Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நீங்களுமா

எனக்கு ஒரு நண்பர் இருக்காருங்க.. எனக்கும் மத்தவங்களோட இருக்கிற நம்பிக்கையை காட்டிலும் இவர் மேல் ஒரு படி நம்பிக்கை.

என்னை பொறுத்தவரையில் நண்பர்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஆக இருப்பதில் விருப்பம் இல்லை. வேற்றுமைகளுடன் ஒற்றுமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நம்புபவன் நான்.



ஓரிருவருக்கு மாத்திரம் தெரிஞ்ச சில விசயங்களில ஓரிரு விஷயம் இந்த நண்பருக்கும் தெரியும். என்னதான் பிரச்சினை வந்தாலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இந்த ரகசியமெல்லாம் பரகசியம் ஆக்கமாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினேன்.

இருந்தாலும் ஏறத்தாள 9 மாதங்களுக்கு முன் பலருக்கு இந்த ரகசியத்தை சொல்லியிருந்தார். ஓரிருவர்தானே என்று இருந்துவிட்டேன். (அவரைத்தவிர வேறு யாரும் சொல்லியிருக்க முடியாது)

ஆனா இன்று இந்த ரகசியத்தெல்லாம் அவர் காத்துல விட்டுடாரு. என் நம்பிக்கையையும் காத்துலயும் சொல்லிட்டாரு..

எனக்கு அவர்கிட்ட கேக்க இருக்கிறது ஒரு சொல்தான்

நீங்களுமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வெற்றியின் விடியலும் திருமண ஆசையை சொன்ன பெண்களும்

இலங்கை பதிவுலகின் மிக முக்கிய புள்ளியான அறிவிப்பாளர் லோஷனின் விடியல் நிகழ்ச்சி வாரநாட்களில் காலை 6 மணி முதல் ஒலிபரப்பாகிறது. இன்றைக்கு தலைப்பு "எந்த விசயத்துக்காக பொறுமையின் எல்லை வரை காத்திருப்பீங்க" என்று இருந்தது..

ஆனால் பல நேயர்கள் சொன்ன பல விடயங்கள் "எதுக்காக இதுவரை காத்திருக்கீங்க" என்ற மாதிரி போனது.

இதுதான் சந்தர்ப்பம் என்று பெண்கள் நினைத்தார்களோ என்னவோ, திருமணத்துக்காக என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். மகள் இப்படி இலங்கைக்கு கேட்க ரேடியோவிலயும் (உலகுக்கு கேட்க் - இணையத்திலும் ஒலிபரப்பாவதால்) சொல்ல தொடங்கிவிட்டதால் இனி தந்தைமார் உடனடியாக இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் அடுத்த நகர்வு பயங்கரமாக இருக்கும் போல இருக்கு..

ஒரு சிலர் தான் விரும்புவோருக்கு ஒரு Indication / warning கொடுத்தாங்களோ தெரியாது. இதுபோதாதென்று லோஷனும் Romantic song எல்லாம் போட்டு உசுப்பேத்தி விட்டுடாரு. (அழகான ஆண்மகனை தேடுவோர் XXXXXXXXXXXXXXXXX)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Akon எதிர்ப்பின் சாதனை

பௌத்த மதத்தை நிந்தித்தார் என்ற காரணத்தால் Akon இற்கு இலங்கைக்கு வர visa மறுக்கப்பட்டுள்ளது. Akon புத்தரின் சிலையை அவ்வாறான பாடலில் பயன்படுத்தியிருக்க கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் இந்தப்பிரச்சினை சாதித்தது என்ன என்ற கேள்வியிருக்கிறது.

Akon என்பவர் யார் என்பது இலங்கையில் 10% ஆன மக்களுக்கேனும் தெரிந்திருக்குமா என்று சந்தேகம். தெரிந்தவர்களுக்கும் அவரை கடந்த IPL இன் கடைசிநாள் நிகழ்வுகளில் கலந்து அவர் பாடியதுதான் அடையாளமாக தெரிந்திருக்கும்.

Akon இன் இசை நிகழ்ச்சி இலங்கையர்களை குறிவைத்து ஒழுங்கு செய்யப்பட்டதும் அல்ல. இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை அழைத்துவர, இலங்கையை பிரபலபடுத்த உலகறிந்த நட்சத்திரமான அவர் கருவியாக உபயோகிக்கப்பட இருந்தார்.

திடீரென ஒருநாள் சக்தி ஊடாக நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது சண்டித்தனத்திற்கு பெயர்போன அமைச்சரின் குண்டர்கள் தாக்குதல் என செய்திவந்தது. அந்த சண்டியருக்கும் இந்த நிறுவனத்திற்கும் எப்போதும் ஆகாது என்பதால் இது இடம்பெற்றிருக்கும் என்றே நினைத்தேன்.

அடுத்த நாள் பௌத்த மதத்தை இழிவு படுத்தினார் என்று செய்தி வந்தது. இது தொடர்பாக இலங்கையில் எத்தனை பௌத்தர்கள் அறிந்திருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களிடையே இது பேசுபொருளாக இருக்கவேயில்லை. பிரச்சினை பெரிதாகிவிட்டதால் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டார். (இலங்கையில் இதுதான் மிகப்பிரச்சினை என்று அன்றுதான் எனக்கு தெரிந்தது). இதை தொடர்ந்து visa மறுக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன? இதுவரை இலங்கையில் அறியப்பட்டிராத பாடலை நிறையப்பேர் இணையத்தில் தேடி downlaodசெய்தார்கள். இன்னும் சிலர் அதன் காட்சிகளை banner செய்து பொதுமக்களுக்கு அறிவூட்டினார்கள்.

பின்னணியில் புத்தர் சிலை இருப்பதை கண்டிக்க, உள்ள மிஞ்சி போனால் 3 செக்கன் வரும் காட்சியை, அரை நிர்வாண பெண்கள் உள்ளடங்கலாக பெரிய banner ஆக print செய்து அதற்கு முன் உயிருள்ள, bus இல் கூட பெண்களுக்கு அருகில் இருக்காத பிக்குமார் இருந்து உரையாற்றினார்கள். எது பின்னணியில் இடம்பெற்றது தவறு என்றார்களோ அதை முன்னிலைப்படுத்தினார்கள். அதை பிக்கு ஒருவர் திரும்பி பார்த்து கொண்டிருப்பதும் ஊடகத்தின் கண்களுக்கு தப்பவில்லை.



இதை பார்த்தால் புத்தர் சிலை என்ன சொல்லியிருக்கும்?

இந்த பாடலையெல்லாம் பிக்குமார் பார்க்கிறார்களா என்றெல்லாம் கேட்ககூடாது. பார்க்காவிட்டால் எப்படி தெரியும் என்றும் கேட்ககூடாது. பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

 Akon க்கு Visa மறுத்த் இலங்கை 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Akon க்கு Visa மறுத்த் இலங்கை

இலங்கையில் நடைபெற இருந்த பிரபல பாடகர் Akon கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி இரத்துச்செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பிறகு Akon க்கு visa மறுக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி இலங்கையின் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அமைச்சின் உப நிறுவனமொன்றினூடக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டுக்கள் அதிக விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை முக்கிய இலக்காக கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டதாகும். இந்நிகழ்சியை காண மாலைதீவு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படிருந்தது.

Facebook இல் Akon பௌத்த மதத்தை அவமதித்தார் என்று செய்திகள் வலம் வரத்தொடங்கியிருந்தன. இது பற்றி இதற்கு முன் எவ்வித எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டதாக (முக்கியமாக சாதாரண பௌத்த குடிமக்கள்) றியக்கிடைக்கவில்லை.ஆனால் இதை Facebook இன் பலம் என நினைத்து விடாதீர்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் Facebookஇல் பொன்சேகாவுக்கே அதிக fanகள் இருந்தனர்.

இன்னும் இந்நிகழ்ச்சி தடைப்பட்டமை இலங்கையில் பௌத்த மதத்தின் ஆதிக்கத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வாக சிலர் கருதக்கூடும். ஆனால் சில வாரங்களுக்கு முன்தான் தலதா மாளிகை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் முகமாக கூட்டப்படவிருந்த முக்கிய 3 பௌத்த பீடங்களின் கூட்டம் அரசின் நெருக்குதல் காரணமாக காலவரையறை இன்றி பிற்போடப்படிருந்தது என்பதை கவனத்தில் கொள்க.

இந்நிகழ்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அரசுக்கு ஆதரவு வழங்கும் கடும்போக்காளரான அத்துரேலியே ரத்ன தேரர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.














































இதன் பின்னணியில் வேறு சில நோக்கங்கள் இருக்கக்கூடும். அது பைசர் முஸ்தபாவுக்காவது தெரிந்திருக்குமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சனத் ஜயசூரியவிற்கு ஒரு கடிதம்


எனது அன்பிற்குரிய சனத்,

உங்கள் சொந்த ஊரான மாத்தறையிலிருந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்வதை கண்டபின் உங்களுக்கு கட்டாயம் மடல் வரையவேண்டுமென நினைத்திருந்தேன். உங்கள் தீர்மானம் தொடர்பாக நான் வியப்படையவில்லை என்பதை ஏற்றுக்கொண்டபோதும், நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும்.

உங்களுடன் ஏமாற்றத்தை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் நாட்டுக்காக நீங்கள் விளையாடிய கிரிக்கட் போட்டிகளில் துடுப்பாலும் பந்தாலும் சில காலமாக ஏமாற்றமளித்து வந்துள்ளீர்கள். ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் தொடர்ந்து விளையாடியே வந்துள்ளீர்கள். அதிலும் முதிர்ந்த வயதான் 40 இலும் விளையாடியதும் மிகப்பெரிய ஏமாற்றமே.

கொஞ்ச நாட்களாக அது தெரிவாளர்களின் பிழை என நினைத்திருந்தபோதும், அவர்கள் உங்களை விடுவதற்கு தைரியத்தை வரவழைத்தபோது நீங்கள் மஹிந்த மாமாவிடம் ஓடியதையும், அவர் எவ்வாறு உங்கள் இடத்தை மீள் உறுதிப்படுத்த உத்தரவிட்டார் என்பதும் ஞாபக்ம் இருக்கிறது. பெந்தர கங்கையின் மற்றைய கரையில் இருந்து வந்திருப்பது சில அனுகூலங்களை கொண்டிருகிறது என்றே நினைக்கிறேன்.

சிந்தித்து பார்த்தால், 1996 இன் உலக கிண்ண வெற்றி அணி அரசியல் அணியாகத்தான் தெரிகிறது இல்லையா சனத்? ஏன் என்றால் இந்த தேர்தலின் பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா என்பது சந்தேகமாக இருந்தாலும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக Captain Cool இருந்திருக்கிறார். நீங்களும் பெரும்பாலும் மாத்தறை MP ஆகுவீர்கள்.

இன்னும் எனது ஞாபகம் சரியாக இருந்தால், பச்சை அணியினரில் பலருக்கு வந்த பொதுவான நோய் வருமுன் ப்ரமோடய; கம்புறுபிட்டியவின் பச்சை அணியின் அமைப்பாளராக இருந்தார். அவரும் பக்கங்களை மாற்றிக்கொண்டு தான் மஹிந்த மாமாவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இன்னும்,இந்நாட்களில் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஹசானும் இருக்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 1996 இன் உலககிண்ண அணியில் இனியும் அடக்கவிருப்பது முரளிதரனை (முத்தையா, வினாயகமூர்த்தி அல்ல) வடக்கின் முதலமைச்சர் ஆக்குவதுதான்.

ஆனால் சனத் நான் உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தது, இந்த கிரிக்கட் வீரர்களும், மற்றைய SJயும் (சுசந்திக்கா ஜயசிங்ஹ) மாலனி, கீதா மற்றும் பிற கலைஞர்களும் தேர்தலுக்காக பிரேரிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத்தான்.

மில்லிய்ன் கணக்கான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி ‘palapurudu, sanvedi naayakaya’ வைத்தான் நாங்கள் தெரிவுசெய்யவேண்டும் என்று சொன்னீர்கள். இப்படித்தான் அந்த ‘palapurudu, sanvedi naayakaya’ உங்களுக்கு ஊதியமளிக்கிறார் என்று நினைக்கிறேன்.
அதனால்தான் எமது நாட்டின் பாராளுமன்றத்தை கிரிக்கட் வீரர்கள் , தடகள வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் கொண்டு நிரப்புவது நல்ல தீர்வாக என்று அங்கலாய்க்கிறேன்.

கிரிமினல்களையும் போதைப்பொருள் கடத்தல் காரர்களையும் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புவதை விட இது சிறந்தது என்று வாத்தித்தால் அதில் கொஞ்சம் உண்மை உண்டு என்றே சொல்லவேண்டும். ஆனாலும் பிரபலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு பொருத்தமானவர்கள்தானா என்று இன்னமும் சந்தேகிக்கிறேன்.

சிறந்த கிரிக்கட் வீரராக இருப்பது, உங்களை சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கும் என்ற வாதத்தை வைப்பீர்கள் என்றால் ஏன் அதன் மறுபக்கத்தை பார்க்ககூடாது? உதாரணத்துக்கு புத்திகூர்மை மிக்க சட்டநிபுணர்களான மறைந்த லலித் அத்துலத் முதலியையோ அல்லது மறைந்த லக்ஸ்மன் கதிர்காமரையோ எடுத்து பாருங்கள். (கட்ந்த பாராளுமன்றத்தில் எந்தவொருவரையும் ஞாபகம் வரவில்லை. அதனால்தான் மறைந்த கனவான்களை ஞாபக படுத்தினேன்)

அதே வாதத்தை பாவித்தால், லலித் அத்துலது முதலியை அல்லது கதிர்காமரை தேசிய கிரிக்கட் அணியில் வெறுமனே அவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் என்ற காரணத்திற்காக சேர்க்கமுடியும். இது உங்களுக்கு அசட்டுத்தனமாக தெரிந்தால், அதேபோல் உங்களைப்போன்ற சிறந்த கிரிக்கட் வீரர்கள் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது எனக்கு அசட்டுத்தனமாகவே தெரியும்.

இன்னும் சமகால உதாரணங்களான பாகிஸ்தானின் இம்ரான் கானும், எமது கெப்டன் கூலும் அரசியலில் பெரிதாக சாதிக்கவில்லை. அதேபோல் எமது சிறந்த நடிகர்களான காமினியும் விஜயவும். அதனால் உண்மையாக நான் உங்கள் நற்பெயர் பற்றிய்ம், அரசியல்வாதியாக எதிர்காலம் பற்றியும் பயப்படுகிறேன் சனத்.

நாம் உங்களை 1996 இல் உலககிண்ணத்தை வென்றுதந்த சிறந்த கிரிக்கட் வீரராகவே ஞாபகிக்கவே விரும்பினோம். ஆனால் அரசியலை தேர்வு செய்ததன் மூலம், உங்களை அரசியல் வாதியாக அன்றி வேறுவழிகளில் நினைத்து பார்க்க முடியாது செய்துவிட்டீர்கள். உங்களுக்கு என்னால் அதிஷடம் கிடைக்கட்டும் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. ஏன் என்றால் கிரிக்கட் அரங்கிலும் பார்க்க இங்குதான் உங்களுக்கு அது அதிகப்படியாக தேவைப்படுகின்றது.

உண்மையுடன்
புஞ்சி புதா



குறிப்பு: இந்த விளையாட்டில் replay அல்லது மூன்றாம் நடுவர் இல்லை என்பதை மறக்கவேண்டாம் சனத். உங்களுக்கு அவுட் கொடுத்தால் நீங்கள் வெளியாகவே வேண்டும். இன்னும் நீங்கள் ஒரு துறையின் உச்சத்திலிருந்து ஓய்வுபெறும்போது அரசியலில் ஈடுபடுவது நல்ல முடுவுதான் என்று கருதினால், அதைப்பற்றி கலந்தாலோசிக்க ஒரு கனவான் இருக்கிறார். அவரது சட்டத்தரணிகளினூடாக கடற்பட தலைமையலுவலகத்தில் இருக்கும் அவரை தொடர்புகொள்ளலாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

IPL 2010 அலசல் - பகுதி 2

IPL 2010 அலசல் - cheerleaders - பகுதி 1க்கு ஆதரவு கொடுத்த IPLஇன் உண்மை ரசிகர்களுக்கு நன்றி.

உங்கள் ஆதரவை கண்டோ என்னவோ தெரியாது, இன்று காலையில் IPLஇன் mobile இணையத்தளத்தை பார்த்தபோது cheerleaders video க்களை நம்மைப்போன்ற உண்மை ரசிகர்களுக்காக download பண்ணக்கூடிய முறையில் தந்திருக்கிறார்கள். இருந்தாலும் தெளிவு போதாது. கொஞ்சம் zoom பண்ணவேண்டாமா?

சரி மிகுதி 4 அணிகளை பார்ப்போம்.


Deccan Chargers


யாருய்யா இந்த dress design பண்ணினவன்? அவன் கைக்கு ஒரு மோதிரம் போடணும். சிவப்புக்கு மட்டுமல்லாது கறுப்புக்கும் சம உரிமை தந்த அணி இது. (எங்களை மாதிரி நல்ல ரசிகர்கள் திறமையைத்தான் பார்ப்போம். நிற பாகுபாடு அறவே இல்லை. யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..) கட்டாயம் இறுதிபோட்டிக்கு வரணும்.


Royal Challengerscheerleaders என்னா
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
அவங்க ஆடினா..
நமக்கும் ஆடணும்போல இருக்கணும்..
அப்படிபட்டவங்கள கண்டது இங்கதான்..
உங்க அணி இறுதி வரை வெல்லணும்..



Mumbai Indians
cheerleaders எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். இவ்வளவு dress பண்ணிக்கிட்டு ஆடினவங்கள தமிழ் சினிமாவுலயாவது நான் பொறந்தா நாளையில் இருந்து காணல. அதுக்குள்ள Bollywood இன் தலைநகரம் Mumbai அணிக்கு இந்தமாதிரி dress பண்ணி கடுப்பை கிளப்புறாங்க.. இந்த அணி வீரர்கள் sixer அடிக்கத்தான் வேணுமா?
 Kings XI Punjab

இவங்க team owner கூட ஒரு cheerleader மாதிரி இருப்பது நமக்கெல்லாம்  bonus. அழகான தேர்வுகள். கொஞ்சம் ஒல்லிபிச்சான் மாதிரி இருப்பதுதான் லேசான கவலை. Finalக்கு வந்தா குத்தம் சொல்லமாட்டோம்  

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

IPL 2010 அலசல் - cheerleaders - பகுதி 1

மீண்டும் IPL திருவிழா ஆரம்பிக்கிறது.
நேற்று முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை இனி ஒவ்வொரு நாளும் IPL தான் ஒவ்வொருவர் பேச்சாகவும்,பலரின் மூச்சாகவும் இருக்கப் போகிறது. இதற்கு ஒருவகையில் cheerleaders உம் காரணம்தான். பதிவுலகில் எல்லோரும் அணிகளை பற்றி அலசினால் நாங்கள் எதை பற்றி அலசுவது? அதுதான் cheerleadersஐ எடுதாச்சு.. அலச..

முன்னைய தொடரைப்போல் இதில் பெரிதாக பரபரப்பைக் காணோம். South African ரசிகர்களும் cheerleadersகளுக்கு சற்றும் சளைக்காமல் இருந்தது நிச்சயமாக இத்தொடரில் missing.

அடுத்த தடவை west indies இலாவது நடத்துங்கப்பா..



Rajasthan Royals



இவர்கள் அணியில் எல்லாரும் நன்றாக ஆடினாலும், match ஆகாத dress ஒரு பெரிய minus point . அரை இறுதி வரை வந்தால் போதும்



Delhi Daredevils

என்னதான் ஆடினாலும், கவர்ச்சியற்ற முகம் ஒரு பெரும் பிரச்சினை. அரை இறுதிக்கான வாய்ப்பு சிரமமாகட்டும்



Chennai Super Kings


தரமான ஆட்டக்காரர்கள். ஆனால் முழுக்கால் சட்டை தான் பெரும் பாடு படுத்துகிறது. முதல் சுற்றோடு போயிடுங்க please..



Kolkata Knight Riders

இவங்களுக்கு dress எடுத்து கொடுத்தவன புடிச்சு நாலு சாத்து சாத்தணும். என்ன மாதிரி dressஇது? பராவால.. அரையிறுதி வரை try பண்ணுங்க..ஏனைய நான்கு அணிகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நான் யார்?

உங்களில் பலர் நான் யார் என அறிய ஆவலுடன் இருப்பது தெரிகிறது. ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல..

இந்த வாரம் நான் ரசித்த சில விடயங்களை தமிழ் மொழியில் தர முயற்சி செய்து கொண்டிருந்ததால், பதிவுகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுப்போனது. ஏதாவது எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தாலும் எல்நினோ காலநிலை காரணமாக (எப்பூடி?) எழுதும் மனநிலை வரவில்லை.

சற்றுமுன் எனது emailஐ பார்த்தபோது நான் யார் என்ற தலைப்பில் ஒரு mail வந்திருந்தது. Want to be my valentine tonight? என்ற வகையறா என நினைத்தாலும் வந்திருப்பது பிரபல அரசியல்வாதியிடமிருந்து.

திறந்து பார்த்தால், தனக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் அவர் அதற்கு தந்திருக்கும் காரணங்கள் மொத்தம் 6 தான்.

ராசா, நீங்க எங்களுக்கு சொன்ன 6 காரணங்களைவிட உங்களுக்கு வாக்களிக்காமலிருக்க என்னிடம் (சகல் தமிழ் பேசும் மக்களிடமும்) 60 காரணங்கள் இருக்குதப்பா..

வெளிநாட்டுகாரன் தந்த காசுல சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிய வீடுகளில் ஒரு தொகுதி வீடுகளுக்கு மட்டும் நீதிமன்றத்தில் தடை வாங்கி இன பாகுபாட்டை நிறுத்தியவன் நீயல்லவா? மறக்கமுடியுமா?

சுவரெங்கும் poster ஒட்டாமல் இருப்பதற்காக உங்களை பாராட்டத்தான் வேண்டும் என்றாலும் அது மட்டும் போதுமானதல்ல. இன்னும் ஒருபோதும் poster ஒட்டாத ஒருவரும் உங்களின் கட்சியிலேயே இருப்பதால், உங்கள் பராக்கிரமங்கள் என்னை impress பண்ண போதாது. உங்களுடைய கட்சியில் உங்களைவிட சிறந்த தெரிவுகள் 3 எனக்கு நிச்சயமாக இருக்கின்றன.

நான் யார் என்பது உங்கள் முகத்தை பார்த்து ஒரு நாளில் தீர்மானிக்கும் விஷயமல்ல. காலாகாலம் நீங்கள் செய்த விடயங்களை வைத்து நாங்கள் தீர்மானிக்கும் விஷயம் அது.இப்போதுதான் அது உங்களுக்கு விளங்கியிருந்தால் Its too late என்றுதான் என்னால் சொல்லமுடியும்.

Politics, Parliamentary Elections 2010, general election 2010, email promotions

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சனத் ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டால்..


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நான் அவன் இல்லை - இலங்கையில்


நான் அவன் இல்லை படத்தைபோல் அச்சு அசலாக இல்லாவிட்டாலும், ஏறத்தாள அந்த பாணியில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிவந்த ஒரு நபர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செல்வந்த வர்த்தகராக தன்னை பெண்களிடம் இனம்காட்டியிருக்கும் இவர் மணமகன் தேவை விளம்பரத்திலிருந்தே மஹரகம், மாத்தறை, சிலாபம் ஆகிய பிரதேசத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இவர்களில் விவாகரத்து பெற்றவர்களும் அடங்குகின்றனர்.

திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை காட்டும் இவர், பெண்கள் இவர்மீது அதிக நம்பிக்கை கொள்வதற்காக பெருந்தொகையான பணத்தை திருமண மண்டபத்திற்கு முற்பணமாக செலுத்தி வந்திருக்கிறார்.

இதன் பின், புதுமண தம்பதியினரின் பாவனைக்கான வாகனத்தை இறக்குமதிசெய்ய அவசரமாக தேவைப்படுவதாக கூறி பெருந்தொகைப்பணத்தை இவர் பெண்களிடமிருந்து பெற்றுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டதும் ஹோட்டல் அறையில் குறிப்பிட்ட பெண்ணை சந்திக்கும் இவர், அதை mobile phone camera ஊடாக முழுவதுமாக பதிவுசெய்திருக்கிறார். பின்னர் இந்த videoஐ காட்டி திருமணத்தை நிறுத்துமாறும் அவ்வாறு செய்யாவிடின் இந்த videoஐ பகிரங்கப்படுத்தப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதற்கு பணியாத பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார்.

கைதுசெய்யப்படும்போது 15 லட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு ஆடம்பர வாகனங்களும் இவரிடம் இருந்ததாகவும், இவர் ஆகக்குறைந்தது 20 பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாராளுமன்றத்தேர்தல் 2010 - 3

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரேயே ஆரம்பமான கட்சித்தாவல்


கம்பஹா மாவட்ட UNF பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் டில்ருக் ஷி, நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து UPFA க்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இவர் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும், மங்கள சமரவீரவுடன் செயற்பட்டவருமான சிறீபதி சூரிய ஆரச்சியின் மனைவியாவார்.

தான் போட்டியிடும் கட்சியின் கொள்கைகள் தெளிவற்றி இருப்பதன் காரணமாக UPFA க்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததாக கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சிறீபதி சூரிய ஆரச்சி அவர்கள், 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்வதற்காக புலிகளுக்கும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவுக்கும் உடன்படிக்கை இருந்ததாக குற்றஞ்சாட்டியவராவார். இவர் 2007 ஆம் ஆண்டு வீதி விபத்தில் மரணமடைந்தார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நித்தியானந்த சுவாமிகள் - பேசியது போதும்

நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறைக்காட்சிகள் சன் TVயில் வெளியானதாக நேற்று ஏறத்தாள 9 மணியளவில் twitter ஊடாக செய்தி கிடைத்தது. பெயரின்மூலம் ஞாபகப்படுத்திக்கொள்ளமுடியாவிடினும், கதவை திற காற்று வரும் என்றபோது ஞாபகப்படுத்திக்கொள்ள கஷ்டம் இருக்கவில்லை. குமுதத்தில் வாராவாரம் Installment ஆக குறைந்தது அரைப்பக்கத்துக்கு சிரித்துக்கொண்டிருந்தவரல்லவா? நானும் "அவருக்கும் காற்று தேவைப்படும்தானே" என்று tweet பண்ணியிருந்தேன். ஏறத்தாள அரை மணி நேரத்தில் அதுதான் தமிழ் பேசும் twitterகளின் பேசுபொருளாகவும் ஆகிப்போனது.

அதிகாலையில் மீண்டும் இணையத்தில் இணைந்தபோது, You tube இல் அந்த video
இணைக்கப்பட்டுள்ளதாக link கிடைத்தது. ஒரு நாளை ஆரம்பிக்க எவ்வளவு அழகான வழி. தமிழ் சினிமாவின் முதலிரவுக்காட்சியை விட அதிகமாகவே cover
பண்ணியிருக்கிறார்கள்.

இவ்வாறான காட்சிகள் Adults Only என்ற அறிவித்தல் இன்றி செய்திகள் என்ற போர்வையில் நேரம் காலம் இல்லாமல் தொலைக்காட்சியை நிரப்பும்போது, இதை பார்க்கும் சில குழந்தைகளாவது "அம்மா, அங்க என்ன நடக்குது? ஏன் அப்படி" என்று கேட்டிருக்கமாட்டார்களா?

இன்று பகல் நேரத்தை தாண்டிய பின்னும் twitter இன் பக்கம் முழுவதும் இவரைப்பற்றிய tweetகளும் Retweetகளும் இறைந்துகிடக்கின்றன. இதைப்பற்றி பேசுவதினூடாக, கேட்பதினூடாக, பகிர்வதினூடாக பலர் "அவர் பெண்ணுடன் இருப்பதன்மூலமாக அடைந்த சுகத்தை" அனுபவிக்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது.

ஒரு கதை ஞாபகம் வந்தது.

இயேசு நாதரிடம் சிலர் ஒரு பெண்ணை "விபச்சாரி" என்றும் தண்டனை கொடுக்குமாறும் கூட்டிவந்தார்கள். இயேசு நாதர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவளும் ஏற்றுக்கொண்டாள். அதன்பின் இயேசுநாதர் ஜனங்களை பார்த்து "உங்களில் யார் இவ்வாறான பாவத்தை செய்யவில்லையோ. அவர் இவள் மீது கல்லெறியட்டும் என்றார்". அங்கு கல்லெறிய யாரும் இருக்கவில்லை.


இவ்வாறான விடயங்கள் தமிழ்பேசும் நமக்கு புதிதல்லவே.
தவ வலிமை படைத்த முனிவர்களையும் அவர்களை இசசையுறச்செய்த பெண்களையும் பாத்திரமாக கொண்ட புராணங்களை இலக்கியத்தின் பேரில் நாம் தலை முறை தலை முறையாக பரிமாறிக்கொண்டே இருந்திருக்கிறோம். இந்த நித்தியானந்த சுவாமிகள் ஒன்றும் முனிவர் இல்லையே. (நித்தியானந்த சுவாமிகளை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. )

மனிதனை கடவுள் என போற்றும் சில மூடர்களுகு புத்தி சொல்வதற்காக நாம் அதைவிட கீழ்த்தரமான வேலையை செய்வதா? பன்றியை பிடித்து குளிக்க வைக்கப்போனால், நாம் பன்றியை விட அழுக்காவது உறுதி.

இனியும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கவேண்டாம். "மனிதனை மகானாக்காதீர்கள். சாய்பாபா முதல் நித்தியானந்தா வரை பார்த்தீர்கள்தானே" என்று சொன்னால் போதும். திருந்த வாய்ப்புள்ளவர்களுக்கு விளங்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

My Name Is Khan


மை நேம் இஸ் ஹான் (அப்ப்டித்தான் உச்சரிக்க வேண்டும் என Shahrukh Khan இப்படத்தில் வலியுறுத்துகிறார்) உலகெங்கும் வெற்றிகரமாக ஓடுகிறது. அது ஆரம்ப நாட்களிலேயே 3 Idiots இன் சாதனையை முறியடித்திருக்கிறது.
   முதல் நாள் வசூல்
       UK £123,000
       Oceania (Australia) AUS$ 39,000
       Middle East and Pakistan US$ 300,000
       USA & Canada $1.94 million
ஆனால் 3 Idiots பார்த்து விமர்சனம் எழுதிய பலர் இப்படம் தொடர்பாக மௌனிகளாகவே இருக்கிறார்கள். பதிவுலகில் 3ஆம் தர படத்துக்கு கூட பக்கம் பக்கமாய் விமர்சனம் எழுதியவர்கள் இப்படத்த்தை கண்டுகொள்ளவேயில்லை.

என்னை பொறுத்தவரையில் இப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான அனுபவம்.

முதலில் திரையரங்கைப்பற்றி கட்டாயம் சொல்லவேண்டும். இத்திரைப்படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிவதாக பத்திரிகைகளிலும் (பார்க்க மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை) பிற ஊடகங்களிலும் செய்தி வந்திருந்ததனால், வார நாளில் காலை காட்சிக்கு சென்றிருந்தேன். டிக்கட் எடுக்க நீண்ட வரிசையில் அந்த நேரத்திலும் காத்திருக்க நேர்ந்தது.

லிபர்டி திரையரங்கு நவீன வசதிகள் கொண்ட பழைய அரங்காகும். டிக்கட் கட்டணமும் 225/- தான். இதேவகையான வசதிகள் கொண்ட திரையரங்குகளில் 300/- பிடுங்குகிறார்கள். வந்திருந்த கூட்டமும் நாகரீகமான இளைஞர் கூட்டம். அதிலும் பெரும்பான்மை நாகரீக இளைஞிகள். சில திரையரங்குகள் போல இருட்டில் சில்மிசம் பண்ண வந்தவர்களும் அல்ல (அப்படியான தேவைகளும் அவர்களுக்கு இல்லை). பல தமிழ் படங்களை பார்க்கும்போது நாம் சந்திக்கும் இரைச்சலிடும், விசிலடிக்கும், கூக்குரலிடும் அநாகரிக சமுதாயம் இல்லாதிருந்தது மிகப்பெரிய ஆறுதல்.

படத்தின் சாரம் முஸ்லிம்கள் எல்லாம் பயங்கரவாதிகள் எனும் ஊடக பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஒரு சாமானியன் எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே.

Shahrukh Khan இப்பாத்திரத்தில் ஒன்றித்து போயுள்ளார். அமெரிக்க விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமும், ஒரு காத்திரமான நியாயமான கருத்தை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்ற வைராக்கியமும் அவரை அப்படிச்செய்ய தூண்டியிருக்கலாம்.

திரைப்படம் முழுவதும் தான் முஸ்லிம் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். தொழுகை என்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்காக அனுசரித்து நடக்கும் இடம் அல்ல என்று கூறுமிடத்தில் முஸ்லிம்களுக்கே பாடம் நடத்துகிறார்.

படத்தின் முக்கியமான பலம் திரைவசனம். வாள்முனையை விட பேனாமுனையின் கூர்மை படம் முழுவதும் வெளிப்படுகிறது.Yellow Yellow dirty Fellow எனும் இடத்தில் நக்கல் தெரிகிறது.  $500 ஐ கிறிஸ்த்தவர்கள் அல்லாத ஆபிரிக்க பிள்ளைகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது இனியாவது பலருக்கு விளங்கட்டும்.

இன்னும் கதையை உறுத்தாத பாடல்கள், அழகாக இசையமைத்திருக்கும் Shankar-Ehsaan-Loy, தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள் என படத்திற்கு ஏராளமான பலங்கள்.

படத்தில் காண்பிக்கப்படும் விமான நிலைய பரிசோதனைகள் போல், இலங்கை மக்கள் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு செல்லும்போது ஆக குறைந்தது 5 முறையாவது அனுபவித்திருப்பார்கள்.

படத்தில் Hollywood க்கு போகும் Bus இன் இலக்கம் 112. கொழும்பின் 112 இலக்க Bus அந்நேரத்தில் ஞாபகம் வந்து தொலைத்தது.

படத்தில் வரும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு உதவும் காட்சி, இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பள்ளிவாசல்களினூடாக நிவாரண உதவிகளை செய்த இலங்கை முஸ்லிம்களை ஞாபகப்படுத்தியது. ஆனால் வித்தியாசம் BBC ஐத்தவிர மற்றெல்லா ஊடகங்களும் இங்கு அச்செய்தியை இருட்டடிப்பு செய்ததுதான்.

பார்த்த படங்களில் கொடுத்த காசுக்கு கொஞ்சமேனும் நட்டமில்லாத படம் என்று இதை கட்டாயம் சொல்லலாம்.

படத்தில் ஒரு வருத்தம், முஸ்லிம்கள் எவ்வாறு வன்முறையிலீடுபட தூண்டப்படுகிறார்கள் என்று சொல்லப்ப்டாமையே. ஆயினும் ஒரு காத்திரமான கருத்தை உலகெங்கும் எடுத்துசெல்லவேண்டிய அவசியத்திற்காக Shahrukh Khan அவ்வாறான நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருகக்லாம் என்பதால் பெருங்குறையாக தெரியவில்லை.
இவ்வாறான நல்ல படத்தை படித்த இளைஞர்கூட்டம் பார்ப்பது, முக்கியமாக சமூகரீதியான கொள்கைகளில் பெரும்பாக்கம் செலுத்தும் பெண்கள் பார்ப்பது, Shahrukh Khan உலகிற்கு சொல்லவந்த சேதியை இலகுவாக உள்ளீர்த்துக்கொள்ளும் என்றே நம்புகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விண்ணைத் தாண்டி வருவாயா


படம் பாத்துட்டு வெளியில வாரவங்க கொஞ்சம் புன்னகையோடும் கொஞ்சம் கண்ணீரோடும் வந்தால் அதுவே இந்த படத்தோட வெற்றின்னு கௌதம் சொல்லியிருந்தார். எனக்கு அது நடந்தது. அது எப்படின்னு கடைசில சொல்றேன்.

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அது நிலைக்கணும்...
அதுவா நடக்கணும்...
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்...
அதான் ட்ரூ லவ்...
அது எனக்கு நடந்தது..."


விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு விமர்சனம் எழுதியவர்கள் எல்லோரும் இதை மேற்கோள் காட்டத்தவறவில்லை. ஏற்கெனவே Trailer பார்த்த நாளிலிருந்து எப்படியும் "விதாவ"வை திரையில் பார்க்கவேண்டும் என்றிருந்தேன். பலரும் மேற்சொன்ன வசனங்களை சொல்லி படம் வெளியான நாள் முதல் என்னை பொறுமையை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக நான், எந்த தமிழ் படத்தையும் முதல் வாரத்தில் பார்க்க விரும்புவதில்லை. வெறித்தனமான ரசிகர்கள் விசிலடித்தே படத்தின் பாதி வசனங்களை விளங்காமல் செய்து விடுவார்கள் என்பதால் அப்படி.

நாடோடிகள் படம் ஆரம்பிக்கும்போது பாதையில் எழுத்துக்கள் ஓடும். இங்கு தண்ணீரில் ஓடுவதுடன் ஆரம்பிக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் சிம்பு காதல் பற்றி சொல்வது விசில் சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. இந்த அர்த்தமற்ற கைதட்டல்களும் விசிலும் தமிழ் சினிமாவின் சாபம். கொடுக்கும் காசுக்கு படத்த பார்க்க விடக்கூடிய மனநிலை இந்த மனிதர்களுக்கு எப்போ வருமோ தெரியாது.

சிம்புவின் முன்னைய Hit ஆன வல்லவனைப்போலவே இதிலும் வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவருக்கு அதுதான் ராசியோ தெரியாது.

அதேபோல் வாரணம் ஆயிரத்தில் வருவது போல் ஒரு ரயில் செட் போட்டு ஒரு பாடல். கௌதமின் Trade Mark?

படத்திலிருந்து சில வசனங்கள்

அவ Front அ விட Backஅ பார்த்ததுதான் அதிகம்

Love வேணாம். Friend ஆக இருப்போம். நீ வீட்டில் வந்து பேசிக்கொண்டிருக்கலாம். (Lets have a secreat affair என்பதை சொல்கிறாரோ)


படத்தில் நான் கவனித்த இன்னொரு விடயம், கார்த்திக்தான் ஜெஸியை காதலிக்கிறார். ஜெஸியிடம் பெரிதாக காதல் தெரியவில்லை. அப்பாத்திரத்தின் வசனங்களில், Expressionகளில் தெரிவது காதல் என்ற பெயருக்குள் அடைபடாமல், உலகத்திற்கு நட்பு என்று காட்டிக்கொண்டு ரகசியமாய் சில்மிசம் செய்யவேண்டும் என்ற கள்ளத்தனமே.

உருகி உருகி காதலித்திருந்தால், எப்படி இன்னொருவனுக்கு மனைவியாக வாழ்வது? சரி கட்டாயத்தின் அடிப்படையில் கல்யாணம் நடந்திருந்தால், பழைய காதலனுடன் படம் பார்க்க போவது? இன்னும் ஜெஸியின் கன்ணீரில் தெரிவதும் "இவன் பாவம்" என்ற அனுதாபமே! அல்லது வாய்த்த கணவன் இவனைப்போல் இல்லை என்ற தெரிந்தபின், "Miss பண்ணிட்டோமே" என்ற கவலையாகவும் இருக்கலாம்!

ஒரு வேண்டுகோள்! இனி யாரும் ஜெஸி என்று பெயர் வைக்காதீங்க...

"உங்க அக்கா சந்தோஷமாக வாழல. நடிக்கிறா" என்று சிம்பு சொல்லும்போது ஒரு சந்தேகம் - Arranged Marriage பண்ணி படம் பார்க்க வந்த தம்பதிகளில் ஒருவர் மேல் ஒருவருக்கு சந்தேகம் வராதா?

படத்தில் மிகப்பெரிய எரிச்சல், கல்யாணத்திற்காக சர்ச்சிற்கு வந்து கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு கார்த்திக்கை காதலித்த தைரியசாலி ஜெசி, அதற்குபின் கார்த்திக்குடன் அவ்வளவு பழகி, உருகி உருகி லவ் பண்ணி, கடைசியில் எந்தவொரு வலிதான காரணமுமின்றி, கார்த்திக்கை பிரிவதுதான். அங்குதான் படத்திற்கு சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளார் கௌதம்.

படத்தின் முதுகெலும்பு இசைதான். பாடல்கள் காட்சிகளுடன் சேர்ந்து புது பரிணாமமே எடுக்கின்றன. உணர்வுகளை ஊசியின்றி எம் இரத்தில் ரஹ்மான் கலந்துள்ளார்.

கண்ணீரின் கதையை சொல்லவேண்டுமில்லையா? பதிவுகளை பார்த்து பெரிய எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க செல்பர்களுக்கு - உங்கள் கதை; ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்ட கதைதான். (நன்றி ஹிஸாம்)

விதாவ - DVD இல் பாருங்கள். தியேட்டருக்கு போய் பார்ப்பதெல்லாம் Waste. (காதலை அழகாக சொல்லும் காட்சிகளை ரசிப்பதற்கு DVD தான் பொருத்தம்). இன்னும் பல காட்சிகளில் இங்கு கத்தரி போட்டிருப்பதும் தெரிகிறது. முக்கியமாக சில படங்களை ஞாபகப்படுத்தும் வகையான காட்சிகள் அறவே இல்லை.

இல்லை கட்டாயம் போவேன் என்று போனால், அல்லது இலவச டிக்கட் கிசைத்தால், A Film By Karthik என்றொரு Title வந்ததும் திரும்பி பார்க்காமல் வெளியே வந்துவிடுங்கள்.

நாளைக்கு கொடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாத ஒரு படம் பற்றி சொல்கிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்