- என்னுடைய உழைப்பை பயன்படுத்திதான் கம்பனி வளருது. ஆனா எல்லாத்தையும் மேலே உள்ளவங்க தான்தான் செய்றதா காட்டிக்கிட்டு எனது உழைப்பை சுரண்டுறாங்க
- மனைவி எங்கிறவ உங்கள தாங்கு தாங்குன்னு தாங்கணும்.
இந்த இரண்டு மனப்பான்மையும் இல்லாத ஆண்கள் மிகக்குறைவே. இவர்களுக்கு பிடிக்கிறமாதிரி ஒரு படம் எடுத்தா ஹிட் ஆகிடும்னு கணக்குபோட்டு சோனியா அகர்வாலுக்கும் ஒரு மேசேஜ் வைச்சு (அப்பிடி நான் நினைக்கிறேன்) செல்வராகவன் எடுத்திருக்கிற படம்தான் மயக்கம் என்ன
போட்டோகிராபியை நேசிக்கும் தனுஷின் உழைப்பு திருடப்பட்டுவதால் மனம் உடைந்து அரை லூஸாகி வீட்டிலேயே இருக்கிறார். மனைவி சம்பாத்தியத்தில் குடித்துவிட்டு அவளை அடிக்கிறார். நிர்வாண போஸ் கேட்கிறார். இவ்வளவு செஞ்சும் மற்றவர்களிடம் "அவன் என் புருஷன். அவன பத்தி தப்பா சொல்லாத" என்று கோபிக்கிறார் மனைவி.
இத்தனைக்கும் தனுஷ் திருடியது நண்பனின் Girlfriend ஐ!
அம்மா அப்பா இல்லாத தனுஷ் கையில் Blackberry,
அதற்கும்மேலாக ஒவ்வொருநாளும் மொடாக்குடி.
தங்குவதோ நண்பனின் வீட்டில்.
அங்கு நண்பனின் அப்பா எல்லாருக்கும் குடிக்க ஊத்தி ஊத்தி கொடுக்கிறார்.
போதாதற்கு வீட்டில் அங்கும் இங்கும் படுக்கும் பையன்களையும் பொண்ணுகளையும் தூக்கிக்கொண்டுவந்து ஒரே அறையில் படுக்கவைக்கிறார். இவரை teenage பசங்களின் dream அப்பான்னு செல்வராகன் அறிமுகம் செய்துவைக்கிறார்.இவ்வாறான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க நிறைய.
இடைவேளைக்கு முன் ரிச்சா ஒரே ஒரு தடவை சிரிக்கிறார். அதன்பின் ஒன்றோ இரண்டு தடவைகள் மட்டும். சோனியா அகர்வாலின் மூஞ்சி சிரிக்காமல் போனதற்கு காரணமும் செல்வராகவனாகத்தானிருக்கும். ந்ல்லவேளை சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது.
படத்தை குப்பை என்று முற்றாக ஒதுக்கித்தள்ளவும் முடியாது. மகாநீளமான காட்சிகளையும் சைக்கோத்தனமான காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment