நீங்கள் இலங்கையின் சுதந்திர தின அணிவகுப்பை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் நிச்சயமாக ஒரு இராணுவ யானை மேள சத்தத்துக்கேற்ப கம்பீரமாக அணிவகுத்துவருவதையும் தன் தும்பிக்கையை உயர்த்தி தளபதிகளுக்கு மரியாதை செய்வதையும் மறந்திருக்க மாட்டீர்கள்.
கடந்த ஜூன் 3ஆம் திகதி நடைபெற்ற "இராணுவ வெற்றி" அணிவகுப்பில் இந்த யானை கலந்து கொள்ளவில்லை! காரணம் இந்த இராணுவ யானை எல்லா இராணுவ வீரனையும் போல் ஓய்வுபெற்றமையே! ஆனால் வித்தியாசம் அது முதிர்ச்சியால் ஓய்வு பெறவில்லை. பருவ வயதை தன் 12 வயதில் அடைந்தமையே!
யானை பருவ வயதை அடைந்ததும் அதை கட்டுப்படுத்துவது கஷ்டமாகலாம். அதுவும் இதற்கான யானை எப்போதும் ஆணாகவே இருக்கவேண்டுமென்பதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அது அபாயமானதாகவும் மாறக்கூடும். எனவேதான் எப்போதும் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் பழைய யானைக்கு ஓய்வு வழங்கப்பட்டு புதிய யானை குட்டி பயிற்றுவிக்கப்படுகிறது.
இராணுவ யானை Light Infantry Regimentஇன் mascot ஆக 1961 முதல் இருந்து வருகிறது. இதற்காக தேர்வுசெய்யப்படும் யானை எப்போதும் கந்துல என்றே பெயரிடப்படும். கந்துல என்பது துட்டகெமுனு மன்னனின் அரச யானையாகும். இந்த யானை இலங்கையின் இறைமையை பாதுகாக்க மன்னனுடன் பல போர்களில் பங்குபற்றியிருதது. இந்த யானையை நினைபடுத்தும் விதமாகவும் கௌரவிக்குமுகமாகவுமே கந்துல என்று பெயரிடப்படுகிறது.
கந்துலVI அதன் 7 வருட சேவையை பூர்த்தி செய்ததாக பானாகொடை இராணுவ தளத்தில் கடந்த மே 20 இல் நடைபெற்ற விசேட ராணுவ மரியாதை அணிவகுப்புடன் ஓய்வு பெற்றது. இவ்வைபவத்தில் 100 இராணுவ வீரர்கள் பங்கு பெற்றார்கள். இந்த யானையை ஒரு இராணுவ வீரனாகவே பார்ப்பதாக அதன் பொறுப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் ஜகத் கொடித்துவக்கு தெரிவித்தார்.
தன் 7 வருட சேவைக்காலத்தில் பல அணிவகுப்புகளில் பங்குபெற்றிய கந்துலIV 2006 இல் இலங்கையில் நடைபெற்ற SAF போட்டிகளுக்கான சுடரை ஏந்தும் பாக்கியத்தை பெற்றமை சிறப்பம்சமே.
தன் ஓய்வு பெறும் நாளில் கந்துலIV சக இராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச்சென்றது. லெப்டினன்ட் கேர்ணல் ஜகத் கொடித்துவக்கு ஓய்வு பெறும் பிரியாவிடை அறிவித்தலை வாசித்தார். இது அதிகார பூர்வமாக இராணுவ கடமையில் இருந்து விலகுவதை குறிக்கிறது. இதன் பின் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும் விதமாக தான் பழக்கப்பட்டது போலவே மெதுவாக நடந்தவாறு சீருடை அணிந்த இராணுவ வீரர்களை கடைசித்தடவையாக பார்வையிட்டது.
இதன் அடுத்த அங்கமாக தன் இடத்திற்கு வந்திருக்கும் புதிய யானையிடம் தும்பிக்கை மூலமாக தன் கடமைகளை கையளித்து தன் இடத்தில் இருந்து விலக கந்துலVII அதன் இடத்தில் வந்து நின்று கொண்டது.
கந்துலVI பிளிறியது கந்துலVII க்கு GOOD LUCK சொன்னது போல் இருந்தது.
இதன் பின் கந்துலIV ஐ அதன் வீடான பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு கொண்டுசெல்வதற்காக் lorry இல் ஏற்றுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. என்ன இருந்தாலும் 7 வருடங்களாக தான் வாழ்ந்த இடத்தில் இருந்து பிரிய யாருக்குத்தான் மனம் வரும்? இருந்தாலும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் மிகப்பெரிய வரவேற்புடன் தன் தாய் தந்தையான சுகுமாலி - நீலா தம்பதிகளுடன் சேர்ந்துகொண்டது.
புதிய யானைக்குட்டி கெமுனு இனி கந்துலVII ஆக அழைக்கப்படும்.
கந்துல தேர்ந்தெடுத்தல்
இந்த தேர்வு நிறைய சட்ட திட்டங்களையும் ஆவணப்படுத்தலையும் கொண்டது. தேசிய மிருக காட்ட்சியகத்துக்கும் ராணுவத்டுக்கும் இடையில் நடைபெறும் பரிமாற்றத்தில் அமைச்சரவை அங்கீகாரம் மிக முக்கியமானதாகும்.
இதன் பின் பால்குடி மறந்த தேகாரோக்கியம் உள்ள ஆண் யானைக்குட்டி தேர்ந்தெடுக்கப்படும். இந்த யானையின் உரிமை எப்போதும் தேசிய மிருக காட்சியகத்துக்கு உரியதாகும். அதன் மிருக வைத்தியர்கள் கந்துலவை சீரான இடைவெளிகளில் பரிசோதித்து இராணுவத்திற்கு ஆலோசனை வழங்குவார்கள். இதன் பின் பின்னவலவிலேயே பயிற்சி ஆரம்பமாகிவிடும். கெமுனு இராணுவ ஒழுக்கத்தையும் அணிவகுத்தலையும் இதன் போதே கற்றுக்கொண்டது. இதற்கு பானாகொடை இராணுவ தளத்தில் எல்லா இராணுவ வீரனையும் போல நேர சூசிக்கு இயங்க பழக்கப்படுகிறது. வெயிலில் அதிக சத்தம் மிக்க வைபவங்களில் அணிவகுப்பது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை.
பண்டைய காலத்தில் இருந்து யானைகள் இலங்கையின் இராணுவத்தில் முக்கிய அங்கமாக இருந்து வந்திருக்கிறது. கந்துல மூலம் இந்த பாரம்பரியம் நினைவூட்டப்படுகிறது.
இது The Sunday Times இல் 21.06.2009 ஆம் திகதி வெளிவந்த மாலக் ரொட்ரிகோ எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவமாகும் .
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.