டிபிஎஸ் ஜெயராஜின் வலைப்பதிவில் நேற்று The Mahavamsa mindset: Re-Visiting political Buddhism in Sri Lanka என்ற தலைப்புல் தேவானந்தா என்பவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.
அதைப்பற்றி கூறுமுன் அதே பக்கத்தில் காணப்படும்
"Just as Jazz demands a different way of playing and listening, blogging requires a different mode of writing and reading." - Andrew Sullivan
என்பதை கட்டாயம் கவனிக்கவும்.
மகாவம்ச பௌத்தம் பற்றிய இக்கட்டுரையின் பல விடயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.
ஆயினும்,
மகாவம்ச பௌத்தத்திற்கு சற்றும் சளைக்காத இராமாயண ஹிந்துதுவம் பற்றியும் ஞாபகத்தில் கொள்ளுதல் அவசியம். (கற்பனைக்கெட்டாதவைகள் இராமாயணத்தில் அதிகம்)
இலங்கையில் மகாவம்சம் இருக்கும் நிலையை காட்டிலும் மிக மோசமாக நீதிமன்றத்தில் ஆதாரமாக கொள்ளப்படும் நிலையில் இந்தியாவில் இராமாயணம் இருக்கிறது.
இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.
இதே இராமாயணம் இலங்கையிலும் சில கழகங்களாலும் இயக்கங்களாலும் ஹிந்துக்களின் மனதில் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் ஊடக நண்பர்கள் மிக நாசூக்காக இலக்கியம் என்ற பெயரில் இராமாயண புனைவுகளை திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எதையாவது பேசவேண்டிய அவசியத்தில் இருக்கும் வானொலி தொலைக்காட்சி chat showகளில் இவை அடிக்கடி இடம்பிடிப்பதை பார்க்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் இதே இராமாயண புனைவுகள் தமிழ் ஹிந்துக்களை மௌனிகளாக்கியிருக்கும். இல்லாவிட்டால் 83 கலவரத்தை பேசும் அதே வாய்கள் அதை விட தெளிவான இனச்சுத்திகரிப்பான** யாழ் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட நிகழ்வை பற்றி இன்று வரைக்கும் பேசுவதை தவிர்க்குமா?
** 83 இல் தமிழர்கள் பாரியளவில் சிங்களவர்களால் காப்பாற்றப்பட்டதுபோல் ஓரிரு நிகழ்வுகளாவது யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் இடம்பெறவில்லை என்பதை கருத்தில்கொண்டு.
இன்னும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை அரசு இராமாயண நிகழ்வுகளை உண்மை என்று சொல்லி அதிக இந்திய சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் அண்மைக்காலத்தில் கவனிக்ககூடியதாக இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே அமையும்.
முதலில் வரலாற்று தமிழ் சிங்கள பாடநூல்களிலிருந்து தெளிவான புனைவுகள் அகற்றப்படவேண்டும்.
இன்னும் ஒரு நூறுவருடத்தில் இலங்கை தமிழ் பதிவர்கள் பற்றிய வரலாறு தேடப்படுமானல் ஒட்டுமொத்த பதிவர்களின் ஆதரவோடு சகல இலங்கை தமிழ் பதிவர்களின் கலந்துகொள்ளலோடு (கிழக்கிலிருந்து எழில்வேந்தன், முஸ்லிம்கள் சார்பாக நஸ்ருதீன், சிறுவர்கள் சார்பாக அவர் மகன், பெண்கள் சார்பாக 5 பெண்கள்.. என யாரேனும் ஒரு வரலாற்றாசிரியர் நிறுவக்கூடும் :D
வரலாறு முக்கியமல்லவா? :D
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.