ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம்கோரி ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கெதிராக பாவிக்கப்பட்ட வசனங்கள் பிஸ்ஸு பூசா, மிஸ்டர் பீன்.
“A politician should have a lot of patience not only to head a
government but also to be an opposition leader. Although social service
is good, you cannot win only by doing social service. Some others think
they can win by doing politics through the media. One cannot go forward
in politics through the media. Politicians who are limited to the media
are like papdams,”
Ranil Wickremesinghe
<!-- adsense -->ரணில் விக்கிரமசிங்ஹவை மிஸ்டர் பீன் ஆக சித்தரித்து நாடுமுழுவதும் சுவரொட்டிகள் ஒரு காலத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அன்று அதை எதிர்க்கட்சி செய்தது. இன்று அவர் கட்சிக்காரர்களே செய்கிறார்கள்.
ரணில் ஒரு வசீகரமற்ற தலைவர்தான். ஆனாலும் அவரது காய்நகர்த்தல்கள் தேர்ந்த அரசியல்வாதிக்குரியவை. இல்லாவிட்டால் 94க்குப்பின் தொடர்தோல்வியை கட்சி அடைந்துகொண்டிருந்தபோதும் அவரால் தலமைப்பதவியில் தொடர்ந்து இருக்கமுடியுமா?
ரணில் புலிகள் மீது மென்மையான போக்கை கையாண்டது 94க்குப்பின் பெரும்பாலான இலங்கையர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இவ்வெறுப்புத்தான் இவரது ஆட்சிக்கும் ஆப்பானது. தேர்தலில் புலிகளும் இவருக்கு ஆப்பு வைக்க அரசுக்கட்டிலை இழந்தார் ரணில். அதே ஆப்பு புலிகளுக்கு மாறி இறங்கியது வேறுகதை.
அதன்பின் மஹிந்தவின் வசீகரத்திற்குமுன் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த வெற்றிகரமாக நிறைவு செய்தபின் ரணிலால் மட்டுமல்ல வேறுயாராலும் ஆட்சியை பிடிப்பது யாதார்த்தமற்ற ஒன்றும் கூட.
ஆயினும் மஹிந்த மேலதிகமாக ஐதேக உறுப்பினர்களை தனது ஆட்சிக்குள் உள்வாங்க தயாராக இல்லாமையால் விலைபோகாத சரக்காகிப்போயுள்ள ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெறுமனே செலவு செய்வது மட்டும்தானா, உழைப்பதில்லையா என்ற வெறிய்ல் இருக்கிறார்கள்.
எனவே ரணிலுக்கோ வேறொரு ஐதேக தலைவருக்கோ கிடைக்ககூடிய மிகப்பெரிய பதவி எதிர்க்கட்சித்தலைவர் பதவி மட்டும்தான். அதனை உறுதி செய்யத்தான் கட்சிக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார். சஜித் குழு எதிர்கட்சித்தலைவர் பதவியை தொடர்ந்து ரணிலுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தாலும், அதிகாரம்மிக்க தலைமைப்பதவி போனபின் அவ்வாக்குறுதி எத்தனை நாட்களுக்கு காக்கப்படும்?
ஐதேகவுக்கு கரு ஜயசூரியவோ சஜித் பிரேமதாசவோ தலைமைவகித்தாலும் இந்நிலவர்த்தில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. இவர்களால் கொழும்பு மாநகர சபையைதானும் வெல்லமுடியுமா என்பதே கேள்விக்குறி. அப்படி வென்றால்கூட அது சாதனையாக கணக்கில் எடுக்கப்படாது. இது தெரிந்த சஜித், தனது இமேஜை பாதுகாக்க கருவை தலைமைப்பதவிக்கு போட்டியிடச்செய்கிறார் என்றே அனுமானிக்கமுடிகிறது. பிஸ்ஸு பூசா என்று தாம் அழைத்த தலைவரை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் ஐதேகவின் அடிமட்ட தொண்டர்களில் பாதிப்பேராவது வாக்களிக்கச்செல்வார்களா?
மஹாராஜா நிறுவனங்களுடன் மோதல்
மஹாராஜா ஊடக நிறுவனத்துடனான ரணிலின் மோதல் இன்னுமொரு சுவார்ஷ்யம். எமக்குத்தெரிந்து மிலிந்த மொரகொட, ரோசி சேனநாயக்க, ஹர்ஷா டி சில்வா, புத்திக்க பத்திரண, சிறீ ரங்கா ஆகியோர் மஹாராஜா ஊடகத்தின் ஆதரவு காரணமாக பதவிக்கு வந்தவர்கள். சிறீ ரங்கா கூட தனது கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு இடம் கேட்டமை சன்டே டைம்ஸில் வந்திருந்தது. எனவே மஹாராஜ நிறுவனம் இரண்டு தேசியப்பட்டியல் இடங்கள் கேட்டது என்பதில் கொஞ்சமாவது உண்மையிருக்கும் என்றே தோன்றுகின்றது.
இல்லாவிட்டால் பல விடயங்களில் அடக்கி வாசிக்கும் மஹாராஜா ஊடகம் ஐதேக தலைமை விடயத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் என்ன.
ரணில் இப்போதாவது விரல்களை தாண்டி வளர்த்த நகத்தை கவனித்திருக்கிறார்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.