விக்ரமும் இடுப்பும் நடித்து வெளிவந்திருக்கும் படம் கந்தசாமி. அந்த இடுப்புக்கு சொந்தக்காரி ஸ்ரேயா என்பதுதான் படத்தில் அவர் பங்கு.
இதுவரை நாம் பார்த்த Zoro, Robin Hood, அந்நியன், ஜென்டில்மேன் எல்லாத்தையும் குழைத்ததுதான் படத்தின் திரைக்கதை. பாடல்களுக்கு நடன உதவி
சரோஜாவில் வரும் கோடான கோடி, போக்கிரியின் செல்லப்பேரு ஆப்பிள் என்பனவற்றில் வரும் இடுப்பசைவுகள்.
எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் அடித்தான் முக்கியம். கந்தசாமியில் சீயான் சேவல் ஆக ஆகும் entry scene படத்துக்கே முதல் அடி. இது சின்ன பிள்ளய்ங்களுக்கான படம் என்று விக்ரம் சொன்னது நிஜமோ என்ற பயம் எதிர்பார்ப்பை தடாலடியாக குறைக்கிறது. இதன் பின் படம் நன்றாக தெரிவதற்கு இது கூட ஒரு காரணம்.
வடிவேலு நகைச்சுவை என்று நடாத்தும் சேட்டை முகம் சுளிக்க வைக்கிறது.
climax இல் விக்ரம் கொண்டுவரும் சுத்தி யாவரும் நலத்திலும் climax இல் வந்திருக்கிறது
படம் முழுக்க சிவப்பு நிறம் தூக்கலாகவே தெரிகிறது. யார்தான் ஒளிப்பதிவாளரோ.. அவருக்கு எதை படம் பிடிப்பது என்று கூட தெரியவில்லை.. ஸ்ரேயா bath tub இல் குளித்து வெளிவரும்போது முட்டிக்கு கீழே மட்டும் படம் பிடிக்கிறார்..
படத்தில் கொடுத்த காசுக்கு அந்த கடைசி பாடல் மட்டுமே போதும். பாடல் என்ன என்பது இப்போதைக்கு ஞாபகம் வராமல் போகும் அளவுக்கு கண்களுக்கு விருந்து.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
நானும் உங்க தளத்துக்கு வந்திருக்கிறேன் . அனுமதிக்கவும். நன்றி மீண்டும் வருவேன்.
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவேண்டும், ஆக்கங்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை கூறவேண்டும்.
Post a Comment