நவீன தொடர்பாடல் தொழிநுட்பத்தை உபயோகிப்பதில் இலங்கை எப்போதும் முன்னோடியாகவே இருக்க விளைந்திருக்கிறது. இதற்கு இலங்கையின் கல்வியறிவு வீதம் எப்போதும் உதவியே வந்திருக்கிறது..
அண்மைக்காலமாக, அதாவது மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றபின் அசுர முன்னேற்றம். பல அரச நிறுவனங்கள் இணைய பக்கங்களை திறந்தன. கிழக்கு மாகாணத்திற்கு கூட ஒரு இணையம் கடந்த மாகாண சபை தேர்தல் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 என்ற அரச தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு மைல் கல்லாகும்.
இந்த இணையங்களை வடிவமைப்பதில் சில பணக்கார பையன்கள் தான் ஈடுபட்டு சம்பாதித்தார்கள் என்ற முணுப்புகள் கேட்டாலும், இது எல்லாம் சகஜம் என்ற மன நிலை இலங்கையர்களில் மிகப்பெரும்பான்மை ஆனவர்களுக்கு இருப்பதாலும், யார் குற்றினாலும் அரிசி ஆனால் சரி என்பதாலும் அவை பற்றி பெரிதான அலட்டல்கள் இல்லை.
இவ்வாறான நிகழ்வுகளால் இலங்கை பிராந்தியத்தில் நவீன தொடர்பாடல் தொழிநுட்பத்தில் முதன்மை வகிக்கிறது என்ற மிதப்பில் தான் இருந்தோம்.
இவ்வாறான சந்தர்பத்தில் பெட்ரோல் விலை தொடர்பான வழக்கின் தீர்ப்பும் மிக குறுகிய நேரத்தில் சகல நவீன தொடர்பாடல் தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி மக்கள் அனைவரையும் சென்றடைந்தது. தொலைக்காட்சி வானொலி முதல் sms வரை இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு செய்தி மொத்த நாட்டு மக்களையும் சென்றடைந்தது.
ஆனால் கடந்த புதன் கிழமை வெளியான தீர்ப்பு இதுவரை அமைச்சரவையை சென்றடையவில்லை.
பாமர மக்கள் "ஏன் தீர்ப்பு courier மூலம் அனுப்பபடவில்லை' என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்நிகழ்வு மூலம் தபால் துறை தொடர்பான அவ நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
.......................................................................................................
ஒரு பத்திரிகையில் கார்டூன்..
ஜனாதிபதி கேட்கிறார்
தபால்காரரிடம்
"என்ன இண்டைக்கும் கடிதம் இல்லையா"
......................................................................................................
இலங்கை நிகழ்வுகள் தொடர்பான கார்டூன்களுக்கு http://srilankanewspapercartoon.blogspot.com/