இலங்கையில் மெட்ரோ நியூஸ் என்று ஒரு பத்திரிகை வீரகேசரி பத்திரிகை குழுமத்திலிருந்து வருகிறது.
மெட்ரோ நியூஸ் என்றதுமே ஆங்கில பத்திரிகை என்று நினைத்துவிடாதீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கான பத்திரிகையே அது. ஏன் ஆங்கில பெயர் என்று சில தமிழ் வளர்க்கும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள். எல்லாம் பிரபலம் எனும் போதை.
முதல் பக்கம் ஒரு பெரியபடம் அத்துடன் இரண்டுவரி செய்திகள் நடுவில் 2 பக்கம் சினிமா ஒருபக்கம் தொலக்காட்சி நிகழ்ச்சி நிரல் ஒரு பக்கம் விளையாட்டு அத்துடன் ஓரிரண்டு பக்கம் மசாலா கதை (உண்மை சம்பவமாக அல்லது துப்பறியும் கட்டுரையாக) ஏறத்தாள ஜனனி தரத்தில் இருக்கும்.
இந்தப்பத்திரிகையின் தரம் பற்றி ஒரு பானை சோற்றுக்கு இரண்டு சோறு பதம் பார்ப்போமா?
இப்பத்திரிகையில் கேள்வி பதில் அம்சமும் இருக்கிறது. அதில்
கே: இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால தலைமைப்பொறுப்பு டில்ஷானிடம் வளங்கப்படுமா?
ப: ... ஒரு நாள் போட்டி ஒன்றின்போது டில்ஷான் தலைமை ஏற்று நடத்தியபோது மிகுந்த பதற்றமடைந்தார்.
கே: இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக யாரை கருதுகிறீர்கள்?
ப: ....ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுக்கும் சமிந்த வாஸ், பின்னுக்கு இடைஞ்சல் கொடுக்கும்..
இது பிரசுரமாகி ஒரு மாதம்ளவே இருக்கும். எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்?
இப்பதிவை வாசிப்பதற்குமுன் ஒரு வேண்டுகோள் : உங்களுக்கு முதற்கண் என் நன்றிகள். நீங்கள் ஒரு கமல் பக்தனாக இருந்தால் அந்த சட்டையை கழற்றிவிட்டு வருமாறு வேண்டுகிறேன்.
கமலின் இரண்டுபடங்களின் பெயரைக்கூறச்சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது நாயகன், அன்பே சிவம் ஆகியவையே. நாயகனில் நாலுபேருக்கு நன்மை செய்தால் எதுவுமே தப்பில்லை என்று கூறும் நாயகன் கடைசியில் எவ்வித குற்றமும் செய்யாத என்னை எதற்கு அநாதையாக்கினாய் என்ற கேள்விக்கு பலியாகிப்போகிறான். மற்றவன் வயிற்றுக்குள் உன் உணவு இல்லையப்பா என்று கூறும் அன்பே சிவம், அன்பை மட்டுமே போதிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை இல்லை.
என்னதான் நியாயம் இருந்தாலும் வன்முறையை கையிலெடுத்தவன் வன்முறைமூலமே சாவதை நியாயப்படுத்தியிருக்கும் படங்களான சுப்ரமணியபுரம், அஞ்சாதே போன்ற படங்கள் வெற்றிபெறுகின்ற; தேசபக்தி என்ற போர்வையில் மனிதர்களை சுட்டுத்தள்ளுகின்ற விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் காணாமல் போயிருக்கின்ற; சுருக்கமாக மக்கள் வன்முறையை நிராகரித்திருக்கிற காலப்ப்பகுதியில் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்ற படத்தை கமல் நமக்கு தருகிறார்.
இந்த உன்னைப்போல் ஒருவன்தான் இலங்கையின் திரையரங்குகளில் இருந்து நேற்றோடு தூக்கப்பட்டுள்ளது. பதிவுலகில் கிழி கிழியென்று கிழிக்கப்பட்ட கந்தசாமி இன்னும் ஓடிக்கொண்டிருக்க பதிவுலகால் ஆஹா ஓஹோ என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட உன்னைப்போல் ஒருவன் திரையரங்கை விட்டு ஓடியிருக்கிறது.
மொத்தமாக இரண்டுமணிநேரமே ஓடும் இந்த படத்தில் வானொலிகளில் ஒலிபரப்பான பிரபலமான பாடலகள் இல்லை என்றே சொல்லலாம். கதையோட்டத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்று கமல் கருதியிருந்தால் சில பாடல்களை வெளியிட்டு படத்தில் பாடல்கள் இருப்பதாக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரச்செய்திருப்பது எந்த ஒரு terminology ஐ பாவித்து நியாயப்படுத்தினாலும் இலகு மொழிப்பிரயோகத்தில் ஏமாற்றுதல் என்றே சொல்லப்படமுடியும். அத்துடன் I AM NEW FACE OF TERROR என்று பலகுரல்கள் சொல்லுவதன்மூலம்; பலர் வன்முறையை கையிலெடுப்பதாக மக்களை நம்பசெய்ததும் ஏமாற்றுதலே.
படத்தில் கமல் கேட்பதுபோல் ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் உணவு கொடுத்து வளர்பீங்களா என்றகேள்விகளை அரசாங்கங்கள் கேட்கத்துவங்கினால் சிறை அலல்து திறந்த வெளிச்சிறை என்று அரசாங்கங்களுக்கு தலையிடி தரும் பிரச்சினை இருக்காதே.. இதையாவது ஏன் யாரும் எதிர்க்கவில்லை?
அதுமட்டுமா படம் முழுக்க வியாபித்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பெரிதாக யாரும் பேசவில்லை.
குண்டுகள் இல்லாத பைகளை மக்கள் கூட்டம் மிக்க இடங்களில் கமல் வைக்கிறார். அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன?
உயரமான கட்டடத்தின் கமல் ஏறுகிறார். இலங்கையென்றால் எல்லா உயர்ந்த கட்டடங்களின் உச்சியிலும் நவீன கருவிகளுடன் இராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்த்தானுடனும் சீனாவுடன் சண்டையிட தயாராகும் இந்தியாவின் இராணுவம் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி ஒலிபரப்பாகும் பாங்கு ஒலியும், இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதும், கமலின் தாடியும், கமலின் பெயர் மறைக்கப்பட்டிருப்பதும் சொல்லவருவது என்ன?
படத்தில் 3 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் குஜாரத் கலவரங்களின் பின் வன்முறையை கையிலெடுப்பவர். இன்னொருவர் சொந்த மண்ணை இழந்து அதற்காக போராடும் ஜனநாயக ரீதியில் பலகட்சி அரசியல் முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலஸ்த்தீன இயக்கத்துடன் தொடர்புகளை பேணுவதாக காட்டப்படுகிறார். இவை இரண்டையும் படம் எவ்வாறு குற்றம்பிடிக்கிறது?
இன்னுமா கமலைப்பிடிக்கமுடியவில்லை என்று ஆத்திரப்படும் மோகன்லால் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ஆவேசமாக செல்கின்றார். கமலின் கை குலுக்க..
இவ்வாறான இன்னும்பல அபத்தங்கள் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன.
இந்தப்படம் பற்றிய ஞானியின் கருத்தை வாசிக்க http://www.gnani.net/.
மொத்தத்தில் நரகாசுரன் அழிந்த நாளாக இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி பண்டிகையன்று நவீன நரகாசுரனான உன்னைபோல் ஒருவனும் தூக்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியே..
இந்த ஞாயிறு உடன் வீட்டில் கழிந்தது. அதில் சில சுவாரசியங்களை உங்களுடன் பகிரலாம்.
வெற்றி TV முதல் தடவையாக பார்த்தேன். (பயணங்கள் காரணமாக பிந்திப்போனது). Tune பண்ணி முடித்தபோது நேபாளி படம் போய்க்கொண்டிருந்தது.
நேபாளி என்ற பெயர் காரணமாக படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அதனால் அதைப்பார்த்திருக்கவில்லை. காதல் காட்சிகளாகட்டும் மற்றவையாகட்டும், எல்லாம் பிடித்திருந்தது. பரத்தின் மரணம் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடித்திருந்தது. கதாநாயகனின் மரணம் சோகமின்றி ஜீரணிக்க கூடியதாக இருந்தது படத்தின் தரத்துக்கு சான்று.
தம்பதியர் தனியாக வாழ்வது எவ்வளவு பெரிய என்பது பயமுறுத்தி புரியவைக்கப்பட்டுள்ளது. இனி எல்லா நண்பர்களுக்கும் தனியாக வாழ வேண்டாம் என்று சொல்லவேண்டும்.
அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மது போதை அல்லாத காட்சிகள் censor செய்யப்பட்டதும் இப்படத்தில் தான் காணக்கிடைத்தது. சிறையில் ஆண் கைதிகள் குளிக்கும் காட்சியும் censor செய்யப்பட்டது.
வெற்றிக்கு Tune பண்ணியபோது இலவச இணைப்பாக டாண் TV கிடைத்தது. ஒரு ஆரோக்கியமான போட்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது டாண் TV இல் கிடைக்குமா என்பது சந்தேகமே..
டில்ஷானின் மீது ஆத்திரம். மலை போல் ஒரு இலக்கு இருக்கும்போது பொறுப்பற்று; ஜயசூரிய ஆட்டமிழந்த பின்னும் நிதானமாக டில்ஷான் ஆடவில்லை. அவ்வளவு விரைவாக அடித்தாடவேண்டியிருக்கவில்லை. தான் அப்படித்தான் என்று காட்டப்போய் விக்கட்டை தாரை வார்த்தார். அதேபோல் மகேலவும். வெட்டோரியின் அந்த ஓவரில் பொறுமை காத்திருக்கலாம். வெல்ல முடியாவிட்டாலும் இலக்குக்கு அருகில் கொண்டு சென்றிருந்திருக்கலாம். Run Rateக்காவது உதவியிருக்கும்.
அசத்தப்போவது யாரு பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டும். இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபற்றுவது எனக்கு உடன்பாடு இல்லாத விடயம். சுயமாக சிந்தித்து ஒரு 16 வயதுக்கு மேல் அவர்கள் கொமடி பண்ணினால் பரவாயில்லை. அம்மாவின் அப்பாவின் திணிப்புகளால் பிஞ்சில் வெம்பி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பிரக்ஞை உள்ள ஒருவராவது எதிர்க்கவில்லயா?
மின்னல் நிகழ்ச்சி ஆர்வத்துடன் பார்க்க வேண்டியதாகியது. ரங்காவுக்கோ அல்லது அஸாத் சாலிக்காகவோ அல்ல. நீண்ட காலத்தின் பின் சுவாரசியமாக்கிய ஹரீஸுக்காக.
மின்னலின் ஆஸ்த்தான அரசியல்வாதிகளாக இருந்த ரவி ராஜ், சிவாஜிலிங்கம், பஷீர் சேகுதாவூத், இராதா கிருஷ்ணனின் வரிசையில் விரைவில் அஸாத் சாலியும் ஆனந்த சங்கரியும் சேர்ந்திருகிறார்கள் என்று தெரிகிறது,
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய ரங்காவின் பேச்சுக்கள் மகா கொமடி. இவர்தான் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட்டிவிட்டு கூத்து பார்க்க நினைத்தவர். (இருவரும் சண்டை பிடிக்க வேறு நாள் வருகிறோம். இப்போது மூதூர் பற்றியே பேசுவேம் என்று ரங்காவுக்கு ஆப்படித்தது பசுமையாக இன்றும் இனிக்கிறது) மூதூர் சம்பவம் தொடர்பாக மழுப்பல் போக்கை கையாண்டவர். சாத்தான் வேதம் ஓதுகிறது. தயவு செய்து அந்த நாய் கதையை விடுமாறு அவரை யாராவது சொல்லுங்கள். வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவன்..
அதில் மகா கொமடி, ஹரீஸிடம் கேள்விகேட்ட அந்த கல்முனை நபரை உங்களுக்கு தெரியுமா என்று ஹரீஸிடம் கேட்டதுதான். ஒரு நகரத்தில் வாழும் எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டியது மேயரின் கடமையா என்ன? பட்டதாரி ஒருவர் கேட்கும் கேள்வியா இது? என்ன கொடும சார்.