பதிவுலகில் காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு topic சூடுபிடிக்கும். சில நாட்களாக சில சின்னப்பையன்கள் காதல், கவர்தல் என இஷ்டத்துக்கு adviceகளை அள்ளித்தெளித்துக்கொண்டிருக்கிறார்கள். (சின்னப்பிள்ள வெச்சுக்கிட்டிருக்கிற லட்டை கூட பறித்து தின்ன நினைக்கிறவங்க சின்னபையன்கள் தானே)
நவம்பர் 2006 இல் save செய்யப்பட்டு கணணியில் பலநாட்களாக உறங்கிக்கொண்டிருந்த (உபயோகப்படுத்த சான்ஸ் கிடைக்கலியே) file ஒன்று சற்றுமுன் தான் கண்ணில் அகப்பட்டது. அதைத்தான் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்பேசும் நல்லுலகம் பயனுற இலகு தமிழில் உங்களுக்கு அள்ளித்தந்து ஜோதியில் ஐக்கியமாக...

kiss
நான் ரெடி...

ஒரு நிமிடம் முத்தமிட 26 கலோரி செலவாகிறது
(உடம்பை குறைக்க gymக்கு போய் கஷ்டப்படுறவங்க முயற்சி செய்து பார்க்கலாம்)

மொத்தமாக கணக்குபோட்டு பார்த்தால் ஒரு சராசரி மனிதனின் ஆயுளில் 2 வாரகாலம் முத்தமிடுவதிலேயே கழிகிறது.
(ப்பூ இவ்வளவுதானா என்று நினைத்து கணக்குபோட்டுப்பார்த்தால் 2 x 7 x 24 x 60 = 20,160 நிமிடங்கள்)

பெண்களின் புறங்கையில் முத்தமிடுவது மேலை நாடுகளில் ஒழுக்கமாக கருதப்படுகிறது

ஐரோப்பிய நாடுகளில் இரண்டு கன்னங்களிலும் முத்தமிடுவது வாழ்த்துவதற்கான நியம முறையாகும். அது இரண்டு அல்லது நாலாக இருக்கலாம்

கிஸ் என்பதற்கு விஞ்ஞானப்பெயர் philematology
(லோகநாதனுக்கு உபயோகமான தகவல்)

மிக நீளமான முத்தத்திற்கான சாதனை - 29 மனித்தியாலங்கள். மார்ச் 24 1998இல் நியூயோர்க் நகரில் ஒரு போட்டியின்போது நிகழ்த்தப்பட்டது / கொடுக்கப்பட்டது (எப்பிடி வேணுமெண்டாலும் வெச்சிக்கலாம் : குணா கமல்)

தண்ணீருக்கடியில் நீளமான முத்தத்திற்கான சாதனை : 2நிமிடம் 18 செக்கன் ஏப்ரல் 2 1980 இல் டோக்கியோவில்
(ரொம்ப ரகசியமா குடுத்தாங்களோ)

"The Kiss" என்ற படம்தான் முத்தக்காட்சி இடம்பெற்ற முதல் படம்.1896
(முதல் தமிழ்படம் எதுங்க?)

அதி கூடிய முத்த காட்சிகள் இடம்பெற்ற படம் - "Don Juan" (1927). இப்படத்தில் மொத்தமாக 127 முத்தங்களை ஜோன் பெரிமோர் (BarryMORE மோர் என்பது இதுதானா) அஸ்டர், எஸ்டெலே ஆகியோருக்கு வழங்கினார்
(கமல்ஹாசனுக்கு முடியாவிட்டால் அவர் வாரிசு "இச்" படத்தில் இச்சாதனையை முறியடிக்கலாம்)

திரைப்படத்தில் இடம்பெற்ற நீளமான முத்தம் - 3 நிமிடம் 5 வினாடிகளில் - படம் "You're in the Army Now" (1941). என்ன ஆர்மியோ?
(இன்றோ நாளையோ இலங்கை அரச ஊடகங்களில் வெளியாகப்போகும் ஒரு தகவலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லீங்க)

சில இடங்களில் முத்தமிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் (க்ரைம்)

ஒரு முத்தத்தின் விலை என்ன? இந்த அப்திவை பாருங்கள்
திருடப்பட்ட முத்தத்தின் விலை?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால தன் பிள்ளை தானே வளரும் என்று சொல்வாங்க.. உங்களுக்கெல்லாம் ஊட்டிட்டேனே...
இதுக்கு வாக்கு போடாட்டி எப்படிங்க .. போடுங்க போடுங்க
.