Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பதிவர் சந்திப்பு செய்திகள்

வெற்றிகரமாக நடந்த இலங்கை பதிவர் சந்திப்பு
சமாதான சூழ்நிலை காரணமாக ஏராளமான பதிவர்கள் கலந்துகொண்டனர்





பதிவர் சந்திப்பு சாதித்தது என்ன?
முடிவுகள் தொடர்பான அறிக்கை இன்னும் இல்லை





யாழ்தேவி மட்டக்களப்பு போகுமா? ! ! !
பதிவர் சந்திப்பில் இணையமூடாக ஒருவர் கேள்வி!!!





தமிழ் மீது கொண்ட காதலால் அல்ல
டியூசன் படிக்கும் பிள்ளைகளை பார்க்கவே வந்திருக்கிறீர்கள் என்று ஒருவர் பேச புன்முறுவலுடன் ஒத்துக்கொண்ட சபை

செய்திகள் எவற்றுக்கும் வழைமைபோல் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விக்ரமும் இடுப்பும் - கந்தசாமி


விக்ரமும் இடுப்பும் நடித்து வெளிவந்திருக்கும் படம் கந்தசாமி. அந்த இடுப்புக்கு சொந்தக்காரி ஸ்ரேயா என்பதுதான் படத்தில் அவர் பங்கு.

இதுவரை நாம் பார்த்த Zoro, Robin Hood, அந்நியன், ஜென்டில்மேன் எல்லாத்தையும் குழைத்ததுதான் படத்தின் திரைக்கதை. பாடல்களுக்கு நடன உதவி
சரோஜாவில் வரும் கோடான கோடி, போக்கிரியின் செல்லப்பேரு ஆப்பிள் என்பனவற்றில் வரும் இடுப்பசைவுகள்.

எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் அடித்தான் முக்கியம். கந்தசாமியில் சீயான் சேவல் ஆக ஆகும் entry scene படத்துக்கே முதல் அடி. இது சின்ன பிள்ளய்ங்களுக்கான படம் என்று விக்ரம் சொன்னது நிஜமோ என்ற பயம் எதிர்பார்ப்பை தடாலடியாக குறைக்கிறது. இதன் பின் படம் நன்றாக தெரிவதற்கு இது கூட ஒரு காரணம்.

வடிவேலு நகைச்சுவை என்று நடாத்தும் சேட்டை முகம் சுளிக்க வைக்கிறது.

climax இல் விக்ரம் கொண்டுவரும் சுத்தி யாவரும் நலத்திலும் climax இல் வந்திருக்கிறது

படம் முழுக்க சிவப்பு நிறம் தூக்கலாகவே தெரிகிறது. யார்தான் ஒளிப்பதிவாளரோ.. அவருக்கு எதை படம் பிடிப்பது என்று கூட தெரியவில்லை.. ஸ்ரேயா bath tub இல் குளித்து வெளிவரும்போது முட்டிக்கு கீழே மட்டும் படம் பிடிக்கிறார்..

படத்தில் கொடுத்த காசுக்கு அந்த கடைசி பாடல் மட்டுமே போதும். பாடல் என்ன என்பது இப்போதைக்கு ஞாபகம் வராமல் போகும் அளவுக்கு கண்களுக்கு விருந்து.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Police இல்ல பொறுக்கி


இலங்கையில் அண்மைக்காலாமாக சூடான யுத்த செய்திகள் எதுவுமின்றி அவதிப்படும் ஊடகங்கள் இப்போதுதான் police இன் அடாவடிகளை கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

SLIIT மாணவனான நிபுண; கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான வாஸ் குணவர்தனவின் மகனால் (இருவரும் ஒரே இடத்தில் படிப்பவர்கள்) அதிகாரிகளின் துணையொடு கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டமை முதல் இவ்விடையம் சூடு பிடித்துள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் மட்டும் நாம் கண்ட college fight தான் இந்நிகழ்வின் theme.


இதனை மறுத்த வாஸ், குறித்த மாணவன் பிழையாக அடையாளம் காணப்பட்ட்மை தான் (mistaken Identity) காரணம் என் கூறியிருந்தார்.

இதன் பின் மன்னாரில் தற்கொலை வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டாதாக் செய்தி வந்தது. இக்கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற இவரது மகன் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்திய ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டார்கள். இக்கண்டுபிடிப்பு தொடர்பான சந்தேகத்தை அதிரடிப்படை (STF) தலைவரான லிவ்கே தெரிவித்திருந்தார்.

இதேவேளை அங்குலானவில் ஒரு இளம் பெண்ணினால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்ப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் police நிலையத்தை தாக்க நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் இப்பிரச்சினையில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்கள்.

இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாத போதும், மக்களிடையேயான எழுச்சி ஒரு நல்ல மாற்றத்தின் அறிகுறி..

இதேவேளை ஊடக சுதந்திரம் இல்லை என்ற ஓலமிட்டவாறு தனது இயலாமையை (inefficiency) மறைக்கும் ஊடகங்களிடையே; இருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படும் Daily Mirrorஐ பாராட்டாமல் இருக்க முடியாது.
முழு விபரமும்

Top policeman’s son in alleged assault incident

Bomb laden van seized in Mannar

Bomb laden van seized in Mannar - Photo


Lewke questions claymore find

SSP Vas Gunawardena Transferred

Court asks why SSP not arrested

Decision on Vas: Only after a thorough probe

Angulana atrocity, youth pranks vs police brutality

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வாமனன் தந்த அதிர்ச்சி



அண்மையில் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றிருந்தேன். தனது computer இல் தாம் தூம் படப்பாடல் பார்த்துகொண்டிருந்தான். அருகில் இன்னொரு நண்பனும்.

எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அந்த குட்டி நல்ல வடிவு..

அதிலயும் chewing gum கொடுக்கும் scene சூப்பர்

அது மட்டுமா? கார்ல ஏன் சிரிச்சே என்று கேட்கும் சீனும் சூப்பர்

இந்த குட்டி நல்ல ஒழுக்கமாகவும் உடுத்திருக்கு

தெரியுமா? புதுசா வாமனன் படத்துல அரை குறையா வருது

என்ன

இருக்காது

sure.. வேணும் என்டா பாருங்கோ

நண்பன் உடனடியாக வாமனன் படத்தை play பண்ண அதில் ஒரு குட்டி swim dressமாதிரி dress இல் கடற்கரையில் நடக்கிறது

இதுதான் அந்த குட்டி

இல்லடா

இது பிரியாமணி.. இதே dress ஓட எத்தன blogல photo வந்துச்சு

இது பிரியாமணி இல்ல

பாரு தாம் தூம்ல வந்த குட்டி கொஞ்சம் கருப்பு. இந்த குட்டி வெள்ள

அது make up

இல்ல அவதான் இவ

பாரு தாம் தூம்ல வந்த குட்டி ஒழுக்கமா dress பண்ணி இருக்கும். பாத்தா அடுத்த வீட்டு அக்கா மாதிரி

அவதான் இவ

அவ இல்ல இவ

நண்பன் படத்தின் பாதியில் வரும் இன்னொரு சீனை காட்ட

கொஞ்ச்சம் கொஞ்ச்சமா உறைக்க

ஒரு பதிவு தயார்

வாமனன் தந்த அதிர்ச்சி என்ற தலைப்போடு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு


400 நிகழ்ச்சிகளை தாண்டிவிட்டதாக பெருமிதப்படும் அரசியல் நிகழ்ச்சியான மின்னல், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்க கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சியாக இருந்தமையை மாத்திரம் தூணாக கொண்டு இதுவரை அந்நிகழ்ச்சி நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சி முன்னிறுத்திய மறைமுக அரசியல் காரணமாக அரசியல் வாதிகள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறும் ஏட்டு சுரைக்காய்களை மாத்திரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதே காரணத்திற்காக இந்நிகழ்ச்சி மக்களிடம் இருந்தும் தூரமாகியிருக்கிறது. இனியாவது மக்களிடையே மின்ன பற்றிய கருத்து என்ன என்று சுயபரிசீலனை செய்யுமா மின்னல்?


மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூபா. 10 மில்லியன் செலவு!


3 நிமிடம் மாத்திரம் நீளமானது இவ்விளம்பரம்!

தனியார் விளம்பர நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இவ்விளம்பரத்தில் 200 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ரூபா. 1500/- ஒரு நாளைக்கு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது. அத்துடன் புகையிரதம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் இதற்கு பயன்படுத்தப்படுவதால் ரயில்வே துறைக்கு மில்லியன் கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

யாழ் பாதை சீரமைப்பு திட்டத்துக்காக அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டு நிதி சேகரிக்கப்படுகிறது..

திட்டம் பற்றிய விபரங்கள்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கைப் பதிவர் சந்திப்பு


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு :
ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உள்ளே வெளியே - In and Out

கடந்த புதன் அன்று கோட்டை ரயில் நிலையத்தில்
உள்ளே

























































வெளியே

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடை


ஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடைவர விருப்பதாக செய்தி ஒன்றை காணக்கிடைத்தது.

இம்முடிவு ஆசிரியர்களின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய பார்வை.

1) தூர இட ஆசிரியர்கள் காலை 6.30க்கு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டை சென்றடைய 3 மணி ஆகும். அதுவரை அவர்களின் வெளித்தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாடசாலைக்கு பிந்திய வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். 

2)அவர்கள் phone booth ஐ பாவிப்பதாயின் 5/- செலவிட நேரும். அது ஒரு communication ஆக இருப்பின் 10/- ஆக கூட இருக்கலாம். இலங்கையில் இன்று தொலைபேசி கட்டணம் எல்லாம் அடங்கலாக 3/-க்கு சற்று கூடுதல். மற்றும் சில்லறைக்காசு தேடுவது கூட கஷ்டமானது.

3)அதிகமான ஆசிரியர்கள் உபஹார package ஐயே பாவிக்கிறார்கள். இது பகல் வேளைகளில் மாத்திரம் பெரும்பாலான் தொலைபேசிகளுக்கு இலவசமாகும். இவ்வசதிக்காக 350/- மாதாந்தம் செலவிடுகிறார்கள். இலவச நேரத்தில் 75% ஆன பயன்பாட்டு நேரம் பாவிக்கப்பட முடியாததாகும்.

4) உபஹார திட்டம் அரச ஊழியர்கள் அலுவலக தொலைபேசியை பாவிப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்கானது. ஆசிரியர்கள் மீண்டும் அலுவலக தொலைபேசியை பாவிக்க இத்திட்டம் தோல்வியடையும். அரச நிதி வீணாகும்.

5)சில தொலைபேசி அழைப்புகளின் மூலம் நடாத்தக்கூடிய காரியங்களை செய்ய முடியாது போவதால், ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது அதிகரிக்கும்.

எனவே எவ்வாறு இணையத்தொடர்புகள் பாடசாலை computer resource centre இல் நிர்வகிக்கப்படுகிறதோ, அதே போல் mobile phone களும் நிர்வகிக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மாற்று வழி தேடும் பிள்ளைகள்


பாடசாலையில் mobile phone பாவித்தமைக்காக எச்சரிக்கப்பட்ட மாணவி பாடசாலையிலேயே சுருக்கிட்டு தற்கொலை செய்தது இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்திருக்கிறது.

சம்பவத்தை மட்டும் நோக்காது அதன் காரணத்தை நோக்குவதே இப்பதிவின் முயற்சியாகும்.

பிள்ளைகள் பெற்றோருடன் செலவளிக்கும் நேரம் குறைவடைந்து விட்டது. பெரும்பாலான் நகர்புறங்களில் தாயும் வேலைக்கு செல்கிறாள். தாத்தா பாட்டியுடன் இருக்கும் குடும்பங்களும் அருகிவிட்டன. இதன் காரணமாக ஏறத்தாள 7 மணி வரை பிள்ளைகள் தனியேதான் இருக்கிறார்கள். தூங்கும் நேரம் போக 7 மணி முதல் 10 மணிவரையான நேரமே முழுக்குடும்பமும் ஒன்றாக இருக்கும் நேரமாகும். அதிலும் பெரும்பகுதியை வீட்டுவேலைகள் அபகரிக்க சொறப நேரமே பெற்றோரால் பிள்ளைகளுடன் செலவிட முடிகிறது.

எனவே பிள்ளைகள் கிடைக்கும் நேரத்தில் சரி எது தவறு எது என்று தெரியாமல் தங்கள் தனிமையை போக்க ஏதாவதி செய்கிறார்கள். Computer Games, Internet, Chat, Porn போன்ற விடையங்கள் இலகுவாக அவர்களை ஈர்க்கிறது.

இன்று ஆண் / எண் இருபாலாருக்கும் வெவ்வேறாக பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. ஆனால் பிள்ளைகள் Tution வகுப்புகளில் எதிர்ப்பாலினரோடு பழகும் சந்தர்ப்பம் பெறுகிறார்கள். இது தனிப்பால் பாடசாலை திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் அனைத்து நன்மைகளையும் சிதறடிக்கிறது.

இன்று பல குடும்பங்களில் வீட்டுக்கு தெரிந்து காதலிப்பது, ஆகி திருமணம் வரை குடும்பத்தின் அனுமதியுடன் சுற்றித்திரிவது சகஜமாகிவிட்டது. வீட்டிலேயே பிள்ளைகளின் உறவினர்கள் மணிக்கணக்கில் பேசுவதும், பரிசுகளை பரிமாறுவதும் பிள்ளைகளை அவ்வாறான நடவடிக்கையில் ஆசைப்பட வைக்கிறது. ஆழம் தெரியாமால் காலை விட குடும்பமே வழிவகுக்கிறது.

பெற்றோரின் கடின தண்டனைகள் பிள்ளைகளுக்கு மாற்று வழிகளை மறுக்கிறது. இறைவனே பாவங்களை மன்னிக்கிறான் என்பதை பெற்றோர், ஆசிரியர்கள் மனதில் இருத்த வேண்டும். தேவையாயின் உள வள ஆலோசனைகளை பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேவேளை நிஜ வாழ்வின் சவாலகளுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள பெற்றார், ஆசிரியர் முயற்சிக்க வேண்டும். சில மாதங்களுக்கு ஒரு முறை பிள்ளைகளை இவ்வாறான உளநலன் சார் நிகவுகளில் பங்குபெறச்செய்யவேண்டும்.

பாடசாலைகள் வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரம் வழங்காது பரீட்சைகளுக்கு பின் விடுமுறை காலப்பகுதியில் மன நல மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றியதான ஒரு எல்லாருக்கும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தற்கொலை செய்வதற்கு கற்பித்தது யார் என்றும் கட்டாயம் நோக்கவேண்டும். நிச்சயமாக சினிமாவும், இலத்திரனியல் ஊடகங்களுமே! வக்கிரமான காட்சிகள் இவற்றில் நிரம்பி வழிகின்றன. எங்காவது ஒரு கொலை நடந்தால் அப்பிணத்தை பணமாக மாற்றிக்கொள்ள marketing போட்டி போடப்படுகிறது. அப்பட்டமாக அக்கொடூர காட்சியை யார் தோல் உரித்து காட்டுவதன்மூலம் இவ்வூடகங்கள் முழு மனித சமுதாயத்திற்கும் எதிராக அரச பொதுமக்கள் ஆதரவுடன் செயற்படுவது வெட்க கேடானதாகும். குடி போதை போன்ற காட்சிகளை censor செய்யும் இவ்வூடகங்களில் மற்ற அனைத்து பாவகாரியங்களும் காட்டப்படுவது எவ்வாறு நியாயம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முன்னும் parental guidelines கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்