Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Don 2: The King is Back

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் Don 2.

இது 3D திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

Don தொடரில் நான் பார்த்த முதல் திரைப்படம். பில்லா போன்ற Stylish ஆன காட்சிப்படுத்தல்களை எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லாவிட்டாலும் அழகான காட்சியமைப்புக்கள். படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் படத்தில் Styleஐ இலகுவாக கொண்டு வந்துவிடுகிறார் Director.

தாய்லாந்தில் தன்னை கொல்லுவதற்கான திட்டம் ஒன்றிலிருந்து தப்பிக்கும் மலேசியாவில் IntrPol இடம் சரணடைகின்றார். சிறையில் தனது எதிரியான மலிக்கை சந்திக்கிறார். மலிக்கின் கொலை முயற்சியிலிருந்து தப்பும் டொன், தனது சிறையிலிருந்து தப்பும் திட்டத்தில் மலிக்கையும் இணைத்து இருவரும் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர்.



இருவரும் ஜேர்மனி சென்று அங்கு லொக்கர் ஒன்றில் இருக்கும் ஒரு கொலைத்திட்டம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை கைப்பற்றுகின்றனர். அவ்வாதாரத்தை வைத்து Euro நாணயத்தாள்களை அச்சிடும் பிளேட்டை கொள்ளையிட திட்டம் தீட்டுகின்றனர்.

இதன்போது டொன்னை கொல்வதற்கு ஜப்பாரை கூலிக்கு அமர்த்துகிறார் Vice President. அத்திட்டத்தில் தப்பும் டொன் தனது திட்டத்தில் ஜப்பாரையும் கூட்டுச்சேர்கிறார்.

Hacker சமீர் அலியை தனது திட்டத்தில் சேத்துக்கொள்ளும் டொன் வங்கியில் நுழைந்து யூரோ பிளேட்டை திருடியதும் ஜப்பாரும் மலிக்கும்  டொன்னுக்கு எதிராக திரும்பி பிளேட்டை பறித்துக்கொள்கின்றனர்.

அங்கிருந்து தப்பும் டொன் சமீர் அலியால் பொலீஸிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். பொலீஸுடன் ஒப்பந்தமொன்றிற்கு வரும் டொன் ரோமாவுடன் சேர்ந்து வங்கி முற்றுகையை முடிவுக்குகொண்டுவருகிறார். இதற்கு கைமாறாக கிடைக்கும் மன்னிப்பை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்புகிறார்.
வழமையாக இவ்வகை திரைப்படங்களிலிருக்கும் Hot கொள்ளைக்காரி இத்திரைப்படத்தில் இல்லை. இதில் உள்ள ஒரே ஒரு கவர்ச்சி ஆறுதல். ஒரு பார்ட்டிக்காக ரோமா அணியும் ஆடையை 3D இல் பார்த்தால் உங்களுக்கு ஜன்ம சாபல்யம் கிடைக்கலாம். ;)

அதேபோல் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே. அதிலும் வழமையான வில்லன் பாடல்களில் வருவதை காட்டிலும் கவர்ச்சி குறைவே.

ஆயினும் திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இலலை. ஒரு முழுமையான சுவாரஸ்யமான திரைப்படத்தை பல வழமையான மசாலாக்கள் இல்லாமல் தர முடிந்திருப்பது பர்ஹான் அக்தரின் திறமைக்கு சான்று..

கொசுறு: டொலர் அச்சிடும் அச்சகம் இலங்கையில்தான் இருக்கிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஒஸ்தி

முதல்ல இந்த படத்துல எல்லாம் லொஜிக் பாக்ககூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சிம்பு, சந்தானம், வையாபுரி, மயில்சாமி, தம்பி ராமையா ஆகியோரின் முழுநீள காமடி கலக்கல்தான் ஒஸ்தி. இந்த காமடி கலக்கலுக்கு அங்கங்க ஸ்பைசியா சேந்து நடிச்சிருக்கு ஒரு தங்க அரைநாண் கயிறு + இடுப்பு. அந்த இடுப்பு ரிச்சாவுக்கு சொந்தம்.
ட்ரைலர் பாத்ததும் நாம எதிர்பாத்த அதே மாஸ் படத்த திரையிலும் தந்திருக்கிறார் தரணி. ட்ரைலர்ல போல் படம் முழுவதும் விறுவிறுப்பு. இழுவைகள் இல்லை. அதுபோதாதா ஒரு மாஸ் படத்துக்கு?

சிம்புவுக்கு பஞ்ச், ஸ்டைல் நல்லா மெச் ஆகியிருக்கிறது. படம் முழுவதும் செம ஸ்மாட். எப்போதும் ஒரு குறும்பு சிரிப்புடன் உறுத்தலில்லாமல் பஞ்ச் பேசுகிறார். கண்ணாடி மாதிரில, தக்காளி சுட்டேபுடுவன் எல்லாம் ஹலைட் ப்ஞ்ச்.

சந்தானம் இந்த படத்திலும் ஒரு தூணாகவே இருக்கிறார். பாஸ் (எ) பாஸ்கரன் மாதிரி படம் முழுக்க கலாய்க்கிறார். இவர் கூட வையாபுரி, மயில்சாமி, தம்பி ராமையா எல்லாம் கான்ஸ்டப்ளாக வந்து சிம்புவையும் சேத்து ஆள் மாறி ஆள் இடைவெளி இல்லாமல் கலாய்க்கிறார்கள். நெடுவாழி பாடலில் சந்தானத்தின் டான்ஸ் மூவ் எல்லாத்துக்கும் மகுடம் வெச்சமாதிரி.

ரிச்சா, மயக்கம் என்ன படத்துல முறச்சிக்கிட்டிருந்த பாவத்த இடுப்பால போக்கியிருக்கா.. அதுக்கேத்தமாதிரி தாவணி உடுக்கவெச்சு டைரக்டர் யூத் நெஞ்ச தொட்டிருக்காரு. படத்தின் ஆரம்பித்திலயும் மொறச்சிக்கிட்டிருந்து டெரர்ரா இருந்தாலும் அப்புறம் ஓகே ஆகிடுறா.. கொஞ்சமா பேசுறா.. ஒரு ஸ்பைசியான பார்வ + புன்னகை வேற.. செம ஹாட்டு மச்சி..





வாடி வாடி கியூட் பொண்டாட்டி பாட்டும் கேட்டதை விட காட்சிகளுடன் நன்றாக வந்திருக்கிறது. கலாசலா எதிர்பத்த அளவுக்கு இல்லை. மல்லிகா என்ற பெயரைத்தவிர அதில் ஸ்பைசியா ஒன்னுமே இல்ல.

ஏற்கெனவே வந்த படங்கள் எல்லாம் போட்டியிலிருந்து விலகியிருக்கும் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது ஒஸ்தி.

மொத்தத்தில் ஒஸ்தி - த மாஸ்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மயக்கம் என்ன

  • என்னுடைய உழைப்பை பயன்படுத்திதான் கம்பனி வளருது. ஆனா எல்லாத்தையும் மேலே உள்ளவங்க தான்தான் செய்றதா காட்டிக்கிட்டு எனது உழைப்பை சுரண்டுறாங்க 
  • மனைவி எங்கிறவ உங்கள தாங்கு தாங்குன்னு தாங்கணும். 

இந்த இரண்டு மனப்பான்மையும் இல்லாத ஆண்கள் மிகக்குறைவே. இவர்களுக்கு பிடிக்கிறமாதிரி ஒரு படம் எடுத்தா ஹிட் ஆகிடும்னு கணக்குபோட்டு சோனியா அகர்வாலுக்கும் ஒரு மேசேஜ் வைச்சு (அப்பிடி நான் நினைக்கிறேன்) செல்வராகவன் எடுத்திருக்கிற படம்தான் மயக்கம் என்ன

போட்டோகிராபியை நேசிக்கும் தனுஷின் உழைப்பு திருடப்பட்டுவதால் மனம் உடைந்து அரை லூஸாகி வீட்டிலேயே இருக்கிறார். மனைவி சம்பாத்தியத்தில் குடித்துவிட்டு அவளை அடிக்கிறார். நிர்வாண போஸ் கேட்கிறார். இவ்வளவு செஞ்சும் மற்றவர்களிடம் "அவன் என் புருஷன். அவன பத்தி தப்பா சொல்லாத" என்று கோபிக்கிறார் மனைவி.

இத்தனைக்கும் தனுஷ் திருடியது நண்பனின் Girlfriend ஐ!

அம்மா அப்பா இல்லாத தனுஷ் கையில் Blackberry,
அதற்கும்மேலாக ஒவ்வொருநாளும் மொடாக்குடி.
தங்குவதோ நண்பனின் வீட்டில்.
அங்கு நண்பனின் அப்பா எல்லாருக்கும் குடிக்க ஊத்தி ஊத்தி கொடுக்கிறார்.
போதாதற்கு வீட்டில் அங்கும் இங்கும் படுக்கும் பையன்களையும் பொண்ணுகளையும் தூக்கிக்கொண்டுவந்து ஒரே அறையில் படுக்கவைக்கிறார். இவரை teenage பசங்களின் dream அப்பான்னு செல்வராகன் அறிமுகம் செய்துவைக்கிறார்.இவ்வாறான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க நிறைய.

இடைவேளைக்கு முன் ரிச்சா ஒரே ஒரு தடவை சிரிக்கிறார். அதன்பின் ஒன்றோ இரண்டு தடவைகள் மட்டும். சோனியா அகர்வாலின் மூஞ்சி சிரிக்காமல் போனதற்கு காரணமும் செல்வராகவனாகத்தானிருக்கும். ந்ல்லவேளை சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது.

படத்தை குப்பை என்று முற்றாக ஒதுக்கித்தள்ளவும் முடியாது. மகாநீளமான காட்சிகளையும் சைக்கோத்தனமான காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கொழும்பு மாநகரசபை தேர்தல் 2011


வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி மக்கள் வாக்களிக்க இருக்கும் எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகரசபை தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து ஐதேகவின் கோட்டையாக இருக்கும் நிலையில் சிறுபான்மை இன மக்களினதும் படித்த மக்களினதும் வாக்குகள் எதையாவது செய்யக்கூடிய களமும் இதுதான்.

இம்முக்கிய தேர்தல் பற்றிய என்னுடைய கோணத்திலான அவதானிப்பை இப்பதிவினூடாக உங்களுடன் பகிர விளைகின்றேன்.

தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கிடையே மட்டும் ஆட்சிக்கான போட்டி நிலவுகிறது. முஸம்மிலை களமிறக்கியிருக்கும் ஐதேக மற்றும் மிலிந்த மொரகொடவை களமிறக்கியிருக்கும் ஐமசுமு என்பனவே அக்கட்சிகள்

இவ்விரு வேட்பாளர்களை மட்டும் தனித்து நோக்கினால் மிலிந்த; முஸம்மிலை விடவும் பெறுமதியான தேர்வு. அவர் கனவான் அரசியலை செய்துகொண்டிருப்பவர். புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை சொல்லி இன்றுவரையும் கடைப்பிடிப்பவர். போஸ்ட்டர் ஒட்டாத இவரின் அரசியல் பாணி எனக்கு விருப்பமானதொன்று. இவ்வாறான ஒப்பீட்டில் முஸம்மிலை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

ஊடகங்கள்
தேர்தலில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது ஊடகங்களுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் வர்த்தக ரீதியான நோக்குகளைக்கொண்ட இவ்வூடகங்கள் களம் சூடாக இருப்பதாக காட்டிக்கொள்வதன்மூலம் மட்டுமே விளம்பரஞ்செய்வதற்கு வேட்பாளர்களை ஊக்குவிக்க முடியும். இதன் அடிப்படையில் இத்தேர்தலில் மட்டுமல்ல சகல தேர்தல்களிலும் கள நிலவரங்கள் தொடர்பான ஊடக சித்தரிப்புகளை நாம் கணக்கில் எடுக்க முடியாது.

தீர்மானிப்பது யார்
கொழும்பு மூவின மக்களையும் கொண்டது. ஆயினும் தமிழர் தரப்பு தேர்தல் மூலமான அரசியலில் ஆர்வமற்றது.  அச்சமூகத்தில் பாதிப்பேராவது வாக்களிக்க போவதில்லை. இதைப்பற்றி கடந்த பாராளுமன்ற தேர்தலின்பின் மனோ கணேசனே மஹாராஜ ஊடகமொன்றில் அங்கலாய்த்திருந்தார். (யாரேனும் அந்நிகழ்ச்சியின் linkஐ பகிரமுடியுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.)

மீதி தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைவிட மிக வித்தியாசமானது. இவர்கள் எப்போதும் கொழும்பிற்கேயுரிய அரசியல் இலக்குகளைக்கொண்டவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க பங்கினர் மனோ கணேசனை ஆதரிப்பர்.

சிங்கள, முஸ்லிம் சமூகத்தில் கொழும்பிற்கேயுரிய மேல்தட்டு வர்த்தக வட்டமும் பாதியளவே வாக்களிக்கச்செல்ல மீதிப்பேர் அந்நாளில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் சுற்றுலாச்செய்துகொண்டிருப்பர். இவர்களைப்பொறுத்த வரையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். அல்லது முடிவு தெரிந்த தேர்தலில் அவர்களது வாக்கு எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது.

இத்தேர்தலில் பெருவாரியாக தாக்கம் செலுத்தப்போவது பொருளாதார மட்டத்தில் கீழ்நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகள்தான்.

தீர்மானிக்கப்போகும் விடயம்
இந்த பாமர வறிய மக்களுக்கு முன் உள்ள முதற் பயம் தமது இருப்பிடம் பறிபோய்விடுமோ என்பதே. அண்மைக்கால இடிப்பு நடவடிக்கைகளை இவர்கள் மறந்துவிடவில்லை. ஏதோ ஒருவகையில் இவர்களது உறவினர்களோ நண்பர்களோதான் அதில் பாதிக்கப்பட்டுமுள்ளார்கள். இவர்களது வதிவிடப்பிரச்சினை தொடர்பாக நான் ஏற்கெனவேசட்டவிரோத கட்டடங்கள் - யதார்த்தமான தீர்வு என்ற பதிவில் சொன்ன கருத்துக்களை நான் மாற்றவில்லையாயினும் தனது அன்றாடப்பிரச்சினையோடு உழலும் இவர்கள் நிச்சயமாக அந்த தீர்வை ஏற்கப்போவதில்லை.

அரசு தரப்பு இப்போது சொல்லும் எந்த வாக்குறுதியையும் இவர்கள் நம்பத்தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. போதாக்குறைக்கு ஏனைய கட்சிகள் பீதியை நன்றாக வளர்த்து விட்டிருப்பதும் அரசு தரப்பின் மேயர் வேட்பாளாரான மிலிந்த மொரகொட இம்மக்களால் அந்நியமானவராக, அமெரிக்க ஏஜன்டாகவே பார்க்கப்படுவதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

ஐதேகவை தெரிவு செய்வது பிரச்சினையை தீர்க்குமா?
இந்தக்கேள்விக்கு பதில் இல்லை என்பதே. தேசிய ரீதியான அபிவிருத்தி திட்டங்களுக்கு குறுக்கே மாநகரசபை வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதிகப்பிரசங்கித்தனமான எந்தவொரு நடவடிக்கையும் மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளர் ஆட்சிக்கு வழிவகுக்கும். எனவே இவ்வளவு செலவு செய்யப்பட்டு நடத்தப்படும் இத்தேர்தல் களத்தின் முடிவு எவ்வாறு இருந்தாலும் லகான் எப்படியோ அரசாங்கத்தின் கைகளுக்கே போய்விடும்.  எத்தனை மாதங்களுக்குள் போகும் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

இதைப்புரிந்துகொண்ட ஐதேக ஆதரவாளர்கள்  வாக்களிக்கச்செல்லப்போவதில்லை. இது ஐதேகவின் வாக்குகளை கட்டாயம் பாதிக்கும்.

சிறுபான்மைக்கட்சிகளின் நிலை
இட்தேர்தலில் சிறுபான்மை மக்களின் இரண்டு கட்சிகள் போட்டியில் உள்ளன. இரு கட்சிகளுக்கும் தமது வழமையான வாக்கு வங்கிக்கு வெளியே வாக்குகள் கிடைப்பதென்பது சாத்தியமற்றது. இன்னும் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் ஐமசுமு வெற்றிபெறுவதை விரும்பமாட்டார்கள். இந்நிலையில் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பது ஐமசுமுவுக்கே வசதியாக அமையும் என்பதை புரிந்த; தமது வதிவிடப்பிரச்சினையை முன்னிலைப்படுத்திய வாக்காளர்கள் தமது கட்சிய விடுத்து ஐதேகவுக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.



மனோ கணேசன்
இவரது தனிப்பட்ட செல்வாக்கின்மீது மட்டுமே கட்சி தங்கியிருப்பதால் இவரது கட்சியில் போட்டியிடும் ஏனையவர்கள் வாக்குகளை சேகரித்துக்கொடுக்கப்போவதில்லை. அதேவேளை இவரது சகோதரர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது வாக்கு வங்கியை கட்டாயம் பாதிக்கும். அவர் தனது சகோதரனுக்கு வாக்களிக்க கோருவது அதைவிட அதிகமாகவே மனோ கணசனுக்கான வாக்குகளில் வீழ்ச்சிய ஏற்படுத்தும்.

முகா
முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது பலத்த விமர்சனங்களை எதிர்கொண்ட விடயம். தனித்துப்போட்டியிடுவது ஐமசுமுவின் வெற்றியையே உறுதி செய்யும் என்றாலும் முகாவுக்கு இருந்த ஒரே தெரிவு தனித்துப்போட்டியிடுவதே.

ஐமசுமுவுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் முகாவின் வாக்காளர்களில் கணிசமானோர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்பதும் அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள இந்நேரத்தில் ஐதேகவுடன் கூட்டுக்கு இடமே இல்லை என்பதும் முக்கிய காரணிகளாக இருந்திருக்க கூடும்.

போட்டியிடுபவர்கள் இனி செய்யக்கூடியது

ஐதேக
முகாவையும் மனோ கணேசனையும் இத்தேர்தலில் தீவிரம் காட்டாமலிருக்கச்செய்யலாம்.

ஐமசுமு
இரு சிறுபான்மை கட்சிகளுக்கும் பணத்தை தாராளமாக அள்ளி வழங்கி ஐதேகவின் வாக்குகளை இவர்களை நோக்கி திருப்பதற்கான் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முயற்சிக்கலாம்.

சிறுபான்மை கட்சிகள்
தமது ஆதரவாளர்களை வாக்களிக்க செல்ல தூண்டுவதே முதற்கடன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முன்னேஸ்வரம் - பௌத்த இனவாத ஜனரஞ்சக அரசியல்


இன்று சிலாபம் முன்னேஸ்வரம் சிறீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் நடக்கவிருந்த மிருக பலி பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா இந்திய திரைப்பட பாணியில் தடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட மத நடவடிக்கை தொடர்பான இரு பார்வைகள் இருக்கின்றன.

என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே
என ஒருசாராரும்
Link

இதை காட்டுமிராண்டி கால பழக்கம் என்று யாழ்ப்பாணத்தில் வாழும் "இந்துக்கள்" எதிர்க்கின்றார்கள். இந்து சமூகத்தில் மாறாத சாதீய முரண்பாடு மத வழிபாட்டிலும் புகுந்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களே இன்றைக்கும் சிறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து வந்துள்ளனர்
என மறுசாராரும் வாதிடுகின்றனர்


எது எவ்வாறிருப்பினும் ஒரு விடயத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வேறு. அதை அடாவடியாக தவிர்ப்பது வேறு.

"...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037

அண்மைக்காலத்தில் இச்சடங்கை எதிர்பதற்கான பூர்வாங்க வேலைகளை அரசின் ஏஜன்டுகள் ஆரம்பித்துவிட்டார்கள். மிருகபலியை எதிர்த்து போராடிய நிகழ்வுகளின் படங்களை நீங்கள் இணையத்தில் தேடிப்பார்க்கலாம். இந்நிகழ்வுகளில் பௌத்த மத குருக்களை தவிர்த்து பொதுமக்களில் ஒரு 50 பேரைத்தானும் காணமுடியவில்லை. இன்னும் கலந்துகொண்ட மதகுருமார்களில் அதிகமானோர் சிறார்கள் என்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயம். அப்படியான நிகழ்வுகள் ஊடகங்களில் எப்படி முதன்மைப்படுத்தப்பட்டன என்ற கேள்வி எழுகிறது.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு பௌத்த துறவியை மாடொன்று வணங்குவது போன்ற படங்களை நாடளாவியரீதியில் காட்சிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். நான் இவ்வாறான படங்களை பல அரச அதிகாரிகளின் மேசையின் கண்ணாடிகளில் கண்டிருக்கின்றேன். பல பொலிஸ்நிலயங்களில் இதனை பாதாதைகளாகவும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறான களத்தயாரிப்புகள் இடம்பெற்றுவந்தவேலையில் இத்தேவஸ்தானத்தில் இடம்பெறும் பலிபூஜையை தடுக்குமாறு மேல்நீதிமறத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிகிறது. நாள் குறிப்பிடப்பட்டு நடாத்தப்படும் மதச்சடங்கொன்றிற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்குவது எவ்வளவுதூரம் சரியான முடிவு என்பது பற்று சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும். நீதிமன்றம் அக்குறிப்பிட்ட தேதியத்தாண்டி அச்சடங்கை தடுக்க முடியாது என்று கூறினால் கூட அடுத்த வருடம்தான் அச்சடங்கை நிறைவேற்ற வாய்ப்புக்கிட்டும்.

மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருப்பதிலை. ஆனால் தனது இருப்பை தக்கவைப்பதற்காக பாமர மக்களை உணர்ச்சியூட்டக்கூடிய மதவாதத்தை அவர்பயன்படுத்திவருகிறார். களனி தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டது அவர்செய்த முதல் காரியம் மாட்டிறைச்சிக்கடைகளை மூடியதே. இன்னும் இப்பிரதேசத்தில் உள்ள கிரிபத்கொட நகரில் சிறுபான்மையினர் எவரும் வியாபார நிறுவனங்களை நடாத்தவும் முடியாது. மீறித்திறக்கப்பட்ட விறபனை நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இது சதிவேலையென்ற கருத்து இப்பிரதேசத்தை சேர்ந்த சகலரிடையேயும் இருக்கிறது.

இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றபோதெல்லாம் சகல தேசிய ரீதியான ஊடகங்களும் மௌனம் சாத்தித்து வந்துள்ளன. இவர் இப்பிரதேசத்திலசில மரக்கறிகளின் விற்பனையையும் தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனால் இவர் மதுபான விற்பனைக்கு தடை விதித்தபோது சகல ஊடகங்களும் வரிந்து கட்டி அரசை தலையிடச்செய்தன. செய்திகளை முக்கியத்துவப்படுத்துவதில் முதலாளிவர்க்கத்தின் பங்கை இச்சம்பவம் சுட்டிக்காட்டியது.

ஆனால் இங்கு இருக்கும் மிகப்பெரிய நெருடல், தூய பௌத்தத்தை வலியுறுத்தும் இவ்வாறான சக்திகள் மிகப்பிரபலமான பௌத்த துறவிகளின் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாக மௌனம் சாதிக்கிறார்கள் என்பதே

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நண்பன் மருதமூரான்! அவரது பாணியில் ஒரு முயற்சி!!

இலங்கையின் பல்வேறுபட்ட தலைப்புகளில் எழுதும் பதிவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பெயர் சொல்ல சொன்னால் உங்களுக்கு கட்டாயம் மருதமூரானாகிய புருஜோத்தமன் தங்கமயில் ஞாபகம் வருவார்.

மருதமூரானை பற்றி பேசுகையில் பெண்களைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது. பேஸ்புக்கில இவரது ஸ்டேட்டஸ்கள் எப்போதும் ஒரு செய்தியை சொல்லும்.

அண்மையில் அவர் பதிவுகளில் நிறைய பெண்களை பற்றி இருக்கிறது. பெண்களின் சுதந்திரம் அழகு பற்றி நிறைய பேசுகிறார். அது நாம் அவரை நெடுங்காலமாக பின்தொடர்வதால் அவரது போக்கில் வித்தியாசமாக தெரிகிறது.

பெண்களைப்பற்றி பேசுவது தப்பா என்று நீங்கள் கேட்கக்கூடும். நிச்சயமாக இல்லைதான். வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு பெண்ணின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. பேஸ்புக்கில் நாம் சந்திக்கும் பெண்களில் சிலரது மேதமை எம்மை பிரம்மிக்க வைக்கிறது. தைரியம் பிடிக்கிறது. நம்மை அறியாமல அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அது எப்போது ஆரம்பித்தது என்று கேட்டால் சரியாக சொல்ல தெரிவதில்லை. நாம் உணர்வதை சரியாக குறிப்பிட்ட பெண்ணுக்கும் நாம் சொல்வதுமில்லை.

பேஸ்புக் காதல்கள் நிறைய இடம்பெறுகின்றன. அதனால்தான் நிறைய ஆண்கள் அங்கு அக்டிவ் ஆக இருக்கிறார்கள். என்னைக்கேட்டால் உங்களுக்கு ஒரு பெண்ணைப்பிடிக்க ஒரு பரிமாணம் போதுமாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. புத்திசாலி பெண்களுக்கு முப்பரிமாணமும் தேவைப்படுகிறது. ஆக பேஸ்புக் ஸ்டேட்டஸ்களால் நாம் பிரம்மித்த பெண்ணை நெருங்கமுடியாது என்பது என நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவர் முயற்சி தொடரட்டும்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அது வேறுகதை.

மருதமூரானின் பெண்கள் பற்றிய பதிவுகள் எப்போதும் அவரை கலாய்ப்பதற்கு எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதில் ஒரு சந்தோஷம். சிலநேரம் ரொம்ப சூடாக ஏதவது சொல்லிவிடுவார். என்னதான் இருந்தாலும் கருத்து சுதந்திரத்தில் அதிக நம்பிக்கை உடையவர். நான் நினைக்கிறேன் அதனால்தான் பிரண்ட் லிஸ்ட்டில் இன்னமும் என்னை வைத்திருக்கிறார் என்று.

அந்த நன்பண் இப்போது வடக்கு கிழக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு பல பெண்களின் அழகு பற்றிய தெளிவுகிடைக்கும். அவர் விரைவில் செட்டில் ஆக வேண்டும் என விரும்புகிறேன்.. பெஸ்ட் விசஸ் நண்பா..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான்

தினமலரின் ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் என்ற கட்டுரையில் இருந்த பின்னூட்டங்களில் சில. பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

மன்னிப்பு சிறந்தது என்பதும், அந்த மன்னிப்பை வழங்கவேண்டியது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே என்பதும் நமது கருத்தாகும்.

இறக்கப்போவது மனிதன் என்றால் இறந்தது மனிதன் இல்லையா ?
Sri Krishnan - Chennai,இந்தியா
எனக்கு ஓன்று புரியவில்லை தமிழர்களாய நம்மை போன்று இப்படி Emotional Idiot யை வேறு எங்கும் காணமுடியாது.கீழ் கோர்ட் இல் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை தீர விசாரித்து தண்டனை வழங்கி ,கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பின்னும் இப்படி வெற்று கூச்சல் போடுவது மிகவும் அநியாயம்.வன்மையாக கண்டிக்கத்தக்கது
A.SESHAGIRI - TUTICORIN,இந்தியா
கட்டுரை மிக மிக அருமையாகவும், சிந்திக்கும்படியாகவும் இருந்தது. கொலையாளிகளின் மீது கருணை காட்டு வதை விட்டு விட்டு, கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காக கருணையும் இரக்கமும் காட்டுங்கள் ! கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை ஜனாதிபதிக்கோ , நீதி மன்றத்திற்கோ , வேறு யாருக்கும் கிடையாது. அவர்களின் மன்னிக்கும் உரிமை அவர்களால் ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டர்களே அவர்களின் குடும்பத்தினர்களுக்குத்தான் உண்டு.

Hajji mohamed Hidayathullah - alqassim,சவுதி அரேபியா


மிகவும் அருமையான கட்டுரை. அரசியலில் பிழைக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எடுத்து மக்களை முட்டாள்களாக்கும் அரசியல்வியாதிகளை உள்ளே தள்ள இப்போது பொடா இல்லாமல் போனது வருத்தமே! இந்திய சட்டப்படி குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு பிறகு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக வீதியில் இறங்கி தமிழர்கள் போராடுவது தமிழினத்திற்கே அவமானம். அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர் என என்னவோ தியாகிகளைப் போல பேசுகிறார்கள். இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டா விட்டால் இன்னும் பல தீவிரவாத இயக்கங்கள் துளிர் விடும். என்ன செய்தாலும் உயிர் போகப்போவதில்லை என்ற எண்ணமே மேலிடும். ஒரு நாட்டின் பிரதமரையே கொன்றவர்களுக்கு கருணை மனு அளித்ததே தவறு. இவர்களை 1999-லேயே தூக்கிலிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 11 வருடங்களாக அமைதியாக இருந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதன் அவசியம் என்ன? இவர்களது கருணை மனுவை நிராகரித்த மு க இன்று அவர்களை விடுதலை செய் என்று சொல்வதன் மர்மம் என்ன?

குஜராத்தில் 2000 க்கும் அதிகமான மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை அல்லது விசாரணைதான் என்ன?
prakash - chennai,இந்தியா
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தகாரர்கள் வாதம் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருத்துகளைய்ம் கேட்க வேண்டும் . அவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்காக எந்த அரசியல்வாதியும் இல்லையா? அவர்களின் பாதிப்பை பத்தி இவர்களுக்கு கவலை இல்லையா?
Divaharan - Tirunelveli,இந்தியா

இந்த வைகோ பழ நெடுமாறன் ராமதாஸ் திருமாவளவன் சீமான் கலைஞர் இவரர்கள் எப்பவாவது இலங்கை அகதி முகாம் சென்று பார்திருகிரர்களா. அகதிகளில் நன்கு படிக்கும் குழந்தைகளை தத்து , கட்சி சார்பவது தத்து எடுத்து எத்தனை குழந்தைகளை வளர்கிறார்கள். பதில் சொலுங்கள்.தலைவர்கள் பதில் சொல்லுங்கள். எல் டி டி இ தலைவர் மற்ற இயகங்களை ஒழிக்காமல் இருந்து எல்லாரையும் அரவணைத்து i p k f உடன் போரிடாமல், ராஜீவ் வை கொல்லாமல் இருந்திருந்தால் நம் இந்தியாவில் தமிழ் நாடு எப்படி ஒரு மாநிலமாக இருக்கிறதோ அது மாதிரி தமிழ் ஈழம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் ஒரு மாநிலமாக கிடைத்திருக்கும். எல்லாம் பிரபாகரன் சர்வதிகார போக்கு காரணம் சரியா தவறா.
vaiyapuri - coinbatore,இந்தியா

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது 'true eye opener ' . Best wishes தினமலர்..
Mukund GS - Wellington,நியூ சிலாந்து

இந்திய முழுவதும் ,,,,,,,வேண்டாம் ,,தமிழ் நாட்டில் தீர்கபடாத பிரச்சனைகள் பல உள்ளன ,,,, பேருந்து கட்டணம் சில நாட்களுக்கு முன்பு விலை அதிகம் ஆக்க பட்டு உள்ளது ,,,,கல்வி சாலைகளில் கட்டணம் மறை முகமா உயர்ந்து உள்ளது ,,கொலை கொள்ளை சொல்ல தேவை இல்லை ,,,நில அபகரிப்பு குறைய வில்லை ,,,,கேரளா ஆணை கட்டுவதை தடுத்து நிறுத்த நம்மால் முடிய வில்லை ,,விலை வாசி ஏற்றம் குறைய வில்லை ,,,,,இது போன்று பல பிரச்சனைகளை நம் சொல்லலாம் இதை கண்டித்து போராட்டம் நடத்தினால் தோல்வி அடைந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
Babu. M - tirupur,இந்தியா

விடுதலை புலிகள் செய்த கொலைகளுக்கு கணக்கே கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்ப் பிரதேசங்களான வடகிழக்கு மாகனங்களிளிருந்து புலிகள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டியபோது யாரும் மனிதாபிமானம் காட்டவில்லை. அதைப்பற்றி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் போடப்படவில்லை. எப்படித்தான் இந்த வைகோ , சீமான், நெடுமாறன், ராமதாஸ், கருணாநிதி , போன்றோருக்கு நீதி உணர்வு மனிதாபிமான உணர்வு வருகிறதோ தெரியவில்லை.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

எக்சார் வீடியோ

பதிவுலக வரலாற்றில்...
முதன் முறையாக..
மெகா ஹிட் ஆகப்போகும் வீடியோ..
இப்பொழுது..
நமது எக்சாரில்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஐதேக கட்சிக்குழப்பம்



ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம்கோரி ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கெதிராக பாவிக்கப்பட்ட வசனங்கள் பிஸ்ஸு பூசா, மிஸ்டர் பீன்.

“A politician should have a lot of patience not only to head a government but also to be an opposition leader. Although social service is good, you cannot win only by doing social service. Some others think they can win by doing politics through the media. One cannot go forward in politics through the media. Politicians who are limited to the media are like papdams,”
Ranil Wickremesinghe
<!-- adsense -->
ரணில் விக்கிரமசிங்ஹவை மிஸ்டர் பீன் ஆக சித்தரித்து நாடுமுழுவதும் சுவரொட்டிகள் ஒரு காலத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அன்று அதை எதிர்க்கட்சி செய்தது. இன்று அவர் கட்சிக்காரர்களே செய்கிறார்கள்.


ரணில் ஒரு வசீகரமற்ற தலைவர்தான். ஆனாலும் அவரது காய்நகர்த்தல்கள் தேர்ந்த அரசியல்வாதிக்குரியவை. இல்லாவிட்டால் 94க்குப்பின் தொடர்தோல்வியை கட்சி அடைந்துகொண்டிருந்தபோதும் அவரால் தலமைப்பதவியில் தொடர்ந்து இருக்கமுடியுமா?

ரணில் புலிகள் மீது மென்மையான போக்கை கையாண்டது 94க்குப்பின் பெரும்பாலான இலங்கையர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இவ்வெறுப்புத்தான் இவரது ஆட்சிக்கும் ஆப்பானது. தேர்தலில் புலிகளும் இவருக்கு ஆப்பு வைக்க அரசுக்கட்டிலை இழந்தார் ரணில். அதே ஆப்பு புலிகளுக்கு மாறி இறங்கியது வேறுகதை.

அதன்பின் மஹிந்தவின் வசீகரத்திற்குமுன் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த வெற்றிகரமாக நிறைவு செய்தபின் ரணிலால் மட்டுமல்ல வேறுயாராலும் ஆட்சியை பிடிப்பது யாதார்த்தமற்ற ஒன்றும் கூட.

ஆயினும் மஹிந்த மேலதிகமாக ஐதேக உறுப்பினர்களை தனது ஆட்சிக்குள் உள்வாங்க தயாராக இல்லாமையால் விலைபோகாத சரக்காகிப்போயுள்ள ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெறுமனே செலவு செய்வது மட்டும்தானா, உழைப்பதில்லையா என்ற வெறிய்ல் இருக்கிறார்கள்.

எனவே ரணிலுக்கோ வேறொரு ஐதேக தலைவருக்கோ கிடைக்ககூடிய மிகப்பெரிய பதவி எதிர்க்கட்சித்தலைவர் பதவி மட்டும்தான். அதனை உறுதி செய்யத்தான் கட்சிக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார். சஜித் குழு எதிர்கட்சித்தலைவர் பதவியை தொடர்ந்து ரணிலுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தாலும், அதிகாரம்மிக்க தலைமைப்பதவி போனபின் அவ்வாக்குறுதி எத்தனை நாட்களுக்கு காக்கப்படும்?

ஐதேகவுக்கு கரு ஜயசூரியவோ சஜித் பிரேமதாசவோ தலைமைவகித்தாலும் இந்நிலவர்த்தில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. இவர்களால் கொழும்பு மாநகர சபையைதானும் வெல்லமுடியுமா என்பதே கேள்விக்குறி. அப்படி வென்றால்கூட அது சாதனையாக கணக்கில் எடுக்கப்படாது. இது தெரிந்த சஜித், தனது இமேஜை பாதுகாக்க கருவை தலைமைப்பதவிக்கு போட்டியிடச்செய்கிறார் என்றே அனுமானிக்கமுடிகிறது. பிஸ்ஸு பூசா என்று தாம் அழைத்த தலைவரை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் ஐதேகவின் அடிமட்ட தொண்டர்களில் பாதிப்பேராவது வாக்களிக்கச்செல்வார்களா?

மஹாராஜா நிறுவனங்களுடன் மோதல்
மஹாராஜா ஊடக நிறுவனத்துடனான ரணிலின் மோதல் இன்னுமொரு சுவார்ஷ்யம். எமக்குத்தெரிந்து மிலிந்த மொரகொட, ரோசி சேனநாயக்க, ஹர்ஷா டி சில்வா, புத்திக்க பத்திரண, சிறீ ரங்கா ஆகியோர் மஹாராஜா ஊடகத்தின் ஆதரவு காரணமாக பதவிக்கு வந்தவர்கள். சிறீ ரங்கா கூட தனது கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு இடம் கேட்டமை சன்டே டைம்ஸில் வந்திருந்தது. எனவே மஹாராஜ நிறுவனம் இரண்டு தேசியப்பட்டியல் இடங்கள் கேட்டது என்பதில் கொஞ்சமாவது உண்மையிருக்கும் என்றே தோன்றுகின்றது.

இல்லாவிட்டால் பல விடயங்களில் அடக்கி வாசிக்கும் மஹாராஜா ஊடகம் ஐதேக தலைமை விடயத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் என்ன.

ரணில் இப்போதாவது விரல்களை தாண்டி வளர்த்த நகத்தை கவனித்திருக்கிறார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மர்ம மனிதர்கள்

மர்ம மனிதர்கள் தொடர்பான அச்ச உணர்வுகளால் மக்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினரோடு மோதிவருகிறார்கள். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்களோ இதைவிட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று நினைப்பவர்கள் போல் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

It was funny for a while, but people are dying over what? Grease Yakas are not real. Crime is, and sometimes you have to tie people to trees, but when people are dying I think things have gotten out of hand.
indi.ca

பொத்துவிலில் அமைச்சர் பௌசி சொன்ன ஒரு உப விடயத்தை தூக்கிப்பிடித்து வெற்றி FM மற்றும் தமிழ் மிரர் ஆகியன செய்திகளை வெளியிட்டிருந்தன. (ஏனைய ஊடகங்களை பின்தொடராமையால் அவை என்ன சொன்னன என்ற நான் அறியேன்) ஒருவர் சொன்ன ஒரு விடயத்தை வித்தியாசமான சொற்களைப்பாவித்து வேறொரு கருத்து மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செய்திகளை வெளியிடுவது நீண்ட கால நோக்கில் குறிப்பிட்ட ஊடகம் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இல்லாமலாக்கி விடும் என்பதை இவ்வூடகங்களை வழிநடாத்துபவர்கள் கவனிக்கமாட்டார்களா?




மர்ம மனிதர்கள் தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

அதேவேளை இந்திய படங்களில் நடப்பதுபோல் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதையும் தவிர்ந்துகொள்ளவேண்டும். அப்பாவிகளை அடித்துக்கொல்வது ஒரு நாகரீகமான சமூகத்திற்கு அழகல்ல. இன்னும் பாதுகாப்பு படையினருடனான சுமூக உறவுகளை சீர்குலைக்கும் வண்ணம் பொதுமக்கள் நடந்துகொள்வது நல்லதல்ல.

ஒருவரை பிடித்து பொலிஸில் கையளிக்க முன் அவரை படமெடுக்க கூடிய வசதி இன்று எல்லாரிடமும் மொபைல் இல் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் பாதிகாப்பு படையினர் நியாயமாக நடக்கவில்லை என்று சந்தேகம் இருந்தால் அவ்வாறான ஆதாரங்களை பயன்படுத்தி நீதியை நிலைநாட்டலாம். பொதுமக்கள் மர்ம மனிதர்கள் தொடர்பில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

இல்லாவிட்டால் தனக்கு பிடிக்காத ஒருவரை கிறீஸ்பூதம் என சொல்லி ஊரைக்கூட்டி கொல்வது இலகுவாக போய்விடும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யாழ் பாரளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை

அண்மையில் தேர்தல் ஆணையாளரினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதிநிதித்துவத்தை 9 இலிருந்து 6 ஆக குறைக்கும் முடிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களாக யுத்தம் காரணமாக யாழ் மக்கள் நாட்டிற்குள்ளேயும், யுத்தத்தை காரணமாக காட்டி பொருளாதார நலன்களுக்காக வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடப்பெயர்வு தற்காலிகமானதாவோ அல்லது நிரந்தரமானதாவோ வகைப்படுத்தப்படமுடியுமானபோதும்து பெரும்பாலும் பல சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் தற்காலிகமான இடப்பெயர்வுகளாகவே ஒரு பக்கச்சார்பாளர்களினால் காட்டப்படுகின்றது.

இவ்வாறான பல நிரந்தர இடப்பெயர்வுகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படாமையினால் அரச புள்ளிவிபரங்களில் கணக்கெடுக்கப்படமுடியாமல் போயிருந்தது.

வாக்காளர் இடாப்பு இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால்

1.) கள்ள வாக்கு பதிவோருக்கும் சவுகரியமாக இருந்தது.

 2) உண்மையில் அப்பிரதேசத்தில் இருந்த வாக்காளர்கள் பதுவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக்காட்டிலும் குறைவாக இருந்தமையால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தல்களில் ஆர்வம் காட்டவில்லை என்று அரச எதிர்ப்பாளர்களுக்கு சொல்ல முடியுமாக இருந்தது.

மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பது நியாயமானது. இந்த அடிப்படையில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மக்கள் எண்ணிக்கை குறைந்தால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் குறைக்கப்படலும், சனத்தொகை அதிகரிக்கும் இடங்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படலும் கட்டாயமானதாகும்.

ஆயினும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு தற்காலில் இடப்பெயர்வுகள் காரணமாக ஏற்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு அரசு அநீதியிழைப்பதாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதைவிடுத்து குறிப்பிட கால இடைவெளிகளில் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் இலங்கை பூராவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் என்ற உறுதி மொழியை அரசு வழங்கவேண்டும். இது குழப்பக்காரர்களின் வாயை அடைக்கும்.

இன்னும் வேறு இடங்களில் குடிபெயர்ந்துள்ளவர்களை அந்தந்த பிரதேசங்களிலேயே வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும்.

இதேபோல் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் அரச வளங்கள் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டு சரியாக பகிரப்பட வேண்டும். இதன் மூலம் நாடலாவிய ரீதியில் மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 ஒலகப்பட விமர்சனம்

பதிவரா இருந்துட்டு ஒரு ஒலகப்படத்தைப் பத்தி விமர்சனம் எழுதலைன்னா ஊருக்குள்ள ஒருபய மதிக்க மாட்டிங்குறான்னு நம்ம அவிங்க ராசா சொன்னதுமே பலர் முழிச்சுக்கிட்டாங்க.. ஒருத்தர் ரெண்டு படத்த பத்தி எழுதிருக்காரு. ஆனா காட்டூன் படம்கறதால வேற யாருக்காகவோ பாத்தமாதிரி எழுதியிருப்பாரு.

இன்னொருத்தர் இசுப்பானிய படம் பார்த்து மீள் பதியுராறு.. இங்கிலீசு படத்தவிட வேறபடத்த பத்தி எழுதினாத்தானே அறிவிசீவிம்பாங்க...

அதெல்லாம் கண்டுக்காதீங்க.. அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா..

அதனாலே நானு பெரீய பதிவர்னு காட்ட இந்த மாசம் பாத்த 3 படத்த பத்தி எழுதப்போறேன். (அதாவது ஒலகப்படமெல்லாம் மாசத்துக்கு 3 ஆவது பாக்குறவன்னு அர்த்தம்பா.. புரிஞ்சுக்கங்க..)

குறிப்பு : நான் படத்தில கவனிச்ச நுணுக்கமான விசயங்களெல்லாம் பதிவுல இருக்கும். கவனமா படிங்க. (உங்க கவனக்குறைவால என் நுணுக்கத்துக்கு பங்கம் வரக்கூடாதுன்னு அதெல்லாம்  Highlight பண்ணி  இருக்கும்பா)

எனக்கு ஒரு திருடி சாரி த்ரீ டி படம்பாக்கணும்னு ரொம்ப நாளா ஆச. அதனாலே நம்ம அலுவலகத்துல வேலசெய்யிற ஒருத்தருக்கிட்ட ரொம்ப நாளா சொல்லிவச்சி ஒருநாள் கூட்டிட்டு போயிட்டேன். அந்த படம்தான் Pirates of the Caribbean: On Stranger Tides. மரண தண்டனைக்குள்ளாக போகும் கைதிய காப்பாத்தும் நம்ம ஹீரோ நிறைய சேர்கஸ் எல்லாம் செஞ்சும் கடைசில மாட்டிக்கிறாரு. அவர புடிச்சவங்க சிரச்சேதம் செய்யாம ஒரு வேலைய ஒப்படைக்கிறாங்க. இசுப்பானியருக்கு முந்தி Fountain of Youth ங்கிற இடத்த கண்டுபுடிக்கிறதுதான் வேல.

Johnny Depp தான் ஹோரோன்னாலும் நாம இதுவர பாத்த தமிழ் பட வரவெல்க்கணப்படி Sam Claflin தான் ஹீரோவேலயெல்லாம் செய்யுறாரு..

250 மில்லியன் போட்டவங்களுக்கு 960 மில்லியன குடுத்த படம். நீங்களும் பாத்தா அதுல கொஞ்சம் ஏறும்.

Bradley Cooper நடிச்ச படம் Limitless.. ஒரு மாத்திர சாப்பிட்டூங்கன்னா உங்க புத்தி சூப்பரா வேல செய்யும்கறதுதான் படம். ஒரு மாத்திரய டெஸ்டு பண்ணின நம்ம ஹீரோ அந்தமாத்திர இல்லாமா ஒன்னும் செய்ய ஏலாம இருக்காரு. மாத்திரயின்ட performance ல impress ஆன ஹீரோ ஒரு பக்கட் மாத்திரய திருடிக்கிறாரு. ஆனா இந்த மாத்திர சாப்பிட்டுட்டு குப்புறக்க படுக்காம மத்திர தந்த வீரியத்துல share market தொட்ங்கி பலான பலான விசயம் வரைக்கும் பின்னுறாரு..  அந்த மாத்திரய சப்ளை பண்றதுக்குத்தான் ஆக்கள் இல்ல.  அப்புறம் மீதிய பாத்து தெரிஞ்சுக்கங்க (தெரிஞ்சா சொல்லமாட்டேனா.. விளங்கின அவ்வளவுதான்)

    Paul Leonard-Morgan இன் பின்னணி இசையில் Leslie Dixon இன் திரைக்கதை சூப்பரோ சூப்பர்.

இதே படத்துல வந்த Bradley Cooper இன்னும் ரெண்டுபேரோட நடிச்ச படம் The Hangover Part II. நேத்து ராத்திரி 11.45 காட்சி. முந்தின படத்துல மாத்திர சாப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டிபோடப்போற அதே ஹீரோ ஒரு பியர் குடிச்சு பேங்கொக்ல செய்யும் சர்வ நாசம்தான் படம். பியர் குடிச்சதுல இருந்து செஞ்சதெல்லாம் தூங்கி எழும்பினவங்களுக்கு ஞாபகம் இல்ல. இதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணோட தம்பிய என்ன செஞ்சோம்னு கூட தெரியல. அவன் வெரல் மட்டும் இவங்க படுத்த அறையில் கெடக்கு.

படத்துல பெயின் அட்ராக்ஷன் தம்மடிக்கிற Capuchin கொரங்குதான். கடைசி சீன்ல காதுகடி மைக் டைசன் என்ட்ரி குடுக்கிறாரு.

மைக்டைசனுக்கு டாட்டு குத்தின S. Victor Whitmill இந்தப்படத்துக்கெதிரா வழக்குப்போட்டு பரபரப்ப கிளப்பினாரு. அவருக்கு என்ன குடுத்து கேச முடிச்சாங்கங்றதெல்லாம் வெளியில வரல..

நுணுக்கமான விசயம் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு எனக்கு மட்டும் கேக்கிறமாதிரி நீங்க பின்னூட்டத்துல சொல்லலாம். வெளியில சொல்லிடாதீங..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சன்ல் 4 இன் கொலைக்களம்


சனல் 4; கொலைக்களம் என்ற தலைப்பில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களாக சில வீடியோக்களை ஒளிபரப்பியது.

அதற்கு முன்,

போர்க்குற்றங்கள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு முதலில் நமக்கு அவசியமாகிறது. இது தொடர்பான விவரங்களை ஆங்கில விக்கிபீடியாவிலும் தமிழில் நண்பர் அஷோக்பரனுடைய பதிவிலும் காணலாம்.

தமிழ் விக்கிபீடியாவினை இதற்கு மேற்கோள் காட்டமுடியாமை ஒரு வருந்ததகக் விடயமே. அதில்
>>ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தினால் அது சர்வதேச போர்க் குற்றமாகும் என பராக் ஒபாமா அறிவித்துள்ளார். அதாவது எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களின் மீதே போர் விமானத்தை பயன்படுத்துதல் போர்க்குற்றம் என்ற செய்தியை தெளிவாகக் கோடிட்டு காட்டியுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தியுள்ளார். <<

என்ற பகுதியியை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.

ஒபாமா சொல்வதெல்லாம் வரவிலக்கணமாக ஆகுமா?

அரசு அல்லாதோர்; மக்கள் மீது விமான தாக்குதல் நடாத்தினால் அது போர்க்குற்றமில்லையா?

இவ்வாறான கேள்விகளின் அடிப்படையில் நான் தமிழ் விக்கிபீடியாவின் வரைவிலக்கணத்தை தவிர்த்திருக்கிறேன்.

ஆங்கில விக்கிபீடியாவில்
War crimes are serious violations of the laws applicable in armed conflict (also known as international humanitarian law) giving rise to individual criminal responsibility. Examples of such conduct includes "murder, the ill-treatment or deportation of civilian residents of an occupied territory to slave labor camps", "the murder or ill-treatment of prisoners of war", the killing of prisoners, "the wanton destruction of cities, towns and villages, and any devastation not justified by military, or civilian necessity".[1]

இதனடிப்படயில் சிந்திக்கும்போது murder - மாற்றுக்கருத்தாளர்களை கொலை செய்தல், deportation of civilian -  இனச்சுத்திகரிப்பு, destruction  - பொதுமக்களுக்கான மின் விநியோகத்தை தடைசெய்ய transformerகளுக்கு குண்டுவைத்தல etc..

என பலவிடயங்களை இம்மூன்று தசாப்த யுத்தத்தில் இலங்கையர் அனைவரும் சந்தித்திருக்கிறோம்.

ரத்தின சுருக்கமாக போர்க்குற்றம் என்பது இராணுவ தேவைக்காகவேனும் நியாயப்படுத்த முடியாத செயல்கள் என்ற அடிப்படையில்

அப்படியென்றால் இரண்டாண்டுகளாக மட்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முக்கியத்துவம் வழங்கப்படுவது


இவ்வகையான இராணுவ ரீதியாக நியாயப்படுத்தமுடியாத விடயங்கள் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் முதல் தடவையாக முள்ளிவாய்க்காலில்தான் இடம்பெற்றதா?

அல்லது அதற்குமுன் துன்பப்பட்டவர்கள் மக்கள்

போன்ற கேள்விகளை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

இருந்தும்
இவ்வாறான காட்சிகளை பார்க்கும் அளவுக்கு நம் அனைவரினதும் மனங்கள் இறுகியிருப்பதும், அதைப்பார்த்தபின் எமது வழமையான வாழ்க்கையை இயல்பாக தொடர்வதற்கும் முடிகின்றதை நினைக்கையில்  நாம் வாழும் சமூகம் மீதான அச்சம் ஏற்படுகிறது.

அதேவேளை வீடியோ தொடர்பான கேள்விகளும் இல்லாமலில்லை.

உதாரணமாக

1.) ஒரு காட்சியில் விமானத்தாக்குதல் இடம்பெறும்போது மக்கள் பங்கருக்குள் பதுங்குகையில் ஒருவர் வீடியோ எடுத்திருப்பதை காட்டுகின்றது. அப்போது ஒரு தாய் "வீடியோ எடுத்து என்னதத கண்டனீங்கள" என்று அழுகிறார்.

நமது உற்றார் உறவினர் குடும்பத்தார் உயிருக்கு பயந்து பதுங்குகையில் நாம் ஒரு கமராவை எடுத்து அதை செவ்வனே படம்பிடிப்போமா? இக்காட்சிகளை இம்மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறையுள்ள ஒருவரால் எடுத்திருக்க முடியுமா? இதை படம்பிடித்தவருக்கு ஒரு நோகக்ம் இருந்திருக்கும். ஒரு திருமண நிகழ்வை நண்பர்களின் ஒன்று கூடலை படம்பிடிப்பதற்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

2.) நீங்கள் வாழ்நாளில் சந்தித்த மிகப்பயங்கரமான சம்பவங்களை விளக்குகிறீர்கள். உங்கள் முகத்தில் உதடுகளின் ஓரத்தில் புன்னகை வழியுமா?

இக்கேள்விகளுடன்
The Telegraphஇல் வெளிவந்த
Serena Davies reviews Sri Lanka's Killing Fields, Jon Snow's harrowing investigation for Channel 4 என்ற கட்டுரையின் பின்வரும்பகுதியையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Watching these films made me retch and I wonder quite what the purpose was of viewers being exposed to such horror. Snow said he believed the films should be made public, but why to the British public? Should untutored members of another nation, one on the other side of the world and with no claims now over its former colony, be the people to bear witness to such grotesque behaviour, watching a sequence of these squalid little films and adding a final violation of the victims’ privacy? Surely they are a matter for the experts, for the international arbiters of justice and human rights. In this instance, TV, with its sensationalising soundtrack and its graphic intimacy, seemed the wrong way to present yet another reminder of man’s capacity for evil.

ரூபவாஹினியில் ஒருநாள் இளையதம்பி தயானந்தா அகதி என்பதை அந்தஸ்த்தாக கருதும் மனநிலை தொடர்பாக தனது கவலைகளை வெளியிட்டார். அம்மனநிலை தொடரும்வரை காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கல்வியை தனியார்மயப்படுத்தும் முயற்சி

இலங்கையில் அடிப்படைக்கல்வி இலவசமாக சகல மாணவர்களுக்கும் வழங்கப்படும் நிலையில், நவீன தீண்டாமையை வளர்க்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் தேவைகளுக்காக சர்வதேசப்பாடசாலைகள் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடாத்தப்படுகின்றன.

During recent years, there is a significant increase in the demand for foreign education among the students in Sri Lanka and neighbouring countries. One of the main reasons for this is the inability of providing study options as they need by the state sector Universities and private institutions for students who pass the G.C. E. Advanced Level Examination and therefore they tend to look for other options overseas. In many countries this is a common practice but unfortunately there are no proper systems to guide the potential students and parents to select the best education provider of the student and this will always depend on several important factors.


< பொதுவாக தொழிலதிபர்களான இச்சமூகம் வர்த்தகக்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலாபமோ நட்டமோ இவர்களையே பெரிதாக பாதிப்பதால் சமூகம் இது பற்றி அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆயினும் நேரடியாக சமுதாயத்தை பாதிக்கக்கூடிய ஆசிரியர், வைத்தியர், பொறியியலாளர் போன்ற தொழிற்துறைகளில் தனியார் நிறுவனங்கள் செல்வாக்குச்செலுத்துமானால் அது நிச்சயம் சமுதாயத்தை பாதிப்படையச்செய்யும். இவ்வாறான ஒரு கல்விமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்தவே எஸ்.பி. முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் செல்வம் கொழிக்கும் புதிய துறையொன்று இந்த வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கும். அதில் பலன்பெறப்போவதும் இந்த மேல்தட்டு வர்க்கமே. இவ்வாறான கல்விமுறையில் அதிகம் அக்கறை காட்டிய இன்னொருவர் "மயோன்" முஸ்தபா. இவரின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் "மயோன்" என்பது அவரின் தனியார் கல்வி நிறுவனத்தின் பெயராகும். ருசி கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாமல் இருக்குமா? இதுவும் தனியார் கல்வி வலியுறுத்துபவர்களின் நோக்கத்தை தெளிவாக்குகிறது.

வெளிநாட்டுச்செலாவணி மாயை
தனியார் கல்விநிறுவனங்கள் அவசியம் என்போரின் வாதத்தில் எப்போதும் அன்னியச்செலாவணி என்ற வாதம் இடம்பெற்றிருக்கும். அதில் முதலாவது இலங்கை மாணவர்கள் வெளிநாட்டுக்கு கற்கச்செல்வதால் இலங்கைக்கு ஏற்படும் அன்னியச்செலாவணி நஷ்டம் பற்றியிருக்கும். இலங்கை மாணவர்கள்? எந்த நாட்டை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்களையும் அவர்களின் சித்தி வீதத்தையும் கவனித்தாலே உண்மை வெளிச்சமாகிவிடும். வெளிநாடொன்றிற்கு புலம்பெயரும் இலகுவான வழியாக வெளிநாட்டுக்கல்வி இருப்பதுதான் அதிகமானோர் வெளிநாட்டு கல்வியை நாட முதற்காரணம்.

இரண்டாவது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அமைவதன்மூலம் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் இலங்கைக்கு ஏற்படும் இலாபம் பற்றியது. ஆயினும் இலங்கையை நாடும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பகுதியானோர் மாலைதீவு நாட்டவர்கள். இவ்ர்கள் காலாகாலத்திற்கு இலங்கையில் படிக்கவருவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இவ்வாறான வர்த்தக நோக்கு இருக்குமானால் அவ்வாய்ப்பை இலங்கைப்பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக்கு வழங்கலாம். இதன்மூலம் நிச்சயம் தனியார் நிறுவனங்களைக்காட்டிலும் அதிக தெற்காசிய மாணவர்களை கவர முடியும். ஆயினும் இது மேற்றட்டு வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானதால் மூடி மறைக்கப்படுகின்றது.


ஊடக விபச்சாரம்

இன்று ஊடகங்களின் வர்த்தக வெறி எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஒருவகையில் மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு இவ்வூடக முதலாளிமார்களுக்கு இருக்கிறது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என எந்த ஊடத்தை எடுத்தாலும் ஒரு விளம்பர உத்தி இருக்கிறது. நீங்கள் அதிகம் பணம் செலவு செய்து விளம்பரப்படுத்தினால் உங்கள் நிறுவனத்தைப்பற்றி ஒரு க்ட்டுரையோ, நிகழ்ச்சியோ, நேர்காணலோ இலவசமாக செய்யப்படும். இவ்வாறான நிகழ்ச்சிகளில் கட்டுரைகளில் எமது இலவசக்கல்வி ஏளனஞ்செய்யப்படுகிறது. வெளிநாட்டுக்கல்வி வலியிறுத்தப்படுகின்றது. அவ்வாறான ஒரு பத்தியை மேலே தந்திருந்தேன். போதிய புரிதல் இல்லாத ஒரு சாமானியன் இந்நயவஞ்சகத்திற்கு இலகுவில் பலியாகிப்போகிறான். இவ்வாறான ஊடகங்கள்தான் மக்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிசெய்யபாடுபடுகின்றன. இவ்வூடகங்களுக்கும் பாலியல் சுதந்திரம் கோரும் பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது?

எனவே தனியார்க்கல்வி மாயையை எதிர்த்து நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் செய்யவேண்டியது நமது கடமையாகும். ஆகக்குறைந்தது எமது உறவினர் நண்பர்களிடையேயாவது இது பற்றிய உண்மையை எடுத்துச்சொல்வோமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

எனது மனங்கவர் காலை வானொலி நிகழ்ச்சி

என்னைப்போலவே உங்களில் பலருக்கு காலை நேர வானொலி நிகழ்ச்சி உங்கள் நாளிற்கு உற்சாகம் தருவதாக இருக்கும். இன்று எனது மனங்கவர் காலை நிகழ்ச்சியைப்பற்றி சொல்லப்போகிறேன்.

எந்தவொரு நிகழ்ச்சியும் பொருத்தமான அறிவிப்பாளர் இன்றி பொலிவு பெறுவதில்லை. இதனால் பல நிகழ்ச்சிகள் வழமையாக தொகுத்து வழங்குபவர் இல்லையென்றால் சப்பென்றாகிவிடும். மாதக்கணக்கில் தொகுத்து வழங்கும் அனுபவத்தினூடாக கிடைக்கும் பக்குவம் எப்போதும் நல்லதொரு கேட்டல் அனுபவத்தை தரும்.

தேசம் விட்டு தேசம் வந்த பின் எனது வழமையான காலை நேரநிகழ்ச்சியை மிகவும் மிஸ் பண்ணினேன். ஆனால் இப்போது இணையத்தின் உதவியுடன் மீண்டும் காலைப்பொழுதுகளுக்கு உற்சாகம் கூடியுள்ளது.

முதலில் நிகழ்ச்சி அறிமுகம்.

ஐக்கிய அரபு அமீரக நேரபப்டி காலை 7 மணிமுதல் 11 மணிவரை


இல் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிதான் The Maha Bada Breakfast Show with Kritika. இது ஒரு ஹிந்தி வானொலி. என்றாலும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் ஹிந்தி அறிவு பற்றிய கவலையேயில்லை. எல்லா ஹிந்தி ஊடகங்களையும் போல மிஞ்சிப்போனால் 10% ஹிந்தி பேசுவார்கள். ஏன், 100% விளங்காவிட்டால் என்ன.. கிருத்திக்காவின் கொஞ்சும் குரல் உற்சாக டானிக்தான்


அடுத்ததாக நிகழ்ச்சித்தொகுப்பாளரைப்பார்ப்போம்.


நீங்கள் இப்போது நிகழ்ச்சித்தொகுப்பாளரை கண்குளிர கண்டுள்ளமையால் நீங்கள் நிகழ்ச்சியின் உற்சாகம் பற்றி ஐயுறமாட்டீர்கள்.

இனியென்ன.. நாளை முதல் உங்கள் காலைப்பொழுதை உற்சாகமாக்க கிருத்திக்காவுடன் இணையுங்கள்...

உங்கள் அனுபவத்தை கருத்தை பதிய மறக்காதீர்கள்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உலக கிண்ண எரிச்சல்கள் 2

உலககிண்ண இறூதிப்போட்டிகளின் முடிவுகளின்பின் பல விடயங்களில் எரிச்சலாய் வருகிறது. ஒரு பதிவுக்குரிய வசனநடையில் எழுத மூட் இல்லாததால் குறிப்புகளாக..

1. 50 ஓவர் வரை போட்டி நடக்கும் என்று சங்கக்கார கணித்து கடைசி நேரத்திற்கு மாலிங்கவினதும் முரளியினதும் விக்கட்டுகளை மிச்சம் பிடித்தது.

2. போட்டிகளை காணச்செல்லும் அரசியல்வாதிகள். 2007 இற்கும் 2011 இற்கும் ஒருவரது ராசிதான் காரணமோ..

3. அடிக்கடி அமீர்கானை காட்டிய தொலைக்காட்சி. எவ்வளவுப்பா வாங்கினீங்க

4. லதா மங்கேஸ்கரின் நோன்பு, மஹிந்தவின் திருப்பதி.. அணிக்கு உண்மையாக இருந்தால் ஏன் இந்த விளம்பர வெறி?

5. துட்டுக்கு ஆசப்பட்டு அடிக்கடி இந்தியாவுடன் போட்டிகளுக்கு போகும் இலங்கை கிரிக்கட். இலங்கையின் வெற்றியை தாரைவார்த்ததில் இதற்கும் பங்குண்டு.

6. மஹேலவை கப்டன் பதவியிலிருந்து விலகச்செய்த அரசியல். அந்த அரசியலின் மீது இடி விழ.. சங்கக்கார நல்ல தலைவர்தான்.. ஆனால் இன்று நிறைய பிழையான முடிவுகள்

7. அப்பவே சொன்னேன் என்னும் சில மேதாவிகளின் தீர்க்கதரிசனம். போடாங்...

8. இந்திய கிரிக்கட் வெலவதற்கு தோதாக போட்டிகளை திட்டமிட்ட ஐசிசி. ரவுன்ட் ரொபின் நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உலக கிண்ண எரிச்சல்கள்

உலககிண்ணஇறுதிப்போட்டிகள் நாளை நடக்கவிருக்கும் நிலையில் அதைச்சுற்றி நடக்கும் எரிச்சல் தரும் நிகழ்வுகளையும் உங்களிடன் பகிர்வதே இப்பதிவு..

Indian cricket captain Mahendra Singh Dhoni (L) and Sri Lankan captain Kumara Sangakkara pose with the ICC Cricket World Cup Trophy at The Wankhede Stadium in Mumbai on April 1, 2011, on the eve of the final match which is scheduled to be played in the city on April 2. AFP PHOTO

 முதல் எரிச்சல் உலக கிண்ணப்போட்டிகளுக்காக புற்றீசல்போல் வெளிவந்த பாடல்கள். இவற்றில் பல கேட்க்க்கூடியதாக இருந்தாலும் வீடியோ காட்சிகள் மிக கீழ்த்தரமாக இருந்தது. இராஜின் லயன் நேஷன், பாத்தியாவின் ஹொட் அன்ட் ஸ்பைசி, ரந்திரின் நொட் அவுட் போன்றவற்றை சொல்லலாம். பாடல்களுக்கு பொருத்தமற்ற காட்சிகளும் அதிகளவு திணிக்கப்பட்ட கவர்ச்சியும் இதற்கு முக்கிய காரணங்கள்.

அடுத்த எரிச்சல் அரசியல்வாதிகள்..

விளையாட்டில் அரசியல் நுழைவது எந்தவொரு விளையாட்டிற்கும் நல்லதல். ஏற்கெனவே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள ஆசிய கிரிக்கட் சபைகள் ஏற்கெனவே கிரிக்கட்டை குட்டிச்சுவராக்கிக்கொண்டிருந்தாலும், உள்ளூர் திறமைகளின் தயவில் நிகழ்வின் பார்தூரத்தை மறைத்துக்கொண்டிருந்தாலும் நிகழ்வுகளின் பாரதூரத்தை விளையாட்டின் ஆர்வலர்கள் அறியாமல் இல்லை.

அரை இறுதிப்போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் பிரதமரையும் இலங்கை நியூசிலாந்து பிரதமரையும் அழைத்தது இம்முறை உலககிண்ணப்போட்டிகளின் முதல் எரிச்சல். ஏற்கெனவே பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பாகிஸ்தான் கேவலமாக தோற்பதை பார்த்துச்சென்றார். இந்த அரசியல்வாதிகள் அரங்கிற்கு சென்று கிரிக்கட் பார்ப்பதால் யாருக்கு என்ன பயன்? இவ்விடத்தில் நியூசிலாந்து பிரதமரை கட்டாயம் பாராட்ட வேண்டும்

அதன்பின் இலங்கை இந்திய் இறுதிப்போட்டியை ஒட்டி வரும் அரசியல் அறிக்கைகள் இன்னும் எரிச்சலூட்டுகின்றன. வெற்றியின் பங்காளிகளாக தம்மை காட்டிக்கொள்வதற்காக ஜனாதிபதி முதல் சிறையில் இருக்கும் சரத் பொன்சேக்கா வரை சகல் கட்சித்தலைவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோதாதென்று மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வாவைக்கூட மேற்கோள்காட்டி செய்தியொன்றை கேட்க நேரிட்டது.

இன்னும் இந்தியாவில் திருப்பதியில் இலங்கையணியின் வெற்றிக்காக வழிபடுவார் என்றும் இன்னொரு செய்தி.
இச்செய்ற்பாடு மூலம் ஏனைய பல இலங்கை அரசியல்வாதிகள்போல பௌத்தத்தினை கேள்விக்குள்ளாக்கும் ஜனாதிபதி, திருப்பதியில் வழிபாடு செய்வதன்மூலம் உலக கிண்ணம் பெறலாம் என்றும் நம்புகிறார். அப்படியாயின் இந்திய அணியும் திருப்பதியில் வழிபாடு செய்தால் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழும்பாதா? 96 உலக கிண்ண வெற்றிக்கு சத்தி சாயி பாபா காரணம் என அர்ஜுன ரணதுங்க முட்டாள்தனமாக கூறியது இங்கு ஞாபகத்தில் கொள்ளத்தக்கது.


இவ்வாறான கவனக்கலைப்பான்களை இலங்கை அணி தூரப்போட்டு நாளை எமக்கு வெற்றியை தேடித்தரவேண்டும் என்பதே எம் எல்லோரினதும் அவா. இதன் மூலம் பன்னாட்டு சமூகங்களுடன் வாழும் என்னைப்போன்ற நாட்டில் இல்லாத பலருக்கு நாளை மிகப்பெருமையாக இருக்கும்.

படங்கள் CrickClick இலிருந்து

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Save TN Fisherman - பிழையான வழிநடத்தல்

தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள் என்று குற்றம்சுமத்தி சில நாட்களாக ஒரு டுவிட்டர் பிரசாரம் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தமிழ்நாட்டுமீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் , அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அது எந்த ஒரு நாட்டினனாக இருந்தாலும் ஒரு அப்பாவியின் உயிர் மதிக்கப்படவேண்டும் என்பதில் எந்த ஒரு மனிதனுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆயினும் இப்பிரச்சாரம் என்று இருந்தாலும் இப்பிரச்சாரத்தின் குறிக்கோள் வெறுமனே இலங்கை மீது குற்றஞ்சுமத்தி இலங்கை கடற்படையின் மீது பழி போடுவதே நோக்கமாக இருக்கிறதென்பது தெளிவு.

இது தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்தும் நோக்குடன் கடந்த பதிவை அவசரமாக இட்டிருந்தேன்.

மிகச்சிலரால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் ஏனைய தமிழ் பேசும் டுவிட்டர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வியக்கத்த்திற்கு ஆதரவு வழங்காத எவரும் "இனத்துரோகி" என்ற பயங்கரவாத பாசிசப்பாணியில் முத்திரை குத்தப்படும் அச்சம் காரணமாக ஆதரவு போக்கை அல்லது மேம்போக்கான ஆதரவை நழுவல்பாணியில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இவ்வியக்கத்த்தின் பரகசியமான நோக்கம் குறித்தும் பகிரங்கமாக பேச தயங்குகிறார்கள்.

யதார்த்தம்
முதலில் கொல்பவர் யார் என்று இதுவரை எந்தவொரு விசாரணை அறிக்கையும் இல்லை. அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?

மீனவர் கொலை: "ஆதாரம் வேண்டும்"



இலங்கையும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகள். பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் இந்திய கடற்படை இலங்கைக்கு உதவியது. அவ்வாறிருக்கையில் இந்தியாவை ஆத்திரப்படுத்தும் விதத்தில் இலங்கை நடக்குமா?

கொலைகள் நடக்கும் விதம் - நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் இலங்கை கடற்படை கயிற்றால் சுருக்கிட்டு கொன்றது என்ற குற்றச்சாட்டு

ஐநாவில் வல்லரசாக அங்கீகரிக்கப்படவேண்டும் என விரும்பும் இந்தியா, அதன் கடல் எல்லைக்குள் அல்லது அருகாமையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்குமா? இவற்றை கண்காணிப்பதற்கான நவீன தொழிநுட்பம் இந்தியாவிட இல்லாமல் இருக்குமா?

இலங்கை கடற்படையின் 60ஆம் ஆண்டு பூர்த்தி தொடர்பாக இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட விவரணத்தில் இல்ங்கையில் கரையோரங்களில் நிறுவப்பட்டுள்ள நவீன ராடர்களின் காட்சியில் நூற்றுக்கும் அதுகமான இந்திய மீனவப்படகுகள் இலங்கை கடல் எல்லையை அண்மித்துக்கொண்டிருப்பதை விளக்கியது. (யாரும் அந்த வீடியோவின் லிங்கை தந்துதவினால் சேர்த்துக்கொள்வேன்.)

இவற்றையெல்லாம் கருத்தில் எடுக்கும்போது இவ்வியக்கத்தின் உள்நோக்கம் தொடர்பான பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. எனவே சில அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு சக்திகளின் கபட நாடகத்திற்கு சாதாரண தமிழர்கள் பலியாகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழ் பதிவர்களே
வெறும் ஹிட்டுக்கள்தான் பதிவுலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் உண்மையை பட்டவர்த்தனமாய் பகிரங்கமாய் சொல்லவேண்டிய கடற்பாட்டிலிருந்து விலகுவதேன்?

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்களா?
(In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries )


கச்சதீவு இந்தியாவுக்கு அளிக்கப்படவேண்டும் என்கிறீர்களா? Katchatheevu should be returned to Indian sovereignty from Sri Lanka (சில வருடங்களில் அமுலுக்கு வரப்போகும் ஐநா கடல் எல்லை தொடர்பான தீர்மானங்களில் இன்னும் பல க்டல்மைல்களும் தீவுகளும் எமக்கு சொந்தமாகப்போகின்றது)

இது தொடர்பான சில தகவல்களை தேடித்தெரிந்து ஒரு தெளிவான கருத்துக்கு வரலாமே.

இந்திய மீனவ்ர்கள் இலங்கையின் வளத்தை சுரண்டுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள்

இலங்கைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்கள் கடல் வளங்களை அழித்துச் செல்லும் வகையிலான வலைகளையும், மீன்பிடி முறையையும் பயன்படுத்துவதனால் தமக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்துள்ளார்கள்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101122_indolankafish.shtml

இந்திய மீனவர்கள் இரட்டை மடி என்று அழைக்கப்படும் மீன் வலையை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100821_fishermantalks.shtml

இச்சுரண்டலுக்கு சுரண்டலை எதிர்ப்பதாக் கூறூ வினவு இணையத்தளம் கொண்டிருக்கும் காரணம் என்னவோ?

தொடர்புடைய ஏனைய லிங்குகள்
http://www.bbc.co.uk/tamil/search/?scope=tamil&q=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26359

http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=3434:2010-08-17-11-42-19&catid=42:archived-news&Itemid=159

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74918

http://article.wn.com/view/WNATc883bc8528d469d578bfff882a933ca7/


இலங்கை மீனவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் செய்திகள் விமர்சனங்களின் லிங்குகளை நண்பர்கள் தந்துதவலாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

"#tnfishermen" conspiracy


DMbreakingnews Daily Mirror
Mahabodhi attack ; a trap - Sri Lanka http://bit.ly/dEiHw3 #srilanka #lka

eksaar EKSaar
@thinkynt is SLN entering ur territorial waters and firing & killing ur fishermen n running away for fun? what d logic my dear..?

thinkynt Thinks Why Not
@eksaar ha ha... u mean all those fishermen who witness the shootings are stupid so that they cud not see who killed them...

eksaar EKSaar
@thinkynt i said PRO LTTE.. Seeman, vaiko, nedumaran and gangs... gt it?

eksaar EKSaar
@thinkynt No.. Pro LTTE elements killed them.. Or they may brainwashed him to suicide / suicided for some reason / internal clash...

thinkynt Thinks Why Not
@eksaar So u r saying those killed fishermen were just died (or may be just suicided). #tnfishermen

eksaar EKSaar
@ActorMadhavan plz dnt fall to traps of some political eliment. Do u thing a Navy with modern arms will kill sm1 hanging? Time to think


shameer1112004 Mohd Shameer
by ActorMadhavan
@ActorMadhavan @Actor_Siddharth Lend your hands for #tnfisherman.Your support could make a difference. http://bit.ly/ef7Lmu [pls RT this]


eksaar EKSaar
@thinkynt think in those view as your ID says.. THINK Y NOT!


eksaar EKSaar
@thinkynt No.. Pro LTTE elements killed them.. Or they may brainwashed him to suicide / suicided for some reason / internal clash...


thinkynt Thinks Why Not
@eksaar So u r saying those killed fishermen were just died (or may be just suicided). #tnfishermen

thinkynt Thinks Why Not
@eksaar so you are saying noone can talk of killings, if they do they must hv some hidden agenda or part of some group #tnfisherman



eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil neengal ilankayai nondikondirunthapothu, roofa notil iruntha tamil tholainthuponathe! :D

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil whn u all dnt hav valid arguments to back up, u hv to say "sour grapes" n ignore! :D

4SN Senthil Nathan

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil y u try hard guys! Jst tel ur Dr vijay! (tht dr award itself clear whr u all stays!)

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil under UN mandate bring ur leaders 1st in front of court! V knw wht happenin in ayodya, kashmir, oriza..


4SN Senthil Nathan
நண்பர்களே தூங்க செல்கிறேன். #tnfisherman நாளையும் தொடரும். நன்றி.

4SN Senthil Nathan
@INDIRAJITH sorry. that was by mistake ur name came next to that guy. Sorry. maapu. @ikingkafil

INDIRAJITH இந்திரஜித்
@4SN @ikingkafil ஏங்க என்ன இக்னோர் பண்ண சொல்லலியே?

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil jst google n see, in few years how territorial water agreements change! N its by UN.
eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil wht right u guys hv in our water? Y u come behind our fish if its nt spcl?

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil same TN creatd terrorism in SL. N 2 reawake it u r trying 2 create a way to smugle arms frm TN

eksaar EKSaar
@ikingkafil dnt fabricate. Undr new UN agreement v get andaman islands undr our territory. U knw dat?



4SN Senthil Nathan
@eksaar Wht right u hv to kill a person who just touched ur water? ur fish is so costly? #tnfisherman @TBCD @INDIRAJITH @ikingkafil

4SN Senthil Nathan
@eksaar Pakistan, so called enemy of India, captures them, DOESNT torture them, returns them bk @TBCD @INDIRAJITH @ikingkafil

4SN Senthil Nathan
@eksaar correct. I agree. one q. if some1 doesnt follow basic ethic, u kill them? #tnfisherman @TBCD @INDIRAJITH @ikingkafil

eksaar EKSaar
@TBCD @4SN @INDIRAJITH @ikingkafil GUYS U better spend this time 2 educate ur fishermen.. Tel thm nt 2 steel our resources. BASIC ETHIC NA

thirumarant திரு
by INDIRAJITH
நாளை காலை #tnfisherman trending topic கில் வரும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்கிறேன் Good night

eksaar EKSaar
Dear SL Navy, y TN Fishermen telling u killd thm by hangin? TN ppl may thing we are nt technologicaly advancd! @INDIRAJITH @ikingkafil

eksaar EKSaar
@INDIRAJITH y indian fishermen crossing territorial waters? TN fishermn employd in qatar arrestd by kSa for entering their area! @ikingkafil


4SN Senthil Nathan
Facebook பக்கத்தையும் உங்கள் டுவிட்டரிலும் facebook நிலையிலும் போடா வேண்டுகிறேன். #tnfisherman

TBCD டிபிசிடி
by INDIRAJITH
Please speak for #tnfisherman by RT ing this http://bit.ly/ef7Lmu - RT Pls

4SN Senthil Nathan
அந்த டுவிட் "top tweetaa" வரும். அதில் நமது கருத்து தெளிவாய் இருக்கும்.ஒன்றுபட்டால் தேசிய தொலைகாட்சி இதை கையில் எடுக்கும் #tnfisherman

4SN Senthil Nathan
எல்லா அரட்டைகளிலும் #tnfisherman பட்டி போடவேண்டும். ஏதாவது ஒரு டுவிட்டை நாம் அனைவரும் RT செய்ய வேண்டும்

4SN Senthil Nathan
நிறைய பேர் தூங்க போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதை கண்டிப்பாய் நாம் நாளையும் தொடர வேண்டும். #tnfisherman

oliyudayon Prasanna Rajan
by INDIRAJITH
Indian national media always have a blind eye towards #tnfihserman. So as this time...

TBCD டிபிசிடி
by INDIRAJITH
rate at which we are tweeting is not helping. am going to RT all the related tweets. My Followers please bear with me for #TNfisherman

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்