Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மகாவம்ச பௌத்தமும், இராமாயண ஹிந்துத்துவாவும்

டிபிஎஸ் ஜெயராஜின் வலைப்பதிவில் நேற்று The Mahavamsa mindset: Re-Visiting political Buddhism in Sri Lanka என்ற தலைப்புல் தேவானந்தா என்பவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

அதைப்பற்றி கூறுமுன் அதே பக்கத்தில் காணப்படும்
"Just as Jazz demands a different way of playing and listening, blogging requires a different mode of writing and reading." - Andrew Sullivan

என்பதை கட்டாயம் கவனிக்கவும்.

மகாவம்ச பௌத்தம் பற்றிய இக்கட்டுரையின் பல விடயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.

ஆயினும்,
மகாவம்ச பௌத்தத்திற்கு சற்றும் சளைக்காத இராமாயண ஹிந்துதுவம் பற்றியும் ஞாபகத்தில் கொள்ளுதல் அவசியம். (கற்பனைக்கெட்டாதவைகள் இராமாயணத்தில் அதிகம்)

இலங்கையில் மகாவம்சம் இருக்கும் நிலையை காட்டிலும் மிக மோசமாக நீதிமன்றத்தில் ஆதாரமாக கொள்ளப்படும் நிலையில் இந்தியாவில் இராமாயணம் இருக்கிறது.


இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

இதே இராமாயணம் இலங்கையிலும் சில கழகங்களாலும் இயக்கங்களாலும் ஹிந்துக்களின் மனதில் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் ஊடக நண்பர்கள் மிக நாசூக்காக இலக்கியம் என்ற பெயரில் இராமாயண புனைவுகளை திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எதையாவது பேசவேண்டிய அவசியத்தில் இருக்கும் வானொலி தொலைக்காட்சி chat showகளில் இவை அடிக்கடி இடம்பிடிப்பதை பார்க்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் இதே இராமாயண புனைவுகள் தமிழ் ஹிந்துக்களை மௌனிகளாக்கியிருக்கும். இல்லாவிட்டால் 83 கலவரத்தை பேசும் அதே வாய்கள் அதை விட தெளிவான இனச்சுத்திகரிப்பான** யாழ் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட நிகழ்வை பற்றி இன்று வரைக்கும் பேசுவதை தவிர்க்குமா?

** 83 இல் தமிழர்கள் பாரியளவில் சிங்களவர்களால் காப்பாற்றப்பட்டதுபோல் ஓரிரு நிகழ்வுகளாவது யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் இடம்பெறவில்லை என்பதை கருத்தில்கொண்டு.

இன்னும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை அரசு இராமாயண நிகழ்வுகளை உண்மை என்று சொல்லி அதிக இந்திய சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் அண்மைக்காலத்தில் கவனிக்ககூடியதாக இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே அமையும்.

முதலில் வரலாற்று தமிழ் சிங்கள பாடநூல்களிலிருந்து தெளிவான புனைவுகள் அகற்றப்படவேண்டும்.


இன்னும் ஒரு நூறுவருடத்தில் இலங்கை தமிழ் பதிவர்கள் பற்றிய வரலாறு தேடப்படுமானல் ஒட்டுமொத்த பதிவர்களின் ஆதரவோடு சகல இலங்கை தமிழ் பதிவர்களின் கலந்துகொள்ளலோடு (கிழக்கிலிருந்து எழில்வேந்தன், முஸ்லிம்கள் சார்பாக நஸ்ருதீன், சிறுவர்கள் சார்பாக அவர் மகன், பெண்கள் சார்பாக 5 பெண்கள்.. என யாரேனும் ஒரு வரலாற்றாசிரியர் நிறுவக்கூடும் :D

வரலாறு முக்கியமல்லவா? :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2010

2010 ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெறப்போகிறது. ஞாபகத்தில் இருக்கும் இலங்கையரின் பதிவுகளில் சிறந்த பதிவு என்று யோசித்ததில் தான் எனக்கு உடன் ஞாபகம் வந்தது ககூனமடாட்டா . விடயதானத்தையும் அதை அழகாக ரசிக்கும்படி சொன்னதிலும் அதுதான் இவ்வாண்டின் சிறந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.

Christmas[3] or Christmas Day[4][5] is a holiday observed generally on December 25[6] to commemorate the birth of Jesus, the central figure of Christianity.[7][8] The date is not known to be the actual birthday of Jesus, and may have initially been chosen to correspond with either the day exactly nine months after some early Christians believed Jesus had been conceived,[9] the date of the Roman winter solstice,[10] or one of various ancient winter festivals.[9][11] Christmas is central to the Christmas and holiday season, and in Christianity marks the beginning of the larger season of Christmastide, which lasts twelve days

ஒரு சந்தேகம், புல்லட் ககூனமடாட்டா என்றுதான் பதிவுலகிலிருந்து விலகியிருக்கிறாரோ தெரியவில்லை. எதையாவது சொல்லப்போக நாற்பதுபேர் நாலுபக்கத்தால் இருந்து கடித்துக்குதற பாய்வது எனக்கு பழகியிருந்தாலும் அவர் வீண் வம்பு என்று விலகியிருக்கிறாரா? அவர் இன்னும் எழுதவேண்டும் என்பதே என் அவா.

அதற்கடுத்தபதிவு என்று யோசித்ததில் இலங்கை தமிழ் பதிவர்கள் என்று சொல்பவர்களின் வழமையான பாணிக்கும் கருப்பொருளுக்கும் மாற்றமாக வித்தியாசமான விடயத்தை பேசிய எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.
க்கு எனது பாராட்டுக்கள்.

இவரைப்போல் வேற்யாராவது பேசியிருந்தால் எனக்கு link தரவும். தவற விட்டிருந்தால் வாசிப்பேன்.

இப்பொழுதெல்லாம் கணணிக்கு முன் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் காத்திருக்கும்போது அல்லது தூக்கத்திற்காக காத்திருக்கும் தருணங்களில் மொபைலினூடாக நிறைய வாசிக்கிறேன். அது வசதியாக இருக்கிறது. ஆயினும் தமிழில் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழிற்கு kb அதிகம் செலவாகிறது என்பதால். என் பார்வையில் இலங்கைப்பதிவர்களின் ஆங்கிலப்பதிவுகளில் அதிக விடயப்பரப்பும் பரந்துபட்ட பார்வையும் கிடைக்கிறது.

வாசிப்பதற்கு ஆங்கில பதிவுகள் கிடைக்காத தருணங்களில் இப்போதெல்லாம் விரும்பி வாசிப்பது wikipedia. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

அப்படி வாசித்ததில் இரண்டு விடயங்கள்

Sri Lankan Moors
என்ற தலைப்பிலான கட்டுரையில் இலங்கை முஸ்லிம்கள் வணக்கம் என்பதை தவிர்ந்துகொள்வது பற்றியும் இருக்கிறது. என்னுடைய வணக்கம் பற்றிய பதிவுக்கு இதையும் ஆதாரமாக சேர்க்கிறேன். அதேபோல் என்னை வரவேற்கும்போது / வாழ்த்தும்போது அது எனக்கு பிடித்த விதத்தில் இருக்க வேண்டாமா என்று ஒரு கேள்வியையும் முன்வைக்கிறேன்.

Christmas பற்றி தேடியபோது பைபிளில் இதனை கொண்டாடுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் பிறந்த தேதி தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் பற்றியும் இக்கொண்டாட்டம் இங்கிலாந்தில் ஒரு காலத்தில் கிறிஸ்த்தவர்களாலேயே தடைசெய்யப்பட்டிருந்தது பற்றியும் இருந்தது. இது பேகன் இனத்த்வரின் பழக்கமாம். பரி பவுல் கூட இவ்வினத்தை சேர்ந்தவர் என்றும் கிறிஸ்த்துவத்தின் எதிரியாக இருந்தவர் என்றும் குறிப்புகள் கிடைத்தன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3வது பதிவர் சந்திப்பு

இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படும் கொழும்பு பதிவர் சந்திப்பின் 3ஆம் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இம்முறையும் நிகழ்வு கைலாசபதி கேட்போர் கூடம், தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15, காலி வீதி, வெள்ளவத்தை. என்ற முகவரியில் இடம்பெறும்.

Refresh Colombo

Refresh Colombo is a community of web and technology enthusiasts/professionals who come together on a monthly basis to share ideas and meet like minded individuals.

Refresh Colombo events are open to the public. We encourage you to bring a friend or two. Hackers, bloggers, coders, geeks & geek lovers, journalists, techies, entrepreneurs and venture capitalists are all welcome – you can even bring your grandma.


பதிவர் சந்திப்புகளுக்கு நான் தொடர்ந்தும் விமர்சன ஆதரவாளராகவே இருந்து வந்திருக்கிறேன். அதே பாணியை இதிலும் கடைப்பிடிக்க இருக்கிறேன்.

முதலாவது சந்திப்புக்கு பதிவர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. திருகோணமலை, கல்முனை என தூரப்பிரதேசங்களிலிருந்தெல்லாம் பதிவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆயினும் இச்சந்திப்பினூடாக கொழும்பை மையப்படுத்திய ஒரு பதிவர் குழு உருவானது. அதிகாரம் போட்டியின்றி தேர்தலின்றி ஒரு குழுவுக்கு சென்றிருக்கிறது.

இக்குழுவுக்கு பன்முக விம்பம் கொடுக்க சில மூத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையில் இச்சந்திப்புக்கு அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தால் நன்று.

அதோடு நடந்த சந்திப்புகளின் நிகழ்ச்சி நிரலில் எத்தனை வீதம் வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது என்று சுய விமர்சனமும் அவசியம். இல்லாவிட்டால் இதற்கும் வெள்ளவத்தை கடற்கரையிலோ காலிமுகத்திடலிலோ நடந்த / நடக்கும் சந்திப்புகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

இனிமேல் தொடர்ந்து கொழும்பில் சந்திப்பதை தவிர்ப்பதும் அவசியம். ஒரு குழு தனது வசதியை மையப்படுத்தி கொழும்பில் நடாத்திக்கொண்டிருக்க தூரப்பிரதேசங்களுக்கும் சம வாய்ப்பு தருவது அவசியம். தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

பதிவர் சந்திப்பு இலங்கையில் சகல மொழிகளிலும் முதலாக நடைபெற்றது தமிழ் பதிவர்களினுடையதாக இருக்கலாம். (பிழையாயின் திருத்தவும்). ஆனால் இதே பாணியிலான பல சந்திப்புகள் அதன்பின் நடைபெற்றுள்ளன. அவற்றின் வெற்றிகரமான அம்சங்கள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.

இம்முறை சந்திப்பிலாவது காத்திரமான சுய விமர்சனம் இடம்பெறுமா? ஏற்பாட்டுக்குழுதான் செயலில் பதிலளிக்கவேண்டும்.

கேள்வி : சந்திப்புகளை ஒழுங்குபடுத்தும் குழு வெளிநாட்டு பதிவர்களை சந்திப்பதில் சகல சக பதிவர்களுக்கும் வாய்ப்பு சமமாக கொடுக்கவேண்டும். காத்திரமான கருத்துக்களை கொண்ட அகிலன் வெறுமனே இவ்வதிகார குழுவை மாத்திரம் சந்திருந்தார் என்பது ஒரு சிறந்த உதாரணம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - பதிவுலகும் கவனமாக செயல்படவேண்டும்


பாபரி மஸ்ஜித் நில உரிமை குறித்து நாளை தீர்ப்பு வெளிவரவிருக்கிறது. நாளை முழு உலகத்தின் கவனமும் இந்தியாவின் பக்கம் குவிந்திருக்கும்.

அப்துல் கலாமினால் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் இந்தியாவின் நீதித்துறை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்? ஒருவகையில் பார்க்கப்போனால் இந்தியா வல்லரசாகுமா, இல்லாட்டி கர்நாடகமா இருக்குமா என்பதும் நாளை உறுதியாகும்.

The Babri Mosque (Hindi: बाबरी मस्जिद, Urdu: بابری مسجد), Babri Masjid or Mosque of Babur was a mosque in Ayodhya, on Ramkot Hill ("Rama's fort"). It was destroyed in 1992 when a political rally developed into a riot involving 150,000 people,[1] despite a commitment to the Indian Supreme Court by the rally organisers that the mosque would not be harmed.[2][3] More than 2000 people were killed in ensuing riots in many major Indian cities including Mumbai and Delhi

ஆயினும் தீர்ப்பு எப்படி வந்ததாலும் ஊடகங்களின் செயற்பாடு இங்கு அதி முக்கியமாகிறது. எடுத்ததுக்கெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதுபோல செய்திகலை வெளியிடாமல் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிடுவது அவசியம். இது தொடர்பாக இந்திய அரசு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக அறியக்கிடக்கிறது. ஆயினும் கட்டுப்பாடற்ற ஊடகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பதிவுலகம் எப்படி செயற்படும், அதை யாரும் கண்காணிப்பார்களா என்று தெரியவில்லை.

பதிவுலகத்தின் கருத்துக்களால் பெரிதாக வன்முறை எழ வாய்ப்பில்லாமல் போனாலும் (எல்லாரும் வாய்ச்சொல்லில் அல்லவா வீரர்கள்?) ஏற்படக்கூடிய கசப்புணர்வுகள் காலாகாலம் நிலைக்கக்கூடியவை.

எனவே நாம் எல்லோரும் தீர்ப்பு பற்றிய எமது கருத்துக்களை, எதிர்ப்போ ஆதரவோ ஒரு நாலுவாரம் தள்ளி ஆறுதலாக சிந்தித்து எழுதினால் என்ன?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வாரிசு சிஸ்டர் ஆனதெப்படி?

தனுஷின் திருவிளையாடல் படத்தில் வந்த என்னம்மா கண்ணு.. சௌக்கியமா பாடல் எழுதிய கதையை கத்தாரில் நடந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்தார்.
தனிஷின் பாடி லங்வேஜ் பற்றியும் பேசினார்
அதன் ஒலி வடிவம்


அவர் நிகழ்வில் சொன்னது..
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு..
இதைத்தான் நான் அப்பாடலை MP3 இல் Download செய்தபோதும் கேட்டேன்
ஆனால் பாடல் காட்சியில்


வாரித்தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு..
என்று வந்திருக்கிறது.

யாராவது சொல்லுங்களேன்.. எப்படி வாரிசு சிஸ்டர் ஆகிச்சுன்னு..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

அஷ்ரப் - மறக்க முடியாத ஆளுமை. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் சிதறுண்டிருந்த பலத்தை ஒருமுகப்படுத்தி அதை லாவகமாக கையாண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி.

இன்று முஸ்லிம் அரசியலில் ஈடுபடுவோர் எல்லோருக்கும் அஷ்ரப் ஒரு மாமனிதர் என்று சொல்வதும், அவர் பாசறையில் தாம் வளர்ந்தவர்கள் என்று சொல்வதும் மிகுந்த அவசியமாகி இருக்கிறது. இது இவர்களின் அரசியலுக்கு அடிப்படையான மூலதனமாக இருந்தாலும் இதில் இருக்கும் ஆபத்தை சரியாக புரிந்துகொள்வது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்.

நேற்றுவரை முகவரியற்று இருந்தபலர் திடீரென தான் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவதை காண்கிறோம். அல்லது ஏதாவது ஒரு அரசியல் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்க வெறுமனே அஷ்ரப் அன்று இப்படி செய்தார் என்று கூறுவதோ அல்லது ஒரு ஒலிக்கீற்றை ஒலிக்கச்செய்வதோ போதுமாக இருக்கின்றது. இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வரலாற்றில் நபிகள் நாயகத்தை விட உயர்ந்த தலைவர் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் அவருக்குப்பின் வெறுமனே வாய்ப்பேச்சால் அவரை புகழ்ந்துகொண்டு இருந்ததா? இல்லை! ஆனால் அவரின் இலட்சியங்களுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்பங்களிப்பை வழங்க நபிகளாரின் இலட்சியத்தை இன்றுவரை மழுங்கடிக்காமல் சமூகம் முன்னேறிச்செல்கிறது.

அதேபோல் காலித் இப்னு வலீத் (ரழி) என்ற உலகவரலாற்றில் தோல்வியையே சந்திக்காத தளபதியையும் இங்கு ஞாபகப்படுத்துவதும் அவசியம். முஸ்லிம்களின் இராணுவ தளபதியாக தொடர்ச்சியாக வெற்றிகளைத்தேடித்தந்த அந்த தளபதி; அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களால் பதவி நீக்கப்பட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள் சொன்ன காரணம், "வெற்றிகளை பெற்றுத்தருவது இறைவனே.. ஒரு தனிமனிதர் அல்ல என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடையே பாதுபாப்பதாகும்".

I have not dismissed Khalid because of my anger or because of any dishonesty on his part, but because people glorified him and were misled.[97] I feared that people would rely on him. I want them to know that it is Allah who give us victory; and there should be no mischief in the land
—Caliph Umar.

அதனால்தான் ராணுவ தளபதியாக பதவி நீக்கப்பட்டபோதும் தனக்குப்பின் ஆட்சிசெய்ய தகுதியானவராக உமர் (ரழி) அவர்களால் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் பெயரிடப்பட்டார்கள்.

இதன்மூலம் ஒரு தனி நபரில் ஒரு சமூகம் தங்கியிப்பதை இஸ்லாமும் அதன்பின் இஸ்லாமிய வழி வந்த இஸ்லாமிய தலைவர்களும் ஒருபோதும் ஆதரித்ததிலலை என்பது தெளிவாகின்றது.

ஆனால் இன்று அஷ்ரப் பாடுபட்ட இலட்சியங்களை சமூகம் மறந்து தனி மனித வழிபாடு போன்ற ஒன்றை செய்து கொண்டிருப்பதால்தான் அன்று அஷ்ரப்பினால் சாதிக்க முடிந்த பலவற்றை எம்மால் இன்று சாதிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே இன்று முஸ்லிம் சமூகம் செய்யவேண்டியிருப்பதெல்லாம் அஷ்ரப் என்ற இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் பேசிப்பேசி எதிர்காலத்தை இழக்காமல் அவர் பயணித்த பாதையில் பயணிக்ககூடிய தகுதியான தலைவரின்பின் அணிசேர்வதே..

அஷ்ரப் அவர்கள் மரணித்து இன்றோடு 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி இரண்டு கட்டுரைகள்
அஷ்ரப் - அவர் வயற்காரனாக இருந்தார்
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

18 ஆவது திருத்தம்


  • ஊடகங்களின் கபட நிகழ்ச்சித்திட்டம்..
  • 18 ஆவது திருத்தம் முடியாட்சிக்கு வழிகோலுமா?
  • பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது அதிகார துஷ் பிரயோகத்தை தடுக்குமா?
  • தமிழ் ஊடகங்களின் காழ்புணர்ச்சி
  • ததேகூ எதிர்க்கும்! சீ சீ இந்த பழம் புளிக்கும் !
  • இன்றைய ஆகக்குறைந்த தேவை என்ன?

அரசியல் அமைப்பில் 18 ஆவது திருத்தம் தொடர்பாக இன்று அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுவதை காண்கிறோம். இதில் கூட ஊடகங்களில் தமிழ் ஊடகங்கள் ஒரு திட்டத்துடனும் ஆங்கில சிங்கள ஊடகங்கள் இன்னொரு நிகழ்ச்சி திட்டத்துடனும் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.
Bar Association statement opposing the 18th Amendment http://bit.ly/cTEm0f

யுத்தம் முடிந்து செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது பிரச்சினையாக்கி அதை விற்று காசு சம்பாதிக்கும் மிக கீழ்த்தரமான உத்திக்கு ஜனநாயக சாயம் பூசி இவ்விரு வகை ஊடகங்களும் அதற்கு மேல் வாசனைக்கு தமது நிகழ்ச்சி திட்டத்தை கலந்து தருகின்றன. கடைசியில் கேக் ஐ தின்றாலும் ஏன் தொட்டாலும் இந்த வாசனை தொற்றிக்கொள்ளும் அபாயம்இருக்கிறது.

18 ஆவது திருத்தத்தில் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விதி முறைகளை மாற்றுவது மட்டும் இடம்பெறவில்லை. ஒருவர் ஜனாதிபதியாக எத்தனை தடவை பதவி வகிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களே. சந்திரிக்கா போன்ற ஒரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்தவும் சமமான தடவைகள் மாத்திரம் பதவி வகிப்பது என்பது பயங்கரவாதத்திட்கு ஆதரவளிக்காத மக்களுக்கு நியாயமாக தோன்றப்போவதில்லை. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அன்றி யாரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவும் முடியாது. 2 தடவைக்கு மேல் மக்கள் ஆணை பெற்று பதவி வகிக்கும் ஜனாதிபதி முறை முடியாட்சி முறையும் அல்ல.

இது தேர்தல் முறைகேடுகளை அதிகரிக்கும் என்றும் அரச வளங்களை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று சிலர் சொன்ன போதும் 2 தடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி கூட தனது கட்சி பதவியில் இருப்பதை உறுதி செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற உத்தரவாதமும் இல்லை. அதேபோல் மகிந்த வுக்கு பிறகு பசில் ஜனாதிபதியாக அல்லது வேறொரு உறவினர் ஜனாதிபதியாக போட்டியிடவே வாய்ப்புள்ள நிலையில் பதவிவகிக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மாட்டார் என்று யாரு கருதவும் முடியாது. ஆக வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல,

இன்னும் ஐதேக சின்னாபின்னமாகியுள்ள நிலையில் ஆளும் அரசாங்கத்திற்கு இன்னும் இரு மேலதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. பொது எதிர்கட்சியாக இணைவதற்கு பொன்சேகா தரப்பு கூட கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் பலமிழந்த நிலையில் இருக்கிறது.

இவ்வாறு யதார்த்தம் இருக்கும் நிலையில் சகல ஊடகங்களும் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை பற்றி மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறது. இது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதை போன்றது. ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டும் எதிர் சிந்தனை யாளர்களுக்கு செய்தி தீனியை இட்டு தமது வருமானத்தை பெருக்கி கொள்ளுகிறது. அதேவேளை ஜனரஞ்சகமான ஒரே தலைவரான மகிந்தவிற்கு ஆதரவான மக்கள் இதை கணக்கில் எடுக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவு நிலையையே எடுப்பார்கள் என்தால் இவ்வெதிர்ப்பை சமாளிப்பதை இலகுவாகவும் ஆக்குகிறார்கள். மாறாக இத்திருத்தத்தில் உள்ள ஏனைய பாதகமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் கட்சி பேதமின்றி ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியும். இதை செய்யாமல் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் வெற்றுக்கூச்சல் போடுகின்றன.

தமிழ் ஊடகங்கள் ஜனாதிபதி மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டும் இடமாக இதை பாவிக்கிறார்கள். ததேகூ பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் பெருவாரியான தமிழர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிந்திருப்பது அவர்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதி இல்லை என்பதனை தெளிவாக்கும். அதேவேளை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ததேகூ எதிர்ப்பு தெரிவிக்க போகின்றது என்று அறிவித்திருக்கிறது. அரச தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்து இன்று அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ள நிலையில் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இது இருக்கிறது. ததேகூ ஒரு கொள்கையுடைய கட்சியாக இருந்திருந்தால் ஆரம்பம் முதல் ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கமாட்டோம் என்று (வழமை போல ) அறிக்கை விட்டிருக்கலாம் தானே ?

தேர்தல் ஆணையாளரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக சிலர் அலறுகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்யவில்லை. வெறுமனே முன்னுக்கு பின் முரணான அறிககிகளாலும் செயல்களாலும் எரிச்சல் அடைய செய்வது மட்டுமே அவர் இதுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருப்பது. இதைவிட முழுமையான தேர்தல் முறை மாற்றத்தை பொதுமக்கள் கோரவேண்டும். ஆக குறைந்தது எமது காலத்தை விரயம் செய்து பெரும் பொருட்செலவில் நடாத்தப்படும் இன்றைய பழைய தேர்தல் வாக்களிப்பு முறையாவது மாறவேண்டும். அதற்கு தங்கள் ஆதரவை இதன்மூலமாவதுபதிவுசெய்யலாம்..
http://www.facebook.com/home.php?#!/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703?ref=ts

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முகாவின் முடிவு சரியா?

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (முகா)அரசுக்கு யாப்பு தொடர்பான இருமாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்தவுடன் உடன் படிக்கைக்கு வந்திருக்கிறது..

முதலில் மக்கள் ஏன் முகா வுக்கு ஆதரிவளிதார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்?

மகிந்த அரசின் மீதான வெறுப்பினாலா?

இல்லை என்பதை நீங்கள் அறியாவிட்டால் நீங்கள் இன்னும் அரசியல் களத்தில் போதிய அறிவு பெறவில்லை என்பது நிரூபணமாகும். ஒரு சிலர் கொண்ட வெறுப்புக்கும் காரணமாக இருப்பது முகாவை மகிந்த பிரித்திருக்கிறார் என்பதே தவிர மகிந்த மீது தீரா பகை கொள்ள வேறு காரணம் இல்லை..

மஹிந்த அரசு சேவை செய்யவில்லையா?
அது யுத்தத்தை முடிக்கவில்லையா?
தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லையா?
அபிவிருத்திகள் செய்யவில்லையா?
இன்னும் 6 வருடத்திற்கு அல்லது பெரும்பாலும் 12 வருடத்திற்கு இவ்வரசு ஆட்சியில் இருக்காதா?

இல்லை என்ற பதில் நீங்கள் மகிந்த மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிபாடாகதான் அமையும்.
I supported Ranil in the 2005 election, but he didn’t run in 2010, so there isn’t really anything to support. I don’t see why a guy who won’t run for President still wants to retain control of the opposition though, in reality, he no longer has control. Some people really believe in the UNP or are simply to incompetent to cross, and that’s who’s left. Most of the bright lights have left the UNP and now it looks like Rauf Hakeem and the Sri Lanka Muslim Congress are on the way out.

indi.ca

ஐதேக ஆட்சிக்கு வரும் அறிகுறி எங்காவது தெரிகிறதா?
இல்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.. அடுத்த தலைவராக வரக்கூடிய சஜித்க்கும் தெரியும்.. இவ்வளவு ஏன்? தனக்கும் சஜித்துக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக நாமல் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் வாக்களித்து வந்த நாமலை சஜித் இன் அம்மா ஹேமா உச்சிமோர்ந்ததும் ரகசியம் அல்ல..

இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக மகிந்தவை தனியாக ரணில் சந்தித்ததும் சபா நாயகர் பதவியை விட்டுகொடுக்க முன்வந்ததும் நேற்றுவரை மகிந்தவுடன் தேநீர் அருந்தி பேசிக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டிருக்கும்போது
முகாவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் இந்த தலைவர் மட்டும் ஐதேகவுடன் ஒட்டிகொண்டிருக்கிறார் என்று விமர்சிக்க மாட்டார்களா?

ஒற்றை உறுப்பினரை கொண்ட கணேசனின் கட்சியில் பிரபா கணேசன் அரசுக்கு தாவிவிட்டார். மின்னலில் சீறிக்கொண்டிருந்த ரங்கா நாமளுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாட எல்லையில்லா ஆசைகொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி தராததால் ஐதேக மீது கோபம் கொண்டிருந்த மனோ கணேசன் பிரபா கணேசனை பிரித்த கோபத்தினால் மட்டும் ஐதேகவுடன் ஒட்டி இருப்பார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரபா கணேசன் ஊடாக வேண்டிய அரச ஒத்தாசைகள் கிடைக்கும் .

ததேகூ கூட என்று அரசிலிருந்து ஒரு கண்சாடை கிட்டும்.. ஓடிப்போய் சேரலாம் என்று தருணம் பார்த்திருக்கும்போது ஏன் முகா மட்டும் எதிர்த்து நின்று கால விரயம் செய்யவேண்டும்? இந்த ததேகூ ஆதரவு ஊடகங்கள்தான் இப்போது முகா அரசுடன் சேர்ந்துவிட்டது என்றுஓலமிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்தால் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதே தெளிவாகின்றது..

இதில் மிகப்பெரிய கோமாளியாகியிருக்கிறார் ஐதேக பிரதி தலைவர் கரு. முகா யானை சின்னத்தில் போட்டியிட்டது என்றும் அது ஐதேகவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஐதேக பலமாக இருந்தபோது பல தலைகளை மஹிந்த அணிக்கு கூடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி வந்தவர் இந்த லாஜிக் தனக்கு பொருந்தாது என்றுநினைத்திருக்கிறாரோ..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இவர்களால் என்னபயன்?

இலங்கையில் நடக்கும் ஒருநாள் போட்டி தொடரை பார்க்கும் வாய்ப்பு கிட்டாவிட்டாலும் இணையங்களிநூடாக செய்திகளை அறிந்துவருகிறேன்..

இலங்கையின் பதிவுலகில் சில முக்கிய பதிவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது.. வெறுமனே ஹிட்ஸ் தான் இவர்களின் இலக்காக மாறியிருப்பதால் ஆக கூடுதலான ஹிட்ஸ் வரக்கூடிய இந்தியாவுக்கு சார்பாகவே எதையாவது எழுதுவதுதான் இவர்களின் வேலையாக போயிருக்கிறது.. ரண்டிவ் மற்றும் தர்மசேன பற்றி எழுத நேரம் இருக்கும் இவர்களுக்கு இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய இருக்கும் வாய்பை நிராகரித்தது ஒரு உபரி செய்தியே..

The Umpire Decision Review System (abbreviated as UDRS or DRS) is a new technology based system currently being used on an experimental basis in the sport of cricket. The system is being used only in Test Cricket for the sole purpose of reviewing the controversial decisions made by the on field umpires in the case of a batsman being dismissed or not. The new revived system was officially launched by International Cricket Council on 24 November 2009 during the first test match between Pakistan and New Zealand at the University Oval in Dunedin.



இவர்கள் எதை எழுதினாலும் தான் இலங்கையன் என்ற உணர்வுட எழுதாவிட்டாலும் இந்த இந்தியாவுக்கு வால் பிடுத்து தான் ஹிட்ஸ் சம்பாதிக்கணும் என்றிருந்தால் இவர்களால் என்னபயன்?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Tag பண்ண விடாதீங்க

Facebookல உங்கள நிறைய பேர் attention எடுக்கிறதுக்காக tag பண்ணுவாங்க. நாமளும் கண்டுக்காம இருந்திருக்கிறோம்.
ஆனா அதுல இருக்கிற ரோதனைகள தெரியுமா?

இலங்கை பதிவர்களின் அச்சுறுத்தல் காரணமாக நான் புலம் பெயர்ந்தது உங்களுக்கு தெரியும்தானே.. (அப்படிதான் எல்லா புலம்பெயர்ந்தவங்க்களும் சொல்வாங்க. நிஜ காரணம் ஊருக்கே தெரியும்) என்னதான் புலம் பெயர்ந்தாலும் facebookக விட்டு புலம் பெயரமுடியுமா?

ஆனா இங்க வந்து facebookல log ஆக பார்த்தா இப்படி ஒரு message வருது..

சரி என்னதான் நடக்குது பாப்போம்னு போனா


4 வது stepல வந்தது பெரிய ஆப்பு..
இந்த படத்துல இருக்கிறது யாருன்னு கேக்குது .

இவனுங்க என்ன அனுஷ்காவா இல்ல நமீதாவா? பார்த்து அடையாளம் காண..

மக்கா இனி யாரும் என்ன tag பண்ணாதீங்க.. பண்ணினீங்க கெட்டவார்த்த யால திட்டிபுடுவேன் ஆமா..

வாசிச்ச நீங்க செய்யவேண்டியது உங்கள facebookல tag பண்ணினவங்கள remove பண்றதுதான்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மனசாட்சிக்குவிரோதமில்லாமல் காரணத்தை சொல்ல முடியுமா?

நண்பர்களே.. ஒரு ஓய்வுக்கு பின் மீண்டும் நான் வந்தாச்சு..

நேற்று ஒரு துயர சம்பவம் நடந்து 20 வருசமாகியிருக்கு..
40, 50 வருசத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் இன்னமும் சொல்லப்படுகின்ற வேளையில் இதெல்லாம் சொல்லத்தான் யாரும் இல்லை.

இந்த பதிவுலகம் மனிதாபிமானம் பற்றி பேசும் அதேவேளை, உள்ளே வஞ்சகத்தை சுமந்திருப்பதை இது தெளிவாக்குகிறது.

இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்களே, காத்தான்குடி படுகொலைகள் பற்றி நீங்கள் இதுவரை எழுதியிருக்கிறீர்களா? காரணத்தை சொல்ல முடியுமா? மனசாட்சிக்குவிரோதமில்லாமல்..

காத்தான்குடி படுகொலைகள் பற்றி தெரிய இந்த linkகளை பின்தொடரலாம்
http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm
http://en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

எக்சார் எழுதும் கடிதம்

நலம். உங்கள் நலத்திற்கு இறைவன் எப்போதும் அருள்பாலிக்க வேண்டிக்கொள்கிறேன்.

முதலில் பதிவுலகில் நான் இருப்பதற்கான காரணங்களையும் சொல்லவேண்டும்.

லோசனின் பதிவுகளினூடாக பதிவுலகு பற்றிய அறிமுகத்தை பெற்றுக்கொண்டபோதும் அதே காலத்தில் ஹிஸாம் எழுதிய "வடபுல சோனிகள் .." என்று ஆரம்பிக்கும் பதிவில் நடந்த விமரிசனங்கள்தான் என் பாதையை தீர்மானித்தது.

எல்லோரும் ஒன்றை பற்றி மற்றும் பேசுகின்ற கடிவாளம் போட்டமாதிரியான இலங்கை பதிவுலகில், எனக்குத்தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவுசெய்தல் அவசியம் என உணர்ந்தேன். கருத்துக்கள் சரியோ பிழையோ (அது அவரவர் பார்வையை பொறுத்து என்பது நீங்கள் அறிந்ததே) அவை சொல்லப்படுவதன்மூலம் இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது என்று உணரச்செய்வதே என் எழுத்தின் நோக்கம். இது ஆரோக்கியமான ஜனநாயத்திற்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.

எனது முதல் 3 பதிவுகள் நானே எழுதி நான் மட்டுமே படித்திருக்கிறேன். அதை பெரிதாக ரீச் ஆகவில்லை.
நவீன தொடர்பாடல் தொழிநுட்பமும் பெட்ரோலும்
ROBIN HOOD அரசாங்கம்
பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைச்சரவையும்
ஆனால் இவையே நான் எழுத நினைக்கும் பதிவுகள். என்ன செய்ய.. இவை எவை பற்றியும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமிலலை. இவையெல்லாம் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் ரீச் ஆகும். ஆனால் அது பற்றி எழுத அங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

அதன்பின் கொஞ்சம் தமிழ் மக்கள் படிக்கிறமாதிரி பதிவுகள். ஆனால் அவற்றைபற்றி பதிவுலக ஆசானிடம் கருத்து கேட்டால் எல்லாம் மொக்கை என்றார். பிறகு நான் கவலைப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பலருடையதும் மொக்கைதான் என்றார்.

ஆக மீண்டும் எழுதவேண்டிய தலைப்புகள் பற்றி என்னுடைய சீர்தூக்கலை செய்தேன். இப்போது என் பதிவுகளை "என்ன கொடுமை சார்" என்கிறார்கள். அப்பாடா.. அது போதும்.. இந்தப்பாதையிலேயே இனியும் தொடர இருக்கிறேன்.

ஆயினும் பலர் குற்றஞ்சாட்டுதல் போல் கவனிக்கப்படவேண்டும், பெருமை பெறவேண்டும் என்பது என் நோக்கமல்ல. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஏறத்தாள 10 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது "அறிவிப்பாளர்கள் ஏன் சமூகத்திற்கு பெரிதாய் எதுவும் செய்வதில்லை" என்ற பேச்சு வந்தது. அப்போது என் நண்பன் ஒருவன் கூறிய காரணம், "அது புகழை மையமாக கொண்டு இயங்கும் உலகு.. அவ்வாறான உலகில் தனது புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்று நினைப்பதை எதிர்ப்புகள் வரக்கூடும் என்று நினைப்பதை அவர்கள் செய்யமாட்டார்கள்" என்பது இன்றும் என் மனதில் இருக்கிறது.(அண்ணண் மாரே இதுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன் 10 வருஷத்திற்கு முன் இருந்த பிரபல அறிவிப்பாளர்கள் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை கவனித்தல் நலம்)

அதனால்தான் நான் எக்சார் ஆகவே அடையாளம் காட்டுகிறேன். எனது தனிப்பட்ட அடையாளம் இருந்தால்தானே புகழுக்கு ஆசை வரும்...

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக என்னுடைய பதிவு தொடர்ந்தும் பிழையாகவே விளங்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். எனவே என்பார்வையில் பொருத்தமற்ற பின்னூட்டங்களை நீக்க நான் முடிவெடுத்தால் ஏறத்தாள எல்லா பின்னூட்டங்களையும் நீக்கவேண்டிவரும்.

ஆனாலும்

நான் பின்னூட்டங்களை ஒருபோதும் மட்டுறுத்தியதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். எனவேதான் என்னைப்பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பின்னூட்டங்கள் கூட அப்படியே இன்றும் இருக்கின்றன. (என்னுடைய பெயரை இழுத்த ஓரிரண்டு பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன். எடிட் செய்திருக்கிறேன்.)

ஆயினும் இப்பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வந்த அழுத்தங்களை தொடர்ந்து, பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலலை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் முகமாக, பதிவை நீக்க முடிவெடுத்தேன்.

அம்முடிவு உலகில் யாரையும் விட எனக்கே வலிதருவது. ஆயினும் அம்முடிவை எடுக்கவெண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்ய..

தொடர்ந்தும் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கும்

எக்சார்

குறிப்பு
1) தம்பி அசோக்பரனுக்கு, நான் உங்களை சாரு என்று கூறியதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது உண்மை. அது உங்கள் எழுத்து நடைக்காக அலல.. Buy me a Coffee என்ற உங்களது widget க்காக மட்டுமே. சாருதான் எல்லாத்துக்கும் காசு கேக்கிறார். அவர் பாசையில் சொல்வதானல் உங்கள் "அது" (சிறுவர் என்றால் என்ன பெரியவர் என்றால் எனக்கு என்ன?) விறைப்படைவதற்காக எழுதினால் சுகம் உங்களுக்கு. எதற்கு எங்களிடம் காசு கேட்கிறீர்கள்? நாங்கள் ஏன் காசு செலவழித்து உங்களுக்கு "சரக்கு" புடிச்சுத்தரணும்? மற்றப்படி நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். வாகன தீர்வை பற்றி நீங்கள் மட்டும்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

2) லோசன் அண்ணா, கங்கொன், ஆதிரை போல் சண்டைபிடுச்சுக்கிட்டே என்னோடு நட்பாக இருக்க நீங்கள் தயார் என்றால் வலது இடது பக்கத்தில் இருக்கும் Facebook, Twitter link களை click செய்யவும். :D :D :D


3) பதிவுலகிலிருந்து இடைவெளி எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (இதற்கும் கண்டனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஒன்றில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் இல்லை என்றால் நான் கிறிஸ்த்த்வத்தை தழுவ வேண்டும் - சாகிர் நாயக்

என்னுடைய பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்
என்ற தலைப்பிலான பதிவில் சில கேள்விகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தேன்.

Naik has held many debates and lectures around the world as well as in Mumbai, India. One of Naik's most cited debates took place in Chicago in April, 2000 featuring Dr. William Campbell of Pennsylvania, USA on the topic "The Qur'an and the Bible: In the Light of Science".[20] Following a lecture by Pope Benedict XVI in September 2006, Naik offered to engage in a live public debate with him, but the Pope has not responded to this invitation

அதற்கு வந்த பின்னூட்டத்தில்

Robin said...
//பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.// தெரிந்து கொள்ள ஆவல்.

என்று கேட்டிருந்தார்.

அந்த video இப்போதுதான் You tube இல் வெளியிடப்பட்டுள்ளது.

நண்பர் ரொபினுக்காகவும் இஸ்லாம் பற்றிய கேள்விகள் வைத்திருக்கும் பிற நண்பர்களுக்காகவும் அந்த வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கையில் விடுமுறை

விடுமுறைக்கு பெயர்போன நாடான இலங்கையில் இன்றும் ஒரு விடுமுறை. யுத்த நிறைவின் ஓராண்டை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒத்திகையில் விமானப்படை விமானங்கள்

ஒரு சிலர் இவ்விடுமுறைகள் இலங்கையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் உள்ள முதல் தடைக்கல் என்கிறார்கள். ஆயினும் ஒவ்வொருநாளும் இயங்கவேண்டிய சேவைத்துறைகள் இந்த நாட்களிலும் இயங்குகின்றன. ஆனால் ஊழியர்கட்கு சாதாரண சம்பளத்திலும் 2, 3 பங்கு அதிகம் சம்பளம் இந்த நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கட்கு கிடைக்கிறது. துறைமுகம் போன்ற இடங்களில் இலங்கையில் நீண்ட விடுமுறைக்காலமான புத்தாண்டு வெசக் காலப்பகுதியில் அதிகளவான சிறுபான்மை இன ஊழியர்கள் வேலைசெய்து அதிகமாக தேடிக்கொள்கிறார்கள்.

இன்னும் எம்மை விட அபிவிருத்தியடைந்திருக்கும் மத்தியகிழக்கு நாடுகளில் நோன்பு காலங்களில் வழமையான சம்பளத்திற்கு 2 மணித்தியாலம் குறைவாக அதாவது 6 மணித்தியாலம் வேலை செய்தால் போதும். அதேபோல் இரு பெருநாட்களுக்கும் ஏறத்தாள ஒரு வாரம் விடுமுறை வழங்குகிறார்கள். இது நாட்டின் அபிவிருத்திக்கு விடுமுறைகள் தடையாக அமையாது என்பதற்கான சான்றாக அமைகிறது.

Poya or Poya Day is the name given to a Buddhist public holiday in Sri Lanka which occurs every full moon day. The Full moon is important to Buddhists all around the world, who have adopted the Lunar Calendar for their religious observances. Owing to the moon's fullness of size as well as its effulgence, the full moon day is treated as the most auspicious of the four lunar phases occurring once every lunar month (29.5 days) and thus marked by a holiday.


இலங்கயில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் விடுமுறையாகும். அந்த நாளில் திரையரங்கோ ஏனைய களியாட்ட அரங்குகளோ திறக்கப்படுவதில்லை. இனி வரும் காலத்தில் தனியார் வகுப்புகளும் நடத்தப்படமுடியாது.

பௌத்த மத அனுட்டானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இவ்விடுமுறைகள் இலங்கையின் கலாசாரத்தை விழுமியங்களை பாதுகாப்பதில் மதங்களை தாண்டி செயற்படுகிறது. இந்நாட்களில் உறவினர் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சென்று சந்திப்பது இலங்கையில் காலாகாலமாக பாதுகாத்து வரப்படும் குடும்ப பாசம், நட்பு போன்றன தழைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. அதேபோல் மத நிகழ்வுகளை / போதனைகளை நடாத்துவதற்கு இவ்வாறான எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாள் இருப்பது வசதியாக இருக்கிறது.

இன்னும் முழுவீட்டையும் சுத்தப்படுத்த வீட்டுத்தலைவியான பெண்ணிற்கு முழுக்குடும்பத்தின் உதவியையும் பெற்றுத்தருகிறது. இன்னும் தனது தோட்டத்தில் சில பணிகளை செய்வதற்கும் அயற்பிரதேசங்களை சுத்தப்படுத்துவதில் அயலவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இவ்வாறான நாட்கள் உகந்தவை.

விடுமுறைகளை பயனுள்ள வகையில் குடும்பத்துடன் செலவிடுவோம்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ராவணண் படத்தை தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கவேண்டும்


மணிரத்தினத்தின் இயக்கத்தில் நாளை ராவணண் படம் வெளியாகிறது. நாளை இலங்கையில் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பெற்ற வெற்றியை குறிக்கும் விழாவையும் இலங்கை அரசு நடாத்துகிறது.


Raavan (Hindi: रावण) is a forthcoming Hindi film directed and co-written by Mani Ratnam. It stars Abhishek Bachchan, Aishwarya Rai and Vikram in the lead roles while Govinda, Ravi Kishan, Nikhil Dwivedi, Tejaswini Kolhapure and Priyamani feature in key supporting roles. It is simultaneously being made in Tamil as Raavanan with a slightly different cast, which would also be dubbed into Telugu[1] and other regional languages. The film's score and soundtrack is composed by A. R. Rahman.[2][3] The film is scheduled to be released on 18 June 2010.[4] The film's premiere was held in London on 16 June 2010.[5]

ஏற்கெனவே ஐபா விழாவில் கலந்துகொள்ளாமைக்கு மணிரத்தினம் மற்றும் பச்சன் குடும்பத்தினர் ஆகியோர் சப்பைக்கட்டு காரணம் கூறியிருப்பது தமிழ் உணர்வாளர்களை புண்படுத்தியிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் வெற்றி விழா நடைபெறும் நாளிலேயே ராவணண் படமும் வெளியாவது குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

போதாதற்கு படத்தில் கோடு போட்டா கொன்னு போடு என்று ஒரு பாடல் வேறு. ரஹ்மான் பாடலை கோடு போட்டா குண்டு போடு என்று கேட்குமாறு ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார். இப்பாடலின் வரிகளை உன்னிப்பாக கவனித்தால் இலங்கை அரசின் வெற்றி பெருமித பாடல் போல் இருக்கிறது.

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்

சோத்துல பங்கு கேட்டா அட எலையப்போடு எலைய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்ல பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு

எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மய்க்கா நாளே ஏழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்

கோ கோ கோ கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்


இதில் கோடு போட்டா கொன்னு போடு என்பது தனி நாடு கேட்டு நாட்டுக்குள் கோடு (எல்லை) வரைபவரைக்குறிக்கும் என்பது தமிழ் உணர்வாளர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது.

தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவை சுமந்திருக்கும் நிலையில் இலங்கையரசு போரின் வெற்றியை பெருமிதத்தோடு கொண்டாடுகையில் அதே நாளில் ராவணண் படத்தை வெளியிடுவதன் அவசியம்தான் என்ன? ஒரு நாள் பிந்தி வெளியிட்டால் மணிரத்தினத்தின் குடியா முழுகிப்போய்விடும்?

எனவே மணிரத்தினத்தின் சதியை முறியடித்து இப்படத்தை உலகெங்கும் நாளை வெளியிடப்படுவதையாவது தடுக்கவேண்டும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு -அவதானித்த விடயங்கள்

பாசிக்குடா
அலைகள் அற்ற கடற்கரையான பாசிக்குடா கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். ஏறத்தாள ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தோள் அளவுக்குத்தான் தண்ணீர்மட்டம் இருக்கும் என்கிறார்கள். நான் ரிஸ்க் எடுக்கவில்லை.

பாசிக்குடா பிரதேசத்தில் "அண்ணே நொங்கு அண்ணே" என்று கெஞ்சும் இளநீர் மற்றும் நுங்கு விற்கும் சிறுவர்களை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. 15/- ஒரு நுங்கு. இதே பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள செங்கலடி திரையரங்கில் சிங்கம் முதல் காட்சி பார்ப்பதற்கு அரங்கு கொள்ளாத கூட்டம்.

பாதைகள்
ஜனவரிமாதம் காபட் போடப்பட்டுக்கொண்டிருந்த பாதைகள் பெருமளவில் முடிந்துவிட்டன. அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு சந்திக்கான அதிவேக பாதை முடியுமாயின் இப்பிரதேச போக்குவரத்து பிரச்சினைகள் பல முடிந்துவிடும்.

சோதனை சாவடிகள்
கொழும்பு மட்டக்களப்பு பாதையில் சோதனைக்காக நிறுத்தப்படுவதில்லை. ஆனால இரத்தினபுரியினூடான அம்பாறை பாதையில் 4 சோதனை சாவடிகள் இப்போதும் இருக்கிறது என்று கேள்வி.

குடிநீர்
அம்பாறை கல்முனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாகியிருக்கிறது. ஆனால கல்முனைபிரதேசத்தில் ஒரு நாளைக்கு பல தடவைகள் நீர் வெட்டு முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.

பிள்ளையான் மற்றும் கருணா
பிள்ளையான் அதிக பிரபலம் என்று தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தேர்தல் தோல்வி ஏன் என்பதுதான் தெளிவில்லை. ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்வது பிள்ளையானுக்கு நல்லது.

புதிய பிரதேச சபை
தீகவாபி என்ற புதிய பிரதேச சபை உருவாக்கப்படப்போகிறதாக பேசிக்கொள்கிறார்கள். தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இருக்கும் தீகவாபி, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களை இணைத்து இப்பிரதேச சபை உருவாகப்போகிறதாம். ஆகக்கூடியது 200 குடும்பங்களை மாத்திரம் கொண்ட தீகவாபியின் பெயரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களை கொண்ட பாலமுனை ஒலுவில் பிரதேசத்திற்கு வைக்க முயல்வது பற்றி மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். புதிதாக உருவாகியிருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் வருமானத்தைக்கொண்டு தீகவாபி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டமாக மக்கள் இதை பார்க்கிறார்கள்.

In Deegavapi area, Muslims has possessing more than 6000 acres of paddy lands while Sinhalese has less than 150 acres of paddy lands.


இத்திட்டத்திற்காக புதிய சிலைகள் மண்ணுக்குள் இருந்து இனி கண்டெடுக்கப்படும் என்றும் மக்கள் எதிர்வுகூறுகிறார்கள்.

அபிவிருத்திப்பணியில் வேலையாட்கள்
இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றபோதும் அதற்கான ஆள் வளம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் பிரதேச மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் தனித்தனியாக இருக்கும் இப்பிரதேசத்தில் இப்பிரதேசத்தின் கலாச்சாரம் பற்றிய போதிய அறிவற்றவர்கள் தங்குவதால் தேவையற்ற மனத்தாபங்களே ஏற்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இது தொடர்பாக தமது வேலையாட்களுக்கு அறிவுறுத்தல் நல்லது.


நிந்தவூர்
நிந்தவூர் பிரதேசத்தை இரண்டு தொகுதிகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படுவதன்மூலம் நிந்தவூரைச்சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராவதை தடுப்பதற்கு அதாவுல்லா முயற்சிப்பதாக நிந்தவூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதாவுல்லா
தீகவாபி பிரதேசத்தை புதிதாக உருவாக்கும் அரச ஆவணங்களிலும் நிந்தவூர் பிரதேசத்தை பிரிக்கும் அரச ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின் மாண்புமிகு அமைச்சர் அதாவுல்லா அரசியலிலிருந்து விலகுவார் என்றும் ஒரு கதையடிபடுகிறது. அதற்காகத்தான் அவருக்கு அந்த அமைச்சும் வழங்கப்பட்டது என்கிறார்கள். எது உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாடோடி பார்வையில் தமிழா?முஸ்லிமா?

நாடோடி பார்வையில் என்ற வலைப்பூவில் தமிழா?முஸ்லிமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

காசா முஸ்லிம்கள் தொடர்பாக அக்கறைப்படும் இலங்கை முஸ்லிம் சமூகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக எதையும் செய்யவில்லை என்ற தொனியில் இப்பதிவு இருந்தது.

இப்பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இதுவரை பிரசுரமாகாத நிலையில், அதை ஒரு பதிவாக இடவேண்டிய நிலமை இப்போது ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம்கள் சமய ரீதியாக தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இன்னும் பல தமிழ் சகோதரர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அல்லது அவ்வாறு இருப்பதில் விருப்பம் இல்லை.

ஆயினும் தனித்துவம் என்பது மனிதநேயத்திற்கு குறுக்காக ஒருபோதும் இருந்ததில்லை.

காசாவிற்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பலில் பிரபல அரசியல்வாதியான பாகீர் மாக்காரின் உறவினரான அஹமட் லுக்மான் தாலிப் இன் குடும்பமும் இருந்தது. இது பதிவு எழுதும்போது நாடோடி பார்வைக்கு தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அப்படி ஒருவர் இல்லாதிருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்.



A Sri Lankan shot by Israeli commandos during last week's deadly raid on a Gaza-bound aid flotilla has recounted the ordeal he had to face at the time of the incident. He is now receiving treatment at a hospital in Istanbul.

"Ahmad Luqman Talib received gunshot injuries in the leg and is now recovering in a hospital in Istanbul," said Nihad Issa, office director for the Representative Office of Sri Lanka to the Palestinian National Authority in Ramallah.

ஆப்கானிஸ்த்தானில் பாமியான் சிலைகள் உடைக்கப்பட்டபோதும் இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் புலிகள் இயக்கத்தை அனுதாப கண்ணோட்டத்தில் பார்க்கமுடியாது. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் அப்பாவி தமிழ் மக்களின் இன்னல்களை ரசித்ததும் இல்லை.

முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது எந்தவொரு தமிழ் அமைப்பும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவோ உண்ணாவிரதம் மேற்கொள்ளவோ இல்லை என்ற வருத்தம் இன்னமும் முஸ்லிம்களிடையே இருக்கிறது.

பழையன பேசி இனி பயனில்லை. ஆயினும் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகள் தொடர்பாக இணையத்தில் வந்த செய்திகள் சிலவற்றை கீழே காணலாம்




வன்னி மக்களுக்கு முஸ்லீம் மக்களின் மனிதாபிமான உதவி முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் முஸ்லீம் அமைப்புக்களால் கையளிப்பு!
http://www.neruppu.com/?p=5261

காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜாமி - யத்துல் உலமா சபை வர்த்தகர் சங்கம் மற்றும் நகர சபை ஆகியன இணைந்து இந் நிவாரணப் பொருட்களை வைபவ ரீதியாக முதலமைச்சரிடம் கையளித்தனர்.
http://www.viyapu.com/news/?p=9858

வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்
http://www.unmaikal.com/2009/04/blog-post_5209.html

யுத்த அகதிகளுக்கான நிவாரணப் பணியில் காத்தான்குடி தொண்டர் குழு
http://www.unmaikal.com/2009/04/blog-post_8921.html

தமிழின மக்களின் துக்கத்தில் பங்குகொள்ளும் முஸ்லீம் உறவுகள்..
http://www.vaavimagal.com/?p=1500

இது தொடர்பாக பிபிசி தமிழோசை கூட ஒரு செய்தியை தந்திருந்தது. அதன் சுட்டியை தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நாடோடியின் பார்வையில் இருந்த தெளிவாகும் ஒரு விசயம், இவ்வாறான நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் மௌனம் இவ்வூடகங்களின் உண்மையான சொரூபத்தை தோலுரிக்கின்றது என்பதே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு - தொடர்கிறது

மட்டக்களப்பு சந்தியில் நின்றால் திருகோணமலையிலிருந்து வரும் பஸ்ஸில் போகமுடியும் என்றும் நேரம் பற்றி சரியாக கூறமுடியாது எனவும் ஆட்டோ சாரதி கூறினார்..

ஒரு 10 நிமிடம் நின்றிருப்பேன். ஒரு கார் ஹோர்ன் அடித்தவாறு ரிவேர்சில் வந்தது. என்னை விலகச்சொல்கிறார் போலும் என்று நினைத்து விலகி நின்றபோதும் கார் என்னை நோக்கி வந்தது. என்னை அழைத்து தான் கல்முனை வரை போகப்போவதாகவும் நானும் அவருடன் இணையமுடியும் எனவும் கூறினார். நானும் தொற்றிக்கொண்டேன்.

இந்தக்காலத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு லிப்ட் கொடுப்பது என்பது அபூர்வம். ஆனால் அவர் என்னைப்பற்றி எதுவும் கேட்கவுமில்லை. மிகுந்த சாதுவான தோற்றமும் சாந்தமான பேச்சுமாக ஒரு கனவான் தோற்றம். அவரும் என்னைப்பற்றி கேட்காத நிலையில் நானும் அவரைப்பற்றி அதிகம் கேட்கவில்லை. UN நிறுவனமொன்றில் பணிபுரியும் அவர் வடக்கு கிழக்குமாகாணத்தில் பல திட்டங்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறார். இவர் திருகோணமலையை சேர்ந்தவர்.

தான் எப்போது பயணிக்கும்போதும் லிப்ட் கொடுப்பதை வழமையாக கொண்டிருப்பதாக கூறினார் - மனிதம் மிழிர்கிறது - உங்களுக்கு இப்பதிவுனூடக நன்றி செலுத்துகிறேன்

மட்டக்களப்பில் பாதைகள் புதிதாய் அமைக்கப்பட்டு அழகாய் காட்சிதந்தது. 80kmph க்கும் மேற்பட்ட வேகத்தில் மிக சாதாரணமாக வாகனத்தை செலுத்த கூடியதாக இருந்தது. கொழும்பு வீதிகளை விடவும் சீரிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் காத்தான்குடி நகர்ப்பிரதேசம் முழுவதும் பாதை செப்பனிடப்படவில்லை. இவ்வளவிற்கும் காத்தான்குடியில்தான் முதன்முதலாக பாதை செப்பனிடப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இவர் சொன்னார்.

காத்தான்குடி நகரில் பாதையின் மத்தியில் ஈச்ச மரங்கள் நடப்பட்டு அழகாக காட்சி தருகின்றது. மத்திய கிழக்கின் பாதை போன்ற எண்ணத்தை தருகின்றது.

Phoenix dactylifera commonly known as the Date Palm, is a palm in the genus Phoenix, extensively cultivated for its edible sweet fruit. Due to its long history of cultivation for fruit, its exact native distribution is unknown, but probably originated somewhere in the desert oases of northern Africa, and also Western Asia. It is a medium-sized plant, 15–25 m tall, often clumped with several plants from a single root system, but often growing singly as well. The leaves are pinnate, 3–5 m long, with spines on the petiole and about 150 leaflets; the leaflets are 30 cm long and 2 cm broad. The full span of the crown ranges from 6 to 10 m.
Wiki
அன்று வைசாக பௌர்ணமி தினம் என்பதால் எல்லா கோயிலிலும் கூட்டம்.. முழு மட்ட்க்களப்பும் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருந்தது.

கடந்தமுறை நான் மட்டக்களப்பு வந்தபோது மட்டக்களப்பு முழுவதும் தீபமாய் காட்சியளித்தது. பல இடங்களில் பெரிய பந்தங்களையும் டயரையும் போட்டு எரிந்துகொண்டிருந்தது. அது என்ன நிகழ்வு என்ற தெரியாத நிலையில் டயர்களும் பந்தங்களும் அச்சமூட்டின. கோயில்களில் மணிச்சத்தம் கேட்டது. twitter இனூடாக விசாரித்ததில் கார்த்திகை தீபம் என்று நண்பன் கன்கோன் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்டமுமே யுத்தத்திற்குப்பின் எழில் பெற்றிருகிறது. நிறைய வீட்டுத்திட்டங்களும் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இவை அவ்வவ் பிரதேசங்களில் வதியும் மக்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களுக்கு. ஆனால் அக்கரைப்பற்றில் சவூதியின் உதவியினால் கட்டப்பட்ட வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்படாமல் வழக்கில் இருக்கிறது.

மட்டக்களப்பு - தொடரலாம்..



சென்ற பதிவில் விடுபட்டுப்போன படங்கள்
உதயதேவி முதல் வகுப்பு
உதயதேவி மாஹோ சந்தியில்

உதய தேவி பயணம்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஐபாவைப்போல் சீபாவையும் தமிழர்கள் புறக்கணிப்பர் - சீமான்

ஐபாவை புறக்கணித்த தமிழ் உணர்வாளர்கட்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் சீமான் இப்போது சீபாவை இந்தியா நிராகரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு ஆயத்தம் ஆவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழின் தலை சிறந்த நடிகனான ரஜனியையும் உலகத்தர திரைப்படங்களை தந்த கமலையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இதன்போது எந்திரன் திரைப்படத்தினை இலங்கையில் சீபா ஊடாக நல்ல இலாபத்திற்கு விற்கமுடியுமென்றபோதும், தமிழ் உணர்வை பறைசாற்றும் முகமாக சீபாவில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்ற தன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று உறுதி மொழி வழங்கினார்.

காவிரி நீர்ப்பிரச்சினையில் தெலுங்கு தேசத்திடம் தான் மண்டியிட்டதைப்போல் இதில் மண்டியிடமாட்டேன் என்றும் உறுதிபடக்கூறினார்.

Sri Lanka's Industries and Commerce Minister Rishad Bathiudeen told the parliament today (08) that the government is yet to arrive at a final decision on signing the Comprehensive Economic Partnership Agreement (CEPA) with India.

He said the government had not made any final decision on the matter yet.

Bathiudeen further noted that the government was currently exploring the possibility of entering in to similar trade agreements with Pakistan.

Colombo Page

கமல்ஹாசன், சீபாவுக்கு இலங்கையில் எதிர்ப்பு வலுத்து வருவதால் அதை இலங்கையின் நலன்களுக்கு எதிராக பாவிக்கும் முகமாக அதை ஆதரிக்கவேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆயினும் சீமான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயக்குனர் ராம் இது தொடர்பாக பல பதிவுகளை இடப்போவதாகவும், தன்னைப்போன்ற புகழ் பூத்த இயக்குனர்களை தமிழ் சினிமா உலகம் பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தது அறிந்ததே..

இதேவேளை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், சீபா இந்தியாவின் நலன்களை உறுதிசெய்தபோதும், இலங்கை தொடர்பாக தொடர்ந்தும் எதிர்ப்போக்கை கடைப்பிடித்து தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி ஈழம் பெற்றுத்தருவதாக முழங்கினார்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து இந்திய நடுவன் அரசு நடந்துகொள்ளாவிடின் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு சகல நியாயங்களையும் உறுதிப்படுத்தும் எனவும் தன் உயிரைக்கூட அர்ப்பணித்தேனும் அடை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்..

இன்னும் இந்திய திரைப்படங்கள், முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் இனி இலவசமாக திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். இது ஐபாவை எதிர்க்கும் தமிழ் சினிமா உலகம் நிர்க்கதியான நிலையில் அநாதரவான நிலையில் பட்டினியில் இருக்கும் தமிழர்களை திரைப்படங்கள் ஊடாக சுரண்டுகிறது என்று சிலர் சக்திகள் சொல்வதை கேள்விக்குட்படுத்தும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மட்டக்களப்பு - இரயில் பயணம்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வலைப்பூவினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஒரு 10 நாள் மட்டக்களப்பில் தங்கியிருக்க நேரிட்டதால் பதிவுலகில் பல விடயங்களை தொடர முடியாது போய்விட்டது.

கடந்த ஜனவரிக்குப்பிறகு மீண்டும் மட்டக்களப்பு சென்றிருந்தேன். இவ்விரு பயணங்களையும் ஒப்பிட்டு சில விடயங்களை பேசுவது மட்டக்களப்பு பற்றி பலருக்கு அறிய உதவக்கூடும்..

The famed “Uthaya Devi” Express Train has been re launched after a lapse of more than 25 years by the Sri Lanka Railway Department. The service was launched on the 5th of April 2009 as the first morning Intercity Express (ICE) train service to Batticaloa, and people in the east can now travel to Colombo in just 8 hours.

The Intercity Express train will commence its journey from Colombo Fort at 10.30 AM in the morning and reach Batticaloa at 6:30 PM in the evening. The return train will leave Batticaloa at 7:45 AM and reach Colombo Fort Station by 3:40 PM in the evening.

The “Uthaya Devi” Express Train will run seven days a week between Colombo Fort and Batticaloa.

The Uthaya Devi express train will have a first class observation saloon, a buffet, a second-class reserved compartment, two second-class non-reserved compartments and three third class non-reserved compartments.

Passengers will be able to reserve their seats from the Colombo Fort booking office, the Batticaloa booking office and other stopping stations on the route. Seat reservations can be made 10 days in advance of the intended date of travel.


இரண்டு பயணங்களின்போதும் மட்டக்களப்புக்கு சென்றது "உதயதேவி" புகையிரதத்தில்தான். அன்று புதிய இரயில். இன்று பழையது.

பழையது என்றவுடன் சேவை தரமற்றது என்று எண்ணிவிடாதீர்கள். புதிய இரயிலில் முதல் வகுப்புக்கும் 2 ஆம் வகுப்புக்கும் இடையேயான வித்தியாசம் சன்னல் திரைச்சீலைகள்தான்! ஒரே வகையான ஆசனங்கள், வசதிகள். 2ஆம் வகுப்பிற்கு கட்டணம் 550/- . திரைச்சீலைக்கு 350/- வாடகை போல.. முதல்வகுப்பு கட்டணம் 900/-

முன்னொரு காலத்தில் முதல் வகுப்பு என்றால் Berth என்றிருந்தது. பின்னர் அதே முதல்வகுப்பில் AC Compartment வந்தது. புதிய இரயில் சேவை என்று தொலைக்காட்சியில் செய்தியில் சொல்லப்பட்ட்து வெறுமனே இரயில் பெட்டிகள் மாற்றப்பட்டமையே..

இப்போது மீண்டும் பழைய இரயில் பெட்டிகள். இதில் ஆசனங்கள் புதிய இரயில் பெட்டியை காட்டிலும் சொகுசு.. ஆனால் புதிய இரயிலில் இருக்கும் மடிக்கக்கூடிய மேசைகள் இதில் இல்லை என்பது ஒரு குறையே..

அன்றும் இன்றும், புதிய இரயிலுக்கும் பழைய இரயிலுக்கும் இடையேயான ஒற்றுமை - நேரம் தவறல்.. 2 மணித்தியாலம் பிந்துவது எனக்கு இரு சந்தர்ப்பத்திலும் நடந்தது..

கொழும்பிலிருந்து மாகோ சந்திவரை 1ஆம் வகுப்பு; இரயில் என்ஜின் க்கு அடுத்ததாக இருக்கும். மாகோவில் என்ஜின் அடுத்த பக்கம் பிடித்து இழுக்கத்தொடங்குவதால் 3 ஆம் வகுப்பு தலையாகவும் 1ஆம் வகுப்பு வாலாகவும் மாறும்.

மட்டக்களப்பு இரயில் நிலையத்தில் கல்முனைக்கு ஒன்றாகவும் அக்கரைப்பற்று ஒன்றாகவும் இரண்டு பஸ் வண்டிகள் காத்திருக்கும். பிறகு கல்முனை பஸ் நிறுத்தப்பட்டதாகவும் அறிந்தேன். ஒரு இரயிலில் வரும் சனக்கூட்டத்தில் 25% ஏனும் கல்முனைவரை பயணம் செய்வதால் கால்வைக்கும் அளவுக்கு கூட பஸ்ஸில் இடம் கிடைப்பது கஷ்டம். ஆனால் அதற்கு பின் வேறு எந்த பஸ் சேவையும் இல்லாததால் எப்படியேனு இதில் ஏறியே ஆகவேண்டும்.

இதனால் ஏறாவூர் வந்ததும் மக்கள் 3ஆம் வகுப்பு பெட்டியில் சேர்ந்துவிடுவார்கள். இரயில் நிறுத்தப்பட முன்பே பாய்ந்து இறங்கி பஸ்ஸில் இடம்பிடிக்க போட்டியே நடக்கும். ஆனால் இதுதான் மட்ட்க்களப்பிலிருந்து கடைசி பஸ் என்பதால் மட்டக்களப்பில் தொழில்செய்யும்பலர் இந்த பஸ்ஸில் ஏற்கெனவே இடம் பிடித்திருப்பார்கள்.

இதுபற்றி ஜனவரி பயணத்தில் அறிந்திருந்ததால் நான் மட்டக்களப்பு அண்மிக்கும்போது இரயிலின் தலைப்பகுதியை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னைப்போல் யாரும் நடக்கவில்லை. கொஞ்சம் சந்தேகம் வந்ததும் ஒரு ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். அருகில் இருந்தவர் நீங்கள் எங்கு போகவேண்டும் என்று கேட்டார். நான் சொன்னதும் எப்படி போவீர்கள் என்று கேட்டார். ஏன் பஸ் இல்லையா என்று கேட்டபோது மட்டக்களப்புக்கு கடைசியாக எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். இரயில் ஒவ்வொருநாளும் பிந்திவருவதால் காத்திருக்கும் நேரத்திற்கு மேலதிக கொடுப்பனவு வேண்டும் என பஸ் சாரதியும் நடத்துனரும் கேட்டது கிடைக்காததால் அந்த பஸ் சேவை இப்போது நிறுத்தப்ப்பட்டு விட்டது. மட்ட்க்களப்பில் 6மணிக்கு மேல் பஸ் இல்லை என்றும் சொன்னார்.

மட்டக்களப்பு - தொடரலாம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

IIFA இல் தமிழ் திரையுலகின் கபடம்


இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவான IIFA பல எதிர்ப்புகளை கடந்து நாளை ஆரம்பமாக இருக்கிறது.

The International Indian Film Academy (IIFA) Awards, are presented annually by the International Indian Film Academy to honour both artistic and technical excellence of professionals in Bollywood, the Hindi language film industry. Instituted in 2000, the ceremony is held in different countries around the world every year.

இலங்கையில் தமிழர்கள் துன்புறுவதாக கூறி தமிழ் நாட்டு திரையுலகம் இவ்விழாவையும் பங்குபற்றுபவர்களையும் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சில கேள்விகளை நான் உங்களிடம் முன்வைக்கிறேன்..

இலங்கையில் தமிழர் துன்பத்திற்கு கவலைப்படும் தமிழ் சினிமா அமைப்புக்கள் ஏன் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடாத்தும் இந்திய ஜூனியர் சீனியர் யாரையும் கண்டுகொள்வதில்லை?
சிங்கம் சுறா ஆகிய படங்கள் இலங்கையில் திரைடப்படுகின்றன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இதன்மூலம் இலங்கை தமிழர்களுக்கு என்ன லாபம்?

இந்திய தமிழ் சினிமா துறை இலங்கை தமிழர்களிடம் தனது பொருட்களை சந்தைப்படுத்துகிறது. அதன்மூலம் பிச்சைகாரனிடம் மாமூல் வாங்கும் பொலிஸ் போல் நடக்கிறது .

மாறாக இனால் அபிவிருத்தியடையப்போகும் சுற்றுலாத்துறை, அதில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் தமிழர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இன்னும் பல சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வையும் வீடுகளை இலந்தவர்கட்கு வீடுகளையும் அளிக்கும். இவற்றை தடுப்பதன்மூலம் தமிழ் சினிமா உலகம் சாதிக்க நினைப்பது என்ன?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்

பிரபல்யமிக்க பேச்சாளரான Dr. Zakir Naik அவர்களின் நிகழ்வொன்று நேற்று இலங்கையின் கொழும்பில் உள்ள சுகததாச வெளியரங்கில் இடம்பெற்றது.

Wiki Introduction
Zakir Abdul Karim Naik (Urdu: ذاکر عبدالکریم نائیک, Hindi: ज़ाकिर अब्दुल करीम नायक; born 18 October 1965) is a Muslim public speaker, and writer on the subject of Islam and other comparative religion. Naik is a medical doctor by profession, having attained a Bachelor of Medicine and Surgery (MBBS) from the University of Mumbai. [1][2]
Naik is the founder and president of the Islamic Research Foundation (IRF),[1][3] a non-profit organization which also owns and broadcasts the free-to-air global Peace TV channel from Mumbai.


இந்நிகழ்வுக்கு பல முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஊடகங்களினூடாக இலங்கைவாழ் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உலகின் பல மதங்களை பற்றி ஒப்பீடுகளில் (comparative religion) இவர் மிகப்பிரபலம் என்பதாலும் பார்வையாளர்களில் இருந்து நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இவர் மேடையிலேயே பதிலளிப்பதாலும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியில் பிஜே அவர்களால் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. அந்நிகழ்வுகளை நிறுத்தும் முகமாக இலங்கையரசால் பிஜே அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

6.30க்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. 6.30க்கு முன்னரேயே மைதானம் நிரம்பி வழிந்தது. பிந்தி வந்த பலரை அனுமதிக்க முடியாத நிலமை ஏற்பட்டது. 25,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

மைதானத்தின் பிரதான பார்வையாளர் மண்டபத்தை நோக்கியதாக அரங்கு அமைந்திருந்தது. ஏனையவர்கள் பார்ப்பதற்காக பெரிய திரைகள் மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்தன. பிரமிப்பூட்டும் மேடையமைப்பு, professional ஆன Videography என பல எதிர்பார்க்காத விஷயங்கள் இருந்தன.

நிகழ்வு 7.30க்கு சற்று பின் ஆரம்பித்தது ஒரு கவலைக்குரியது. (Dr. Zakir Naik அவர்கள் சிங்கப்பூரில் இருந்து அன்று பிற்பகலே வர இருந்தார் என கேள்விப்பட்டேன். அது காரணமாக இருந்திருக்கலாம்) ஆயினும் இயலுமானவரை நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் நடப்பதில் ஏற்பாட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அடுத்த நாள் வேலைநாளாக இருபப்தனால் நிகழ்வு 10 மணிக்கேனும் நிறைவுசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.

ரிஸ்வி முப்தி (அகில இலங்கை ஜம்மியதுல் உலமா) அவர்களினதும் ஆளுனர் அலவி மௌலானாவினதும் பிரபலமான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினதும் (பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை) பேச்சுக்களைத்தொடர்ந்து Dr. Zakir Naik இன் 15 வயது மகன் Fariq Naik உரையை ஆரம்பித்தார். அழகான ஆங்கில உரையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் இவர். கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும், ஒருவர் கடவுள்தானா என்பதை உறுதிசெய்வதற்கு கடவுளின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் இவர் விளக்கினார். (Theology)

அதன்பின் மக்னின் பேச்சிலிருந்து அவர்கள் பேச்சை ஆரம்பித்தார்கள். கடவுள் மற்றும் மதங்களை நம்பாத விஞ்ஞானத்தை நம்பும் நாத்திகருக்கான பேச்சாக அது இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத பதிவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தனது பேச்சில் அவர்கள் வாதங்களை கோர்வையாக எடுத்துவைத்திருந்தார். பல சமய நூல்கள் பற்றிய அறிவு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.

ITNஇன் "அட்டபட்டம" ஹசந்த ஹெட்டியாராசீயும் வந்திருந்தார். கேள்வி பதில் நிகழ்ச்சி கொழும்பின் பாராழுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்கவின் கேள்வியுடன் ஆரம்பித்தது. அதன்பின் நாத்திகர் ஒருவரின் கேள்வியும், கிறிஸ்த்தவர் ஒருவரினதும் காத்திரமான கேள்விகளுக்கு பதில்ளித்தவிதம் பிரமிப்பூட்டுவதாக் இருந்தது. இவை பற்றி சில பதிவுகளை சில தலைப்புகளின்கீழ் தனித்தனியாக தரலாம் என எண்ணுகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பதிவர்களுக்கு ஒரு அழைப்பு

பதிவுலகில் அடிக்கடி சமயங்கள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சமயத்தவர் இன்னொரு சமயத்தை பற்றி கேள்விகேட்பது நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. இது மதம் தொடர்பான புரிதல்களை அதிகப்படுத்தும். அதேபோல் தான் பின்பற்றும் சமயம் தொடர்பாகவும் தனக்குள்ளேயே எழும் கேள்விகளை அல்லது தாம் எதிர்கொள்ளும் கேள்விகளையும் நாம் தீர்ப்பது அவசியம். இதன்மூலம் நாம் சரியான வழியில்தான் இருக்கிறோமா என்பதையும் சீர்தூக்கி பார்க்க முடியும்.

பதிவுலகில் கூட அடிக்கடி இவ்வாறான கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. இவை காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக கருதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இக்கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில்கள் / விளக்கங்கள் இருக்குமானால் அவை அறியச்செய்யப்படல் அவசியம்.

ஆனாலும் பதிவுலகில் யாராவாது ஒருவர் தனது விளக்கத்திற்கேற்ப, புரிதல்களுக்கேற்ப சமய நம்பிக்கைகளை நோக்கிய கருத்துக்களை, விமர்சனங்களை, கேள்விகளை முன்வைப்பர். இவற்றை முதற்தடவை வாசிப்பவர்களில் எத்தனைபேர் பின்னூட்டங்களினூடாக இதற்கு சொல்லப்படும் பதில்களை தொடர்வர்? நிச்சயமாக பாதியளவேனும் இல்லை. இவ்வாறு பதில்களை தொடராதோர் இவ்விமர்சனங்களுக்கு பதில் இல்லை அல்லது அதில் நிறைய பிழைகள் இருக்ககூடும் என்று விளங்கிக்கொள்ளலாமல்லவா?

இவ்வாறான பிழையான புரிதல்களை கழையும், உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தரும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறு அன்று இலங்கையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் அமையும் இந்நிகழ்ச்சியில் இத்துறையில் அனுபவம் மிக்க வைத்தியர் சாகிர் நாயக் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். கொழும்பின் சுகததாச (வெளி) மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே 25,000 பேர் தம் வரவை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தெரிகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முஸ்லிம் அல்லாதோர் ஆர்வமூட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படும். ஒரு அறிமுக உரையைத்தொடர்ந்து கேள்விநேரமும் இருப்பது இதன் விசேட அம்சம். இதன்போது கேள்விகளை நேரடியாக கேட்கமுடியும். கேள்விகளுக்கு எந்த தணிக்கையும் இல்லை. மேலதிக விபரங்கள் http://www.peacethroughreligion.info என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்

Dr. Zakir Naik’s lecture tour to Sri Lanka
World’s renowned Islamic scholar Dr. Zakir Abdul –Karim Naik who is based in Mumbai India is to pay a visit to Sri Lanka on the invitation of ‘Association of Muslim Youth of Sailan (Jammiyathush Shabab)’ on the 23rd of May 2010. He is to address the gathering in the Sugathadasa out door stadium on the same day at 06.30pm on the theme “Peace through religion”.

Admission is Free of Charge

Please invite your all your Muslim & Non Muslim friends.

Special Seating arrangements for ladies.

Feel free to contact:

Bro. Nilam : 0716613884

இதற்குமுன் இவ்வாறான பல நிகழ்வுகள் தமிழ்மோழியில் இலங்கையின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் நடைபெறைருக்கின்றன. ஆங்கில மொழியினூடான இந்நிகழ்ச்சி இவற்றை விட அதிகமானோரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல கேள்விகளை மனதில் வைத்திருக்கும் இலங்கையின் சகல பதிவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறேன். அதேபோல் நீங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறும் வேண்டுகிறேன்.

கேள்விகள் பதிலழிக்கப்பட வேண்டும் - பதில்கள் எத்திவைக்கப்படவும்வேண்டும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பயங்கரவாதம் அழிக்கப்பட்டு ஓராண்டு

பயங்கரவாதம் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட்டு ஓராண்டாகின்றது. இது தொடர்பான எனது பார்வைகள் சிலவற்றை பகிரலாம் என நினைக்கிறேன்.


You can also say that the government did a bunch of shafty things, but on the scale of the world’s biggest suicide bombers? Not so much.
indi.ca


இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாக நான் கருதுகிறேன். தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக அல்ல. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஜனநாயகரீதியான போராட்டங்களும் வெற்றிபெறவேண்டும்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடவுள் இவ்வெற்றி விழாவை அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுவதாக் சிலர் சொல்கிறார்கள். புலி ஆதரவாளர்கள் ஒரு கதையையும் பொன்சேகா ஆதரவாளர்கள் அவர் சிறையிட்ப்படமையையும் சொல்கிறார்கள். இவ்வாறான கற்பிதங்கள் எந்த நன்மையையும் தரா


இந்த ஓராண்டில் தெளிவான நன்மைகளை சகலரும் அனுபவிக்கிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் 90% நீக்கப்பட்டுள்ளது. பயமின்றி பயணம் செய்ய முடிகின்றது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடந்துகொண்டிருக்கிறது.


கடந்த தேர்தலில் ததேகூ இன் வெற்றியை புலி அனுதாப வெற்றியாக சிலர் தப்பபிபிராயம் கொண்டிருக்கிறார்கள். ததேகூக்கு ஆதரவளித்த மக்கள் அது அரசுடன் இணைந்து அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது இதை உறுதி செய்கிறது.


பொன்சேகா இன்னொரு ஜனதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானது. யுத்த வெற்றியின் மிக முக்கிய பங்காளியான ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செய்லாளரும் பொன்சேகாவும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு ஒருவரை ஒருவர் நோண்டாமல் இருக்கவேண்டும் என்பது அவா.. ஆனால் பொன்சேகாவின் போராட்டகுணம் இதற்கு எப்போதும் தடையாக இருக்கும்.


இந்த வெற்றியை அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மீது எரிச்சல் வருகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக நன்றிக்கடனாக மக்கள் இவர்களுக்கு வாக்களித்ததை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. 6 வருடத்தின்பின் மீண்டும் நன்றிக்கடன் ஒன்றாக மட்டும் வாக்களித்தல் இடம்பெறாது என்பதுமட்டும் நிஜம்.


பல இணையங்கள் மீண்டும் தமிழ் மக்களை அழிவில் வீழ்த்துவதற்காக எதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
  • யாராவது இங்கிலாந்தில், அவுஸ்த்திரேலியாவில் குடியுரிமை பெறுவற்கு
  • தமிழ்நாட்டில் செல்லாக்காசான அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதற்கு
  • தமிழிஷ் இல் வோட்டு சேர்ப்பதற்கு
  • ஹிட்ஸ் அதிகமாக எடுப்பதற்கு
இலங்கைவாழ் தமிழ் மக்களை உசுப்பேத்திவிடுவது மிகவும் கீழ்த்தரமான உத்தியாகும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யுத்த முடிவு - முரண் கொள்கையில் தமிழ் ஊடகங்கள்

இலங்கையை வாட்டிவதைத்துக்கொண்ட கொடிய யுத்தம் ஓய்ந்து ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கிறது. ஒருபக்கம் வெற்றிக்கொண்டாட்டங்களும் இன்னொருபக்கம் அஞ்சலி எனவும் எதிரும் புதிருமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது ஒரு சிலரின் வார்த்தையில் துன்பியல் நிகழ்வு என்றொரு வார்த்தைக்குள் முடிந்துபோவதில்லை. உயிர்களின் இழப்பும் சொத்துக்களின் இழப்பும் வெறும் அஞ்சலி என்ற வார்த்தையால் மனமாறிப்போவதில்லை.

இங்கு மக்கள் என்பது சகல மனிதர்களையும் குறிக்கும். அவர்களை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரித்தோ அல்லது யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான் அல்லது மாத்தறையான் என்று பிரித்து ஒரு பகுதியினரின் மரணத்தில் சந்தோஷமும் ஒரு பகுதியினரின் மரணத்தில் துக்கமும் அடைபவர்களின் மனதில் இருக்கும் குரூரம், வன்மம் இன்னும் இதுபோன்றா ஆயிரம் இழப்புகளையே கொண்டுவரும் அல்லவா?

ஒரு சாதாரண மனிதனால் எப்படி காத்தான்குடியில் மக்கள் கொல்லப்படும்போதும் கெப்பிட்டிகொல்லாவயில் கொல்லப்படும்போதும் மகிழ்ந்து வன்னியில் கொல்லப்பட்டவர்களுக்காக மட்டும் கண்ணீர் வடிக்கமுடியும்?

அல்லது தமிழ்ச்செல்வனின் மரணத்தில் கொதித்து கதிர்காமரின், நீலன் திருச்செல்வத்தின், பிரேமதாசவின், உதுமாலெப்பையின் மரணத்தில் மகிழ முடியும்?

இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்களையும், எல்லைக்கிராம சிங்களவர்களையும் பற்றிக்கவலைப்படாமல் எப்படி ஓராண்டு அகதிகளை பற்றி மட்டும் பேசமுடியும்?

இவையாவும் மனதிற்குள் இருக்கும் வன்மத்தின் புகையில்லையா?


(மரணங்களை புகைப்படங்களாக்கி அதைக்கொண்டு வாசகர்களின் மனதில் வன்மத்தை விதைப்பதில் எனக்கு உடன்பாடில்லாமையால் எந்தவொரு மரணத்தின் புகைப்படத்தையும் இப்பதிவில் பகிரவில்லை)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சட்டவிரோத கட்டடங்கள் - யதார்த்தமான தீர்வு


கொழும்பின் கொம்பனித்தெருப்பிரதேசத்தில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றியதை தொலைக்காட்சியில் பார்க்ககூடியதாக இருந்தது. இது தொடர்பான பல கண்ணோட்டங்கள் இருந்தாலும் யதார்த்தமான தீர்வு பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை.

Slave Island is a suburb in Colombo, Sri Lanka located directly south of the Fort area of Colombo. The name Slave Island was named during the British occupation and administration and originates from the Portuguese and Dutch period of administration when the slaves were held there, most of them were from Africa. Most of the slaves had returned to Africa The suburb contains Beira Lake, a large lake and its esplanade visited by many for recreation. Slave Island is mostly a commercial area with commercial establishments, hotels and shopping centres.

Wikipedia

இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் 6 பேர்ச் நிலத்தை விட குறைவான இடமொன்றில் வீடுகட்டுவது சட்டவிரோதமாகும். இச்சட்டத்திற்கு முன்னர் கட்டப்பட்ட வீடாயின் அது 2மாடிகளை விட கூடுதலாக கட்டப்படமுடியாது.

இன்னும் கொழும்பின் வெவ்வேறு பிரதேசங்களில் கட்டப்படக்கூடிய வீடுகள் தொடர்பான town planக்கு அமைவான அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. உதாரணமாக கொழும்பு 10 இல் அமைக்க அனுமதிக்கப்படும் வீடுபோல் கொழும்பு 7 இல் அமைக்க முடியாது.

இன்னும், எவ்வாறான வீடானாலும் கதவு ஜன்னல் தொடர்பான நியம அளவுகள் இருக்கின்றன. வீட்டின் சுவர் அளவில் குறிப்பிட்ட வீதம் கதவு ஜன்னல்களுக்காக இருக்கவேண்டியது அவசியம்.

பலர் இவ்வீடுகள் சட்டபூர்வமானவை என்று வாதிடுகிறார்கள். ஆனால் பல்வேறு சட்டங்களை கவனத்தில்கொள்ளும்போது இவ்வீடுகள் குறைந்தது கதவு ஜன்னல் தொடர்பான சட்டங்களின் அடிப்படையிலாவது சட்டவிரோதமாகக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.

இலங்கையின் சேரியாக கணிக்கப்படும் பிரதேசங்கள் கற்களால் அமைக்கப்பட்ட சிறிய காணியில் அமைந்த வீடுகளே. இவ்வாறான சேரிப்புறங்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சரியாக அடையாளம்காணப்பட்டு தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் முற்றுமுழுதாக சட்டரீதியற்ற கட்டடங்களை அகற்றுவது வெற்றியளிக்குமா / நியாயமானதா என்று நோக்கவேண்டியுள்ளது.

இந்த சேரிவாழ் மக்கள் பெரும்பாலும் நடைபாதை வியாபாரிகளாக, கொழும்பின் மொத்தவிற்பனை சந்தையின் கூலித்தொழிலாளிகளாக இருக்கிறார்கள்.

இப்பிரதேசங்கள் மிகுந்த சன நெரிசல் மிக்கவை. சன நெருக்கடிமிக்க இப்பிரதேசத்தில் வாழும் பிள்ளைகள் கல்விகற்ககூடிய சூழலில் இல்லை என்பதே உண்மை. இதன்காரணமாக இங்கு தோன்றும் அடுத்த சமூகமும், கூலித்தொழிலாளிகளாக, சமூகத்தின் கடைநிலை அந்தஸ்த்துடையவர்களாகவே இருப்பர். இன்னும் வீடுகளுக்குள் போதியளவு காற்று வராததன்காரணமாக வீட்டில் உள்ள அதிகமானோர் வீட்டு வாசலிலேயே இருப்பதை இப்பிரதேசங்களுக்கு சென்றிருந்தால் கவனித்திருப்பீர்கள்.

முதலில் சேரிவாழ் மக்கள் இது தமக்கு வசதி இல்லாது என்பதை உணரவேண்டும். இவர்களின் கல்வியறிவு மிக மோசமான நிலையில் இருப்பதால் இதை உணரச்செய்வதே கடின இலக்காக இருக்கும்.

இவர்கள் சேரியாகா வாழ்ந்தாலும் இவர்களில் பலர் தமது நிலத்திற்கு உரிமை பத்திரங்களை கொண்டவர்களே. இப்பிரதேசங்கள் கொழும்பில் காணியின்பெறுமதி கூடிய இடங்களிலேயே இருக்கின்றன.

இப்பிரதேசங்களில் வாழ்வதற்கு இவர்கள் கூறும் நியாயங்கள்

  • தமது தொழில்வாய்ப்புக்கு கொழும்பு நகருக்குள் இருப்பது அவசியம்
  • இலங்கையில் சமூகங்களிடையேயான நம்பிக்கைகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், தாங்கள் வேறொரு பிரதேசத்தில் வேறொரு சமயக்குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரதேசத்தில் திணிக்கப்படுவது தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்றது
  • இவர்கள் தொடர்மாடி வாழ்க்கையை விருபவில்லை. தொடர்மாடிக்கட்டடதொகுதிகளில் காணப்படும் மேலதிக செலவுகள், அசௌகரியங்கள் பற்றி அதிக கவலைப்படுகிறார்கள். இன்னும் சிறியதாயினும் தமது நிலத்தில் வாழ்ந்தால், பிள்ளைகளுக்கு அக்காணியில் ஒரு மாடியைக்கட்டி கொடுக்கமுடியும் என்பது இவர்களது முக்கிய வாதம்.

இவ்வாறான நியாயங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

  • முதலில் அரசு துறைமுகப்பகுதிய அண்டிய மொத்தவிற்பனை போன்ற வர்த்தகங்களை சன நெரிசலற்ற இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்தவேண்டும்.
  • போக்குவரத்து, புகையிரத மத்திய நிலையங்கள் இப்போது கொழும்பில் அமைந்துள்ளன. இவை வேறொரு பிரதேசத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.
  • அத்துடன் கொழும்பின் போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்படலும், ஒழுங்குபடுத்தப்படலும் அவசியம். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கு இவ்வாறான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, தொழில்வாய்ப்புகளும் வேறுபிரதேசங்களுக்கு நகர்வதால் சேரிவாழ் மக்களும் விருப்பத்துடன் இடம்பெயர்வர்.

இன்னும், இச்சேரிப்புற மக்கள் தமக்கிடையே ஒரு சபையை அமைத்து இக்காணிகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து தனியாருக்கு விற்கமுடியும். இவர்கள் இருக்கும் நிலங்கள் கொழும்பின் மிக முக்கியமான இடங்கள். இக்காணிகளின் பெறுமதி மிக அதிகம். இவற்றை விற்பதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொருவரும் கொழும்புக்கு அருகிலேயே 10 பேர்ச் நிலத்தையும் வாங்கி அதில் வசதியான ஒரு வீட்டையும் கட்டிக்கொள்ளமுடியும். இது நிச்சயம் வசதியானதாக இருக்கும். (சுறா படத்தில்வருவதுபோல் எங்கள் குப்பத்தை காப்பாற்றுவோம் என்று யாராவது விஜய் ரசிகர் சொன்னால்?!)

I wouldn’t even call this a slum, more like middle class housing with dodgy deeds.

www.indi.ca

 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்