு ஏற்ப நடப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் கூட முஸ்லிம் பெண்கள் தமது மத ஒழுக்க நெறிகட்கு ஏற்ப உடையணிய அனுமதிக்கப்படுள்ளதும் தெரிந்ததே..

நாட்டின் நாலாபுறமிருந்தும் அறிமுகமற்ற நிலையில் வந்த; இவ்வருடம் புதிய மாணவர்கள் அனுமதிக்காக வந்தபோது வளாகத்தில் உள் நுழைய வேண்டுமாயின் பர்தாவை கழற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் முன்னிலையிலேயே நிர்ப்பந்தித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கு "----- செத்துவிட்டால் யாரும் இல்லை என்றா நினைத்துவிட்டீர்கள். இது எங்கள் கல்லூரி. இங்கு நாங்கள் வைத்ததுதான் சட்டம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

யாருடைய மரணத்துக்கும் பர்தாவுக்கும் முடிச்சுப்போடும் அறிவு ஜீவிகள். அப்படியாயின் அட்டாளைச்சேனை கல்லூரியில் பொட்டு வைக்க அனுமதிக்கப்பட்டிள்ளார்களே.

அத்துடன் மே 27ஆம் திகதிக்கு பின் யாரும் முஸ்லிம் மாணவர்களுடன் பேசுவதுமில்லை.

பகிடிவதை (ரெகிங்) என்ற பெயரில் பண்பாடற்ற இனத்துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி என இயங்க அனுமதி அளித்துள்ள நிர்வாகம் முஸ்லிம் மாணவர் விடையத்தில் இறுக்கமான போக்கை கையாளுகிறது. அத்துடன் ஏனைய மத மாணவர்கள் தமது மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க வசதி செய்திருக்கும் நிர்வாகம் முஸ்லிம் மாணவர்களை நோன்பு கால விஷேட தொழுகையில் ஈடுபட அனுமதிப்பதில்லை.

இவற்றை பிரச்சினையாக்கினால் சித்தியடைய விடமாட்டோம் என்று விரிவுரையாளர்களே மாணவர்களை எச்சரித்து இருக்கிறார்கள்.

நிலமை மோசமடைவதை அவதானித்த மட்டக்களப்பு முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்லூரி அதிபருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டபோது "அப்படு ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களை சந்திக்க நேரமும் இல்லை. அவசியமும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

அண்மையில் ஒரு முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்களிடையே சமத்துவம் பேணாத நிர்வாகம், கல்விக்கே அவமான சின்னமாகும்.

ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுமாறு , தமது கலாச்சாரத்தை கைவிடுமாறு நிர்ப்பந்திக்கும் இவர்களை எப்படி ஆசிரிய தொழில் செய்ய அனுமதிக்கமுடியும்? அத்தனைக்கும் இவர்கள் பெறுவது இலவச கல்வியே!. அல்லது இவர்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளில் தொழில் செய்ய நேர்ந்தால் என்னவாகும்?

இதுதொடர்பாக தேச ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சர் முரளிதரனை (கருணா) சந்திக்க ஒரு ஊடகவியலாளர் முயற்சித்த போது அவரின் பேச்சாளர் "முழுசா மூடிக்கொண்டு வந்து அவர்கள் கல்லூரி என்று காட இடமளிக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

என்ன கொடும சார்

இது தொடர்பாக பிற கல்வி நிறுவனங்களில் என்ன நிலை என்ற் அறிய முற்பட்டபோது வந்தாறு மூலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரெகிங் என்ற பெயரில் தாக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. ஒரு மாணவரின் ஊரை கேட்ட தமிழ் மாணவர்கள் அவர் கண்டு என்று கூறியதும் கெகலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்கிய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 comments:

மொஹமட் அஸ்பர் said...

"அதேவேளை ஊடகங்களால் இந்த பண்பற்ற நடைமுறை அம்பலப்படுத்தப்படாமல் இருப்பது ஊடகங்களின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலமையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான ஊடகங்களால் என்ன பயன். எனவேதான் எனக்கு கிடைத்த சில தகவல்களை பதிவிடுவதன் மூலம் இன நல்லுறவில் நம்பிக்கை வைத்திருக்கும் சக பதிவர்களை சிந்திக்கவும் இது தொடர்பாக எழுதவும் தூண்டுவதுமே இந்த பதின் நோக்கம்"

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களை போன்ற தமிழ், முஸ்லிம் படித்தவர்கள் மட்டத்தில் ஒரு கருத்துப்பரிமாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இருசமூகங்களுக்கும் மத்தியில் தவறான முன்மாதிரிகளை கலைந்தெறிய இதுபோன்ற ஆக்கங்கள் அமையவேண்டுமென்பது எனது அவா......

முதல்மனிதன் ,,,, said...

மிகத் தேவையான ஆக்கம் இதை முளையிலேயே கிள்ள வேண்டும் முயற்சிப்போம் !
முக்கியமான செய்திகளை எமக்குத் தெரியப்படுத்துங்கள் !

-முதல்மனிதன்-

Mohamed Feros said...

/#/இது தொடர்பாக பிற கல்வி நிறுவனங்களில் என்ன நிலை என்ற் அறிய முற்பட்டபோது வந்தாறு மூலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரெகிங் என்ற பெயரில் தாக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. ஒரு மாணவரின் ஊரை கேட்ட தமிழ் மாணவர்கள் அவர் கண்டி என்று கூறியதும் கெகலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்கிய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது./#/

ஆத்தாடி ஆத்தாடி ...