இந்த வாரத்தின் பேசு பொருளாக இன மத மொழி வேறுபாடின்றி இருந்தது எயார்டெல் தான்.
கடந்த காலங்களில் பல நிறுவனங்கள் வழங்கிய சலுகைகள் ( சரியா சொன்னா விலை குறை ப்புகள் ) பற்றி ஒரு கணித ரீதியான பதிவை மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
இன்று டயலாக் 300/- க்கு 1000 நிமிடம் வெளிசெல்லும் அழைப்புகளை வழங்குகின்றது. அப்படியாயின் ஒரு நிமிடத்துக்கு அவர்கள் கட்டணம் (இலாபம் அடங்கலாக) 30 சதம்மாத்திரமே! அப்படியாயின் மொன்னொரு காலத்தில் 5 ரூபா ஆக கட்டணம் இருந்த போது எவ்வளவு லாபம்..
இதுகூட பரவாயில்லை மொபிடெல் ஏறத்தாள இதே கட்டண பொதியை உபகார என்ற பெயரில் அரச ஊழியர்களுக்கு மாத்திரம் அறிமுகப்படுத்தியது. (ஊழலின் தாய் வீடு அரச துறைதான்). அதுகூட FUP என்ற பெயரில் அதற்கு நேர வரையறை கூட.. மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா..?
இந்த வேளையில்பலர் எடுத்திருக்கும் முடிவுதான் என்னதான் மற்றவர்கள் விலை குறைப்பு செய்தாலும் அது எயார்டெல் இன் விலையை விட குறை யாதவரை எயார்டெல் க்கு மாறுவது எங்கள் தார்மீக கடமையாகும்.
இவ்வேளை ஒரு அரசிய சிந்தனை. எயார்டெல் இதுவரை எந்தவொரு உத்தியோக பூர்வமாக அவர்களது கட்டணம், COURAGE பற்றி எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. இருந்தும் சும்மா ஒரு நம்பிக்கையில் பெருங்கூட்டம் அவர்கள் பின்னால். அந்த பாணியில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஒபாமா பாணியில் வெல்லலாம்..

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment