மணிரத்தினத்தின் இயக்கத்தில் நாளை ராவணண் படம் வெளியாகிறது. நாளை இலங்கையில் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பெற்ற வெற்றியை குறிக்கும் விழாவையும் இலங்கை அரசு நடாத்துகிறது.
Raavan (Hindi: रावण) is a forthcoming Hindi film directed and co-written by Mani Ratnam. It stars Abhishek Bachchan, Aishwarya Rai and Vikram in the lead roles while Govinda, Ravi Kishan, Nikhil Dwivedi, Tejaswini Kolhapure and Priyamani feature in key supporting roles. It is simultaneously being made in Tamil as Raavanan with a slightly different cast, which would also be dubbed into Telugu[1] and other regional languages. The film's score and soundtrack is composed by A. R. Rahman.[2][3] The film is scheduled to be released on 18 June 2010.[4] The film's premiere was held in London on 16 June 2010.[5]
ஏற்கெனவே ஐபா விழாவில் கலந்துகொள்ளாமைக்கு மணிரத்தினம் மற்றும் பச்சன் குடும்பத்தினர் ஆகியோர் சப்பைக்கட்டு காரணம் கூறியிருப்பது தமிழ் உணர்வாளர்களை புண்படுத்தியிருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் வெற்றி விழா நடைபெறும் நாளிலேயே ராவணண் படமும் வெளியாவது குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
போதாதற்கு படத்தில் கோடு போட்டா கொன்னு போடு என்று ஒரு பாடல் வேறு. ரஹ்மான் பாடலை கோடு போட்டா குண்டு போடு என்று கேட்குமாறு ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார். இப்பாடலின் வரிகளை உன்னிப்பாக கவனித்தால் இலங்கை அரசின் வெற்றி பெருமித பாடல் போல் இருக்கிறது.
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலையப்போடு எலைய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது
பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்ல பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மய்க்கா நாளே ஏழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோ கோ கோ கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்
இதில் கோடு போட்டா கொன்னு போடு என்பது தனி நாடு கேட்டு நாட்டுக்குள் கோடு (எல்லை) வரைபவரைக்குறிக்கும் என்பது தமிழ் உணர்வாளர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது.
தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவை சுமந்திருக்கும் நிலையில் இலங்கையரசு போரின் வெற்றியை பெருமிதத்தோடு கொண்டாடுகையில் அதே நாளில் ராவணண் படத்தை வெளியிடுவதன் அவசியம்தான் என்ன? ஒரு நாள் பிந்தி வெளியிட்டால் மணிரத்தினத்தின் குடியா முழுகிப்போய்விடும்?
எனவே மணிரத்தினத்தின் சதியை முறியடித்து இப்படத்தை உலகெங்கும் நாளை வெளியிடப்படுவதையாவது தடுக்கவேண்டும்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
12 comments:
ஆகா ஆகா.. என்ன கண்டுபிடிப்பு சார்..
இது ஆடு - ஓநாய் கதையைத் தான் எனக்கு ஞாபகப்படுத்துது..
நல்லா யோசிக்கிறீங்க..
மணி மீது உங்களுக்கென்ன காண்டு என்று எனக்கு நல்லாவே தெரியும்..
வழமையான என்ன கொடும சார் ரகப் பதிவு தான்.
இது உங்கள் வலைப்பூ எது வேணுமின்னாலும் எழுதுங்க, உங்களுக்கு மணியை பிடிக்கலையோ, விக்ரமை பிடிக்கலையோ எதென்றாலும் நேரடியா படத்தை மோசமா விமர்சிக்கலாம், இப்பிடி கேவலமான வேலை செய்யனுமா? தயவுசெய்து சீமான் வகையறாக்கள் மாதிரி தமிழையும் ஈழத் தமிழர்களையும் வைத்து விபச்சாரம் செய்யாதீர்கள்.
Eksaar,நீங்கள் ஒன்று. எங்கள் தமிழ் உணர்வாளர்களுக்கு சினிமா இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே இருண்டுவிடும். தமிழ் உணர்வாளர் LOSHAN னை பார்த்தாலே விளங்கும். யாழ்பணம் போய்வந்து யாழ் மக்கள் கலாச்சாரத்தை கெடுத்துப் போட்டார்கள் என்று எழுதினால் தமிழ் உணர்வாளர் ஆகிவிடலாம்.
sema comedy , super
மொதத் தடவை ராமாயணத்துல ராவணன் ஈரோவாக்கியிருக்கான் ஒரு திராவிடப் பார்ப்பான். அதையும் "தமிழ் உணர்வுள்ள" திராவிட குஞ்சாமணிகள் எதிக்கவேண்டுமா ?
ஒரு தமிழனாக உங்கள் தமிழுணர்வில் புல்லரித்துப்போய்க் கிடக்கிறேன், செய்வதறியாது வியந்து நிற்கிறேன்.
அதே ஆடு - ஓநாய் கதைதான்
when this happens to kaaththaankudi next time, let me know. I will make the fun on your expense :-)
http://globaltamilnews.net/tamil_news1.php?nid=25986&cat=1
அத விட ராமாயணத்தையே தடை பண்ணுன்னு கேட்ர வேண்டியதுதான
:D
////இதில் கோடு போட்டா கொன்னு போடு என்பது தனி நாடு கேட்டு நாட்டுக்குள் கோடு (எல்லை) வரைபவரைக்குறிக்கும் என்பது தமிழ் உணர்வாளர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது////
உன்னுடைய பிறப்பை, இனத்தை, மதத்தை மொழியை வைத்து உனக்கு யாராவது எல்லைக் கோடு வகுத்தால் கொன்று போடு என்றுகூட அர்த்தப்படுத்தலாம். எல்லாம் அவரவர் பார்வை
Post a Comment