Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

2010

2010 ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெறப்போகிறது. ஞாபகத்தில் இருக்கும் இலங்கையரின் பதிவுகளில் சிறந்த பதிவு என்று யோசித்ததில் தான் எனக்கு உடன் ஞாபகம் வந்தது ககூனமடாட்டா . விடயதானத்தையும் அதை அழகாக ரசிக்கும்படி சொன்னதிலும் அதுதான் இவ்வாண்டின் சிறந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.

Christmas[3] or Christmas Day[4][5] is a holiday observed generally on December 25[6] to commemorate the birth of Jesus, the central figure of Christianity.[7][8] The date is not known to be the actual birthday of Jesus, and may have initially been chosen to correspond with either the day exactly nine months after some early Christians believed Jesus had been conceived,[9] the date of the Roman winter solstice,[10] or one of various ancient winter festivals.[9][11] Christmas is central to the Christmas and holiday season, and in Christianity marks the beginning of the larger season of Christmastide, which lasts twelve days

ஒரு சந்தேகம், புல்லட் ககூனமடாட்டா என்றுதான் பதிவுலகிலிருந்து விலகியிருக்கிறாரோ தெரியவில்லை. எதையாவது சொல்லப்போக நாற்பதுபேர் நாலுபக்கத்தால் இருந்து கடித்துக்குதற பாய்வது எனக்கு பழகியிருந்தாலும் அவர் வீண் வம்பு என்று விலகியிருக்கிறாரா? அவர் இன்னும் எழுதவேண்டும் என்பதே என் அவா.

அதற்கடுத்தபதிவு என்று யோசித்ததில் இலங்கை தமிழ் பதிவர்கள் என்று சொல்பவர்களின் வழமையான பாணிக்கும் கருப்பொருளுக்கும் மாற்றமாக வித்தியாசமான விடயத்தை பேசிய எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.
க்கு எனது பாராட்டுக்கள்.

இவரைப்போல் வேற்யாராவது பேசியிருந்தால் எனக்கு link தரவும். தவற விட்டிருந்தால் வாசிப்பேன்.

இப்பொழுதெல்லாம் கணணிக்கு முன் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் காத்திருக்கும்போது அல்லது தூக்கத்திற்காக காத்திருக்கும் தருணங்களில் மொபைலினூடாக நிறைய வாசிக்கிறேன். அது வசதியாக இருக்கிறது. ஆயினும் தமிழில் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழிற்கு kb அதிகம் செலவாகிறது என்பதால். என் பார்வையில் இலங்கைப்பதிவர்களின் ஆங்கிலப்பதிவுகளில் அதிக விடயப்பரப்பும் பரந்துபட்ட பார்வையும் கிடைக்கிறது.

வாசிப்பதற்கு ஆங்கில பதிவுகள் கிடைக்காத தருணங்களில் இப்போதெல்லாம் விரும்பி வாசிப்பது wikipedia. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

அப்படி வாசித்ததில் இரண்டு விடயங்கள்

Sri Lankan Moors
என்ற தலைப்பிலான கட்டுரையில் இலங்கை முஸ்லிம்கள் வணக்கம் என்பதை தவிர்ந்துகொள்வது பற்றியும் இருக்கிறது. என்னுடைய வணக்கம் பற்றிய பதிவுக்கு இதையும் ஆதாரமாக சேர்க்கிறேன். அதேபோல் என்னை வரவேற்கும்போது / வாழ்த்தும்போது அது எனக்கு பிடித்த விதத்தில் இருக்க வேண்டாமா என்று ஒரு கேள்வியையும் முன்வைக்கிறேன்.

Christmas பற்றி தேடியபோது பைபிளில் இதனை கொண்டாடுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் பிறந்த தேதி தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் பற்றியும் இக்கொண்டாட்டம் இங்கிலாந்தில் ஒரு காலத்தில் கிறிஸ்த்தவர்களாலேயே தடைசெய்யப்பட்டிருந்தது பற்றியும் இருந்தது. இது பேகன் இனத்த்வரின் பழக்கமாம். பரி பவுல் கூட இவ்வினத்தை சேர்ந்தவர் என்றும் கிறிஸ்த்துவத்தின் எதிரியாக இருந்தவர் என்றும் குறிப்புகள் கிடைத்தன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

8 comments:

கன்கொன் || Kangon said...

// எதையாவது சொல்லப்போக நாற்பதுபேர் நாலுபக்கத்தால் இருந்து கடித்துக்குதற பாய்வது எனக்கு பழகியிருந்தாலும் அவர் வீண் வம்பு என்று விலகியிருக்கிறாரா? //

அவர் ஒருக்காலும் சம்பந்தமேயில்லாத அலட்டுறேல. ;-)


// இலங்கை தமிழ் பதிவர்கள் என்று சொல்பவர்களின் //

ஹலோ!
இலங்கையிலிருந்து தமிழ் மொழியில் பதிவெழுதுபவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழ்ப் பதிவர்களே.
மேதாவித்தனமான கருத்து வேண்டாம்.


// என் பார்வையில் இலங்கைப்பதிவர்களின் ஆங்கிலப்பதிவுகளில் அதிக விடயப்பரப்பும் பரந்துபட்ட பார்வையும் கிடைக்கிறது. //

பாத்து, கவனம், விழுந்திடப் போறீங்க....


வணக்கம் பற்றி ஏற்கனவே நிறையவே கதைத்தாயிற்று.

ஆனால்,
// Sri Lankan Moors
என்ற தலைப்பிலான கட்டுரையில் இலங்கை முஸ்லிம்கள் வணக்கம் என்பதை தவிர்ந்துகொள்வது பற்றியும் இருக்கிறது. //

என்பது விடயதானத்தை அப்படியே மாற்றிக் கதைப்பது.
அந்தக் கட்டுரையில் இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழிக்குப் பதிலாக அரபு மொழியில் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும்(blessing) பரிமாறுகிறார்கள் என்று உள்ளதே தவிர, "வணக்கத்தை தவிர்க்கிறார்கள்" என்று இல்லை.
அப்படி அரபில் வாழ்த்தப் பரிமாறும் விடயங்களாக நன்றி என்பதற்குப் பதில் "ஜஷகல்லா"(தவறென்றால் மாற்றவும். எனக்கு அரபு தெரியாது) என்பதையும், வணக்கம் என்பதற்குப் பதில் "அஸலாமு அலைக்கும்" என்பதையும் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் உள்ளது.
உங்கள் கடந்த பதிவு போல் எதுவும் இல்லை.

தூங்கும் வேளையில் வாசித்திருப்பீர்கள் ஆங்கிலத்தில், திரும்ப வாசிக்கவும்.


கிறிஸ்துமஸ் தொடர்பாக,
ஒரு மதத்தைப் பின்தொடருகிற ஒருவருக்கு இன்னொரு மத நம்பிக்கைகளையும், கொண்டாட்டங்களையும் விமர்சிக்கிற உரிமை கிடையாது.
உங்களுக்கு வேண்டுமானால் விக்கிபீடியாவில் நீங்கள் நம்பிக்கை செலுத்துகிற மார்க்கத்திற்கு எதிராக ஏராளமான கட்டுரைகளைத் தரலாம்.
அவற்றை நான் பதிவும் இடலாம், அதை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதோ தெரியாது.

உங்கள் நம்பிக்கையைப் போன்று, அவர்களுக்கும் அது நம்பிக்கை தான்.
ஹதீஸ்கள் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான், கிறிஸ்துமஸ் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.

(கிறிஸ்துமஸ் ஆதாரமற்றது என்று சொல்லும் பதிவில் அட்சென்ஸ் இற்காக கிறிஸ்துமஸ் பற்றி எழுதப்பட்ட விக்கிபீடியா கட்டுரையில் பிரதி மட்டும் வேண்டுமாம் இவருக்கு)

கன்கொன் || Kangon said...

குறிப்பு: எனக்கு மத நம்பிக்கை கிடையாது.

EKSAAR said...

**The Tamils of Sri Lanka, throughout history, have attempted to categorize the Sri Lankan Moors as belonging to the Tamil race. It is claimed that this was a bid to eliminate the minority community from having its own unique identity. The Government of Sri Lanka, however, treats the Muslims as of origin and as a distinct ethnic group from the Tamils

**The Moors speak a modified form of the Tamil language influenced by Arabic.[1] However since there is not an official name for the dialect, it is commonly referred as Tamil.

EKSAAR said...

//ஒரு மதத்தைப் பின்தொடருகிற ஒருவருக்கு இன்னொரு மத நம்பிக்கைகளையும், கொண்டாட்டங்களையும் விமர்சிக்கிற உரிமை கிடையாது.//

எனது பார்வையில் பிழை. விமர்சனங்களினூடாக சரியானதை நோக்கிய தேடல் ஆரம்பிக்கும். விமர்சிக்கும்போது அது அதற்கு பதிலிறுக்கும் உரிமை கூட இருக்கிறது. ஆனால் காழ்ப்புணர்ச்சியுடன் பிழையாக பதிலளிக்கும் உரிமையை மறுத்து விமர்சிப்பது தவறு. யாராக இருந்தாலும்.

//உங்களுக்கு வேண்டுமானால் விக்கிபீடியாவில் நீங்கள் நம்பிக்கை செலுத்துகிற மார்க்கத்திற்கு எதிராக ஏராளமான கட்டுரைகளைத் தரலாம்.அவற்றை நான் பதிவும் இடலாம், அதை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதோ தெரியாது.//

நான் அதை வாசிப்பேன். அது தொடர்பான விளக்கத்தையும் தருவேன். தெரியாவிட்டால் தேடி அறிவேன். அதை உங்களுக்கும் சொல்லுவேன். பல ஆங்கில பதிவுகளில் இதை நான் செய்தும்கொண்டிருக்கிறேன்.

கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை உள்ளவனுக்கு, ஒரு கடவுளை வணங்கும் தேவை இருக்கிறது. அதை தேடவேண்டும். இதைதான் ஷாகிர் நாயக் கூட ஒருஇடத்தில் சொன்னார். http://eksaar.blogspot.com/2010/06/blog-post_24.html அதையே நானும் சொல்கிறேன். அதேபோல் உங்கள் நண்பர் ஒருவர், நீங்கள் அறிந்தவர் ஒருவர் உங்கள் கண்முன்னே கண்டிக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டு காலி பஸ்ஸில் ஏறினால் வெறுமனே பாத்துக்கொண்டிருப்பீர்களா? நீ ஏறியிருப்பது கண்டி பஸ்ஸில் அல்ல என்று சொல்லும் உரிமை / கடமை எனக்கு இல்லையா?

//உங்கள் நம்பிக்கையைப் போன்று, அவர்களுக்கும் அது நம்பிக்கை தான்.
ஹதீஸ்கள் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான், கிறிஸ்துமஸ் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.//

நான் இது தொடர்பாக கிறிஸ்த்தவ நண்பர்களிடம் கேட்டேன். யாரும் இதை மறுதலிக்கவில்லை. மாறாக கிறிஸ்து டிசம்பரில் பிறந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லையென்றும் சொன்னார்கள்.

கன்கொன் || Kangon said...

// விமர்சனங்களினூடாக சரியானதை நோக்கிய தேடல் ஆரம்பிக்கும். //

அதற்கு முதலாவது உங்கள் சார்ந்த மார்க்கத்தை பொதுவெளியில் விமர்சியுங்கள்.
அதற்கான தைரியமம், நேர்மையும் இருக்கிறதா பார்ப்போம்.


// நான் அதை வாசிப்பேன். அது தொடர்பான விளக்கத்தையும் தருவேன். தெரியாவிட்டால் தேடி அறிவேன். அதை உங்களுக்கும் சொல்லுவேன். பல ஆங்கில பதிவுகளில் இதை நான் செய்தும்கொண்டிருக்கிறேன். //

பீற்றர் விடும் கதை எதுவும் வேண்டாம்,
பதிவாக தமிழில் எழுதுங்கள்.
உங்களுக்கு வேண்டுமானால் http://allinall2010.blogspot.com/ தளத்தில் எழுதப்படுபவற்றிற்கு பதில் எழுதுங்கள் பார்க்கலாம்?
எனக்கு உங்கள் மார்க்கம் மீது தனியான எதிர்ப்புக் கிடையாது, மார்க்கங்கள் அனைத்தும் மீதான எதிர்ப்பே இருக்கிறது.
ஆனால் என்னோடு பழகும் மார்க்கங்களை பின்பற்றும் ஏனைய நண்பர்கள் மற்றைய மார்க்கங்களை கேலிக்குட்படுத்துவதில்லை.

முதலில், சுய விமர்சனப்பண்பு வளரட்டும்.


// நீங்கள் அறிந்தவர் ஒருவர் உங்கள் கண்முன்னே கண்டிக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டு காலி பஸ்ஸில் ஏறினால் வெறுமனே பாத்துக்கொண்டிருப்பீர்களா? நீ ஏறியிருப்பது கண்டி பஸ்ஸில் அல்ல என்று சொல்லும் உரிமை / கடமை எனக்கு இல்லையா? //

முதலில் நீங்கள் ஏறியிருக்கும் பேருந்து கண்டிக்குத்தான் போகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மார்க்கம் என்பதே பொய், பிழை என்பது என் கருத்து, ஆனால் நீங்கள் உங்கள் மார்க்கம் சரி, மற்றையது பிழை என்கிறீர்கள்.
ஊரைத் திருத்த முன்பு உங்கள் சார்ந்தவர்களைத் திருத்துங்கள்.


// நான் இது தொடர்பாக கிறிஸ்த்தவ நண்பர்களிடம் கேட்டேன். யாரும் இதை மறுதலிக்கவில்லை. மாறாக கிறிஸ்து டிசம்பரில் பிறந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லையென்றும் சொன்னார்கள். //

அது உண்மை. அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள்.
அது இங்கு விடயமல்ல, அதைத் தொட்டுப் பேச வேண்டிய அவசியம், அதற்குரிய உரிமை தங்களுக்குக் கிடையாது.
உங்களுக்கு (தனிப்பட்டு உங்களைத் தனியே சொல்கிறேன்) அப்படிப்பட்ட ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையோ, அந்தளவுக்கு பரந்த சிந்திக்கும் திறனோ கிடையாது, இருந்தர்லும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.

EKSAAR said...

//அதற்கு முதலாவது உங்கள் சார்ந்த மார்க்கத்தை பொதுவெளியில் விமர்சியுங்கள்.
அதற்கான தைரியமம், நேர்மையும் இருக்கிறதா பார்ப்போம்.//

விமர்சித்துக்கொண்டு அதில் இருப்பதில் அர்த்தமில்லை. விமர்சிப்பதற்கான தேவை இல்லாததால்தான் அதில் இருக்கிறோம்.

//எனக்கு உங்கள் மார்க்கம் மீது தனியான எதிர்ப்புக் கிடையாது, மார்க்கங்கள் அனைத்தும் மீதான எதிர்ப்பே இருக்கிறது.//
//மார்க்கம் என்பதே பொய், பிழை என்பது என் கருத்து,//
நீங்கள் தின்ற மரத்தின் பழம் புளித்தால் எல்லா மரத்தின் பழமும் புளிக்கும் என்கிறீர்கள்.

//ஆனால் என்னோடு பழகும் மார்க்கங்களை பின்பற்றும் ஏனைய நண்பர்கள் மற்றைய மார்க்கங்களை கேலிக்குட்படுத்துவதில்லை.//
இங்கு கேலிக்குட்படுத்தவில்லை. உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். அவ்வளவுதான். சிந்திப்பதற்காக.. நீங்களும் எதையாவது அறியத்தந்தால் சிந்திப்பேன்.

//முதலில் நீங்கள் ஏறியிருக்கும் பேருந்து கண்டிக்குத்தான் போகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.//
அப்படித்தான் ஏறியிருக்கிறோம். இல்லை என்பதை நிரூபிக்கவேண்டியது நீங்களல்லவா?

//ஊரைத் திருத்த முன்பு உங்கள் சார்ந்தவர்களைத் திருத்துங்கள்.//
எதை திருத்தவேண்டும் என்றும் சொல்லலாமே..

//அது உண்மை. அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள்.//
இருந்தால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?

//அப்படிப்பட்ட ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையோ, அந்தளவுக்கு பரந்த சிந்திக்கும் திறனோ கிடையாது, இருந்தர்லும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.//

இதற்கு பதில் சொன்னால் உங்கள் பாணியில்தான் சொல்லவேண்டும். வேண்டாமே அது.




உங்கள் சந்தேகங்கள் குற்றச்சாட்டு இருந்தால் பேஸ்புக்கில் தெரிவியுங்கள். அறிய பதிலளிக்க ஆவல்.

என்னிடம் இப்போது கணணி இல்லாததால் நான் இப்போது அதில் அதிகம் மெனக்கெடுவதில்லை. ஏன் என்றால் அதில் தொடர்ந்து கவனித்துக்கொண்டு பதிலளித்துக்கொண்டு இருக்கவேண்டும். இலங்கையிலிருக்கும்போது அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அதில் எழுதும் வால்பையனின் பர்தா தொடர்பான ப்திவிற்கு பதிலெழுதியிருக்கிறேன். (அந்த பதிவிற்கு முதல் பின்னூட்டம் இட்டதே உங்கள் நண்பர் ஒருவர் அல்லவா?)ஆனால் அவற்றில் பல பிரசுரிக்கப்படவில்லை. சில கேள்விகளே பின்னர் திருத்தப்பட்டன. அந்த அனுபவமெல்லாம் எனக்கு இருக்கிறது. வினவுவிலும் பதிலளித்திருக்கிறேன். அதனால்தான் மொபைலில் பார்க்ககூடிய ஆங்கிலத்தில் உள்ள பேஸ்புக்கிற்கு உங்களை அழைத்தேன்.

Anonymous said...

fuck your s self

கன்கொன் || Kangon said...

// விமர்சித்துக்கொண்டு அதில் இருப்பதில் அர்த்தமில்லை. விமர்சிப்பதற்கான தேவை இல்லாததால்தான் அதில் இருக்கிறோம். //

:D
திரும்பவும் ஒன்றையே சொல்கிறேன்.
பன்றி தான் வாழும் இடத்தில் வாழ்ந்து பழகிவிடும், அதன்பிறகு அதற்கு தான் வாழும் இடம் சொர்க்கமாகத்தான் தெரியும். அதுவே தான் மார்க்கங்களும்.


// நீங்கள் தின்ற மரத்தின் பழம் புளித்தால் எல்லா மரத்தின் பழமும் புளிக்கும் என்கிறீர்கள். //

பக்கத்தில் நின்ற மரங்களையும் முயற்சித்தேன்.
அது அதைவிட மோசமாகப் புளித்தது.


// இங்கு கேலிக்குட்படுத்தவில்லை. உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். அவ்வளவுதான். சிந்திப்பதற்காக.. நீங்களும் எதையாவது அறியத்தந்தால் சிந்திப்பேன். //

உங்கள் மார்க்கம் மீதான விமர்சனங்களுக்கு நான் வரவில்லை.
அது எனக்குத் தேவையற்றதும் கூட.



// அப்படித்தான் ஏறியிருக்கிறோம். இல்லை என்பதை நிரூபிக்கவேண்டியது நீங்களல்லவா? //

ஒன்றை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது நாங்களல்ல, இருக்கிறது என்று குழறிக்கொண்டு திரிபவர்கள் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.


// எதை திருத்தவேண்டும் என்றும் சொல்லலாமே.. //

எப்படி ஒன்று இல்லாதது போல் நடிக்கிறீர்கள்?
சில சுட்டிகள்:
http://en.wikipedia.org/wiki/Criticism_of_Islam
http://en.wikipedia.org/wiki/Criticism_of_the_Qur%27an
http://en.wikipedia.org/wiki/Criticism_of_Muhammad

http://allinall2010.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D

இவை வெறும் மாதிரிகள் தான்.


// உங்கள் சந்தேகங்கள் குற்றச்சாட்டு இருந்தால் பேஸ்புக்கில் தெரிவியுங்கள். அறிய பதிலளிக்க ஆவல். //

திரும்ப உங்கள் மதத்தின் மீது நான் ஏதோ குற்றச்சாட்டுகளைக் கொண்டிருப்பது போலக் கதைக்கிறீர்களே?
நான் இங்கு பின்னூட்டியது நீங்கள் வேற்று மதமொன்றைப் பற்றிக் கதைத்ததாலேயே தவிர, உங்கள் நம்பிக்கைகளின் ஓட்டைகள் பற்றிக் கதைக்கவல்ல.
மதத்தில் ஊறிய மதவாதிகளுக்கு விளக்கம் கொடுப்பதும் எருமை மாட்டில் மழை பெய்வதும் ஒன்றுதான்.