Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

உண்மைகள் வெல்வதில்லை. அவை நிரூபிக்கப்படுகின்றன - பஷீர் சேகுதாவூத்

நேற்று 23.08.2012 அன்று தனது பதவியை இராஜினமா செய்த பிரதியமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் facebook இல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அவர் பதிலளித்த கேள்விகளை ஒரு ஒழுங்கில் பேட்டி வடிவில் தொகுத்திருக்கிறேன். இன்னும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆயினும் தற்போதைய நெருக்கடியில் அவருக்கு வேலைப்பழு இருந்திருக்கலாம் என்று கருதி பதிலளிக்கப்படாத  அக்கேள்விகளை இதில் சேர்க்கவில்லை.


Eksaar எக்சார்

அரச வளங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியாதாம்.
அப்போ
அரச வளங்களை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வது சரியா?
Basheer Segudawood
அரச வளங்களை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு துஷ்பிரயோகம் செய்வதும், அரசுக்கு எதிரான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவம் குற்றம். பச்சோத்தித் தனம். என் மனசாட்சியும் ஏற்காது.

Eksaar எக்சார்

33 அரசியல் வரலாறு சொல்ல வந்த நீங்க ஏன் கடைசி 2 வருஷத்த இப்ப சொன்னீங்க? மிச்சத்த எப்ப சொல்லுவீங்க?

Basheer Segudawood
33 வருட அரசியல் வரலாற்றை ஒரே தடைவையில் பேசப்போவதாக நான் அறிவிக்க வில்லை. வாக்குமூலங்கள் எத்தனை அது எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றி தெளிவாக அறிவித்த பின்னர்தான் முதலாவது வாக்குமூலம் இடம்பெற்றது. அடுத்தவை திட்டமிட்டபடி நடக்கும். இன்ஷா அல்லாஹ்!.


Eksaar எக்சார்
சார் அரசாங்கம் என்பது ஐமசுமு ஆதரவாளர்களின் சொந்த பணமா? சாப்பிடுற சாப்பாடு முதல்கொண்டு வாகனம் வரைக்கும் முஸ்லிம்களாகிய நாங்களும் நேரடியான வரி மறைமுக வரின்னு கட்டிகிட்டு இருக்கோம். அதில் எங்கள் பிரதிநிதிகளுக்கு பங்கு இருக்கிறது. எங்கள் பிரதிநிதிகள் எங்களால் கிடத்த வசதிகளை எங்களுக்காக பாவிக்க வேண்டும். ஆனால் நீங்களோ அரசு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு தந்தது மாதிரி ராஜினமா செஞ்சிருக்கீங்க. பாவிக்க விருப்பமில்லன்னா பாவிக்காம விட்டிருக்கலாம். என்ன கணக்கில ராஜினமா செய்வீங்க? உங்கட தனிப்பட்ட கருத்து முக்கியம்னா பொதுவாழ்வு சரிப்படாது சார்

Deen Noor Nagoor Kani
இவ்வளவு காலம் பதவி துறந்து தான் தேர்தல் செய்தீர்களா? வளங்கள் இருந்தால் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பது கட்டாய கடமையா அல்லது சட்டமா? அமைச்சுப் பதவியில் இருக்கின்ற போது துஷ்பிரயோகங்களை தவிர்த்து நேர்மையான முறையில் அரசியல் செய்ய முடியாது என்று சொல்வது கோழத்தனம். தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத உறுதியற்ற நிலை. தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத நிலயில் மக்கள் எப்படி எம்மை வெற்றி கொள்ளச் செய்வார்கள்? பதவி துறந்தால் தான் அரசியல் செய்யலாம் என்பது முட்டாள் தனம். அரசாங்கம் இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அது யாருடைய சொத்தும் அல்ல. அதனால் அதனுடைய பொறுப்புக்களை வரி என்று ஒவ்வொரு குடிமகனும் சுமந்துக் கொண்டிருக்கின்றான். அதே நேரம் அவற்றை உரிய முறையில் கையாளுதல் உங்களினது கடமை.

Basheer Segudawood
எனது பதவி ராஜிநாமா என் மனசாட்சிக்கு விரோதமில்லாது எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் அது எனது தனிப்பட்ட முடிவு மாத்திரமல்ல. உள்ளாலும் புறத்தாலும் என்னை உண்மைக்கு உண்மையாக நேசிக்கின்ற நம்புகின்றவர் சமூகப் பிரஜைகளினதும் விருப்பம். பொதுவாழ்வு யாருக்கு ஒத்துவரும் வராது என்பதைத் தீர்மானிக்கின்ற வல்லமை அல்லாஹ்வுடையது. என்னைப் பொதுவாழ்வுக்குரிய எல்லா ஆளுமைகளுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். அதை நான் பல கட்டங்களில் நிரூபித்தும் இருக்கிறேன். இனியும் வல்ல அல்லாஹ் உதவியால் நிரூபிப்பேன். இன்ஷா அல்லாஹ்.


Mohamed Hatheek அரசியல்வாதிகள் எது சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது.... SLMC கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு மாற்று கட்சி காரர் வெல்ல பிரார்த்திகிறேன் என்று கூறுவது நயவஞ்சகத்தின் உச்ச கட்டம். ...நீங்கள் பிரதி அமைச்சு பதவியை துறந்தததும் மக்கள் உங்களை நம்பிவிடுவார்கள? பதவியை துறந்தது அமைச்சரவை அமைச்சுக்கா ?Basheer Segudawood ‎தம்பி, என் அரசியல் அனுபவத்தில் பாதியும் உங்களுக்கு வயதில்லை என்பது இந்தக் கேள்விகளிலிருந்து புரிகிறது. நயவஞ்சகம் என்ற வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடிப்படிப்பது நன்று. அல்லாஹ் பெரியவன், வாப்பா.

Eksaar எக்சார்
மௌலானாவை முதலமைச்சர் ஆன பிறகு முகாவுக்கு இழுக்கும் எண்ணம் இருந்தால் இரகசியமாக அவர் நியமனம் பெற்ற பிறகு சொல்லியிருப்பீங்க. நீங்க இப்படி போட்டு உடைத்த பிறகு மௌலானாவுக்கு கிடைக்குமா? நீங்க மௌலானாவுக்கு உதவி செஞ்சீங்களா? உபத்திரவம் செஞ்சீங்களா? என்ன இராஜதந்திர வியூகம் இது?

Basheer Segudawood
ஹாஹா.... வரி வரியாக விபரிப்பதற்குப் பெயர் வியூகமில்லை வாப்பா. நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்றெல்லாம் மூளையத் தீட்டுகிறீர்கயே அதற்குப் பெயர்தான் வியூகம். வியூகங்களின் வெற்றி தோல்வியை அறிய பொறுமை வேண்டும்.


Rina Mohammed  
வருஷ கணக்கில் (33) அரசியல் செஞ்ச நான் வரலாற்றில் இடம் பெற, அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்கு ஆசைப்படுவது ஹராமா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். அது நீங்கள் பங்கு வைத்து கொள்ள கிடைத்த பரிசு இல்லை, நாங்கள் வாக்கு போட்டு கிடைத்தவை. அம்பாறையில் தொடர்ச்சியாக வென்று தரும் நாங்கள் (மக்கள்) கேட்டாலும் பரவாயில்லை, ஹராமா என்று. தேசிய பட்டியலே கதி என்று இருப்பவர்களுக்கு அதுவே வரலாறுதான்.

Basheer Segudawood
என்னுடைய தனிப்பட்ட வெற்றிகளுக்காக நான் வியூகம் அமைத்ததில்லை. என் தெளிந்த அரசியல் செயற்பாடுக்கு அல்லாஹ்வின் அன்பளிப்பு தேசியப் பட்டியல். விரும்பவும் வெறுக்கவும் மறுக்கவும் துறக்கவும் வைத்துக் கொள்ளவும் விட்டுத்தள்ளவும் எனக்கு உரிமையுண்டு.


Eksaar எக்சார்
என்ன இருந்தாலும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வந்த முதல் அரசியல்வாதி என்றவகையில் நாம் பஷீர் நானாவுக்கு நன்றி சொல்லணும்


Mohamed Hatheek
பேசி முடித்தவுடன் ஏறாவூரில் உருவ பொம்மை கட்டி எரிக்கப்பட்டதாகவும் இவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் செய்திகள் வருகிறது ...இது பற்றி

Deen Noor Nagoor Kani
Sir, உங்கள் மீது எத்தனைப்பேர் பற்று வைத்திருந்துள்ளார்கள் என்பதற்கான சாட்சியே இவை அனைத்தும் . அந்தப்பற்றை நீங்கள் தொடர்ந்தும் எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பீர்கள் என்று நம்புகின்றோம்.


Basheer Segudawood
நான் ஜனநாயகவாதி. என்னைப் புறக்கணிக்கின்ற வெறுக்கின்ற வெட்டித்தள்ள நினைப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் அதிகம் என்பதை அறிவேன். ஆனபோதும் என்னை உண்மைக்கு உண்மையாக நெஞ்சுக்கு நேர்மையாக நேசிக்கின்ற சிலருக்காக நான் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி எதையும் எதிர்கொள்வேன், ஒரு ஜனநாயக வாதியாக. இன்ஷா அல்லாஹ்.


முழு உரையாடலையும் இங்கு கிளிக் செய்வதன் மூலம் வாசிக்கலாம். சில தமிழ் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: