Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Save TN Fisherman - பிழையான வழிநடத்தல்

தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள் என்று குற்றம்சுமத்தி சில நாட்களாக ஒரு டுவிட்டர் பிரசாரம் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தமிழ்நாட்டுமீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் , அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அது எந்த ஒரு நாட்டினனாக இருந்தாலும் ஒரு அப்பாவியின் உயிர் மதிக்கப்படவேண்டும் என்பதில் எந்த ஒரு மனிதனுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆயினும் இப்பிரச்சாரம் என்று இருந்தாலும் இப்பிரச்சாரத்தின் குறிக்கோள் வெறுமனே இலங்கை மீது குற்றஞ்சுமத்தி இலங்கை கடற்படையின் மீது பழி போடுவதே நோக்கமாக இருக்கிறதென்பது தெளிவு.

இது தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்தும் நோக்குடன் கடந்த பதிவை அவசரமாக இட்டிருந்தேன்.

மிகச்சிலரால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் ஏனைய தமிழ் பேசும் டுவிட்டர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வியக்கத்த்திற்கு ஆதரவு வழங்காத எவரும் "இனத்துரோகி" என்ற பயங்கரவாத பாசிசப்பாணியில் முத்திரை குத்தப்படும் அச்சம் காரணமாக ஆதரவு போக்கை அல்லது மேம்போக்கான ஆதரவை நழுவல்பாணியில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இவ்வியக்கத்த்தின் பரகசியமான நோக்கம் குறித்தும் பகிரங்கமாக பேச தயங்குகிறார்கள்.

யதார்த்தம்
முதலில் கொல்பவர் யார் என்று இதுவரை எந்தவொரு விசாரணை அறிக்கையும் இல்லை. அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?

மீனவர் கொலை: "ஆதாரம் வேண்டும்"



இலங்கையும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகள். பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் இந்திய கடற்படை இலங்கைக்கு உதவியது. அவ்வாறிருக்கையில் இந்தியாவை ஆத்திரப்படுத்தும் விதத்தில் இலங்கை நடக்குமா?

கொலைகள் நடக்கும் விதம் - நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் இலங்கை கடற்படை கயிற்றால் சுருக்கிட்டு கொன்றது என்ற குற்றச்சாட்டு

ஐநாவில் வல்லரசாக அங்கீகரிக்கப்படவேண்டும் என விரும்பும் இந்தியா, அதன் கடல் எல்லைக்குள் அல்லது அருகாமையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்குமா? இவற்றை கண்காணிப்பதற்கான நவீன தொழிநுட்பம் இந்தியாவிட இல்லாமல் இருக்குமா?

இலங்கை கடற்படையின் 60ஆம் ஆண்டு பூர்த்தி தொடர்பாக இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட விவரணத்தில் இல்ங்கையில் கரையோரங்களில் நிறுவப்பட்டுள்ள நவீன ராடர்களின் காட்சியில் நூற்றுக்கும் அதுகமான இந்திய மீனவப்படகுகள் இலங்கை கடல் எல்லையை அண்மித்துக்கொண்டிருப்பதை விளக்கியது. (யாரும் அந்த வீடியோவின் லிங்கை தந்துதவினால் சேர்த்துக்கொள்வேன்.)

இவற்றையெல்லாம் கருத்தில் எடுக்கும்போது இவ்வியக்கத்தின் உள்நோக்கம் தொடர்பான பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. எனவே சில அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு சக்திகளின் கபட நாடகத்திற்கு சாதாரண தமிழர்கள் பலியாகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழ் பதிவர்களே
வெறும் ஹிட்டுக்கள்தான் பதிவுலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் உண்மையை பட்டவர்த்தனமாய் பகிரங்கமாய் சொல்லவேண்டிய கடற்பாட்டிலிருந்து விலகுவதேன்?

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்களா?
(In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries )


கச்சதீவு இந்தியாவுக்கு அளிக்கப்படவேண்டும் என்கிறீர்களா? Katchatheevu should be returned to Indian sovereignty from Sri Lanka (சில வருடங்களில் அமுலுக்கு வரப்போகும் ஐநா கடல் எல்லை தொடர்பான தீர்மானங்களில் இன்னும் பல க்டல்மைல்களும் தீவுகளும் எமக்கு சொந்தமாகப்போகின்றது)

இது தொடர்பான சில தகவல்களை தேடித்தெரிந்து ஒரு தெளிவான கருத்துக்கு வரலாமே.

இந்திய மீனவ்ர்கள் இலங்கையின் வளத்தை சுரண்டுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள்

இலங்கைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்கள் கடல் வளங்களை அழித்துச் செல்லும் வகையிலான வலைகளையும், மீன்பிடி முறையையும் பயன்படுத்துவதனால் தமக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்துள்ளார்கள்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101122_indolankafish.shtml

இந்திய மீனவர்கள் இரட்டை மடி என்று அழைக்கப்படும் மீன் வலையை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100821_fishermantalks.shtml

இச்சுரண்டலுக்கு சுரண்டலை எதிர்ப்பதாக் கூறூ வினவு இணையத்தளம் கொண்டிருக்கும் காரணம் என்னவோ?

தொடர்புடைய ஏனைய லிங்குகள்
http://www.bbc.co.uk/tamil/search/?scope=tamil&q=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26359

http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=3434:2010-08-17-11-42-19&catid=42:archived-news&Itemid=159

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74918

http://article.wn.com/view/WNATc883bc8528d469d578bfff882a933ca7/


இலங்கை மீனவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் செய்திகள் விமர்சனங்களின் லிங்குகளை நண்பர்கள் தந்துதவலாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

10 comments:

கன்கொன் || Kangon said...

எக்சார்,
அந்த #tnfisherman என்பது யார் தொடங்கினார்கள், எதற்குத் தொடங்கினார்கள் என்பது பற்றிய சந்தேகங்கள் ஒருபுறமிருக்க, அந்த மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது உண்மைதானே?
அவர்கள் என்ன செய்திருந்தாலும் கொலை என்பது தீர்வல்ல.

மற்றும்படி அவர்கள் இலங்கைக்கடற்பரப்புக்குள் வந்து இலங்கை மீனவர்களின் வளங்களை, உபகரணங்களை அழித்துச் செல்வதை இங்கு யாரும் ஏற்கவில்லை.

நேரடியாக பதிவர்கள் ஹிட்ஸ் இற்காக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்காதீர்கள், எல்லோராலும் முகத்தை மூடிக்கொண்டு அனானியாகப் பதிவெழுத முடியாது.

ம.தி.சுதா said...

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

மதி.சுதா.

ம.தி.சுதா said...

இதன் உள்நோக்கம் பலருக்கு அரசியல் கருவியாகிவிட்டது...

(தாழ்மையான கருத்து ஒன்று நானும் இலங்கைப் பதிவர் தான் என்ற அடிப்படையில் சொல்கிறேன் நான் புதியவன் ஆனாலும் ஹிட் வாங்குவதற்கு எப்படியான பதிவு எழுதணுமுன்னு அறிந்து வைத்திருக்கிறேன்... சகோதரா)

EKSAAR said...

//அந்த #tnfisherman என்பது யார் தொடங்கினார்கள், எதற்குத் தொடங்கினார்கள் என்பது பற்றிய சந்தேகங்கள் ஒருபுறமிருக்க, அந்த மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது உண்மைதானே?//

ஆம். ஆயினும் நோக்கத்திற்குத்தானே ஆதரவு? எந்தவொரு அடிப்படையில் ஆதரவளித்தாலும் அந்த ஆதரவு பிழையான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படப்போவது குறித்து தெரிந்தும் அமைதிகாக்க முடியாதல்லவா?

//அவர்கள் என்ன செய்திருந்தாலும் கொலை என்பது தீர்வல்ல.//

அதைத்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.

//எல்லோராலும் முகத்தை மூடிக்கொண்டு அனானியாகப் பதிவெழுத முடியாது.//

கருத்துக்களுக்குத்தான் பதிவு என்று நம்புவதால் அனானியாக இருப்பதே நல்லது.

EKSAAR said...

ம.தி.சுதா said...

//ஹிட் வாங்குவதற்கு எப்படியான பதிவு எழுதணுமுன்னு அறிந்து வைத்திருக்கிறேன்.//

அது தெளிவாகவே நீங்கள் இணைத்திருக்கும் லிங்குக்கான பதிவில் தெரிகிறது.

என்.கே.அஷோக்பரன் said...

என்னுடைய ட்வீட்ஸில் உங்கள் கேள்விக்கான பதிலை நான் சொல்லியிருக்கிறேன். நேற்று ஒரு விவாதமும் இதுபற்றி இடம்பெற்றிருந்தது.

Anonymous said...

//ஹிட் வாங்குவதற்கு எப்படியான பதிவு எழுதணுமுன்னு அறிந்து வைத்திருக்கிறேன்.//

அது தெளிவாகவே நீங்கள் இணைத்திருக்கும் லிங்குக்கான பதிவில் தெரிகிறது.

எக்சார்,
இது அவர் மீதான் பொறாமையின் வெளிப்பாடா அல்லது வேறு ஏதாவது உள் குத்தா ? காரணம் எல்லோரும் இப்போது உணர்வு வந்தது போல் கத்தும் ஒரு விடயத்தை அவர் நவம்பர் மாதமே எழுதியுள்ளார். அப்படிப் பார்க்கையில் இப்போது உள்ளவர்கள் தான் தமது பற்றை வெளிக்காட்டுவதற்காகவும் இந்தியர்களிடம் ஹிட் வாங்குவதற்காக எழுதுவதும் போல உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியென வைத்துக் கொண்டால் அந்தப் பதிவில் உள்ள அவரது போலித் தனத்தை சுட்டிக்காட்டலாமல்லவா ?

Anonymous said...

/// மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது உண்மைதானே?
அவர்கள் என்ன செய்திருந்தாலும் கொலை என்பது தீர்வல்ல/////......

உங்களுக்கெல்லாம் எப்போ பிறந்தது இந்த ஞானம்? முல்லிவாய்க்காலில் பல்லாயிரம் பேர் செத்து மடிந்ததன் பின்னர் தானே? அதற்கு முன்னரெல்லாம் உங்கள் தலைவன் செய்யும் கொலைகளுக்கு கைதட்டுவதும் விசிலடிபதுமாகத்தானே இருந்தீர்கள்? எப்போதாவது அந்த தறுதலை தலைவன் செய்த கொலைகளை விமர்சிக்கும் தைரியம் உங்களில் யாருக்காவது வந்ததா???? ஒரு பதிவையாவது போட்டீர்களா??? இன்று மீனவர் கொலைக்கு நியாயம் கேட்கும் இந்திய அரசியல் பினாமிகள் இலங்கையில் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்படும்போது எதை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்?

நீச்சல்காரன் said...

மற்றவர்கள் சார்பாக பெட்டிஷன் எழுதியவன் என்கிற முறையில் எனது பதில் ,
இது எந்த சட்டப் புத்தகத்தையோ வரலாற்று ஆவணத்தை முன்வைத்தோ எழுதப்படவில்லை, சுடப்படும் மீனவர்களைக் கண்டு மன கொதிக்கும் ஒரு சாராசரி மனித மனநிலையில் எழுதப்பட்டது. மேலும் இது மனப் பிரதிப்பளிப்பைத்தான் காட்ட விளைகிறது கூரிய கருத்துக்களைத் தான் பிராதனமாக கொண்டிருக்கும் இதைவைத்து தர்கரீதியாக கேள்விகள் எழுப்பக்கூடாது என நினைக்கிறேன். கடல் வளத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற முறையில் பெட்டிஷன் வடிவமைக்கப்படவில்லை. //In Our Opinion// எங்கள் விருப்பம் இது என்றுதான் எழுதப்பட்டுள்ளது. மீறி அந்த கோரிக்கை உங்களுக்கு தவறான கருத்தை எடுத்துவைத்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

Anonymous said...

Eksaar get lost. fuck your self.