- ஊடகங்களின் கபட நிகழ்ச்சித்திட்டம்..
- 18 ஆவது திருத்தம் முடியாட்சிக்கு வழிகோலுமா?
- பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது அதிகார துஷ் பிரயோகத்தை தடுக்குமா?
- தமிழ் ஊடகங்களின் காழ்புணர்ச்சி
- ததேகூ எதிர்க்கும்! சீ சீ இந்த பழம் புளிக்கும் !
- இன்றைய ஆகக்குறைந்த தேவை என்ன?
அரசியல் அமைப்பில் 18 ஆவது திருத்தம் தொடர்பாக இன்று அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுவதை காண்கிறோம். இதில் கூட ஊடகங்களில் தமிழ் ஊடகங்கள் ஒரு திட்டத்துடனும் ஆங்கில சிங்கள ஊடகங்கள் இன்னொரு நிகழ்ச்சி திட்டத்துடனும் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.
Bar Association statement opposing the 18th Amendment
யுத்தம் முடிந்து செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது பிரச்சினையாக்கி அதை விற்று காசு சம்பாதிக்கும் மிக கீழ்த்தரமான உத்திக்கு ஜனநாயக சாயம் பூசி இவ்விரு வகை ஊடகங்களும் அதற்கு மேல் வாசனைக்கு தமது நிகழ்ச்சி திட்டத்தை கலந்து தருகின்றன. கடைசியில் கேக் ஐ தின்றாலும் ஏன் தொட்டாலும் இந்த வாசனை தொற்றிக்கொள்ளும் அபாயம்இருக்கிறது.
18 ஆவது திருத்தத்தில் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விதி முறைகளை மாற்றுவது மட்டும் இடம்பெறவில்லை. ஒருவர் ஜனாதிபதியாக எத்தனை தடவை பதவி வகிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களே. சந்திரிக்கா போன்ற ஒரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்தவும் சமமான தடவைகள் மாத்திரம் பதவி வகிப்பது என்பது பயங்கரவாதத்திட்கு ஆதரவளிக்காத மக்களுக்கு நியாயமாக தோன்றப்போவதில்லை. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அன்றி யாரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவும் முடியாது. 2 தடவைக்கு மேல் மக்கள் ஆணை பெற்று பதவி வகிக்கும் ஜனாதிபதி முறை முடியாட்சி முறையும் அல்ல.
இது தேர்தல் முறைகேடுகளை அதிகரிக்கும் என்றும் அரச வளங்களை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று சிலர் சொன்ன போதும் 2 தடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி கூட தனது கட்சி பதவியில் இருப்பதை உறுதி செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற உத்தரவாதமும் இல்லை. அதேபோல் மகிந்த வுக்கு பிறகு பசில் ஜனாதிபதியாக அல்லது வேறொரு உறவினர் ஜனாதிபதியாக போட்டியிடவே வாய்ப்புள்ள நிலையில் பதவிவகிக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மாட்டார் என்று யாரு கருதவும் முடியாது. ஆக வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல,
இன்னும் ஐதேக சின்னாபின்னமாகியுள்ள நிலையில் ஆளும் அரசாங்கத்திற்கு இன்னும் இரு மேலதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. பொது எதிர்கட்சியாக இணைவதற்கு பொன்சேகா தரப்பு கூட கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் பலமிழந்த நிலையில் இருக்கிறது.
இவ்வாறு யதார்த்தம் இருக்கும் நிலையில் சகல ஊடகங்களும் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை பற்றி மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறது. இது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதை போன்றது. ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டும் எதிர் சிந்தனை யாளர்களுக்கு செய்தி தீனியை இட்டு தமது வருமானத்தை பெருக்கி கொள்ளுகிறது. அதேவேளை ஜனரஞ்சகமான ஒரே தலைவரான மகிந்தவிற்கு ஆதரவான மக்கள் இதை கணக்கில் எடுக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவு நிலையையே எடுப்பார்கள் என்தால் இவ்வெதிர்ப்பை சமாளிப்பதை இலகுவாகவும் ஆக்குகிறார்கள். மாறாக இத்திருத்தத்தில் உள்ள ஏனைய பாதகமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் கட்சி பேதமின்றி ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியும். இதை செய்யாமல் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் வெற்றுக்கூச்சல் போடுகின்றன.
தமிழ் ஊடகங்கள் ஜனாதிபதி மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டும் இடமாக இதை பாவிக்கிறார்கள். ததேகூ பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் பெருவாரியான தமிழர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிந்திருப்பது அவர்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதி இல்லை என்பதனை தெளிவாக்கும். அதேவேளை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ததேகூ எதிர்ப்பு தெரிவிக்க போகின்றது என்று அறிவித்திருக்கிறது. அரச தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்து இன்று அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ள நிலையில்
சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இது இருக்கிறது. ததேகூ ஒரு கொள்கையுடைய கட்சியாக இருந்திருந்தால் ஆரம்பம் முதல் ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கமாட்டோம் என்று (வழமை போல ) அறிக்கை விட்டிருக்கலாம் தானே ?
தேர்தல் ஆணையாளரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக சிலர் அலறுகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்யவில்லை. வெறுமனே முன்னுக்கு பின் முரணான அறிககிகளாலும் செயல்களாலும் எரிச்சல் அடைய செய்வது மட்டுமே அவர் இதுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருப்பது. இதைவிட முழுமையான தேர்தல் முறை மாற்றத்தை பொதுமக்கள் கோரவேண்டும். ஆக குறைந்தது எமது காலத்தை விரயம் செய்து பெரும் பொருட்செலவில் நடாத்தப்படும் இன்றைய பழைய தேர்தல் வாக்களிப்பு முறையாவது மாறவேண்டும். அதற்கு தங்கள் ஆதரவை இதன்மூலமாவதுபதிவுசெய்யலாம்..
http://www.facebook.com/home.php?#!/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703?ref=ts
EKSaar can be reached at eksaar1@facebook.com
EKSaar by
EKSaar is licensed under a
Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at
eksaar.blogspot.com.