Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி?

நண்பர்களே.. சினிமா விமர்சன பதிவுகளை எழுதும் உங்களிடம் இருந்து அது தொடர்பாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மாணவனாக நான் என் சந்தேகங்களை உங்களுக்கு சமர்ப்பித்தால் உங்கள் பதில்கள் மூலம் நான் பல விடயங்களை தெரிந்துகொள்ளலாமல்லவா?

1. படத்தை தெரிவுசெய்தல் - எந்தப்படத்தை விமர்சனம் செய்தல் என்பதில் ஒரு அளவுகோல் இருக்கொம்போல் தெரிகிறது. அவ்வளவுகேலில் தாக்கம் செலுத்தும் காரணிகள் யாவை? (இலவச டிக்கட் தவிர)

2. தொழிநுட்ப விடயங்கள் - நிறைய பதிவுகளில் ஒளிப்பதிவு கலை என பல தொழிநுட்ப விடயங்கள் பற்றி பேசுவதை கவனித்திருக்கிறேன். இவற்றையெல்லாம் எங்கு கற்றுக்கொள்ளலாம்? / கற்றுக்கொள்கிறீர்கள்?

3. திரைக்கதை - திரைக்கதைய எவ்வளவு தூரம் சொல்லலாம்? சில பதிவுகளில் முழுத்திரைக்கதையையும் எழுதிவிட்டு கடைசியில் சில வரிகளை மாத்த்திர அழித்துவிடுவது போல் தோன்றுகிறது. (அவ்விடத்தில் மிகுதியை திரையில் காண்க என்று எழுதவேண்டும்!)அவ்வாறெனில் எத்தனை வரிகளை அழிக்கவேண்டும்? அல்லது இன்ன பிற உபாயங்கள் உண்டா?

4. நடிகர்களின் / துணை நடிகர்கள் - ஹீரோக்களின் பெயர்களை தெரிந்துகொள்வது ஓரளவு இலகுவானதொன்றென்றாலும், நடைகையின் பெயரை, துணை நடிகையின் பெயரை, அவர்களின் நடித்த பிற திரைப்படங்கள் (வேற்று மொழியானபோதிலும்) அதில் அவர்கள் காட்டிய திறமைகள் பற்றி எங்கு தெரிந்துகொள்வது?

5. மேதமை - நான் சினிமாத்துறையில் கரைகண்டவன் என்று சொல்லாமல் சொல்லும் மேதமையைக்காட்டும் விடயங்களை எவ்வாறு உள்நுழைப்பது? அப்படியானால் "நீர் ஏன் இயக்குனரோ ஒளிப்பதிவாளராகவோ ஆகவில்லை? என்ற கேளிவி எழும்பாமல் எவ்வாறு தவிர்ந்துகொள்வது?

6 பாடல்கள் - உலகத்தரம், அந்த இசை இந்த இசை என்றெல்லாம் பேசுகிறார்கள். இதை எப்படி தெரிந்துகொள்வது?

7. சொல்லாடல் - சில நுணுக்கமான சொற்களை பதில் அங்கும் இங்கும் தெளிக்கவேண்டும். சில இசம்கள் பற்றியும் பேசவேண்டும். முதலில் இசம்களை எங்கு கற்றுக்கொள்ளலாம்? அவ்விசம்களின் பண்புகள் என்ன?

8. படம் பற்றிய வரலாறு - தொழில் குடும்ப வாழ்கை என்பவற்றைய்ம் தாண்டி படம் பற்றிய வரலாறு (பூஜை போட்ட நாள், அது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்ன பல) பற்றி தெரிந்துகொள்ள எப்படி நேரம் கிடைக்கச்செய்தல்? அவ்வாறான நிகழ்வுகளை எவ்வாறு குறிப்பெடுத்துக்கோள்ளல்? MS Access இல் ஏதாவது புறோகிறாம் செய்யவேண்டுமா?

9. ஆலோசனை வழங்கல் - நடிகர்களுக்கு தொழிநுட்பவியலாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்தெந்தவிடயங்களில் எவ்வாறு ஆலோசனை வழங்கவேண்டும்?

10. எல்லாருக்கும் பிடித்த ஒன்று தனக்கு மட்டும் பிடிக்கவில்லை என்று சொல்லுதல்

11. நடிகையைப்பற்றி முப்பரிமாண வர்ணனைகளும், அதன்பின் அதில் எதுவும் தன்னைக்கவரவில்லை, அல்லது அதில் அக்கறை இல்லை எனக்காட்டுதல்

12. இதே கதையம்சத்தை கொண்ட ஒரு சரவதேச திரைப்படத்தை எப்படி தேடிப்பிடிப்பது? அப்படி தேடிப்பிடித்தாலும் வேற்றுமொழியில் இருந்த அத்திரைப்படம் தனக்கு எல்லாம் விழங்கியது போல் எப்படி காட்டுவது?

13. பஞ்ச் - படம் பற்றி விமர்சன முடிவில் ஒற்றை வரியில் ஒரு பஞ்ச் சொல்லுதல்

இந்த கேள்விகளுக்கு எனது நீண்ட நாள் தேடுதலே காரணம். மாறாக இன்று யாரேனும் எழுதிய திரை விமர்சனத்தை இதற்கு முடிச்சுப்போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பதில்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கும்

எக்சார்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

maruthamooran said...

உங்களின் சந்தேகத்திலிருக்கின்ற எள்ளல் ரசிக்க வைக்கிறது:-)

Anonymous said...

யாரோ ஒருவரை கிண்டல் பண்ணுகிறீர்கல் என்றே எண்ண தோன்றுகிறது.