இலங்கையின் பல்வேறுபட்ட தலைப்புகளில் எழுதும் பதிவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பெயர் சொல்ல சொன்னால் உங்களுக்கு கட்டாயம் மருதமூரானாகிய புருஜோத்தமன் தங்கமயில் ஞாபகம் வருவார்.
மருதமூரானை பற்றி பேசுகையில் பெண்களைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது. பேஸ்புக்கில இவரது ஸ்டேட்டஸ்கள் எப்போதும் ஒரு செய்தியை சொல்லும்.
அண்மையில் அவர் பதிவுகளில் நிறைய பெண்களை பற்றி இருக்கிறது. பெண்களின் சுதந்திரம் அழகு பற்றி நிறைய பேசுகிறார். அது நாம் அவரை நெடுங்காலமாக பின்தொடர்வதால் அவரது போக்கில் வித்தியாசமாக தெரிகிறது.பெண்களைப்பற்றி பேசுவது தப்பா என்று நீங்கள் கேட்கக்கூடும். நிச்சயமாக இல்லைதான். வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு பெண்ணின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. பேஸ்புக்கில் நாம் சந்திக்கும் பெண்களில் சிலரது மேதமை எம்மை பிரம்மிக்க வைக்கிறது. தைரியம் பிடிக்கிறது. நம்மை அறியாமல அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அது எப்போது ஆரம்பித்தது என்று கேட்டால் சரியாக சொல்ல தெரிவதில்லை. நாம் உணர்வதை சரியாக குறிப்பிட்ட பெண்ணுக்கும் நாம் சொல்வதுமில்லை.
பேஸ்புக் காதல்கள் நிறைய இடம்பெறுகின்றன. அதனால்தான் நிறைய ஆண்கள் அங்கு அக்டிவ் ஆக இருக்கிறார்கள். என்னைக்கேட்டால் உங்களுக்கு ஒரு பெண்ணைப்பிடிக்க ஒரு பரிமாணம் போதுமாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. புத்திசாலி பெண்களுக்கு முப்பரிமாணமும் தேவைப்படுகிறது. ஆக பேஸ்புக் ஸ்டேட்டஸ்களால் நாம் பிரம்மித்த பெண்ணை நெருங்கமுடியாது என்பது என நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவர் முயற்சி தொடரட்டும்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அது வேறுகதை.
மருதமூரானின் பெண்கள் பற்றிய பதிவுகள் எப்போதும் அவரை கலாய்ப்பதற்கு எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதில் ஒரு சந்தோஷம். சிலநேரம் ரொம்ப சூடாக ஏதவது சொல்லிவிடுவார். என்னதான் இருந்தாலும் கருத்து சுதந்திரத்தில் அதிக நம்பிக்கை உடையவர். நான் நினைக்கிறேன் அதனால்தான் பிரண்ட் லிஸ்ட்டில் இன்னமும் என்னை வைத்திருக்கிறார் என்று.
அந்த நன்பண் இப்போது வடக்கு கிழக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு பல பெண்களின் அழகு பற்றிய தெளிவுகிடைக்கும். அவர் விரைவில் செட்டில் ஆக வேண்டும் என விரும்புகிறேன்.. பெஸ்ட் விசஸ் நண்பா..

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
1 comments:
ஒரு பெண்ணின் வரவுதான் வாழ்வை பூரனமாக்குகிறது. உணர்ந்து எழுதிய பதிவென தெரிகிறது.
ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால், (கவனமுங்கோ)
Post a Comment