Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நாடோடி பார்வையில் தமிழா?முஸ்லிமா?

நாடோடி பார்வையில் என்ற வலைப்பூவில் தமிழா?முஸ்லிமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

காசா முஸ்லிம்கள் தொடர்பாக அக்கறைப்படும் இலங்கை முஸ்லிம் சமூகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக எதையும் செய்யவில்லை என்ற தொனியில் இப்பதிவு இருந்தது.

இப்பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இதுவரை பிரசுரமாகாத நிலையில், அதை ஒரு பதிவாக இடவேண்டிய நிலமை இப்போது ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம்கள் சமய ரீதியாக தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இன்னும் பல தமிழ் சகோதரர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அல்லது அவ்வாறு இருப்பதில் விருப்பம் இல்லை.

ஆயினும் தனித்துவம் என்பது மனிதநேயத்திற்கு குறுக்காக ஒருபோதும் இருந்ததில்லை.

காசாவிற்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பலில் பிரபல அரசியல்வாதியான பாகீர் மாக்காரின் உறவினரான அஹமட் லுக்மான் தாலிப் இன் குடும்பமும் இருந்தது. இது பதிவு எழுதும்போது நாடோடி பார்வைக்கு தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அப்படி ஒருவர் இல்லாதிருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்.A Sri Lankan shot by Israeli commandos during last week's deadly raid on a Gaza-bound aid flotilla has recounted the ordeal he had to face at the time of the incident. He is now receiving treatment at a hospital in Istanbul.

"Ahmad Luqman Talib received gunshot injuries in the leg and is now recovering in a hospital in Istanbul," said Nihad Issa, office director for the Representative Office of Sri Lanka to the Palestinian National Authority in Ramallah.

ஆப்கானிஸ்த்தானில் பாமியான் சிலைகள் உடைக்கப்பட்டபோதும் இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் புலிகள் இயக்கத்தை அனுதாப கண்ணோட்டத்தில் பார்க்கமுடியாது. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் அப்பாவி தமிழ் மக்களின் இன்னல்களை ரசித்ததும் இல்லை.

முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது எந்தவொரு தமிழ் அமைப்பும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவோ உண்ணாவிரதம் மேற்கொள்ளவோ இல்லை என்ற வருத்தம் இன்னமும் முஸ்லிம்களிடையே இருக்கிறது.

பழையன பேசி இனி பயனில்லை. ஆயினும் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகள் தொடர்பாக இணையத்தில் வந்த செய்திகள் சிலவற்றை கீழே காணலாம்
வன்னி மக்களுக்கு முஸ்லீம் மக்களின் மனிதாபிமான உதவி முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் முஸ்லீம் அமைப்புக்களால் கையளிப்பு!
http://www.neruppu.com/?p=5261

காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜாமி - யத்துல் உலமா சபை வர்த்தகர் சங்கம் மற்றும் நகர சபை ஆகியன இணைந்து இந் நிவாரணப் பொருட்களை வைபவ ரீதியாக முதலமைச்சரிடம் கையளித்தனர்.
http://www.viyapu.com/news/?p=9858

வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்
http://www.unmaikal.com/2009/04/blog-post_5209.html

யுத்த அகதிகளுக்கான நிவாரணப் பணியில் காத்தான்குடி தொண்டர் குழு
http://www.unmaikal.com/2009/04/blog-post_8921.html

தமிழின மக்களின் துக்கத்தில் பங்குகொள்ளும் முஸ்லீம் உறவுகள்..
http://www.vaavimagal.com/?p=1500

இது தொடர்பாக பிபிசி தமிழோசை கூட ஒரு செய்தியை தந்திருந்தது. அதன் சுட்டியை தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நாடோடியின் பார்வையில் இருந்த தெளிவாகும் ஒரு விசயம், இவ்வாறான நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் மௌனம் இவ்வூடகங்களின் உண்மையான சொரூபத்தை தோலுரிக்கின்றது என்பதே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 comments:

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

உன்மையை சொல்லி உள்ளீர். ஆனால் விடுதலைபுலியினர் பள்ளிவாசகளில்லும் தேவாலயங்களிலும் நடத்திய படுகொலைகளை நீங்கள் சொல்ல மறந்து விட்டீர்கள் நன்பரே...

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

தமிழனாக இருந்தாலும் முஸ்லிம் என்கிற காரணத்தால் விரட்டப்பட்டு , ஒதுக்கப்பட்ட போது நீங்கள் ஏன் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவில்லை

Shafiq said...

அநியாயம் எங்கு நடந்தாலும் உலக முஸ்லீம்கள் குரல் கொடுப்பார்கள்,

அவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறார்கள் அல்லது அவர்கள் தங்களிடம் உள்ள சத்தியத்தை உலகிற்கு சொல்லவில்லை,

தமிழ் நாட்டில் கூட சில முஸ்லீம் அமைப்புகள் கண்டணம் தெரிவித்திருந்தனர் இலங்கை நிகழ்வை,

பிரபாகரன் வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யப்பட வைக்கின்றது.

பிரபாகரன் முஸ்லீம்களுக்கு நிகழ்ந்த நிகழ்வை கூட தவறு என்று கூறியிருந்ததாக ஞாபகம்.

இலங்கையில் முஸ்லீம்களூக்கு நிகழ்ந்தது கண்டிக்கத்தக்கதுதான், அது ஒரு அரசியல் தவறும் கூட.