Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

3 ஒலகப்பட விமர்சனம்

பதிவரா இருந்துட்டு ஒரு ஒலகப்படத்தைப் பத்தி விமர்சனம் எழுதலைன்னா ஊருக்குள்ள ஒருபய மதிக்க மாட்டிங்குறான்னு நம்ம அவிங்க ராசா சொன்னதுமே பலர் முழிச்சுக்கிட்டாங்க.. ஒருத்தர் ரெண்டு படத்த பத்தி எழுதிருக்காரு. ஆனா காட்டூன் படம்கறதால வேற யாருக்காகவோ பாத்தமாதிரி எழுதியிருப்பாரு.

இன்னொருத்தர் இசுப்பானிய படம் பார்த்து மீள் பதியுராறு.. இங்கிலீசு படத்தவிட வேறபடத்த பத்தி எழுதினாத்தானே அறிவிசீவிம்பாங்க...

அதெல்லாம் கண்டுக்காதீங்க.. அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா..

அதனாலே நானு பெரீய பதிவர்னு காட்ட இந்த மாசம் பாத்த 3 படத்த பத்தி எழுதப்போறேன். (அதாவது ஒலகப்படமெல்லாம் மாசத்துக்கு 3 ஆவது பாக்குறவன்னு அர்த்தம்பா.. புரிஞ்சுக்கங்க..)

குறிப்பு : நான் படத்தில கவனிச்ச நுணுக்கமான விசயங்களெல்லாம் பதிவுல இருக்கும். கவனமா படிங்க. (உங்க கவனக்குறைவால என் நுணுக்கத்துக்கு பங்கம் வரக்கூடாதுன்னு அதெல்லாம்  Highlight பண்ணி  இருக்கும்பா)

எனக்கு ஒரு திருடி சாரி த்ரீ டி படம்பாக்கணும்னு ரொம்ப நாளா ஆச. அதனாலே நம்ம அலுவலகத்துல வேலசெய்யிற ஒருத்தருக்கிட்ட ரொம்ப நாளா சொல்லிவச்சி ஒருநாள் கூட்டிட்டு போயிட்டேன். அந்த படம்தான் Pirates of the Caribbean: On Stranger Tides. மரண தண்டனைக்குள்ளாக போகும் கைதிய காப்பாத்தும் நம்ம ஹீரோ நிறைய சேர்கஸ் எல்லாம் செஞ்சும் கடைசில மாட்டிக்கிறாரு. அவர புடிச்சவங்க சிரச்சேதம் செய்யாம ஒரு வேலைய ஒப்படைக்கிறாங்க. இசுப்பானியருக்கு முந்தி Fountain of Youth ங்கிற இடத்த கண்டுபுடிக்கிறதுதான் வேல.

Johnny Depp தான் ஹோரோன்னாலும் நாம இதுவர பாத்த தமிழ் பட வரவெல்க்கணப்படி Sam Claflin தான் ஹீரோவேலயெல்லாம் செய்யுறாரு..

250 மில்லியன் போட்டவங்களுக்கு 960 மில்லியன குடுத்த படம். நீங்களும் பாத்தா அதுல கொஞ்சம் ஏறும்.

Bradley Cooper நடிச்ச படம் Limitless.. ஒரு மாத்திர சாப்பிட்டூங்கன்னா உங்க புத்தி சூப்பரா வேல செய்யும்கறதுதான் படம். ஒரு மாத்திரய டெஸ்டு பண்ணின நம்ம ஹீரோ அந்தமாத்திர இல்லாமா ஒன்னும் செய்ய ஏலாம இருக்காரு. மாத்திரயின்ட performance ல impress ஆன ஹீரோ ஒரு பக்கட் மாத்திரய திருடிக்கிறாரு. ஆனா இந்த மாத்திர சாப்பிட்டுட்டு குப்புறக்க படுக்காம மத்திர தந்த வீரியத்துல share market தொட்ங்கி பலான பலான விசயம் வரைக்கும் பின்னுறாரு..  அந்த மாத்திரய சப்ளை பண்றதுக்குத்தான் ஆக்கள் இல்ல.  அப்புறம் மீதிய பாத்து தெரிஞ்சுக்கங்க (தெரிஞ்சா சொல்லமாட்டேனா.. விளங்கின அவ்வளவுதான்)

    Paul Leonard-Morgan இன் பின்னணி இசையில் Leslie Dixon இன் திரைக்கதை சூப்பரோ சூப்பர்.

இதே படத்துல வந்த Bradley Cooper இன்னும் ரெண்டுபேரோட நடிச்ச படம் The Hangover Part II. நேத்து ராத்திரி 11.45 காட்சி. முந்தின படத்துல மாத்திர சாப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டிபோடப்போற அதே ஹீரோ ஒரு பியர் குடிச்சு பேங்கொக்ல செய்யும் சர்வ நாசம்தான் படம். பியர் குடிச்சதுல இருந்து செஞ்சதெல்லாம் தூங்கி எழும்பினவங்களுக்கு ஞாபகம் இல்ல. இதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணோட தம்பிய என்ன செஞ்சோம்னு கூட தெரியல. அவன் வெரல் மட்டும் இவங்க படுத்த அறையில் கெடக்கு.

படத்துல பெயின் அட்ராக்ஷன் தம்மடிக்கிற Capuchin கொரங்குதான். கடைசி சீன்ல காதுகடி மைக் டைசன் என்ட்ரி குடுக்கிறாரு.

மைக்டைசனுக்கு டாட்டு குத்தின S. Victor Whitmill இந்தப்படத்துக்கெதிரா வழக்குப்போட்டு பரபரப்ப கிளப்பினாரு. அவருக்கு என்ன குடுத்து கேச முடிச்சாங்கங்றதெல்லாம் வெளியில வரல..

நுணுக்கமான விசயம் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு எனக்கு மட்டும் கேக்கிறமாதிரி நீங்க பின்னூட்டத்துல சொல்லலாம். வெளியில சொல்லிடாதீங..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

Mohamed Faaique said...

aahaaa.. vali thawariduchchu pola irukkue