முக்கிய அறிவித்தல். ஒரு பதிவரும் அவரது மனமும் பேசுற மாதிரியான பதிவு இது. இதுல நீல நிற எழுத்தில இருப்பதெல்லாம் மனம் என்பதை மனதில் இருத்தி வாசிக்குக..
சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதுவதாக சொல்லிட்டோமே. என்னத்த எழுதுறது?
இத சொல்றதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்
இப்ப எல்லா பிரபல பதிவர்களும் பிரயாண கட்டுரை எழுதுற நேரம். நாமளும் எழுதாட்டி பிரபலம் இல்லை என்று வாக்குமூலம் கொடுப்பதாகிவிடும். இப்ப என்ன செய்யலாம்
என்ன செய்ய. எழுதணும்
ஆனா இது ஒரு பிஸ்னஸ் டுவர்.
அதுதான் இலவசமா கிடைக்கும்.
வேணும் என்டா காசுகொடுத்து போய் வந்து எழுதலாம்
ஐயையே
எதுக்குப்பா அலறுரே
காசு செலவளியுமே
அப்போ இருக்கிறது வெச்சு எழுத தெரியணும்
இதுல சுவாரசியமா எதுவும் இருக்காதே
சுவாரசியம் ஆக்கணும்
சுவாரசியம் ஆக்கிற எப்படி
எத்தன சினிமா பாத்திருப்பே. ஒரு மசாலா தனமா எழுது
மசாலா என்டா ஒரு பைட்டு கொஞ்சம் கிளாமரு
பைட்டுக்கு எங்க போறது.
அப்போ பைட்டு மாதிரி எதாவது இருக்கணும்
வில்லன் வேணுமே
அதுக்கு சிரிலங்கா சிப்பாய்கள எடுக்கலாம். இப்ப அவங்கதான் பேமஸ். ஆனா ஆபத்து
ஆபத்து இல்லாம் எழுதணும். ஐடியா இருக்கா
ஆ.. ஐடியா எங்கக்கதான் பொறி வந்துச்சு.. ஐடன்டிடி கார்ட் தொலஞ்ச மாதிரி எழுதலாம்
பந்தி பந்தியா எழுதணும்
ஒரு பந்தப்பற்றியே பக்கம் பக்கமா எழுதுற ஆளு நீங்க
கிளாமருக்கு என்ன செய்ய
சிங்கப்பூருல ஒரு குட்டி செட் ஆன மாதிரி எழுதலாம்.
ஐயோ யாரும் நம்ப மாட்டாங்க
அப்போ அலுவலகத்துல இருக்கிற ஒரு பொண்ணு கூட வந்ததா எழுதலாம்.
ஆனா ஏற்கெனவே 90% of girls are cute. Balance in my office என்டு வாக்கு மூலம் கொடுத்திட்டனே
அப்போ எயார்போர்ட்டுல ஒரு குட்டிய பாத்த மாதிரி எழுதலாம்
ஓகே.. குட்டிய பாக்கிற நேரம் ஒரு பாட்டு வேணுமே.. அதையும் நான் எழுதணுமா..
அதுக்காக வாலியையா கூப்பிடமுடியும்..
அப்ப என்ன செய்யலாம்
அந்த சீன்ல பிரீஸ் பண்ணலாம். யாராவது ஒரு பின்னூட்ட பிதாமகர் பாட்டு போடுவாரு
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment