Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

உண்மைகள் வெல்வதில்லை. அவை நிரூபிக்கப்படுகின்றன - பஷீர் சேகுதாவூத்

நேற்று 23.08.2012 அன்று தனது பதவியை இராஜினமா செய்த பிரதியமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் facebook இல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அவர் பதிலளித்த கேள்விகளை ஒரு ஒழுங்கில் பேட்டி வடிவில் தொகுத்திருக்கிறேன். இன்னும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆயினும் தற்போதைய நெருக்கடியில் அவருக்கு வேலைப்பழு இருந்திருக்கலாம் என்று கருதி பதிலளிக்கப்படாத  அக்கேள்விகளை இதில் சேர்க்கவில்லை.


Eksaar எக்சார்

அரச வளங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியாதாம்.
அப்போ
அரச வளங்களை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வது சரியா?
Basheer Segudawood
அரச வளங்களை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு துஷ்பிரயோகம் செய்வதும், அரசுக்கு எதிரான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவம் குற்றம். பச்சோத்தித் தனம். என் மனசாட்சியும் ஏற்காது.

Eksaar எக்சார்

33 அரசியல் வரலாறு சொல்ல வந்த நீங்க ஏன் கடைசி 2 வருஷத்த இப்ப சொன்னீங்க? மிச்சத்த எப்ப சொல்லுவீங்க?

Basheer Segudawood
33 வருட அரசியல் வரலாற்றை ஒரே தடைவையில் பேசப்போவதாக நான் அறிவிக்க வில்லை. வாக்குமூலங்கள் எத்தனை அது எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றி தெளிவாக அறிவித்த பின்னர்தான் முதலாவது வாக்குமூலம் இடம்பெற்றது. அடுத்தவை திட்டமிட்டபடி நடக்கும். இன்ஷா அல்லாஹ்!.


Eksaar எக்சார்
சார் அரசாங்கம் என்பது ஐமசுமு ஆதரவாளர்களின் சொந்த பணமா? சாப்பிடுற சாப்பாடு முதல்கொண்டு வாகனம் வரைக்கும் முஸ்லிம்களாகிய நாங்களும் நேரடியான வரி மறைமுக வரின்னு கட்டிகிட்டு இருக்கோம். அதில் எங்கள் பிரதிநிதிகளுக்கு பங்கு இருக்கிறது. எங்கள் பிரதிநிதிகள் எங்களால் கிடத்த வசதிகளை எங்களுக்காக பாவிக்க வேண்டும். ஆனால் நீங்களோ அரசு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு தந்தது மாதிரி ராஜினமா செஞ்சிருக்கீங்க. பாவிக்க விருப்பமில்லன்னா பாவிக்காம விட்டிருக்கலாம். என்ன கணக்கில ராஜினமா செய்வீங்க? உங்கட தனிப்பட்ட கருத்து முக்கியம்னா பொதுவாழ்வு சரிப்படாது சார்

Deen Noor Nagoor Kani
இவ்வளவு காலம் பதவி துறந்து தான் தேர்தல் செய்தீர்களா? வளங்கள் இருந்தால் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பது கட்டாய கடமையா அல்லது சட்டமா? அமைச்சுப் பதவியில் இருக்கின்ற போது துஷ்பிரயோகங்களை தவிர்த்து நேர்மையான முறையில் அரசியல் செய்ய முடியாது என்று சொல்வது கோழத்தனம். தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத உறுதியற்ற நிலை. தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத நிலயில் மக்கள் எப்படி எம்மை வெற்றி கொள்ளச் செய்வார்கள்? பதவி துறந்தால் தான் அரசியல் செய்யலாம் என்பது முட்டாள் தனம். அரசாங்கம் இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அது யாருடைய சொத்தும் அல்ல. அதனால் அதனுடைய பொறுப்புக்களை வரி என்று ஒவ்வொரு குடிமகனும் சுமந்துக் கொண்டிருக்கின்றான். அதே நேரம் அவற்றை உரிய முறையில் கையாளுதல் உங்களினது கடமை.

Basheer Segudawood
எனது பதவி ராஜிநாமா என் மனசாட்சிக்கு விரோதமில்லாது எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் அது எனது தனிப்பட்ட முடிவு மாத்திரமல்ல. உள்ளாலும் புறத்தாலும் என்னை உண்மைக்கு உண்மையாக நேசிக்கின்ற நம்புகின்றவர் சமூகப் பிரஜைகளினதும் விருப்பம். பொதுவாழ்வு யாருக்கு ஒத்துவரும் வராது என்பதைத் தீர்மானிக்கின்ற வல்லமை அல்லாஹ்வுடையது. என்னைப் பொதுவாழ்வுக்குரிய எல்லா ஆளுமைகளுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். அதை நான் பல கட்டங்களில் நிரூபித்தும் இருக்கிறேன். இனியும் வல்ல அல்லாஹ் உதவியால் நிரூபிப்பேன். இன்ஷா அல்லாஹ்.


Mohamed Hatheek அரசியல்வாதிகள் எது சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது.... SLMC கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு மாற்று கட்சி காரர் வெல்ல பிரார்த்திகிறேன் என்று கூறுவது நயவஞ்சகத்தின் உச்ச கட்டம். ...நீங்கள் பிரதி அமைச்சு பதவியை துறந்தததும் மக்கள் உங்களை நம்பிவிடுவார்கள? பதவியை துறந்தது அமைச்சரவை அமைச்சுக்கா ?Basheer Segudawood ‎தம்பி, என் அரசியல் அனுபவத்தில் பாதியும் உங்களுக்கு வயதில்லை என்பது இந்தக் கேள்விகளிலிருந்து புரிகிறது. நயவஞ்சகம் என்ற வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடிப்படிப்பது நன்று. அல்லாஹ் பெரியவன், வாப்பா.

Eksaar எக்சார்
மௌலானாவை முதலமைச்சர் ஆன பிறகு முகாவுக்கு இழுக்கும் எண்ணம் இருந்தால் இரகசியமாக அவர் நியமனம் பெற்ற பிறகு சொல்லியிருப்பீங்க. நீங்க இப்படி போட்டு உடைத்த பிறகு மௌலானாவுக்கு கிடைக்குமா? நீங்க மௌலானாவுக்கு உதவி செஞ்சீங்களா? உபத்திரவம் செஞ்சீங்களா? என்ன இராஜதந்திர வியூகம் இது?

Basheer Segudawood
ஹாஹா.... வரி வரியாக விபரிப்பதற்குப் பெயர் வியூகமில்லை வாப்பா. நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்றெல்லாம் மூளையத் தீட்டுகிறீர்கயே அதற்குப் பெயர்தான் வியூகம். வியூகங்களின் வெற்றி தோல்வியை அறிய பொறுமை வேண்டும்.


Rina Mohammed  
வருஷ கணக்கில் (33) அரசியல் செஞ்ச நான் வரலாற்றில் இடம் பெற, அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்கு ஆசைப்படுவது ஹராமா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். அது நீங்கள் பங்கு வைத்து கொள்ள கிடைத்த பரிசு இல்லை, நாங்கள் வாக்கு போட்டு கிடைத்தவை. அம்பாறையில் தொடர்ச்சியாக வென்று தரும் நாங்கள் (மக்கள்) கேட்டாலும் பரவாயில்லை, ஹராமா என்று. தேசிய பட்டியலே கதி என்று இருப்பவர்களுக்கு அதுவே வரலாறுதான்.

Basheer Segudawood
என்னுடைய தனிப்பட்ட வெற்றிகளுக்காக நான் வியூகம் அமைத்ததில்லை. என் தெளிந்த அரசியல் செயற்பாடுக்கு அல்லாஹ்வின் அன்பளிப்பு தேசியப் பட்டியல். விரும்பவும் வெறுக்கவும் மறுக்கவும் துறக்கவும் வைத்துக் கொள்ளவும் விட்டுத்தள்ளவும் எனக்கு உரிமையுண்டு.


Eksaar எக்சார்
என்ன இருந்தாலும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வந்த முதல் அரசியல்வாதி என்றவகையில் நாம் பஷீர் நானாவுக்கு நன்றி சொல்லணும்


Mohamed Hatheek
பேசி முடித்தவுடன் ஏறாவூரில் உருவ பொம்மை கட்டி எரிக்கப்பட்டதாகவும் இவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் செய்திகள் வருகிறது ...இது பற்றி

Deen Noor Nagoor Kani
Sir, உங்கள் மீது எத்தனைப்பேர் பற்று வைத்திருந்துள்ளார்கள் என்பதற்கான சாட்சியே இவை அனைத்தும் . அந்தப்பற்றை நீங்கள் தொடர்ந்தும் எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பீர்கள் என்று நம்புகின்றோம்.


Basheer Segudawood
நான் ஜனநாயகவாதி. என்னைப் புறக்கணிக்கின்ற வெறுக்கின்ற வெட்டித்தள்ள நினைப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் அதிகம் என்பதை அறிவேன். ஆனபோதும் என்னை உண்மைக்கு உண்மையாக நெஞ்சுக்கு நேர்மையாக நேசிக்கின்ற சிலருக்காக நான் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி எதையும் எதிர்கொள்வேன், ஒரு ஜனநாயக வாதியாக. இன்ஷா அல்லாஹ்.


முழு உரையாடலையும் இங்கு கிளிக் செய்வதன் மூலம் வாசிக்கலாம். சில தமிழ் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் களம்




இலங்கையிலேயே அதி சூடான தேர்தல் களமாக கிழக்கு மாகாணத்தை அப்பிரதேச மக்கள் சொல்வர். ஏட்டிக்கு போட்டியான பிரச்சாரங்களும் கைகலப்புகளும் இங்கு சகஜம்! அதேவேளை அரசியல் ரீதியாக பாமரனுக்கும் மிகப்பெரும் புரிதல் உண்டு. இனி இப்பிரதேச அரசியல் கள நிலவரம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

அண்மைக்காலமாக அரச ஆதரவு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றமை பற்றி முஸ்லிம்கள் மிகுந்த விசனத்தில் இருக்கிறார்கள். இதுவே இன்று முகா அலையொன்றை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் வெண்ணெய்  திரளும்போது தாளியை உடைத்த கதையாக ஹக்கீம் மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஆகியிருக்கிறது. உன்னிச்சை சம்பவம் சிலவேளை மீண்டும் அலையை எழுச்சி கொள்ள செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அசாத் சாலி
கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி அவர்கள் இம்முறை மட்டக்களப்பில் போட்டியிடுகிறார். முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறை கொண்டவராயினும் இவரது அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடும் தன்மை ஒரு பலவீனமாகும். முகாவின் வேட்புமனுவில் கைச்சாத்திட ஓரிரு நாட்களின் முன்பு முகா தலைமை ஐக்கியத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதற்குமுன் முகா பிரமுகர்களை சாடிக்கொண்டிருந்தார். இவையாவும் முகா ஆதரவாளர்களின் வாக்குகளையேனும் இவருக்கு பெற்றுதருவதில் இடைஞ்சலாக இருக்கும்.

இன்னும் இவர் கொழும்பை சேர்ந்தவர் என்பதால் கிழக்கு முஸ்லிம்களின் நிஜ பிரச்சினைகள் அவற்றின் பாரதூரம் பற்றிய புரிதல்கள் குறைவு. இதே காரணத்தால் பல பெரும் தலைகள் முன்னொரு காலத்தில் கிழக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாறும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சேர்த்து கணக்கொட்டால் முகா தலைமை அசாத் சாலியின் வாய்க்கொழுப்பை அடக்குவதற்காக வாய்ப்பு குறைந்த மட்டக்களப்பில் களமிறக்கியுமிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

அக்கரைப்பற்று
முகாவுக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 அல்லது 4 வேட்பாளர்களையே வெற்றி பெறச்செய்ய முடியும். இன்று அக்கரைப்பற்று அரசியல் களத்தில் நிலமை முகாவுக்கு முன்னேற்றகரமானது. பணபலம் மிக்க 2 வேட்பாளர்களையும் ஆட்பலம்  கொண்ட ஒரு வேட்பாளரையும் அதாவுல்லாவின் மண்ணில் அவருக்கெதிராக அவரது மண்ணைச்சேர்ந்த மூவரை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆனால் அதாவுல்லாவோ அப்பிரதேசத்தில் எவரையும் களமிறக்காது தனிப்பட்டரீதியான செல்வாக்கை மோதவிட்டுள்ளார். அதனால் அதாவுல்லாவின்கட்சிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காவிட்டால் அது அவரது அரசியல் அஸ்த்தமனமாக இருக்கக்கூடும். அவ்வாறில்லாமல் அவர் வென்றால்கூட முகாவுக்கு பெருத்த சேதாரம் ஏற்பாடாது! அது எப்போதும்போல் முகா அகக்ரைப்பற்றில் தலை தூக்க முடியாமல் இருக்கிறது என்றமட்டிலுமே கணக்கிலெடுக்கப்படும்.

கறுப்பு ஆடு
அதேவேளை சாய்ந்தமருதில் முகா பிரமுகர்களிடையேயான பகை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் அண்மைக்காலமாக முகா தலைவரின் பேச்சுக்கள் ஹரீஸுடனான உறவுகள் சீராகத்தான் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதேவேளை நிசாம் காரியப்பரும் வெளிப்படையாகவே தலைமைத்துவத்தை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். இன்று அவர் அமைதியாக இருந்ட்தாலும் உள்ளுக்கும் தணல் இருக்ககூடும். இதுவும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

தோல்விகளின் நாயகன்
முகா வின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் மீது கட்சி ஆதராவளர்களிடையே காட்டமான விமர்சனம் இருக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் கட்சியை வெல்லவைக்கமுடியாமல் கஷ்ட்டப்படுகிறார். தொடர்ந்து மக்கள் ஆதரவில் மிகப்பலவீனமான நிலையிலேயே அவர் இருக்கிறார். இம்முறை  முன்னேற்ற அறிகுறி எதையும் காணோம்!


தொடரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

குருபரனின் கோணலான கேள்விகள்


மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் என்ற தலைப்பில் நடராஜா குருபரன் அவர்கள் எழுதிய கட்டுரையின் கடைசியில் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.

அந்த கேள்விகளுக்கு என்னாலான பதில்களை அளித்திருக்கிறேன். ஆயினும் இது ஒரு சமூகத்தின் பிரச்சினையாக இருக்கின்றபடியால் இப்பதில்களை என்னும் கூர்மைப்படுத்த நண்பர்கள் உதவமுடியும். (உங்கள் உதவிகள் உங்களின் பெயர்குறிப்பிட்டே வெளியிட தீர்மானித்திருக்கிறேன். )


1) பிரச்சனைக்கு உரிய கோந்தைப்பிட்டி வலைப்பாடு அதாவது வாடிவீடுகள் அமைக்கப்பட்ட காணி கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியதா இல்லையா?

இலங்கையில எங்காவது மீன்பிடி வாடி தனியார் சொத்தாக இருந்திருக்கிறதா? கடல் ஓரம் அரசாங்கத்துக்குத்தானே சொந்தம்? அவ்வாறான பொதுச்சொத்தான கடற்கரையில்தானே மீனவர்கள் வாடியமைக்கிறார்கள்? அவ்வாறு பயன்படுத்துவதற்குத்தானே அரசாங்கமும் அனுமதியளிக்கிறது?

2) இந்தக் காணியை 2006ல் தற்காலிக பாவனைக்கு என எழுத்து மூல அரசாங்க அனுமதியுடன் கப்பல் கூட்டுத்தாபனம் விடத்தல் தீவு மக்களுக்கு வழங்கிதற்கான ஆதாரம் உள்ளதை எவ்வாறு புரிகிறீர்கள்?

முஸ்லிம்களை விரட்டிவிட்டு விடத்தல்தீவு ஆட்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். இன்று அதே அரசாங்கம் போகச்சொன்னால் மட்டும் கசக்கிறதா?

3) விடுதலைப் புலிகளின் காலத்தில் அமுதன் முஸ்லீம்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் இந்தப் பகுதி அவர்களுடையது என கூறியதனை ஏற்றுக் கொண்டால் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அல்லது உடன்பாடுகள் சட்ட அந்தஸ்த்து உடையவை என்று பொருள்படும் …ஏற்றுக் கொள்கிறீர்களா?

உடன்பாட்டுக்கும் நடவடிக்கைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியாதா? உடன்பாடு எந்த நெருக்குதல்களும் இன்றி எட்டப்பட்டிருந்தால் மதித்துத்தானே ஆகவேண்டும்?

4) அரசாங்கத்தின் கப்பற் கூட்டுத் தாபனக் காணியை புலிகள் உங்களுக்கு உரியது எனக் கூறியதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா? அரசாங்க அதிகாரிகள் குறிப்பாக அப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்த அஸங்க அபயகுணசேகர கொடுத்த அத்தாட்சிக் கடிதத்திற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா?

மேலே உள்ள பதில்களை மீள வாசிக்கவும்

5) இந்தக் காணியின் பயன்பாட்டுக்கு உரிய அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தும் 3 வாரத்தில் தமக்குரிய இடம் ஒதுக்கப்பட்ட பின் அங்கிருந்து வெளியேற முடியும் என நீதிமன்றிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் விடத்தல் தீவு மக்கள் வாக்குறுதியை வழங்கியபின்னும் அவர்களது வாடி வீடுகளை அடித்து உடைத்து அவர்களின் வணக்க சொரூபங்களை சிதைத்து கடலில் போட்டது சரியென வாதிடுகிறீர்களா?

தற்காலிகமாக தங்க வந்தவர்கள் முஸ்லிம்கள் மீளக்குடியேறியது முதல் வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் குருபரன் எந்த அடிப்படையில் நம்பவேண்டும் என்கிறார்?

6) கடற்தொழிலையே நம்பி இருக்கும் அந்த மக்களுக்கு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாட்டை ரிஸாத் பதியுதீன் மேற்கொள்ளாதது இனவாதம் அல்லது தவறு இதில் எது சரி?

ஒரு இடத்தில் தீப்பற்றினால் பக்கத்தில் ஒரு வீட்டை கட்டிவிட்டுத்தான் தீயை அணைக்க முயல்வாரா குருபரன்?

7) தேசிய நூதனசாலைக் காணியை தனது நேரடி உத்தரவில் உடனடியாகப் பெற்று உங்களைக் கோந்தைப்பிட்டியில் குடியமர்த்த முடிந்த அமைச்சருக்கு விடத்தல் தீவு மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டை உடன் ஏன் செய்யமுடியவில்லை?

முஸ்லிம்களை குடியமர்த்த அவர்செய்த முயற்சிகள்தான் குருபரனுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன்மீது குரோதம் கொள்ள காரணம் என்பது இக்கேள்வியினால் ஊர்ஜிதமாகுகிறது

8) தமிழர் அல்லாத நீதிபதி ஒருவரைக் கழுதை மற்றும் நாயின் படங்களில் அவர் பெயரைப்போட்டு அவரது பெயரைச் சொல்லி நாயே வெளியில் வா என்று கூறி நீதிமன்றத்தையும் தாக்கி இருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும்?

நீதிபதியொருவை அதன் வளாகத்தில் வைத்து கொன்ற ஒருவனுக்கே சட்டப்படிதான் தண்டனை வளங்கப்பட்டுள்ளது. மாறாக சுடுவதற்கான ஆணை வழங்கப்படவில்லை என்பது இவ்வளவு காலம் ஊடகத்தில் வேலை செய்த குருபரனுக்கு தெரியாதா?

9) மன்னார் சம்பவம் நடைபெற்ற போது 45 நிமிடங்களுக்கு மேலாக பதியப்பட்ட வீடியோக காட்சியை தணிக்கை இன்றி முழுமையாக  மக்கள் முன் ஒளிபரப்புவீர்களா?

தணிக்கை இன்றி நீங்கள் யூடியூப்பில் பதிவேற்றலாமே. ஏன் செய்யவில்லை?

10) மன்னாரில் நடந்த நடக்கின்ற அடாவடித் தனங்கள் குறித்து இன, மத, மொழி, மற்றும் பதவி நிலைகளின் பாதிப்பின்றிய  அரசியல் தலையீடு இன்றிய, படையினரின் ஆட்சியாளரின் மிரட்டல்கள் இன்றிய ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு முடியுமா?

அறிவு சீவி சார், இதைவிட நாட்டில் சகல பிரச்சினைக்கும் தீர்வுகண்டு அதன்பின் மன்னார் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா?

மேலே குருபரனை நோக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் பின்னூட்டத்தில்  அளிக்கமுடியும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்