Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label அரசியல் நிகழ்ச்ச. Show all posts
Showing posts with label அரசியல் நிகழ்ச்ச. Show all posts

பாலத்திற்கு பின்னாலுள்ள பெயர்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.

இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.

இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.

தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.

ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.


ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!

நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

TV உடன் ஞாயிறு

இந்த ஞாயிறு உடன் வீட்டில் கழிந்தது. அதில் சில சுவாரசியங்களை உங்களுடன் பகிரலாம்.

  • வெற்றி TV முதல் தடவையாக பார்த்தேன். (பயணங்கள் காரணமாக பிந்திப்போனது). Tune பண்ணி முடித்தபோது நேபாளி படம் போய்க்கொண்டிருந்தது.

    நேபாளி என்ற பெயர் காரணமாக படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அதனால் அதைப்பார்த்திருக்கவில்லை. காதல் காட்சிகளாகட்டும் மற்றவையாகட்டும், எல்லாம் பிடித்திருந்தது. பரத்தின் மரணம் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடித்திருந்தது. கதாநாயகனின் மரணம் சோகமின்றி ஜீரணிக்க கூடியதாக இருந்தது படத்தின் தரத்துக்கு சான்று.

    தம்பதியர் தனியாக வாழ்வது எவ்வளவு பெரிய என்பது பயமுறுத்தி புரியவைக்கப்பட்டுள்ளது. இனி எல்லா நண்பர்களுக்கும் தனியாக வாழ வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

    அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மது போதை அல்லாத காட்சிகள் censor செய்யப்பட்டதும் இப்படத்தில் தான் காணக்கிடைத்தது. சிறையில் ஆண் கைதிகள் குளிக்கும் காட்சியும் censor செய்யப்பட்டது.

  • வெற்றிக்கு Tune பண்ணியபோது இலவச இணைப்பாக டாண் TV கிடைத்தது. ஒரு ஆரோக்கியமான போட்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது டாண் TV இல் கிடைக்குமா என்பது சந்தேகமே..

  • டில்ஷானின் மீது ஆத்திரம். மலை போல் ஒரு இலக்கு இருக்கும்போது பொறுப்பற்று; ஜயசூரிய ஆட்டமிழந்த பின்னும் நிதானமாக டில்ஷான் ஆடவில்லை. அவ்வளவு விரைவாக அடித்தாடவேண்டியிருக்கவில்லை. தான் அப்படித்தான் என்று காட்டப்போய் விக்கட்டை தாரை வார்த்தார். அதேபோல் மகேலவும். வெட்டோரியின் அந்த ஓவரில் பொறுமை காத்திருக்கலாம். வெல்ல முடியாவிட்டாலும் இலக்குக்கு அருகில் கொண்டு சென்றிருந்திருக்கலாம். Run Rateக்காவது உதவியிருக்கும்.

  • அசத்தப்போவது யாரு பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டும். இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபற்றுவது எனக்கு உடன்பாடு இல்லாத விடயம். சுயமாக சிந்தித்து ஒரு 16 வயதுக்கு மேல் அவர்கள் கொமடி பண்ணினால் பரவாயில்லை. அம்மாவின் அப்பாவின் திணிப்புகளால் பிஞ்சில் வெம்பி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பிரக்ஞை உள்ள ஒருவராவது எதிர்க்கவில்லயா?

  • மின்னல் நிகழ்ச்சி ஆர்வத்துடன் பார்க்க வேண்டியதாகியது. ரங்காவுக்கோ அல்லது அஸாத் சாலிக்காகவோ அல்ல. நீண்ட காலத்தின் பின் சுவாரசியமாக்கிய ஹரீஸுக்காக.

    மின்னலின் ஆஸ்த்தான அரசியல்வாதிகளாக இருந்த ரவி ராஜ், சிவாஜிலிங்கம், பஷீர் சேகுதாவூத், இராதா கிருஷ்ணனின் வரிசையில் விரைவில் அஸாத் சாலியும் ஆனந்த சங்கரியும் சேர்ந்திருகிறார்கள் என்று தெரிகிறது,

    தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய ரங்காவின் பேச்சுக்கள் மகா கொமடி. இவர்தான் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட்டிவிட்டு கூத்து பார்க்க நினைத்தவர். (இருவரும் சண்டை பிடிக்க வேறு நாள் வருகிறோம். இப்போது மூதூர் பற்றியே பேசுவேம் என்று ரங்காவுக்கு ஆப்படித்தது பசுமையாக இன்றும் இனிக்கிறது) மூதூர் சம்பவம் தொடர்பாக மழுப்பல் போக்கை கையாண்டவர். சாத்தான் வேதம் ஓதுகிறது. தயவு செய்து அந்த நாய் கதையை விடுமாறு அவரை யாராவது சொல்லுங்கள். வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவன்..

    அதில் மகா கொமடி, ஹரீஸிடம் கேள்விகேட்ட அந்த கல்முனை நபரை உங்களுக்கு தெரியுமா என்று ஹரீஸிடம் கேட்டதுதான். ஒரு நகரத்தில் வாழும் எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டியது மேயரின் கடமையா என்ன? பட்டதாரி ஒருவர் கேட்கும் கேள்வியா இது? என்ன கொடும சார்.

  • EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்

    மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு


    400 நிகழ்ச்சிகளை தாண்டிவிட்டதாக பெருமிதப்படும் அரசியல் நிகழ்ச்சியான மின்னல், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்க கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சியாக இருந்தமையை மாத்திரம் தூணாக கொண்டு இதுவரை அந்நிகழ்ச்சி நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சி முன்னிறுத்திய மறைமுக அரசியல் காரணமாக அரசியல் வாதிகள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறும் ஏட்டு சுரைக்காய்களை மாத்திரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதே காரணத்திற்காக இந்நிகழ்ச்சி மக்களிடம் இருந்தும் தூரமாகியிருக்கிறது. இனியாவது மக்களிடையே மின்ன பற்றிய கருத்து என்ன என்று சுயபரிசீலனை செய்யுமா மின்னல்?


    மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை

    EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்