யுத்தம் முடிந்து விட்டது. மக்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் வடகிழக்கு மீண்டும் முரண்பாட்டின் அரங்காக மாறுகிறதா?
மீள்குடியேற்றப்பட்டவர்களில் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஊர் காவல் படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் இருக்கின்றனர்.
"ஆம். வளர்ந்து வரும் இப்பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளை சில மீள்குடியேற்ற பிரதேசங்களில் காண்கிரோம்"
இந்த நிலமை எல்லைக்கிராமங்கள் என்று கருதப்படும் நெல் விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்களில் இன்னும் மோசமாகக்கூடும்.
யுத்தம் முடிந்து விட்டது. மக்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் வடகிழக்கு மீண்டும் மனிதனுக்கும் யானைக்குமிடையேயான முரண்பாட்டின் அரங்காக மாறுகிறதா?
ஒரு வருடத்தின் முன் வன்னியில் யுத்தத்தின் உச்சம். தொலைவில் செல்களின் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதுவும் வாகரைகாடுகளில் இருந்த யானைகட்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் இறுதியில் யுத்தத்தின் நிஜம் அவற்றை பீடித்துக்கொண்டது. அதன் கால் புலிகளால் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததன் காரணமாக சிதறிப்போனது.
காயமுற்ற யானை தன்னை தானே இழுத்துக்கொண்டு அருகில் இருந்த நீர் நிலைக்கு சென்றுவிடுகிறது. ஆனால் தொற்று ஏற்பட்டுவிட்டதால் அதற்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அற்பமே. வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்தியர்கள் செத்துக்கொண்டிருக்கும் யானை பற்றி அறிவிக்கப்படுகிறார்கள். ஆயுத படையின் உதவியுடன் அவர்கள் அதன் உயிரைக்காக்க முற்சிக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
"யானையின் பாதம் எப்போதும் மண்ணுடனும் அழுக்குடனும் தொடர்பில் இருப்பது, புண்ணை ஆற்றுவதை மிக கடினமானதாக ஆக்குகிறது. காயம் பெரும்பாலும் உழைச்சலுடனான மரணத்துக்கு காரணமாகிறது. " என்று நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டவைகளுக்கு சிகிச்சையளிக்கும் மிருகவைத்திய நிபுணர் கூறுகிறார். தொற்றினாலும் உணவைத்தேடிக்கொள்ள முடியாததாலும் அந்த வாகரை யானை மிகுந்த வலியுடன் நாட்கணக்கில் கிடந்து செத்துப்போனது.
யுத்ததின் உச்ச கட்டத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இராணுவத்தின் விரைவை குறைப்பதற்கு பல்லாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் புலிகளினால் புதைக்கப்பட்டதனால் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மீட்கப்பட்டபின்னும் பல யானைகள் கண்ணிவெடிகளுக்கு இரையாகின. கடந்த சில வருடங்களாக வனவிலங்கு மிருக வைத்தியர்கள் ஆக குறைந்தது வருடத்துக்கு 10 சம்பவங்களேனும் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளனர். கண்ணிவெடியை முகரும்போது ஒரு யானை தன் தும்பிக்கையைக்கூட இழந்தது.
யுத்தம் முடிந்தபின் சனத்தொகை மிக்க இடங்களை இலக்காககொண்டு கண்ணிவெடிகளை அகற்றல் ஆரம்பமானது. 20 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டிருந்த கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். யானைகள் வாழும் இடங்களில் கூட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வருகின்றன. இது மனிதனுக்கும் யானைக்கும் இடையேயான முறுகலின் ஆரம்பமாக அமையுமா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.
"ஆம். வளர்ந்து வரும் இப்பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளை சில மீள்குடியேற்ற பிரதேசங்களில் காண்கிரோம்" என்று சுற்றுச்சூழல் அமைச்சின் கொள்கை திட்டமிடல் அதிகாரியும் மனித யானை முறுகலை களையும் திட்டத்மான "கஜ மித்துரொ" வை கையாள்பவருமான அஜித் சில்வா கூறுகிறார். வடக்கின் பிரதேசங்களுக்கான பயணத்தின்போது சிலாவத்துறை மற்றும் மாசை பிரதேசங்களில் மீள்குடியேறியவர்களின் யானைப்பயம் தொடர்பான முறைப்பாடுகளை சில்வாவும் அவரது குழுவினர்களும் பெற்றனர்.
வட கிழக்குக்காக பாரிய விவசாய அபிவிருத்தி திட்டங்களும் வரையப்பட்டுள்ளன.ஆனால் சோமாவதி தேசிய பூங்காவுக்கு அருகில் அமைந்த கந்தகடுவ பண்ணையைப்போன்று சூழல் பற்றிய கரிசனங்களுடன் திட்டங்கள் வரையப்பட்டனவா என்பதே விவாதத்திற்குரியதாக இருக்கின்றது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்கள் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புடன் கலந்தாலோசிக்கப்பட்டு மேற்கொள்ளப்படல் மீண்டும் ஒரு முறுகலை தவிர்ப்பதற்கு அதி முக்கியமாகும்.
இந்த நிலமை எல்லைக்கிராமங்கள் என்று கருதப்படும் நெல் விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்களில் இன்னும் மோசமாகக்கூடும். சிலர் தங்கள் நிலங்களை வருடங்களுக்கு முன் கைவிட்டிருந்தபோதும் குளங்களின் மீள்கட்டுமானம் முடிந்த கையோடு மீண்டும் விவசாயம் ஆரம்பிக்கும். இவ்வாறு கைவிடப்பட்டு பற்றைக்காடுகளாக மாறியிருக்கும் இடங்கள் யானைகளின் நடமாட்டத்திற்கு மிகவும் உவப்பான இடங்களாக 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கின்றன.
அப்படியாயின் நிலமையை எப்படி சமாளிப்பது? யானைகள் பற்றிய வல்லுனர்களின் கருத்துப்படி சில இடங்களில் யானைகளுக்கு இடம் கொடுப்பதற்காக விவசாயம் செய்யாமல் இருப்பதும் ஒரு தீர்வாக அமையும். "கட்டாயம் சில இடங்கள் யானைகள் பிரதேசத்துக்கு பிரதேசம் செல்வதற்கு வழியாக விட்டுக்கொடுக்கப்படவேண்டும்" என்கிறார் யானை வல்லுனரான ஜயந்த ஜயவர்தன. "பாரம்பரியமான யானைப்பாதைகளில் தடைகளை ஏற்படுத்துவது வேறு பிரதேசங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். இவ்வாறான தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்கவேண்டும்" என்கிறார் அவர். இதேவேளை வடக்கு கிழக்கு பிரதேச காடுகளில் உள்ள யானைகள் பற்றிய போதிய தகவல்களுல் அதிகாரிகளிடம் இல்லை. யானைகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் அவற்றின் நடத்தைகள் தொடர்பாகவும் ஒரு விரைவான மதிப்பீடு ஒன்று இந்த பிரதேசத்தில் அவசியானதாகும்.
வடக்கு கிழக்கு பிரதேச மனித யானை முறுகல் தொடர்பாக பல திட்டங்கள் வரையப்படுவதாக கஜ மித்துரோ இணைப்பதிகாரி அஜித் சில்வா கூறுகிறார். இத்திட்டங்களில் 7 பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் யானைக்கான சூழலை வளப்படுத்துவது முதன்மை வகிக்கிறது. இவ்விடங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னாரில் மடு வீதி, பெருங்குளம், வெங்காலை என்பன அடங்குகின்றன. இப்பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பழைய குளங்களை புனரமைப்பது இந்த சூழலை வளப்படுத்துவதில் பெரிய பங்கு வகிக்கும். இது பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உணவும் தண்ணீரும் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யுமென்பதால் யானைகள் கிராமங்களை ஊடுருவுவதை குறைக்கும்.
இன்னும் 100 கிலோ மீட்டருக்கும் அதிக நீளமுடைய மின்வேலிகளை வடக்கு, கிழக்கு, வட மத்தி மாகாணங்களில் அமைக்கப்படுகின்றன. அத்துடன் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கிராமங்களிலிருந்து யானைகளை வெளியேற்றவும் என யானை கட்டுப்பாடு அலகொன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முறுகல் தனியே ஆல் மட்டும் கையாளப்படமுடியாது. இவற்றை தடுப்பதற்கு ஏனைய அமைச்சுக்களின் ஆதரவும் தேவை. இதன் மூலமே 30 ஆண்டுகளுக்குப்பின்னாவது இரு தரப்பும் நிம்மதியாக வாழமுடியும்.
பாதுகாப்பிற்கான அறிவு
யானை வல்லுனர்கள் DWC இன் திட்டங்கள் யானைகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் அடைப்பதை தாண்டியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். "உள்ளூர்வாசிகளுக்கு யானைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்பிக்கப்படலும் முக்கியம்" என்கிறார் வல்லுனர் ஜயந்த ஜயவர்தன.
மீள்குடியேற்றப்பட்ட சில குடும்பங்கள் தம் கிராமங்களுக்கு 20 / 30 வருடங்களுக்கு பின் திரும்பியிருப்பதால் புதிய தலைமுறைக்கு யானைகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் இருந்திருக்கும். அண்மையில் ஒரு சிறுவன் காலை 4 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு யானையால் கொல்லப்பட்டான். இவ்வாறான சம்பவங்கள் சரியான அறிவூட்டல்கள் மூலம் தவிர்க்கப்படலாம் என்பது ஜயவர்தனவின் கருத்து.
இது தேவையற்ற மரணங்கள் யானைகளுக்கு நிகழ்வதையும் தடுக்கும். மீள்குடியேற்றப்பட்டவர்களில் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஊர் காவல் படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் ஊர் காவற்படை வீரரொருவரால் சுடப்பட்ட கவலைக்குரிய இறப்பாகிய "குமண குறுக்கு தந்தக்காரன்" என்றழைக்கப்படும் சாதுவான ஒரு யானைக்கு நடந்ததுபோல், கண்டவுடன் சுடமுன் இன்னொரு முறை இவ்வாறான ஆயுததாரிகள் சிந்திப்பார்களா என்பதே கேள்விக்குறி
The Sunday Times இல் பிரசுரமான கட்டுரையின் மொழிபெயர்ப்பு
.