ஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடைவர விருப்பதாக செய்தி ஒன்றை காணக்கிடைத்தது.
இம்முடிவு ஆசிரியர்களின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய பார்வை.
1) தூர இட ஆசிரியர்கள் காலை 6.30க்கு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டை சென்றடைய 3 மணி ஆகும். அதுவரை அவர்களின் வெளித்தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாடசாலைக்கு பிந்திய வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
2)அவர்கள் phone booth ஐ பாவிப்பதாயின் 5/- செலவிட நேரும். அது ஒரு communication ஆக இருப்பின் 10/- ஆக கூட இருக்கலாம். இலங்கையில் இன்று தொலைபேசி கட்டணம் எல்லாம் அடங்கலாக 3/-க்கு சற்று கூடுதல். மற்றும் சில்லறைக்காசு தேடுவது கூட கஷ்டமானது.
3)அதிகமான ஆசிரியர்கள் உபஹார package ஐயே பாவிக்கிறார்கள். இது பகல் வேளைகளில் மாத்திரம் பெரும்பாலான் தொலைபேசிகளுக்கு இலவசமாகும். இவ்வசதிக்காக 350/- மாதாந்தம் செலவிடுகிறார்கள். இலவச நேரத்தில் 75% ஆன பயன்பாட்டு நேரம் பாவிக்கப்பட முடியாததாகும்.
4) உபஹார திட்டம் அரச ஊழியர்கள் அலுவலக தொலைபேசியை பாவிப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்கானது. ஆசிரியர்கள் மீண்டும் அலுவலக தொலைபேசியை பாவிக்க இத்திட்டம் தோல்வியடையும். அரச நிதி வீணாகும்.
5)சில தொலைபேசி அழைப்புகளின் மூலம் நடாத்தக்கூடிய காரியங்களை செய்ய முடியாது போவதால், ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது அதிகரிக்கும்.
எனவே எவ்வாறு இணையத்தொடர்புகள் பாடசாலை computer resource centre இல் நிர்வகிக்கப்படுகிறதோ, அதே போல் mobile phone களும் நிர்வகிக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
1 comments:
இது அனுமதிக்க முடியாத ஒரு விடயம் தான். இருந்தாலும் உபகார package கு சிறந்த விளம்பரம் கொடுத்தீங்க..... (லொள்.....)
வாழ்த்துக்கள் கொடும சார்......
Post a Comment