Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

எக்சார் எழுதும் கடிதம்

நலம். உங்கள் நலத்திற்கு இறைவன் எப்போதும் அருள்பாலிக்க வேண்டிக்கொள்கிறேன்.

முதலில் பதிவுலகில் நான் இருப்பதற்கான காரணங்களையும் சொல்லவேண்டும்.

லோசனின் பதிவுகளினூடாக பதிவுலகு பற்றிய அறிமுகத்தை பெற்றுக்கொண்டபோதும் அதே காலத்தில் ஹிஸாம் எழுதிய "வடபுல சோனிகள் .." என்று ஆரம்பிக்கும் பதிவில் நடந்த விமரிசனங்கள்தான் என் பாதையை தீர்மானித்தது.

எல்லோரும் ஒன்றை பற்றி மற்றும் பேசுகின்ற கடிவாளம் போட்டமாதிரியான இலங்கை பதிவுலகில், எனக்குத்தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவுசெய்தல் அவசியம் என உணர்ந்தேன். கருத்துக்கள் சரியோ பிழையோ (அது அவரவர் பார்வையை பொறுத்து என்பது நீங்கள் அறிந்ததே) அவை சொல்லப்படுவதன்மூலம் இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது என்று உணரச்செய்வதே என் எழுத்தின் நோக்கம். இது ஆரோக்கியமான ஜனநாயத்திற்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.

எனது முதல் 3 பதிவுகள் நானே எழுதி நான் மட்டுமே படித்திருக்கிறேன். அதை பெரிதாக ரீச் ஆகவில்லை.
நவீன தொடர்பாடல் தொழிநுட்பமும் பெட்ரோலும்
ROBIN HOOD அரசாங்கம்
பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைச்சரவையும்
ஆனால் இவையே நான் எழுத நினைக்கும் பதிவுகள். என்ன செய்ய.. இவை எவை பற்றியும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமிலலை. இவையெல்லாம் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் ரீச் ஆகும். ஆனால் அது பற்றி எழுத அங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

அதன்பின் கொஞ்சம் தமிழ் மக்கள் படிக்கிறமாதிரி பதிவுகள். ஆனால் அவற்றைபற்றி பதிவுலக ஆசானிடம் கருத்து கேட்டால் எல்லாம் மொக்கை என்றார். பிறகு நான் கவலைப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பலருடையதும் மொக்கைதான் என்றார்.

ஆக மீண்டும் எழுதவேண்டிய தலைப்புகள் பற்றி என்னுடைய சீர்தூக்கலை செய்தேன். இப்போது என் பதிவுகளை "என்ன கொடுமை சார்" என்கிறார்கள். அப்பாடா.. அது போதும்.. இந்தப்பாதையிலேயே இனியும் தொடர இருக்கிறேன்.

ஆயினும் பலர் குற்றஞ்சாட்டுதல் போல் கவனிக்கப்படவேண்டும், பெருமை பெறவேண்டும் என்பது என் நோக்கமல்ல. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஏறத்தாள 10 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது "அறிவிப்பாளர்கள் ஏன் சமூகத்திற்கு பெரிதாய் எதுவும் செய்வதில்லை" என்ற பேச்சு வந்தது. அப்போது என் நண்பன் ஒருவன் கூறிய காரணம், "அது புகழை மையமாக கொண்டு இயங்கும் உலகு.. அவ்வாறான உலகில் தனது புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்று நினைப்பதை எதிர்ப்புகள் வரக்கூடும் என்று நினைப்பதை அவர்கள் செய்யமாட்டார்கள்" என்பது இன்றும் என் மனதில் இருக்கிறது.(அண்ணண் மாரே இதுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன் 10 வருஷத்திற்கு முன் இருந்த பிரபல அறிவிப்பாளர்கள் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை கவனித்தல் நலம்)

அதனால்தான் நான் எக்சார் ஆகவே அடையாளம் காட்டுகிறேன். எனது தனிப்பட்ட அடையாளம் இருந்தால்தானே புகழுக்கு ஆசை வரும்...

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக என்னுடைய பதிவு தொடர்ந்தும் பிழையாகவே விளங்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். எனவே என்பார்வையில் பொருத்தமற்ற பின்னூட்டங்களை நீக்க நான் முடிவெடுத்தால் ஏறத்தாள எல்லா பின்னூட்டங்களையும் நீக்கவேண்டிவரும்.

ஆனாலும்

நான் பின்னூட்டங்களை ஒருபோதும் மட்டுறுத்தியதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். எனவேதான் என்னைப்பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பின்னூட்டங்கள் கூட அப்படியே இன்றும் இருக்கின்றன. (என்னுடைய பெயரை இழுத்த ஓரிரண்டு பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன். எடிட் செய்திருக்கிறேன்.)

ஆயினும் இப்பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வந்த அழுத்தங்களை தொடர்ந்து, பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலலை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் முகமாக, பதிவை நீக்க முடிவெடுத்தேன்.

அம்முடிவு உலகில் யாரையும் விட எனக்கே வலிதருவது. ஆயினும் அம்முடிவை எடுக்கவெண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்ய..

தொடர்ந்தும் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கும்

எக்சார்

குறிப்பு
1) தம்பி அசோக்பரனுக்கு, நான் உங்களை சாரு என்று கூறியதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது உண்மை. அது உங்கள் எழுத்து நடைக்காக அலல.. Buy me a Coffee என்ற உங்களது widget க்காக மட்டுமே. சாருதான் எல்லாத்துக்கும் காசு கேக்கிறார். அவர் பாசையில் சொல்வதானல் உங்கள் "அது" (சிறுவர் என்றால் என்ன பெரியவர் என்றால் எனக்கு என்ன?) விறைப்படைவதற்காக எழுதினால் சுகம் உங்களுக்கு. எதற்கு எங்களிடம் காசு கேட்கிறீர்கள்? நாங்கள் ஏன் காசு செலவழித்து உங்களுக்கு "சரக்கு" புடிச்சுத்தரணும்? மற்றப்படி நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். வாகன தீர்வை பற்றி நீங்கள் மட்டும்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

2) லோசன் அண்ணா, கங்கொன், ஆதிரை போல் சண்டைபிடுச்சுக்கிட்டே என்னோடு நட்பாக இருக்க நீங்கள் தயார் என்றால் வலது இடது பக்கத்தில் இருக்கும் Facebook, Twitter link களை click செய்யவும். :D :D :D


3) பதிவுலகிலிருந்து இடைவெளி எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (இதற்கும் கண்டனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

10 comments:

கன்கொன் || Kangon said...

எக்சாருக்கு,

மாற்றுக்கரத்துக்களை எப்போதும் வரவேற்பவன் என்ற வகையில் உங்கள் எழுத்துக்கள் மீது காழ்ப்புணர்ச்சி ஏதும் கிடையாது.
ஆனால் சில கருத்துக்கள் எனக்கு பிழையானதாக, என் பார்வையில் சகூகத்திற்கு எதிரானதாக தெரியின் அதை எதிர்க்கும் உரிமை எனக்கு உண்டு என்று நம்புகிறேன்.

அதைத்தவிர template பின்னூட்டங்கள் போல எல்லாப் பதிவுகளும் template பதிவுகளாக இருப்பின் பதிவுலகில் மட்டுமல்ல எங்குமே ஜனநாயகம் காணப்படாது.

உங்கள் முதல் பதிவுகள் பலரைச் சென்றடையாமைக்குக் காரணம், அவை உங்கள் தொடக்கப் பதிவுகள்.
அனைவருக்கும் ஆரம்ப நிலையில் வருகை கிடைப்பதில்லை, இப்போது அப்படியான பதிவுகளை எழுதிப் பாருங்கள், வருகையாளர்கள் அதிகமாக இருக்கும்.

நூலகப் பதிவு -
என் பார்வையில் மிக மோசமாக நிலைமைகளை உணர்ந்து எழுதப்பட்ட பதிவு.
ஆனால் யாழ் நூலகம் பற்றி உங்களுக்கு போதிய தகவல்கள், அறிவு இருக்காததன் விளைவே அது என்று நம்புகிறேன், அவ்வளவு குப்பைப் பின்னூட்டங்கள் நடுவிலும் ஒரு சில நல்ல பின்னூட்டங்கள் பகிரப்பட்டன.
மின்னஞ்சலில் இருந்தால் வாசிக்கவும்.


// லோசன் அண்ணா, கங்கொன், ஆதிரை போல் சண்டைபிடுச்சுக்கிட்டே என்னோடு நட்பாக இருக்க நீங்கள் தயார் என்றால் வலது இடது பக்கத்தில் இருக்கும் Facebook, Twitter link களை click செய்யவும். :D :D :D //

இரசித்தேன். :)))
எனினும் என்னைப் பொறுத்தவரை ஒருவரின் கருத்துக்களை எதிர்த்தால் அவரையும் தனிப்பட்டு எதிர்க்க வேண்டும் என்று நம்புவதில்லை. :)

பதிவுலக ஓய்வு -
உங்கள் தனிப்பட்ட முடிவு. :)
என்றாலும் தொடர்ந்து எழுதவும். :)))

என்.கே.அஷோக்பரன் said...

என்னை நீங்கள் சாரு என்றதில் எனக்குக் கோபம் இல்லை. அது உங்கள் perceptive. நான் அந்தப் பின்னூட்டத்தில் கூட “அது உங்கள் தனிப்பாணி” என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் அதைச்சொல்வதற்கு உங்களுக்கிருக்கும் சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். வோல்டேயர் சொன்னார் “உனது கருத்துக்களுடன் நான் முரண்படுகிறேன், ஆனால் அதைச்சொல்ல உனக்கிருக்கும் உரிமையை உறுதிப்படுத்த எனது உயிரையும் கொடுக்கத் தயார்” என்று. ஆனால் சுதந்திரத்திற்கும் அளவு கோல் உண்டு. ருஸோ சொன்னார், தடியைச் சுழற்ற உனக்குச் சுதந்திரம் உண்டு ஆனால் அது மற்றவர் மூக்கு நுனியில் படும் வரை என்பார். இன்னொரு கருத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் அவரவர் கொள்கைகள் மேல் நம்பிக்கையும் பற்றும் உள்ளது. அதைப் பிரச்சாரம் செய்ய சுதந்திரமும் உள்ளது ஆனால் அதன் மூலம் இன்னொருவரின் நம்பிக்கையைப் புண்படுத்துதல் தவறு - நீங்கள் இதைக் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாம்.

பதிவுலகத்தை விட்டு விலகுவது என்பது பொருந்தாச்செயல்.

நானும் சிலவேளைகளில் வருந்தியதுண்டு, என்னதான் சமூக, அரசியல் எழுதினாலும், சினிமா மற்றும் பம்மல் பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்புக் கிடைப்பதில்லை என்று. நான் இதுவரை ஒரே ஒரு சினிமாப் பார்வை எழுதியிருக்கிறேன், இதுவரை நான் எழுதியவற்றுள் அதிக வரவும், வாக்கும் பதிவுசெய்தது அந்தப் பதிவுதான். நான் எனது திருப்திக்காக எழுதுகிறேன் - மற்றவர் கட்டாயம் வந்து வாசிக்க வேண்டும், ஹிட்ஸ் வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, நான் எழுதுவதை ஒருவராவது விரும்பிப் படித்தால் போதும் அதுவே எனக்குப் பரம திருப்தி. ஆக எனது கருத்து யாதெனில் வாசகர்களின் திருப்திக்காக எழுதாதீர்கள், உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் - தமிழ்ப்பதிவுலகத்தை முழுவதுமாக commercialize செய்யத்தேவையில்லையே...

எழுதுங்கள்.... எழுத்துக்கள் தான் நீண்டகாலத்தில் உலகைமாற்றும் வல்லமை படைத்தது!

என்.கே.அஷோக்பரன் said...

என்னை நீங்கள் சாரு என்றதில் எனக்குக் கோபம் இல்லை. அது உங்கள் perceptive. நான் அந்தப் பின்னூட்டத்தில் கூட “அது உங்கள் தனிப்பாணி” என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் அதைச்சொல்வதற்கு உங்களுக்கிருக்கும் சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். வோல்டேயர் சொன்னார் “உனது கருத்துக்களுடன் நான் முரண்படுகிறேன், ஆனால் அதைச்சொல்ல உனக்கிருக்கும் உரிமையை உறுதிப்படுத்த எனது உயிரையும் கொடுக்கத் தயார்” என்று. ஆனால் சுதந்திரத்திற்கும் அளவு கோல் உண்டு. ருஸோ சொன்னார், தடியைச் சுழற்ற உனக்குச் சுதந்திரம் உண்டு ஆனால் அது மற்றவர் மூக்கு நுனியில் படும் வரை என்பார். இன்னொரு கருத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் அவரவர் கொள்கைகள் மேல் நம்பிக்கையும் பற்றும் உள்ளது. அதைப் பிரச்சாரம் செய்ய சுதந்திரமும் உள்ளது ஆனால் அதன் மூலம் இன்னொருவரின் நம்பிக்கையைப் புண்படுத்துதல் தவறு - நீங்கள் இதைக் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாம்.

பதிவுலகத்தை விட்டு விலகுவது என்பது பொருந்தாச்செயல்.

நானும் சிலவேளைகளில் வருந்தியதுண்டு, என்னதான் சமூக, அரசியல் எழுதினாலும், சினிமா மற்றும் பம்மல் பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்புக் கிடைப்பதில்லை என்று. நான் இதுவரை ஒரே ஒரு சினிமாப் பார்வை எழுதியிருக்கிறேன், இதுவரை நான் எழுதியவற்றுள் அதிக வரவும், வாக்கும் பதிவுசெய்தது அந்தப் பதிவுதான். நான் எனது திருப்திக்காக எழுதுகிறேன் - மற்றவர் கட்டாயம் வந்து வாசிக்க வேண்டும், ஹிட்ஸ் வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, நான் எழுதுவதை ஒருவராவது விரும்பிப் படித்தால் போதும் அதுவே எனக்குப் பரம திருப்தி. ஆக எனது கருத்து யாதெனில் வாசகர்களின் திருப்திக்காக எழுதாதீர்கள், உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் - தமிழ்ப்பதிவுலகத்தை முழுவதுமாக commercialize செய்யத்தேவையில்லையே...

எழுதுங்கள்.... எழுத்துக்கள் தான் நீண்டகாலத்தில் உலகைமாற்றும் வல்லமை படைத்தது!

அமீர்- ஓட்டமாவடி said...

பதிவுலக ஆசானிடம் கருத்து கேட்டால் எல்லாம் மொக்கை என்றார். பிறகு நான் கவலைப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பலருடையதும் மொக்கைதான் என்றார்//

இன்றைய பதிவுலகில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, ஜால்ரா அடித்து எழுதும் பதிவுகள், தனி மனித புகழ்பாடும் பதிவுகள் தான் முக்கியம் பெறுகின்றன. வாழ்த்துக்கள் எக்சார். தொடர்ந்தும் எழுதுங்கள். இறைவன் உங்களைக் கைவிடான். நபிதூதரின் பிள்ளைகள் நாங்கள். நமக்காக வாழா விட்டாலும் பிறர்க்காக வாழ்வோம்.

Anonymous said...

//அமீர்- ஓட்டமாவடி said...
இறைவன் உங்களைக் கைவிடான். நபிதூதரின் பிள்ளைகள் நாங்கள். //

இதற்குப்பின்னும் உங்களை யாரும் முஸ்லிம் என்று நம்பமாட்டார்கள்

Jessi said...

//இவை எவை பற்றியும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமிலலை. இவையெல்லாம் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் ரீச் ஆகும்.//

True. That is why you are the one of few bloggers Recognized by Groundviews http://twitter.com/groundviews/sl-bloggers

AGASIYAM said...

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

ஆதிரை said...

நண்பருக்கு/சகோதரருக்கு,

உங்கள் மீது நான் கொண்ட நட்புக்கு உங்கள் கருத்துக்களினால் எந்தப்பாதகமும் இதுவரை இல்லை; இனியும் இருக்காது என்று நம்புகிறேன்.

ஆனால், உங்களின் பல கருத்துக்களை - சில பதிவுகளை கன்னாபின்னாவென்று எதிர்த்திருக்கிறேன். அக்கருத்துக்களின் மீது நான் கொண்ட எதிர்க்கருத்துக்களினால்.

வெளிப்படையாகவே சொல்கின்றேன்... நீங்கள் சார்ந்த முஸ்லிம் சமுதாயம் தொடர்பான கருத்துக்களையும் நீங்கள் முன் வைக்கின்றீர்கள். நல்லது. ஆனால், வேண்டுமென்றே தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை உங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்துகின்றீர்களோ எனும் சந்தேகங்கள் ஒரு சில இடங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. எழுதுகின்ற உங்கள் பேனாவின் இயல்போ அல்லது வாசிக்கின்ற என் மனப் பிரமையோ தெரியவில்லை. அப்படித் தோன்றும் சந்தர்ப்பங்களில் உங்களை சீண்டுவதற்கு நான் என்றைக்கும் பின் நின்றதில்லை. :-)

பதிவுலகத்திலிருந்து ஓய்வு...??? உங்களின் கருத்துக்களை ஒரு ஜனநாயக நாட்டிலிருந்து சொல்வதற்கு ஏன் தயங்குகின்றீர்கள்? :P

பி.கு: மூலை முடுக்கெல்லாம் இர்சாத் ஐ தேடிக் கொண்டிருக்கின்றேன்... என்றைக்கோ கண்டுபிடிப்பேன் என்ற நம்பிக்கையில். :-)

Anonymous said...

There you go, now he is afraid of Canada. (http://journeyconference.com/: While no official public notice or announcement has been issued regarding the Canadian government's decision to revoke Dr. Naik's visa, we have no choice but to assume, based on various reports, that such a decision has been made and abide by it at this time.)
As I said before Sri Lanka would do the same thing!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.