Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Dictionary - பிரபல நிறுவனங்களில் வேலை செய்பவர்கட்கு தேடுபவர்கட்கு


இன்று பிரபல நிறுவனங்களில் வேலை என்றதும் ஆலாய்ப்பறப்ப்வர்கள் பலர். அவர்களுக்கு பயன்படககூடிய விளக்கமான Dictionary

சில குறிப்புகளுடன்


சக ஊழியர்கள் : பிரபல நிறுவனம் என்பதால் அதில் வேலை செய்யும் சக ஊழியர் தொடங்கி சாதாரண peon வரை எல்லாருக்கும் ஒரு மமதை இருக்கும். இவர்கள் அனைவரின் எண்ணமும் company இவ்வளவு பிரபல்யமடைவதற்கு தாங்கள் தான் காரணம் என்பதே! வெளி இடங்களில் இவர்கள் காட்டும் பந்தா சக ஊழியரிடமும் குறைவதேயில்லை. அதிலும் பல வருடங்களாக அதே நிறுவனத்தில் குப்பை (இவர்களுக்கு யாராவது ஒருவரின் சிபாரிசு மூலம் வேலை கிடைத்திருக்கும். இன்னொரு நிறுவனத்திற்கு மாறுவது நடக்காது, ஏன் என்றால் வேறு யாரும் இவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்) கொட்டுபவர்கள் எல்லாம்

Company இன் வரலாற்றையும் அதில் அவர்கள் காட்டிய தியாகத்தையும் புராணம் பாடியே உங்கள் காதிலிருந்து இரத்தம் வடியச்செய்வார்கள்.


HR DEPARTMENT : இவர்களை நீங்கள் அனுசரித்து நடக்காவிட்டால் ஒரு நிமிடம் கூட பிந்தாமல் வேலைக்கு சமூகமளிக்கவேண்டும். இல்லையேல் அது இது என்று பேசியே சாகடிப்பார்கள். அதேபோல் உங்களுக்கு உரித்தான விடுமுறைகளை பெற்றுக்கொள்ளவும் இவர்கள் தயவு தேவை.


Training and Development Officers : பொய்க்கு file ஒன்றை எப்போதும் காவும் இவர்கள் பெண்களுக்கு மட்டும் training கொடுப்பதில் குறியாய் இருப்பவர்கள். இதை கண்டுகொள்ளும் ஆண்கள் எல்லாம் riot பண்ணுபவர்களாக முத்திரை குத்துவார்கள்.

ஊழியர்களை ஊக்கப்படுத்துவதாக கூறிக்கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே தாங்க முடியாதது. 24 மணி நேரமும் வேலை செய்பவர்களுக்கு ஐந்து சதமும் கொடுக்காமல் அந்த ஊழியரைப்பற்றி ஒரு பக்க கட்டுரை எழுதி ஊழியர்களை ஊக்கப்படுத்துவதாக பீற்றிக்கொள்வார்கள்.


Manager : நினைத்த நேரம் வருவர் போவர். ஆனால் சம்பளம் மட்டும் suitcase நிறைய எடுப்பர். பெண் ஊழியர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் சிறப்பாக தெரியும் இவர்களுக்கு ஆண்கள் செய்யும் வேலைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதில்லை.


பெண் ஊழியர்கள் : காலையில் வேலைக்க்கு வந்ததும் நேற்றைய serial கதைகளையெல்லாம் பேசி நாளை ஆரம்பிக்கும் இவர்கள் சரியாக வேலை நேரம் ஆரம்பித்ததும் காலைச்சாப்பாட்டிற்காக கூட்டமாக செல்வார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து வந்து மீண்டும் கூட்டமாக make up போட செல்வார்கள். அரை மணி நேரம் கழித்து வந்து வேலையை தொடங்குமுன் அவர்களை பார்த்து ஜொள்ளு விட்டு கொடிருக்கும் ஒரு ஆண் ஊழியரை பார்த்து கொஞ்சமாய் சிரித்து சில வார்த்தைகள் பேசி பாதி வேலையை அந்த ஜொள்ளரின் தலையில் கட்டிவிடுவார்கள். பிறகு boyfriend இன் கதை இல்லாவிட்டால் கணவனுக்கு நல்வழி காட்டிய கதை எல்லாம் சொல்வார்கள். வேலை முடிவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் மீண்டும் கூட்டமாக make up போட சென்றால் சரியாக வேலை முடியும் நேரத்துக்கு தான் வருவார்கள். அதன் பின் 15 நிமிடம் OT செய்து தங்களின் அர்பணிப்பான சேவையை நிரூபித்து நல்ல பெயர் வாங்கும் பாக்கியவதிகள்.


பெண் அதிகாரிகள் : ஆண்களின் உரிமைக்காவலன். எந்த பிரச்சினை ஆயினும் நியாயமாய் அணுகி ஜொள்ளு manager இன் பழிச்சொல்லில் இருந்து காப்பவர்கள். இவர்களுக்கும் பெண் ஊழியர்களுக்கும் ஆகாது. இதனால் எப்போதும் பெண் ஊழியர்கள் இவர்களை பற்றி தூற்றிக்கொண்டிருப்பார்கள்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Yahoo! க்கு என்ன ஆச்சு?


கடந்த வெள்ளியன்று காலையில் வேலைக்கு போனதும் Yahoo! இல் உள்ள என் முதன்மயான email ஐ check பண்ணி பார்த்தேன். பிறகு மற்ற வேலைகளை முடித்து பகல் நேரத்தில் மீண்டும்check பண்ண முயற்சித்தால்
Invalid ID or password.
Please try again using your full Yahoo! ID.
என்று வந்தது. மீண்டும் spelling எல்லாம் check பண்ணி முயற்சித்தாலும் அதே message! அதிர்ச்சியான நான் நண்பர் ஒருவரின் Yahoo! Mail வேலை செய்கிறதா என்று பார்க்க சொன்னால் அது வேலை செய்தது... அவர் account இல் இருந்து என் email address க்கு email அனுப்பினால் Delivery Failure என்று வந்தது..

Yahoo! Customer care என்று Google இல் தேடி ஒரு complain போடுவோம் என்று பார்த்தால் complain போடுவதற்கே log in ஆக சொன்னது ! என்னடா இது கஞ்சி பாய் மாதிரி முட்டாள் கேள்விகள் எல்லாம் கேட்கிறது என்று நினைத்தாலும் வேறு வழியில்லாமல் புதிதாய் ஒரு account ஆரம்பித்து அதன் மூலமாக complain போட்டேன். அதிலும் Yahoo! மீது நம்பிக்கை இல்லாத காரணமாக என் Gmail இற்கு மறுமொழி அனுப்புமாறும் அறிவுறுத்தினேன்.

உடனடியாக auto reply ஒன்று வந்தது. அதில் 24 மணித்தியாலத்திற்குள் Yahoo! இன் நிபுணர் ஒருவர் என் பிரச்சினையை கவனித்து மறுமொழி அனுப்புவார் என்றது.

மறுநாள் வந்த பதிலில் என் account இன் password ஐ மாற்றுமாறு advice வந்தது. நான் account க்குள் போக முடியவில்லை என்றால் இவர்கள் பதில் அனுப்புகிறார்கள் உள்ளே சென்று மாற்றும்படி...

என்ன கொடும சார்..

மீண்டும் ஒரு complain form நிரப்பி அனுப்பினால் அதற்கும் உடனடியாக வந்த இலும் 24 மணித்தியாலத்திற்குள் Yahoo! இன் நிபுணர் ஒருவர் என் பிரச்சினையை கவனித்து மறுமொழி அனுப்புவார் என்று இருந்தது.

இப்போது 48 மணித்தியாலங்கள் களிந்துவிட்டது. இன்னும் அந்த Yahoo! இன் நிபுணரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

Yahoo! இன் பெயரில் கடைசியில் இருக்கும் ஆச்சரியக்குறி இதுதானா?

என்ன கொடும சார்..

யாருக்காவது தெரிந்திருந்தால் ஒரு வழி சொல்லி உதவவும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்யுமா Ceylinco இன் சரிவு?


இலங்கையர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த corporate பெயர் Ceylinco. ஏன் அதன் தலைவர் தேசமான்ய லலித் கொதலாவலவை தெரியாதோரும் இல்லை என்று சொல்லலாம்.. இவர் ஒரு Business Tycoon ஆக மட்டுமல்லாது சிறந்த பரோபகாரியாகவும் நாடு பூராவும் தெரிந்தவர். இவரது நிறுவனங்கள் கால் பதிக்காத துறையே இல்லையென்று சொல்லலாம்.. இவரது நிறுவனங்கள் பற்றி தெரிய வேண்டுமானால் ceylinco என்று Google இல் தேடிப்பாருங்கள். அது எந்த துறை சார்ந்த நிறுவனம் என்றாலும் நிறுவனத்தின் பெயரில் Ceylinco வருமாறு பார்த்து கொள்வார்.. அவருக்கு தெரியும் மக்கள் அந்த பெயர் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று.

ஆனால் இது எல்லாம் பழைய கதையாகிப்போனது தான் சோகம். ஏன் என்பதுதான் இந்த பதிவு..

ஒரு நாள் Ceylinco குழும நிறுவனம் Golden Key திவால் ஆகி போனதாக திடீரென செய்திகள் பரவ ஆரம்பித்தன. இந் நிறுவனத்தில் முதலிட்ட பலருக்கு அதற்கான வட்டி சில மாதங்களாக செலுத்தபடாததால் சந்தேகம் கொண்ட சில முதலீட்டாளர்கள் வைப்புகளை திருப்பி பெற முயற்சிக்க; வைப்புகளை திருப்பி எடுக்க முடியாதென்று நிறுவனம் சொல்ல அப்போதுதான் பலருக்கு நெருப்பு பற்றி கொண்டது.. அண்மைக் காலமாக சக்விதி பிரமுக என பல முதலீடுகளில் பணத்தை இழந்த இலங்கை முதலீட்டாளர்கள் ரொம்பதான் பயந்து போனார்கள். Golden Key இற்கு முன்னால் எல்லோரும் வரிசை கட்டி நிற்க பிரச்சினை இன்னும் சிக்கலாகியது.. செய்தியும் காட்டுத்தீ போல் பரவியது. இன்னும் சில வைப்பாளர்கள் Ceylinco குழும நிறுவனமான Seylan Bank இல் வைப்பிட்ட பணத்தயும் மீளப்பெற முயற்சிக்க மத்தியவங்கி உடனடியாக தலையிட்டு Seylan Bank இன் நிருவாகத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல் மட்டுமே. ஏன் என்றால் இந்த நிலையிலும் Seylan Bank இன் தலைவராக லலித் கொதலாவல தொட்ர்ந்து இருக்க மத்திய வங்கி அனுமதித்தது.

இந்த இடத்தில் ஒரு அடிப்படை விஷயத்தை விளக்க வேண்டும். மக்கள் வங்கியில் போடும் பணம் எல்லாம் வங்கியின் Locker இல் பாதுகாப்பாக இருப்பதாகவே நினைக்கிறார்கள். யதார்தத்தில் மக்கள் வைப்பு செய்த பணத்தில் 10% மட்டுமே வங்கியில் இருக்கும் (இது சராசரி மீளளிப்புகளை எதிர்கொள்ள போதுமானது). மிகுதி 90% ஆன வைப்புகள் வங்கியால் வட்டி தொழிலுக்கு பாவிக்கப்படும்.

மக்கள்; வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இல்லை என்று நினைக்க தொடங்கினால் Withdrawals அதிகரிக்கும். எல்லா withdrawals ஐயும் சமாளிக்க 10% போதுமா என்ன? இந்த நிலையில் வங்கியால் இப்போதைக்கு withdraw பண்ண முடியாது என்று கூற, அதனால் மக்கள் பயந்து இன்னும் வங்கியில் சென்று வைப்புகளை மீளப்பெற முண்டியடிக்க, வங்கி திவால் ஆகும்!

இது அந்த வங்கியோடு நின்று விடாது மற்ற வங்கி மீதும் மக்கள் சந்தேகிக்க வங்கித்துறையே collapse ஆகும்.

இதை தவிர்ப்பதற்காகவே மத்திய வங்கி, Seylan Bank ஐ இலங்கை வங்கியிடம் கையளித்தது.

Golden Key இல் முதலிடப்பட்ட பணம் வெளிநாடுகளில் (முக்கியமாக அவுஸ்த்திரேலியாவில்) புதிய company களை ஆரம்பிப்பதற்காக நாட்டுக்கு வெளியே நகர்த்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

சரி Golden Key இல் கொதலாவல என்ன என்ன பண கொடுக்கல் வாங்கல் களை ஒவ்வொரு மாதமும் செய்தார்?

அவரது சம்பளம் 3,500,000/-
சரண நிதியம் 2,000,000/-
Solo U நிதியம் 400,000/-

இதே வேளை அவர் மனைவியோ 17 வருடங்களுக்குரிய gratuity ஐ பெற உரித்துடையவராக இருக்கையில் 20 வருடத்திற்கான gratuity ஐ பெற்றுள்ளார். அதுமட்டுமல்லது பல வெளி நாட்டு பயணங்களுக்கான பணமும் அவரது இதர செலவுகட்கான பணமும் எந்த வித கட்டுப்பாடோ ஒழுங்கோ இல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து எடுக்க பட்டுள்ளது.

அவர் இப்பொது சிங்கப்பூரில் (உண்மையா என்று தெரியாத நோய்க்கு) சிகிச்சை பெறுவதாக நீதி மன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் நிராகரித்து அவர் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

Golden Key ஐ பற்றி விசாரித்தபோது அதன் வைப்பாளர் ஒருவர் தொடர்பான அதிர்ச்சித்தகவல் கிடைத்தது. அவரது மகா புத்திசாலித்தனமான எந்த ஊடகத்திலும் வராத அந்த தகவல் உடன் இன்னும் பல சுவையான விஷயங்கள் பகுதி இரண்டில் வரும்..

இதையும் பாருங்க ஆவி வந்த Blog!!! இதை படிக்குமுன் : வெறுமனே உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதப்படும் பதிவல்ல இது. 100% உண்மையான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் எதிர்நோக்கும் பிரச்சினையில் இருந்து வெளிவர உங்களில் யாராவது தரும் advice உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவதாகும். எனவே அக்கறையுடன் படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்



EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆவி வந்த Blog!!!


இதை படிக்குமுன் : வெறுமனே உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதப்படும் பதிவல்ல இது. 100% உண்மையான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் எதிர்நோக்கும் பிரச்சினையில் இருந்து வெளிவர உங்களில் யாராவது தரும் advice உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவதாகும். எனவே அக்கறையுடன் படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.


அதேபோல் அண்மையில் நான் பார்த்த யாவரும் நலம் திரைப்படம், என் blog இல் ஆவி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் தோன்ற கால்கோலானது என்பதை மறைக்கவும் நான் தயாரில்லை. யாவரும் நலம் பற்றிய என் பார்வை அறிய இங்கே சொடுக்குங்கள். ஏன் என்றால் doctor இடமும் lawyer இடமும் உண்மையை மறைக்க கூடாது என்று சொல்வார்கள். (உங்கள் Balance Sheet இவர்களிடம் மறைக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்) எனவே உங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்கிறேன்.


யாவரும் நலம் திரைப்படத்தில் Doctor சொல்வார் ஆவிகள் உலகத்துடன் தொடர்புகொள்ள ஒரு Medium தேவை;. அது TV ஆக இருக்கலாம் என்று. படம் முடியும் போது Doctor இன் ஆவி Mobile Phone ஊடாக மாதவனை தொடர்பு கொள்வதையும் நாம் பார்த்தோம். ( கொசுறு தகவல் : என்னோடு படம் பார்த்த நண்பன் ஓரிரு மணித்தியாலங்கள் எந்த call ஐயும் answer பண்ணாமல் call பண்ணும் நபர் உயிருடன் இருக்கிறாரா என்று யோசித்து கொண்டிருந்தார்.)


.. பிரச்சினையை சொல்லாமல் rubber மாதிரி இழுக்கிறேன் போலிருக்கிறது.. சரி சரி பிரச்சினைக்கு வருவோம்.

நான் இந்த blog ஆரம்பித்த நாள் அன்றே widget களில் Google Adsense ஐயும் சேர்த்துகொண்டேன். என்னை ஒரு சமூக சேவகன் என்று Google நினைத்ததோ என்னவோ "பொது சேவை விளம்பரம் தருவது Google " என்ற தலைப்பில் சூரிய சக்தி பற்றிய விளம்பரங்களை மட்டும் காண்பித்தது.


சூரிய சக்தி பற்றிய விளம்பரங்களை click செய்து யாராவது பயன் பெற்றுருந்தால் கூட பரவாயில்லை. எனவே சல்லி காசு கூட கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சமூக சேவை செய்த நன்மையுமில்லை என்ற நிலையில் இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த நான்; எனது வெறொரு website இல் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் Google Adsense இன் html code இந்த blog இல் இணைத்தேன்.


அன்று ஆரம்பித்தது பிரச்சினை..


மற்ற website இல் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருந்த html code இங்கு எதையுமே காட்டவில்லை. சரி blog என்பது இலவச சேவை. சும்மா கிடைக்கிற space இல் காசு பண்ண விடமாட்டார்களாக்கும் என்று நினைத்த நான் அலட்டிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். html code ஐயும் அகற்ற வில்லை.


ஒருநாள் blog நான் பார்வை இட்டு கொண்டிருக்கும் போது யதேச்சயாக பார்த்த போது Google Adsense விளம்பரங்கள் தோன்றியது தெரிந்தது.. ஆக காசு வருவதற்கு வழி காட்டு இறைவா என்று அன்று காலை செய்த பிரார்த்தனைக்கு உடனடியாக இறைவன் Google Adsense மூலமாக வழி காட்டிவிட்டான் என்று சந்தோஷப்பட்ட நான் உடனடியாக நண்பனுக்கு call செய்து என் blog இல் Google Adsense தெரிகிறது என்று செய்தி சொல்ல.... என் தகவலை பரிசோதித்து பார்க்க அவர் என் blog க்கு சென்று பார்க்க.... அங்கு அது தெரியாமல் இருக்க....., இங்கு தெரியவில்லை என்று அவர் தெரிவிக்க...


நான் Google Adsense தெரிந்த page அப்படியே இருக்க இன்னொரு tab இல் என் blog பார்த்தால் Google Adsense தெரியவில்லை!!!


அதன் பின் இன்று வரை சில நேரங்களில் Google Adsense தெரிந்தது. எப்போது தெரியும் என்று என்ற முகூர்த்தம் மட்டும் எனக்கு புரியவில்லை... தமிழ் மொழியை Google Adsense support பண்ணாவிட்டால் எப்படி .வி. (ஆனந்த விகடன்) இல் மட்டும் எப்படி தெரிகிறது என்றும் எனக்கு புரியவில்லை..


இந்த நிலையில் யாவரும் நலம் பார்க்க போயிருந்தேன். மாதவனை எடுக்கும் புகைப்படங்கள் சில நேரங்களில் நன்றாகவும் சில நேரங்களில் கோணலாகவும் வருவதை கண்டதுமே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது..


மாதவன் இந்த கோணல் புகைப்படங்களுக்கெல்லாம் காரணம் ஆவி என்பதையும் ஒரு நாய் மூலம் தெரிந்துகொண்டார். என் blog இல் ஆவி இருக்கிறதா என்று பரிசோதிக்க blog வாசிக்கும் நாய்க்கு நான் எங்கு போவேன்?


எனவே நண்பர்களே தயவுசெய்து இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.


· என் blog இல் ஆவி உள்ளதா?

· இருக்கா என்று எப்படி உறுதி செய்வது எப்படி?

· இருந்தால் எப்படி இந்த ஆவியை விரட்டுவது?

பதில் சொல்லுங்க please…


Extra : இன்று ஒரு பதிவர் நான் என்ன பதிவிடப்போகிறேன் என்று தனக்கு தெரியும் என்று சொன்னார். இந்த ஆவி அவரின் agent ஆக இருக்குமோ?


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்