Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

மத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது?



இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

  • எப்படியும் ஐமசுமு வெல்லத்தான் போகிறது
  • ரணில் இருக்கும் வரை ஐதேக பலம் பெறாது
  • இதுவரை காலமும் இருந்த கொஞ்ச நஞ்ச ஆறுதல்களும் இந்த ஐமசுமு அரசாங்கத்தில் பறிக்கப்படுகின்றன
  • வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் சிறுபான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதா?
  • தனியாக கேட்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதா? அந்த வாக்குகள் கடைசியில் யாரை போய்ச்சேரும்?
போன்ற பல்வேறு நம்பிக்கைகளும் சந்தேகங்களுமே இந்த குழப்பங்களுக்கு காரணம்.

இந்த குழப்பத்தை தீர்த்துக்கொள்ள  பின்வரும் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.



  1. ஐமசுமுவின் தோல்வி அலை பயம் :-
    வடமாகாண சபை தேர்தலை மட்டும்நடாத்திருக்கவேண்டிய அரசாங்கம் மத்தி சப்ரகமுவா மாகாண சபைகளையும் கலைத்து மொத்தமாக3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துகிறது. ததேகூ வெற்றிபெறுவது உறுதியான வடமாகாணசபை தேர்தலை மட்டும் நடாத்தினால் அங்கு ஆரம்பமாகும் தோல்வி அலை தொடர்ந்து வரும்தேர்தல்களில் தாக்கம் செலுத்தி இந்த அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என ஆளும் ஐமசுமுகருதுவதால் அந்த அலையை இல்லாமல் செய்யவே தனக்கும் வெற்றி வாய்ப்புள்ள இன்னும்இரண்டு மாகாணசபைகளையும் கலைத்து தேர்தலை நடாத்துகிறது. இதன்மூலம் 2 மாகாண சபைகளைவெல்வதை கொண்டு ஒரு மாகாண சபையின் தோல்வியை ஐமசுமு மறைக்க முயல்கிறது.
  2. மத்திய மாகாண சபையை வெல்வது இலகுவானதல்ல என்ற ஐமசுமுவின்பயம் :-மத்திய மாகாண சபையில் அரசாங்கத்தின் வெற்றி இலகுவானதல்ல என்ற உளவு அறிக்கைஐமசுமு தலைவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். இதனாலேயே தயாசிறி ஜயசேகரவை அதுவாங்கியிருக்கிறது. ஆக எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்துவது ஒன்றும் சாத்தியமற்ற விடயம் அல்ல. அது சத்தியம்தான் என்பதை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. ஆக மக்கள் நம்பிக்கையாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது அவசியம்.

    ஆக ஐமசுமுவுக்கே தோல்வி பயம் இருக்கும்போது நாம்மட்டும் ஏன் அவர்கள்தான் வெல்வார்கள் என்ற விரக்தி மனப்பான்மையில் இருக்கவேண்டும்?
  3. பஷீர் சேகுதாவூத் ஏன் வடக்கை தவிர்த்து கண்டியில்பிரச்சாரம் செய்கிறார்? :- வடமாகாண சபை தேர்தலில் பிரச்சாரம் செய்யகேட்டுக்கொள்ளப்பட்ட பஷீர் சேகுதாவூத் ஏன் அங்கு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடாமல்மத்திய மாகாணத்தில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்களின் வாக்குகள்ஐதேகவுக்கு செல்வதை தடுத்து எப்படியாயினும் முகாவுக்கு வாக்களிக்க செய்வதற்கானமுயற்சியே யாக அது இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஐமசுமு அரசாங்கத்தின்பங்காளியாக இருக்கும் முகாவுக்கு கிடைக்கும் வாக்குகளால் கிடைக்கும்உறுப்பினர்களையும் சேர்த்து ஐமசுமு மத்திய மாகாணசபையை குறைந்த நெருக்கடிகளோடுகைப்பற்றிக்கொள்ளும்.
  4. அதிக உறுப்பினர்களை பெறும் கட்சியே வெற்றி பெறும் :-
    மாகாணசபையை வெல்வதற்கு கட்சி தனியாக கூடுதலான உறுப்பினர்களை பெறவேண்டும். மத்தியஅரசாங்கத்தைப்போல் கூட்டரசாங்கம் அமைக்க முடியாது. ஆனால் அங்கு பெரும்பான்மையை கூட்டணியூடாக உறுதி செய்வதன்மூலம் மாகாண சபையில் சட்ட மூலங்களை இலகுவாகவெற்றிபெறச்செய்ய மட்டுமே முடியும். ஆக சிறிய கட்சிகளால் ஆட்சியமைப்பவரை தீர்மானிக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  5. சிறிய கட்சிகள் பேரம் பேசும் நிலமையில் இல்லை :-
    சிறுபான்மை கட்சிகளின் வழமையான தேர்தல் பிரசாரம், அவர்களுக்கு கிடைக்கும் உறுப்பினர்களை கொண்டு பேரம் பேசி சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதாகும். இரு பிரதான கட்சிகளும் ஏறத்தாள சமமான வாக்குகளை பெறாதவரை சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் இவர்களின் பேரம் பேசும் சக்தியை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாண சபையில் எதையும் கிழிக்கமுடியவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது. தென்கிழக்கு நிர்வாக மாவட்டம் என்ற கவர்ச்சியான வாக்குறுதி, அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்களை அரசாங்கம் “ பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எனவே இந்த நிலமையில் சிறிய கட்சிகளை நம்பி பலன் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆக மத்திய மாகாண சபையில் ஐமசுமு வெற்றி பெறாமல் இருக்கவேண்டுமானால் ஐதேக அதிகஉறுப்பினர்களை பெறவேண்டும். இதை உறுதி செய்ய சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல்ஐதேகவுக்கே வாக்களிக்கவேண்டும்.

இந்த அரசாங்கத்தின்ஜனநாயகவிரோத போக்கை கட்டுப்படுத்தவேண்டுமானல், மக்களின் கையில் இருக்கும் ஒரேயொருஜனநாயக ரீதியான ஆயுதம் இதுதான்.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உண்மைகள் வெல்வதில்லை. அவை நிரூபிக்கப்படுகின்றன - பஷீர் சேகுதாவூத்

நேற்று 23.08.2012 அன்று தனது பதவியை இராஜினமா செய்த பிரதியமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் facebook இல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அவர் பதிலளித்த கேள்விகளை ஒரு ஒழுங்கில் பேட்டி வடிவில் தொகுத்திருக்கிறேன். இன்னும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆயினும் தற்போதைய நெருக்கடியில் அவருக்கு வேலைப்பழு இருந்திருக்கலாம் என்று கருதி பதிலளிக்கப்படாத  அக்கேள்விகளை இதில் சேர்க்கவில்லை.


Eksaar எக்சார்

அரச வளங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியாதாம்.
அப்போ
அரச வளங்களை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வது சரியா?
Basheer Segudawood
அரச வளங்களை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு துஷ்பிரயோகம் செய்வதும், அரசுக்கு எதிரான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவம் குற்றம். பச்சோத்தித் தனம். என் மனசாட்சியும் ஏற்காது.

Eksaar எக்சார்

33 அரசியல் வரலாறு சொல்ல வந்த நீங்க ஏன் கடைசி 2 வருஷத்த இப்ப சொன்னீங்க? மிச்சத்த எப்ப சொல்லுவீங்க?

Basheer Segudawood
33 வருட அரசியல் வரலாற்றை ஒரே தடைவையில் பேசப்போவதாக நான் அறிவிக்க வில்லை. வாக்குமூலங்கள் எத்தனை அது எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றி தெளிவாக அறிவித்த பின்னர்தான் முதலாவது வாக்குமூலம் இடம்பெற்றது. அடுத்தவை திட்டமிட்டபடி நடக்கும். இன்ஷா அல்லாஹ்!.


Eksaar எக்சார்
சார் அரசாங்கம் என்பது ஐமசுமு ஆதரவாளர்களின் சொந்த பணமா? சாப்பிடுற சாப்பாடு முதல்கொண்டு வாகனம் வரைக்கும் முஸ்லிம்களாகிய நாங்களும் நேரடியான வரி மறைமுக வரின்னு கட்டிகிட்டு இருக்கோம். அதில் எங்கள் பிரதிநிதிகளுக்கு பங்கு இருக்கிறது. எங்கள் பிரதிநிதிகள் எங்களால் கிடத்த வசதிகளை எங்களுக்காக பாவிக்க வேண்டும். ஆனால் நீங்களோ அரசு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு தந்தது மாதிரி ராஜினமா செஞ்சிருக்கீங்க. பாவிக்க விருப்பமில்லன்னா பாவிக்காம விட்டிருக்கலாம். என்ன கணக்கில ராஜினமா செய்வீங்க? உங்கட தனிப்பட்ட கருத்து முக்கியம்னா பொதுவாழ்வு சரிப்படாது சார்

Deen Noor Nagoor Kani
இவ்வளவு காலம் பதவி துறந்து தான் தேர்தல் செய்தீர்களா? வளங்கள் இருந்தால் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பது கட்டாய கடமையா அல்லது சட்டமா? அமைச்சுப் பதவியில் இருக்கின்ற போது துஷ்பிரயோகங்களை தவிர்த்து நேர்மையான முறையில் அரசியல் செய்ய முடியாது என்று சொல்வது கோழத்தனம். தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத உறுதியற்ற நிலை. தன்னைத்தானே வெற்றி கொள்ள முடியாத நிலயில் மக்கள் எப்படி எம்மை வெற்றி கொள்ளச் செய்வார்கள்? பதவி துறந்தால் தான் அரசியல் செய்யலாம் என்பது முட்டாள் தனம். அரசாங்கம் இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அது யாருடைய சொத்தும் அல்ல. அதனால் அதனுடைய பொறுப்புக்களை வரி என்று ஒவ்வொரு குடிமகனும் சுமந்துக் கொண்டிருக்கின்றான். அதே நேரம் அவற்றை உரிய முறையில் கையாளுதல் உங்களினது கடமை.

Basheer Segudawood
எனது பதவி ராஜிநாமா என் மனசாட்சிக்கு விரோதமில்லாது எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் அது எனது தனிப்பட்ட முடிவு மாத்திரமல்ல. உள்ளாலும் புறத்தாலும் என்னை உண்மைக்கு உண்மையாக நேசிக்கின்ற நம்புகின்றவர் சமூகப் பிரஜைகளினதும் விருப்பம். பொதுவாழ்வு யாருக்கு ஒத்துவரும் வராது என்பதைத் தீர்மானிக்கின்ற வல்லமை அல்லாஹ்வுடையது. என்னைப் பொதுவாழ்வுக்குரிய எல்லா ஆளுமைகளுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். அதை நான் பல கட்டங்களில் நிரூபித்தும் இருக்கிறேன். இனியும் வல்ல அல்லாஹ் உதவியால் நிரூபிப்பேன். இன்ஷா அல்லாஹ்.


Mohamed Hatheek அரசியல்வாதிகள் எது சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது.... SLMC கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு மாற்று கட்சி காரர் வெல்ல பிரார்த்திகிறேன் என்று கூறுவது நயவஞ்சகத்தின் உச்ச கட்டம். ...நீங்கள் பிரதி அமைச்சு பதவியை துறந்தததும் மக்கள் உங்களை நம்பிவிடுவார்கள? பதவியை துறந்தது அமைச்சரவை அமைச்சுக்கா ?Basheer Segudawood ‎தம்பி, என் அரசியல் அனுபவத்தில் பாதியும் உங்களுக்கு வயதில்லை என்பது இந்தக் கேள்விகளிலிருந்து புரிகிறது. நயவஞ்சகம் என்ற வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடிப்படிப்பது நன்று. அல்லாஹ் பெரியவன், வாப்பா.

Eksaar எக்சார்
மௌலானாவை முதலமைச்சர் ஆன பிறகு முகாவுக்கு இழுக்கும் எண்ணம் இருந்தால் இரகசியமாக அவர் நியமனம் பெற்ற பிறகு சொல்லியிருப்பீங்க. நீங்க இப்படி போட்டு உடைத்த பிறகு மௌலானாவுக்கு கிடைக்குமா? நீங்க மௌலானாவுக்கு உதவி செஞ்சீங்களா? உபத்திரவம் செஞ்சீங்களா? என்ன இராஜதந்திர வியூகம் இது?

Basheer Segudawood
ஹாஹா.... வரி வரியாக விபரிப்பதற்குப் பெயர் வியூகமில்லை வாப்பா. நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்றெல்லாம் மூளையத் தீட்டுகிறீர்கயே அதற்குப் பெயர்தான் வியூகம். வியூகங்களின் வெற்றி தோல்வியை அறிய பொறுமை வேண்டும்.


Rina Mohammed  
வருஷ கணக்கில் (33) அரசியல் செஞ்ச நான் வரலாற்றில் இடம் பெற, அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்கு ஆசைப்படுவது ஹராமா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். அது நீங்கள் பங்கு வைத்து கொள்ள கிடைத்த பரிசு இல்லை, நாங்கள் வாக்கு போட்டு கிடைத்தவை. அம்பாறையில் தொடர்ச்சியாக வென்று தரும் நாங்கள் (மக்கள்) கேட்டாலும் பரவாயில்லை, ஹராமா என்று. தேசிய பட்டியலே கதி என்று இருப்பவர்களுக்கு அதுவே வரலாறுதான்.

Basheer Segudawood
என்னுடைய தனிப்பட்ட வெற்றிகளுக்காக நான் வியூகம் அமைத்ததில்லை. என் தெளிந்த அரசியல் செயற்பாடுக்கு அல்லாஹ்வின் அன்பளிப்பு தேசியப் பட்டியல். விரும்பவும் வெறுக்கவும் மறுக்கவும் துறக்கவும் வைத்துக் கொள்ளவும் விட்டுத்தள்ளவும் எனக்கு உரிமையுண்டு.


Eksaar எக்சார்
என்ன இருந்தாலும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வந்த முதல் அரசியல்வாதி என்றவகையில் நாம் பஷீர் நானாவுக்கு நன்றி சொல்லணும்


Mohamed Hatheek
பேசி முடித்தவுடன் ஏறாவூரில் உருவ பொம்மை கட்டி எரிக்கப்பட்டதாகவும் இவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் செய்திகள் வருகிறது ...இது பற்றி

Deen Noor Nagoor Kani
Sir, உங்கள் மீது எத்தனைப்பேர் பற்று வைத்திருந்துள்ளார்கள் என்பதற்கான சாட்சியே இவை அனைத்தும் . அந்தப்பற்றை நீங்கள் தொடர்ந்தும் எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பீர்கள் என்று நம்புகின்றோம்.


Basheer Segudawood
நான் ஜனநாயகவாதி. என்னைப் புறக்கணிக்கின்ற வெறுக்கின்ற வெட்டித்தள்ள நினைப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் அதிகம் என்பதை அறிவேன். ஆனபோதும் என்னை உண்மைக்கு உண்மையாக நெஞ்சுக்கு நேர்மையாக நேசிக்கின்ற சிலருக்காக நான் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி எதையும் எதிர்கொள்வேன், ஒரு ஜனநாயக வாதியாக. இன்ஷா அல்லாஹ்.


முழு உரையாடலையும் இங்கு கிளிக் செய்வதன் மூலம் வாசிக்கலாம். சில தமிழ் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் களம்




இலங்கையிலேயே அதி சூடான தேர்தல் களமாக கிழக்கு மாகாணத்தை அப்பிரதேச மக்கள் சொல்வர். ஏட்டிக்கு போட்டியான பிரச்சாரங்களும் கைகலப்புகளும் இங்கு சகஜம்! அதேவேளை அரசியல் ரீதியாக பாமரனுக்கும் மிகப்பெரும் புரிதல் உண்டு. இனி இப்பிரதேச அரசியல் கள நிலவரம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

அண்மைக்காலமாக அரச ஆதரவு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றமை பற்றி முஸ்லிம்கள் மிகுந்த விசனத்தில் இருக்கிறார்கள். இதுவே இன்று முகா அலையொன்றை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் வெண்ணெய்  திரளும்போது தாளியை உடைத்த கதையாக ஹக்கீம் மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஆகியிருக்கிறது. உன்னிச்சை சம்பவம் சிலவேளை மீண்டும் அலையை எழுச்சி கொள்ள செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அசாத் சாலி
கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி அவர்கள் இம்முறை மட்டக்களப்பில் போட்டியிடுகிறார். முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறை கொண்டவராயினும் இவரது அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடும் தன்மை ஒரு பலவீனமாகும். முகாவின் வேட்புமனுவில் கைச்சாத்திட ஓரிரு நாட்களின் முன்பு முகா தலைமை ஐக்கியத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதற்குமுன் முகா பிரமுகர்களை சாடிக்கொண்டிருந்தார். இவையாவும் முகா ஆதரவாளர்களின் வாக்குகளையேனும் இவருக்கு பெற்றுதருவதில் இடைஞ்சலாக இருக்கும்.

இன்னும் இவர் கொழும்பை சேர்ந்தவர் என்பதால் கிழக்கு முஸ்லிம்களின் நிஜ பிரச்சினைகள் அவற்றின் பாரதூரம் பற்றிய புரிதல்கள் குறைவு. இதே காரணத்தால் பல பெரும் தலைகள் முன்னொரு காலத்தில் கிழக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாறும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சேர்த்து கணக்கொட்டால் முகா தலைமை அசாத் சாலியின் வாய்க்கொழுப்பை அடக்குவதற்காக வாய்ப்பு குறைந்த மட்டக்களப்பில் களமிறக்கியுமிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

அக்கரைப்பற்று
முகாவுக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 அல்லது 4 வேட்பாளர்களையே வெற்றி பெறச்செய்ய முடியும். இன்று அக்கரைப்பற்று அரசியல் களத்தில் நிலமை முகாவுக்கு முன்னேற்றகரமானது. பணபலம் மிக்க 2 வேட்பாளர்களையும் ஆட்பலம்  கொண்ட ஒரு வேட்பாளரையும் அதாவுல்லாவின் மண்ணில் அவருக்கெதிராக அவரது மண்ணைச்சேர்ந்த மூவரை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆனால் அதாவுல்லாவோ அப்பிரதேசத்தில் எவரையும் களமிறக்காது தனிப்பட்டரீதியான செல்வாக்கை மோதவிட்டுள்ளார். அதனால் அதாவுல்லாவின்கட்சிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காவிட்டால் அது அவரது அரசியல் அஸ்த்தமனமாக இருக்கக்கூடும். அவ்வாறில்லாமல் அவர் வென்றால்கூட முகாவுக்கு பெருத்த சேதாரம் ஏற்பாடாது! அது எப்போதும்போல் முகா அகக்ரைப்பற்றில் தலை தூக்க முடியாமல் இருக்கிறது என்றமட்டிலுமே கணக்கிலெடுக்கப்படும்.

கறுப்பு ஆடு
அதேவேளை சாய்ந்தமருதில் முகா பிரமுகர்களிடையேயான பகை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் அண்மைக்காலமாக முகா தலைவரின் பேச்சுக்கள் ஹரீஸுடனான உறவுகள் சீராகத்தான் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதேவேளை நிசாம் காரியப்பரும் வெளிப்படையாகவே தலைமைத்துவத்தை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். இன்று அவர் அமைதியாக இருந்ட்தாலும் உள்ளுக்கும் தணல் இருக்ககூடும். இதுவும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

தோல்விகளின் நாயகன்
முகா வின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் மீது கட்சி ஆதராவளர்களிடையே காட்டமான விமர்சனம் இருக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் கட்சியை வெல்லவைக்கமுடியாமல் கஷ்ட்டப்படுகிறார். தொடர்ந்து மக்கள் ஆதரவில் மிகப்பலவீனமான நிலையிலேயே அவர் இருக்கிறார். இம்முறை  முன்னேற்ற அறிகுறி எதையும் காணோம்!


தொடரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாட்டு நடப்புக்கள்

உயர்தர பரீட்சை குளறுபடிகள்
இன்று நாட்டின் முக்கிய பேசுபொருளாக உயர்தர பரீட்சை குளறுபடிகள் இருக்கின்றது. உடனடியாக முடிவுகளை இரத்துச்செய்து முழுமையான விசாரணைகளின் பின் முடிவுகளை மீள வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் முடிவுகளை சந்தேகத்துக்கிடமான நிலையில் வைத்திருக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இருப்பதாவே தெரிகிறது. எஸ்பிக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மீது இருக்கும் காதல் சொல்லிமாள முடியாதது. பரீட்சை முடிவுகள் மீதான சந்தேகம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்கும் என்ற கணக்கு இருக்கும் போல்தான் தெரிகிறது. தேசிய சுதந்திர முன்னணி கூட முன்னாள் பரீட்சை ஆணையாளர், அமைச்சர் ஒருவர் ஆரம்பிக்கப்போகும் தனியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என கூறியிருப்பது இச்சதித்திட்டத்தை வெளிச்சமாக்குகின்றது.


இதேவேளை ஊடகங்கள் கூட இவ்வளவுநாளும் திறம்பட இயங்கிய பரீட்சைத்திணைக்களத்தினை மிக கேவலமாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பொறுப்பற்ற தனியார் ஊடகங்கள் நாட்டின்தும் பொதுமக்களினதும் நலன்களுக்கு எதிரானவை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
தொடர்புடைய பதிவு 

தேசிய சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசுமு; சமகால நிகழ்வுகளில் நியாயமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக, உயர்தர பரீடசை முடிவுகள் தொடர்பாக, என்கவுன்டரில் கொல்லப்படும் பாதாள உலகம் தொடர்பாக அதன் நிலைப்பாடு நியாயமானது. சிலவேளை மஹிந்த அரசாங்கமுடன் முறுகல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தாலும் நியாயம் நியாயம்தானே..


மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளிருக்கும் குத்து வெட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ரணிலைப்போல் சோமவன்சவும் அரசின் கைப்பொம்மையாக மாறிவருகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது.
ஆயினும் ஜேவிபி இன் பிரசன்னம் நாட்டின் நலன்களுக்கு மிக இன்றியமையாது. புத்தக்கப்பூச்சிகளான ரேங்க் எடுத்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை விட ஜேவிபியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக்கல்வியை பாதுகாக்க எடுக்கும் முனைப்புக்கள் பார்ரட்டப்படவேண்டியவை. புத்தகப்பூச்சிக்களை விட இவர்களே நாட்டின் சொத்து. இவ்வாறான தன்னலமற்ற துடிப்பான இளைஞர்களைக்கொண்ட கட்சியில் எவ்வளவுகாலத்திற்கு சோமவன்சவால் தாக்குப்பிடிக்கமுடியும்?

ஐக்கிய தேசியக் கட்சி
ஐதேகவின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் கரு ஜயசூரியவை பூச்சியமாக்கியிருக்கிறது. ஒரு கட்சிக்குள் வெற்றிபெறுவதற்கு சரியான வியூகம் அமைக்கத்தெரியாத சஜித்தின் திட்டத்திற்கு பலியாலிப்போன ஒருவர் எவ்வாறு சிரந்த தலைவராக இருப்பார்? அதேவேளை ஊடக வெளிச்சம்மூலம் தன்னை பிரபலம் என நினைத்துக்கொண்டிருந்த தயாசிறிக்கும் நல்ல அடி. தேவையான அடியும் கூட. வெகுஜன ஊடகங்களை மட்டும் நம்பும் அரசியல்வாதிகள் இனி சுதாகரித்துக்கொள்ளவேண்டும். ஐதேகவின் யாப்புத்தான் இத்தோல்விகளுக்கு காரணம் என பலர் நியாயம் கற்பிக்க கூடும். ஆனாலும் ஆளம் அறியாமல் காலை விடுவதும் தப்பு, ஆடத்தெரியாதவன் கூடம் கோணல் என்பது தப்பு. தகுதியான தலைவர் எந்தவொரு களத்திலும் தன்னை நிரூபிக்க கூடியவராக இருக்கவேண்டாமா?
தொடர்புடைய பதிவு 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கொழும்பு மாநகரசபை தேர்தல் 2011


வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி மக்கள் வாக்களிக்க இருக்கும் எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகரசபை தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து ஐதேகவின் கோட்டையாக இருக்கும் நிலையில் சிறுபான்மை இன மக்களினதும் படித்த மக்களினதும் வாக்குகள் எதையாவது செய்யக்கூடிய களமும் இதுதான்.

இம்முக்கிய தேர்தல் பற்றிய என்னுடைய கோணத்திலான அவதானிப்பை இப்பதிவினூடாக உங்களுடன் பகிர விளைகின்றேன்.

தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கிடையே மட்டும் ஆட்சிக்கான போட்டி நிலவுகிறது. முஸம்மிலை களமிறக்கியிருக்கும் ஐதேக மற்றும் மிலிந்த மொரகொடவை களமிறக்கியிருக்கும் ஐமசுமு என்பனவே அக்கட்சிகள்

இவ்விரு வேட்பாளர்களை மட்டும் தனித்து நோக்கினால் மிலிந்த; முஸம்மிலை விடவும் பெறுமதியான தேர்வு. அவர் கனவான் அரசியலை செய்துகொண்டிருப்பவர். புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை சொல்லி இன்றுவரையும் கடைப்பிடிப்பவர். போஸ்ட்டர் ஒட்டாத இவரின் அரசியல் பாணி எனக்கு விருப்பமானதொன்று. இவ்வாறான ஒப்பீட்டில் முஸம்மிலை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

ஊடகங்கள்
தேர்தலில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது ஊடகங்களுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் வர்த்தக ரீதியான நோக்குகளைக்கொண்ட இவ்வூடகங்கள் களம் சூடாக இருப்பதாக காட்டிக்கொள்வதன்மூலம் மட்டுமே விளம்பரஞ்செய்வதற்கு வேட்பாளர்களை ஊக்குவிக்க முடியும். இதன் அடிப்படையில் இத்தேர்தலில் மட்டுமல்ல சகல தேர்தல்களிலும் கள நிலவரங்கள் தொடர்பான ஊடக சித்தரிப்புகளை நாம் கணக்கில் எடுக்க முடியாது.

தீர்மானிப்பது யார்
கொழும்பு மூவின மக்களையும் கொண்டது. ஆயினும் தமிழர் தரப்பு தேர்தல் மூலமான அரசியலில் ஆர்வமற்றது.  அச்சமூகத்தில் பாதிப்பேராவது வாக்களிக்க போவதில்லை. இதைப்பற்றி கடந்த பாராளுமன்ற தேர்தலின்பின் மனோ கணேசனே மஹாராஜ ஊடகமொன்றில் அங்கலாய்த்திருந்தார். (யாரேனும் அந்நிகழ்ச்சியின் linkஐ பகிரமுடியுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.)

மீதி தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைவிட மிக வித்தியாசமானது. இவர்கள் எப்போதும் கொழும்பிற்கேயுரிய அரசியல் இலக்குகளைக்கொண்டவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க பங்கினர் மனோ கணேசனை ஆதரிப்பர்.

சிங்கள, முஸ்லிம் சமூகத்தில் கொழும்பிற்கேயுரிய மேல்தட்டு வர்த்தக வட்டமும் பாதியளவே வாக்களிக்கச்செல்ல மீதிப்பேர் அந்நாளில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் சுற்றுலாச்செய்துகொண்டிருப்பர். இவர்களைப்பொறுத்த வரையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். அல்லது முடிவு தெரிந்த தேர்தலில் அவர்களது வாக்கு எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது.

இத்தேர்தலில் பெருவாரியாக தாக்கம் செலுத்தப்போவது பொருளாதார மட்டத்தில் கீழ்நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகள்தான்.

தீர்மானிக்கப்போகும் விடயம்
இந்த பாமர வறிய மக்களுக்கு முன் உள்ள முதற் பயம் தமது இருப்பிடம் பறிபோய்விடுமோ என்பதே. அண்மைக்கால இடிப்பு நடவடிக்கைகளை இவர்கள் மறந்துவிடவில்லை. ஏதோ ஒருவகையில் இவர்களது உறவினர்களோ நண்பர்களோதான் அதில் பாதிக்கப்பட்டுமுள்ளார்கள். இவர்களது வதிவிடப்பிரச்சினை தொடர்பாக நான் ஏற்கெனவேசட்டவிரோத கட்டடங்கள் - யதார்த்தமான தீர்வு என்ற பதிவில் சொன்ன கருத்துக்களை நான் மாற்றவில்லையாயினும் தனது அன்றாடப்பிரச்சினையோடு உழலும் இவர்கள் நிச்சயமாக அந்த தீர்வை ஏற்கப்போவதில்லை.

அரசு தரப்பு இப்போது சொல்லும் எந்த வாக்குறுதியையும் இவர்கள் நம்பத்தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. போதாக்குறைக்கு ஏனைய கட்சிகள் பீதியை நன்றாக வளர்த்து விட்டிருப்பதும் அரசு தரப்பின் மேயர் வேட்பாளாரான மிலிந்த மொரகொட இம்மக்களால் அந்நியமானவராக, அமெரிக்க ஏஜன்டாகவே பார்க்கப்படுவதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

ஐதேகவை தெரிவு செய்வது பிரச்சினையை தீர்க்குமா?
இந்தக்கேள்விக்கு பதில் இல்லை என்பதே. தேசிய ரீதியான அபிவிருத்தி திட்டங்களுக்கு குறுக்கே மாநகரசபை வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதிகப்பிரசங்கித்தனமான எந்தவொரு நடவடிக்கையும் மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளர் ஆட்சிக்கு வழிவகுக்கும். எனவே இவ்வளவு செலவு செய்யப்பட்டு நடத்தப்படும் இத்தேர்தல் களத்தின் முடிவு எவ்வாறு இருந்தாலும் லகான் எப்படியோ அரசாங்கத்தின் கைகளுக்கே போய்விடும்.  எத்தனை மாதங்களுக்குள் போகும் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

இதைப்புரிந்துகொண்ட ஐதேக ஆதரவாளர்கள்  வாக்களிக்கச்செல்லப்போவதில்லை. இது ஐதேகவின் வாக்குகளை கட்டாயம் பாதிக்கும்.

சிறுபான்மைக்கட்சிகளின் நிலை
இட்தேர்தலில் சிறுபான்மை மக்களின் இரண்டு கட்சிகள் போட்டியில் உள்ளன. இரு கட்சிகளுக்கும் தமது வழமையான வாக்கு வங்கிக்கு வெளியே வாக்குகள் கிடைப்பதென்பது சாத்தியமற்றது. இன்னும் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் ஐமசுமு வெற்றிபெறுவதை விரும்பமாட்டார்கள். இந்நிலையில் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பது ஐமசுமுவுக்கே வசதியாக அமையும் என்பதை புரிந்த; தமது வதிவிடப்பிரச்சினையை முன்னிலைப்படுத்திய வாக்காளர்கள் தமது கட்சிய விடுத்து ஐதேகவுக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.



மனோ கணேசன்
இவரது தனிப்பட்ட செல்வாக்கின்மீது மட்டுமே கட்சி தங்கியிருப்பதால் இவரது கட்சியில் போட்டியிடும் ஏனையவர்கள் வாக்குகளை சேகரித்துக்கொடுக்கப்போவதில்லை. அதேவேளை இவரது சகோதரர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது வாக்கு வங்கியை கட்டாயம் பாதிக்கும். அவர் தனது சகோதரனுக்கு வாக்களிக்க கோருவது அதைவிட அதிகமாகவே மனோ கணசனுக்கான வாக்குகளில் வீழ்ச்சிய ஏற்படுத்தும்.

முகா
முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது பலத்த விமர்சனங்களை எதிர்கொண்ட விடயம். தனித்துப்போட்டியிடுவது ஐமசுமுவின் வெற்றியையே உறுதி செய்யும் என்றாலும் முகாவுக்கு இருந்த ஒரே தெரிவு தனித்துப்போட்டியிடுவதே.

ஐமசுமுவுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் முகாவின் வாக்காளர்களில் கணிசமானோர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்பதும் அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள இந்நேரத்தில் ஐதேகவுடன் கூட்டுக்கு இடமே இல்லை என்பதும் முக்கிய காரணிகளாக இருந்திருக்க கூடும்.

போட்டியிடுபவர்கள் இனி செய்யக்கூடியது

ஐதேக
முகாவையும் மனோ கணேசனையும் இத்தேர்தலில் தீவிரம் காட்டாமலிருக்கச்செய்யலாம்.

ஐமசுமு
இரு சிறுபான்மை கட்சிகளுக்கும் பணத்தை தாராளமாக அள்ளி வழங்கி ஐதேகவின் வாக்குகளை இவர்களை நோக்கி திருப்பதற்கான் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முயற்சிக்கலாம்.

சிறுபான்மை கட்சிகள்
தமது ஆதரவாளர்களை வாக்களிக்க செல்ல தூண்டுவதே முதற்கடன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஐதேக கட்சிக்குழப்பம்



ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம்கோரி ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கெதிராக பாவிக்கப்பட்ட வசனங்கள் பிஸ்ஸு பூசா, மிஸ்டர் பீன்.

“A politician should have a lot of patience not only to head a government but also to be an opposition leader. Although social service is good, you cannot win only by doing social service. Some others think they can win by doing politics through the media. One cannot go forward in politics through the media. Politicians who are limited to the media are like papdams,”
Ranil Wickremesinghe
<!-- adsense -->
ரணில் விக்கிரமசிங்ஹவை மிஸ்டர் பீன் ஆக சித்தரித்து நாடுமுழுவதும் சுவரொட்டிகள் ஒரு காலத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அன்று அதை எதிர்க்கட்சி செய்தது. இன்று அவர் கட்சிக்காரர்களே செய்கிறார்கள்.


ரணில் ஒரு வசீகரமற்ற தலைவர்தான். ஆனாலும் அவரது காய்நகர்த்தல்கள் தேர்ந்த அரசியல்வாதிக்குரியவை. இல்லாவிட்டால் 94க்குப்பின் தொடர்தோல்வியை கட்சி அடைந்துகொண்டிருந்தபோதும் அவரால் தலமைப்பதவியில் தொடர்ந்து இருக்கமுடியுமா?

ரணில் புலிகள் மீது மென்மையான போக்கை கையாண்டது 94க்குப்பின் பெரும்பாலான இலங்கையர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இவ்வெறுப்புத்தான் இவரது ஆட்சிக்கும் ஆப்பானது. தேர்தலில் புலிகளும் இவருக்கு ஆப்பு வைக்க அரசுக்கட்டிலை இழந்தார் ரணில். அதே ஆப்பு புலிகளுக்கு மாறி இறங்கியது வேறுகதை.

அதன்பின் மஹிந்தவின் வசீகரத்திற்குமுன் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த வெற்றிகரமாக நிறைவு செய்தபின் ரணிலால் மட்டுமல்ல வேறுயாராலும் ஆட்சியை பிடிப்பது யாதார்த்தமற்ற ஒன்றும் கூட.

ஆயினும் மஹிந்த மேலதிகமாக ஐதேக உறுப்பினர்களை தனது ஆட்சிக்குள் உள்வாங்க தயாராக இல்லாமையால் விலைபோகாத சரக்காகிப்போயுள்ள ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெறுமனே செலவு செய்வது மட்டும்தானா, உழைப்பதில்லையா என்ற வெறிய்ல் இருக்கிறார்கள்.

எனவே ரணிலுக்கோ வேறொரு ஐதேக தலைவருக்கோ கிடைக்ககூடிய மிகப்பெரிய பதவி எதிர்க்கட்சித்தலைவர் பதவி மட்டும்தான். அதனை உறுதி செய்யத்தான் கட்சிக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார். சஜித் குழு எதிர்கட்சித்தலைவர் பதவியை தொடர்ந்து ரணிலுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தாலும், அதிகாரம்மிக்க தலைமைப்பதவி போனபின் அவ்வாக்குறுதி எத்தனை நாட்களுக்கு காக்கப்படும்?

ஐதேகவுக்கு கரு ஜயசூரியவோ சஜித் பிரேமதாசவோ தலைமைவகித்தாலும் இந்நிலவர்த்தில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. இவர்களால் கொழும்பு மாநகர சபையைதானும் வெல்லமுடியுமா என்பதே கேள்விக்குறி. அப்படி வென்றால்கூட அது சாதனையாக கணக்கில் எடுக்கப்படாது. இது தெரிந்த சஜித், தனது இமேஜை பாதுகாக்க கருவை தலைமைப்பதவிக்கு போட்டியிடச்செய்கிறார் என்றே அனுமானிக்கமுடிகிறது. பிஸ்ஸு பூசா என்று தாம் அழைத்த தலைவரை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் ஐதேகவின் அடிமட்ட தொண்டர்களில் பாதிப்பேராவது வாக்களிக்கச்செல்வார்களா?

மஹாராஜா நிறுவனங்களுடன் மோதல்
மஹாராஜா ஊடக நிறுவனத்துடனான ரணிலின் மோதல் இன்னுமொரு சுவார்ஷ்யம். எமக்குத்தெரிந்து மிலிந்த மொரகொட, ரோசி சேனநாயக்க, ஹர்ஷா டி சில்வா, புத்திக்க பத்திரண, சிறீ ரங்கா ஆகியோர் மஹாராஜா ஊடகத்தின் ஆதரவு காரணமாக பதவிக்கு வந்தவர்கள். சிறீ ரங்கா கூட தனது கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு இடம் கேட்டமை சன்டே டைம்ஸில் வந்திருந்தது. எனவே மஹாராஜ நிறுவனம் இரண்டு தேசியப்பட்டியல் இடங்கள் கேட்டது என்பதில் கொஞ்சமாவது உண்மையிருக்கும் என்றே தோன்றுகின்றது.

இல்லாவிட்டால் பல விடயங்களில் அடக்கி வாசிக்கும் மஹாராஜா ஊடகம் ஐதேக தலைமை விடயத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் என்ன.

ரணில் இப்போதாவது விரல்களை தாண்டி வளர்த்த நகத்தை கவனித்திருக்கிறார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யாழ் பாரளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை

அண்மையில் தேர்தல் ஆணையாளரினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதிநிதித்துவத்தை 9 இலிருந்து 6 ஆக குறைக்கும் முடிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களாக யுத்தம் காரணமாக யாழ் மக்கள் நாட்டிற்குள்ளேயும், யுத்தத்தை காரணமாக காட்டி பொருளாதார நலன்களுக்காக வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடப்பெயர்வு தற்காலிகமானதாவோ அல்லது நிரந்தரமானதாவோ வகைப்படுத்தப்படமுடியுமானபோதும்து பெரும்பாலும் பல சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் தற்காலிகமான இடப்பெயர்வுகளாகவே ஒரு பக்கச்சார்பாளர்களினால் காட்டப்படுகின்றது.

இவ்வாறான பல நிரந்தர இடப்பெயர்வுகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படாமையினால் அரச புள்ளிவிபரங்களில் கணக்கெடுக்கப்படமுடியாமல் போயிருந்தது.

வாக்காளர் இடாப்பு இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால்

1.) கள்ள வாக்கு பதிவோருக்கும் சவுகரியமாக இருந்தது.

 2) உண்மையில் அப்பிரதேசத்தில் இருந்த வாக்காளர்கள் பதுவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக்காட்டிலும் குறைவாக இருந்தமையால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தல்களில் ஆர்வம் காட்டவில்லை என்று அரச எதிர்ப்பாளர்களுக்கு சொல்ல முடியுமாக இருந்தது.

மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பது நியாயமானது. இந்த அடிப்படையில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மக்கள் எண்ணிக்கை குறைந்தால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் குறைக்கப்படலும், சனத்தொகை அதிகரிக்கும் இடங்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படலும் கட்டாயமானதாகும்.

ஆயினும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு தற்காலில் இடப்பெயர்வுகள் காரணமாக ஏற்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு அரசு அநீதியிழைப்பதாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதைவிடுத்து குறிப்பிட கால இடைவெளிகளில் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் இலங்கை பூராவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் என்ற உறுதி மொழியை அரசு வழங்கவேண்டும். இது குழப்பக்காரர்களின் வாயை அடைக்கும்.

இன்னும் வேறு இடங்களில் குடிபெயர்ந்துள்ளவர்களை அந்தந்த பிரதேசங்களிலேயே வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும்.

இதேபோல் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் அரச வளங்கள் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டு சரியாக பகிரப்பட வேண்டும். இதன் மூலம் நாடலாவிய ரீதியில் மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மகாவம்ச பௌத்தமும், இராமாயண ஹிந்துத்துவாவும்

டிபிஎஸ் ஜெயராஜின் வலைப்பதிவில் நேற்று The Mahavamsa mindset: Re-Visiting political Buddhism in Sri Lanka என்ற தலைப்புல் தேவானந்தா என்பவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

அதைப்பற்றி கூறுமுன் அதே பக்கத்தில் காணப்படும்
"Just as Jazz demands a different way of playing and listening, blogging requires a different mode of writing and reading." - Andrew Sullivan

என்பதை கட்டாயம் கவனிக்கவும்.

மகாவம்ச பௌத்தம் பற்றிய இக்கட்டுரையின் பல விடயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.

ஆயினும்,
மகாவம்ச பௌத்தத்திற்கு சற்றும் சளைக்காத இராமாயண ஹிந்துதுவம் பற்றியும் ஞாபகத்தில் கொள்ளுதல் அவசியம். (கற்பனைக்கெட்டாதவைகள் இராமாயணத்தில் அதிகம்)

இலங்கையில் மகாவம்சம் இருக்கும் நிலையை காட்டிலும் மிக மோசமாக நீதிமன்றத்தில் ஆதாரமாக கொள்ளப்படும் நிலையில் இந்தியாவில் இராமாயணம் இருக்கிறது.


இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

இதே இராமாயணம் இலங்கையிலும் சில கழகங்களாலும் இயக்கங்களாலும் ஹிந்துக்களின் மனதில் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் ஊடக நண்பர்கள் மிக நாசூக்காக இலக்கியம் என்ற பெயரில் இராமாயண புனைவுகளை திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எதையாவது பேசவேண்டிய அவசியத்தில் இருக்கும் வானொலி தொலைக்காட்சி chat showகளில் இவை அடிக்கடி இடம்பிடிப்பதை பார்க்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் இதே இராமாயண புனைவுகள் தமிழ் ஹிந்துக்களை மௌனிகளாக்கியிருக்கும். இல்லாவிட்டால் 83 கலவரத்தை பேசும் அதே வாய்கள் அதை விட தெளிவான இனச்சுத்திகரிப்பான** யாழ் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட நிகழ்வை பற்றி இன்று வரைக்கும் பேசுவதை தவிர்க்குமா?

** 83 இல் தமிழர்கள் பாரியளவில் சிங்களவர்களால் காப்பாற்றப்பட்டதுபோல் ஓரிரு நிகழ்வுகளாவது யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் இடம்பெறவில்லை என்பதை கருத்தில்கொண்டு.

இன்னும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை அரசு இராமாயண நிகழ்வுகளை உண்மை என்று சொல்லி அதிக இந்திய சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் அண்மைக்காலத்தில் கவனிக்ககூடியதாக இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே அமையும்.

முதலில் வரலாற்று தமிழ் சிங்கள பாடநூல்களிலிருந்து தெளிவான புனைவுகள் அகற்றப்படவேண்டும்.


இன்னும் ஒரு நூறுவருடத்தில் இலங்கை தமிழ் பதிவர்கள் பற்றிய வரலாறு தேடப்படுமானல் ஒட்டுமொத்த பதிவர்களின் ஆதரவோடு சகல இலங்கை தமிழ் பதிவர்களின் கலந்துகொள்ளலோடு (கிழக்கிலிருந்து எழில்வேந்தன், முஸ்லிம்கள் சார்பாக நஸ்ருதீன், சிறுவர்கள் சார்பாக அவர் மகன், பெண்கள் சார்பாக 5 பெண்கள்.. என யாரேனும் ஒரு வரலாற்றாசிரியர் நிறுவக்கூடும் :D

வரலாறு முக்கியமல்லவா? :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

அஷ்ரப் - மறக்க முடியாத ஆளுமை. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் சிதறுண்டிருந்த பலத்தை ஒருமுகப்படுத்தி அதை லாவகமாக கையாண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி.

இன்று முஸ்லிம் அரசியலில் ஈடுபடுவோர் எல்லோருக்கும் அஷ்ரப் ஒரு மாமனிதர் என்று சொல்வதும், அவர் பாசறையில் தாம் வளர்ந்தவர்கள் என்று சொல்வதும் மிகுந்த அவசியமாகி இருக்கிறது. இது இவர்களின் அரசியலுக்கு அடிப்படையான மூலதனமாக இருந்தாலும் இதில் இருக்கும் ஆபத்தை சரியாக புரிந்துகொள்வது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்.

நேற்றுவரை முகவரியற்று இருந்தபலர் திடீரென தான் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவதை காண்கிறோம். அல்லது ஏதாவது ஒரு அரசியல் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்க வெறுமனே அஷ்ரப் அன்று இப்படி செய்தார் என்று கூறுவதோ அல்லது ஒரு ஒலிக்கீற்றை ஒலிக்கச்செய்வதோ போதுமாக இருக்கின்றது. இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வரலாற்றில் நபிகள் நாயகத்தை விட உயர்ந்த தலைவர் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் அவருக்குப்பின் வெறுமனே வாய்ப்பேச்சால் அவரை புகழ்ந்துகொண்டு இருந்ததா? இல்லை! ஆனால் அவரின் இலட்சியங்களுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்பங்களிப்பை வழங்க நபிகளாரின் இலட்சியத்தை இன்றுவரை மழுங்கடிக்காமல் சமூகம் முன்னேறிச்செல்கிறது.

அதேபோல் காலித் இப்னு வலீத் (ரழி) என்ற உலகவரலாற்றில் தோல்வியையே சந்திக்காத தளபதியையும் இங்கு ஞாபகப்படுத்துவதும் அவசியம். முஸ்லிம்களின் இராணுவ தளபதியாக தொடர்ச்சியாக வெற்றிகளைத்தேடித்தந்த அந்த தளபதி; அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களால் பதவி நீக்கப்பட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள் சொன்ன காரணம், "வெற்றிகளை பெற்றுத்தருவது இறைவனே.. ஒரு தனிமனிதர் அல்ல என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடையே பாதுபாப்பதாகும்".

I have not dismissed Khalid because of my anger or because of any dishonesty on his part, but because people glorified him and were misled.[97] I feared that people would rely on him. I want them to know that it is Allah who give us victory; and there should be no mischief in the land
—Caliph Umar.

அதனால்தான் ராணுவ தளபதியாக பதவி நீக்கப்பட்டபோதும் தனக்குப்பின் ஆட்சிசெய்ய தகுதியானவராக உமர் (ரழி) அவர்களால் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் பெயரிடப்பட்டார்கள்.

இதன்மூலம் ஒரு தனி நபரில் ஒரு சமூகம் தங்கியிப்பதை இஸ்லாமும் அதன்பின் இஸ்லாமிய வழி வந்த இஸ்லாமிய தலைவர்களும் ஒருபோதும் ஆதரித்ததிலலை என்பது தெளிவாகின்றது.

ஆனால் இன்று அஷ்ரப் பாடுபட்ட இலட்சியங்களை சமூகம் மறந்து தனி மனித வழிபாடு போன்ற ஒன்றை செய்து கொண்டிருப்பதால்தான் அன்று அஷ்ரப்பினால் சாதிக்க முடிந்த பலவற்றை எம்மால் இன்று சாதிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே இன்று முஸ்லிம் சமூகம் செய்யவேண்டியிருப்பதெல்லாம் அஷ்ரப் என்ற இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் பேசிப்பேசி எதிர்காலத்தை இழக்காமல் அவர் பயணித்த பாதையில் பயணிக்ககூடிய தகுதியான தலைவரின்பின் அணிசேர்வதே..

அஷ்ரப் அவர்கள் மரணித்து இன்றோடு 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி இரண்டு கட்டுரைகள்
அஷ்ரப் - அவர் வயற்காரனாக இருந்தார்
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

18 ஆவது திருத்தம்


  • ஊடகங்களின் கபட நிகழ்ச்சித்திட்டம்..
  • 18 ஆவது திருத்தம் முடியாட்சிக்கு வழிகோலுமா?
  • பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது அதிகார துஷ் பிரயோகத்தை தடுக்குமா?
  • தமிழ் ஊடகங்களின் காழ்புணர்ச்சி
  • ததேகூ எதிர்க்கும்! சீ சீ இந்த பழம் புளிக்கும் !
  • இன்றைய ஆகக்குறைந்த தேவை என்ன?

அரசியல் அமைப்பில் 18 ஆவது திருத்தம் தொடர்பாக இன்று அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுவதை காண்கிறோம். இதில் கூட ஊடகங்களில் தமிழ் ஊடகங்கள் ஒரு திட்டத்துடனும் ஆங்கில சிங்கள ஊடகங்கள் இன்னொரு நிகழ்ச்சி திட்டத்துடனும் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.
Bar Association statement opposing the 18th Amendment http://bit.ly/cTEm0f

யுத்தம் முடிந்து செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது பிரச்சினையாக்கி அதை விற்று காசு சம்பாதிக்கும் மிக கீழ்த்தரமான உத்திக்கு ஜனநாயக சாயம் பூசி இவ்விரு வகை ஊடகங்களும் அதற்கு மேல் வாசனைக்கு தமது நிகழ்ச்சி திட்டத்தை கலந்து தருகின்றன. கடைசியில் கேக் ஐ தின்றாலும் ஏன் தொட்டாலும் இந்த வாசனை தொற்றிக்கொள்ளும் அபாயம்இருக்கிறது.

18 ஆவது திருத்தத்தில் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விதி முறைகளை மாற்றுவது மட்டும் இடம்பெறவில்லை. ஒருவர் ஜனாதிபதியாக எத்தனை தடவை பதவி வகிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களே. சந்திரிக்கா போன்ற ஒரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்தவும் சமமான தடவைகள் மாத்திரம் பதவி வகிப்பது என்பது பயங்கரவாதத்திட்கு ஆதரவளிக்காத மக்களுக்கு நியாயமாக தோன்றப்போவதில்லை. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அன்றி யாரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவும் முடியாது. 2 தடவைக்கு மேல் மக்கள் ஆணை பெற்று பதவி வகிக்கும் ஜனாதிபதி முறை முடியாட்சி முறையும் அல்ல.

இது தேர்தல் முறைகேடுகளை அதிகரிக்கும் என்றும் அரச வளங்களை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று சிலர் சொன்ன போதும் 2 தடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி கூட தனது கட்சி பதவியில் இருப்பதை உறுதி செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற உத்தரவாதமும் இல்லை. அதேபோல் மகிந்த வுக்கு பிறகு பசில் ஜனாதிபதியாக அல்லது வேறொரு உறவினர் ஜனாதிபதியாக போட்டியிடவே வாய்ப்புள்ள நிலையில் பதவிவகிக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மாட்டார் என்று யாரு கருதவும் முடியாது. ஆக வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல,

இன்னும் ஐதேக சின்னாபின்னமாகியுள்ள நிலையில் ஆளும் அரசாங்கத்திற்கு இன்னும் இரு மேலதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. பொது எதிர்கட்சியாக இணைவதற்கு பொன்சேகா தரப்பு கூட கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் பலமிழந்த நிலையில் இருக்கிறது.

இவ்வாறு யதார்த்தம் இருக்கும் நிலையில் சகல ஊடகங்களும் வெறுமனே ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை பற்றி மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறது. இது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதை போன்றது. ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டும் எதிர் சிந்தனை யாளர்களுக்கு செய்தி தீனியை இட்டு தமது வருமானத்தை பெருக்கி கொள்ளுகிறது. அதேவேளை ஜனரஞ்சகமான ஒரே தலைவரான மகிந்தவிற்கு ஆதரவான மக்கள் இதை கணக்கில் எடுக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவு நிலையையே எடுப்பார்கள் என்தால் இவ்வெதிர்ப்பை சமாளிப்பதை இலகுவாகவும் ஆக்குகிறார்கள். மாறாக இத்திருத்தத்தில் உள்ள ஏனைய பாதகமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் கட்சி பேதமின்றி ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியும். இதை செய்யாமல் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் வெற்றுக்கூச்சல் போடுகின்றன.

தமிழ் ஊடகங்கள் ஜனாதிபதி மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டும் இடமாக இதை பாவிக்கிறார்கள். ததேகூ பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் பெருவாரியான தமிழர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிந்திருப்பது அவர்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதி இல்லை என்பதனை தெளிவாக்கும். அதேவேளை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ததேகூ எதிர்ப்பு தெரிவிக்க போகின்றது என்று அறிவித்திருக்கிறது. அரச தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்து இன்று அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ள நிலையில் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இது இருக்கிறது. ததேகூ ஒரு கொள்கையுடைய கட்சியாக இருந்திருந்தால் ஆரம்பம் முதல் ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கமாட்டோம் என்று (வழமை போல ) அறிக்கை விட்டிருக்கலாம் தானே ?

தேர்தல் ஆணையாளரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக சிலர் அலறுகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்யவில்லை. வெறுமனே முன்னுக்கு பின் முரணான அறிககிகளாலும் செயல்களாலும் எரிச்சல் அடைய செய்வது மட்டுமே அவர் இதுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருப்பது. இதைவிட முழுமையான தேர்தல் முறை மாற்றத்தை பொதுமக்கள் கோரவேண்டும். ஆக குறைந்தது எமது காலத்தை விரயம் செய்து பெரும் பொருட்செலவில் நடாத்தப்படும் இன்றைய பழைய தேர்தல் வாக்களிப்பு முறையாவது மாறவேண்டும். அதற்கு தங்கள் ஆதரவை இதன்மூலமாவதுபதிவுசெய்யலாம்..
http://www.facebook.com/home.php?#!/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703?ref=ts

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முகாவின் முடிவு சரியா?

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (முகா)அரசுக்கு யாப்பு தொடர்பான இருமாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்தவுடன் உடன் படிக்கைக்கு வந்திருக்கிறது..

முதலில் மக்கள் ஏன் முகா வுக்கு ஆதரிவளிதார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்?

மகிந்த அரசின் மீதான வெறுப்பினாலா?

இல்லை என்பதை நீங்கள் அறியாவிட்டால் நீங்கள் இன்னும் அரசியல் களத்தில் போதிய அறிவு பெறவில்லை என்பது நிரூபணமாகும். ஒரு சிலர் கொண்ட வெறுப்புக்கும் காரணமாக இருப்பது முகாவை மகிந்த பிரித்திருக்கிறார் என்பதே தவிர மகிந்த மீது தீரா பகை கொள்ள வேறு காரணம் இல்லை..

மஹிந்த அரசு சேவை செய்யவில்லையா?
அது யுத்தத்தை முடிக்கவில்லையா?
தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லையா?
அபிவிருத்திகள் செய்யவில்லையா?
இன்னும் 6 வருடத்திற்கு அல்லது பெரும்பாலும் 12 வருடத்திற்கு இவ்வரசு ஆட்சியில் இருக்காதா?

இல்லை என்ற பதில் நீங்கள் மகிந்த மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிபாடாகதான் அமையும்.
I supported Ranil in the 2005 election, but he didn’t run in 2010, so there isn’t really anything to support. I don’t see why a guy who won’t run for President still wants to retain control of the opposition though, in reality, he no longer has control. Some people really believe in the UNP or are simply to incompetent to cross, and that’s who’s left. Most of the bright lights have left the UNP and now it looks like Rauf Hakeem and the Sri Lanka Muslim Congress are on the way out.

indi.ca

ஐதேக ஆட்சிக்கு வரும் அறிகுறி எங்காவது தெரிகிறதா?
இல்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.. அடுத்த தலைவராக வரக்கூடிய சஜித்க்கும் தெரியும்.. இவ்வளவு ஏன்? தனக்கும் சஜித்துக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக நாமல் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் வாக்களித்து வந்த நாமலை சஜித் இன் அம்மா ஹேமா உச்சிமோர்ந்ததும் ரகசியம் அல்ல..

இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக மகிந்தவை தனியாக ரணில் சந்தித்ததும் சபா நாயகர் பதவியை விட்டுகொடுக்க முன்வந்ததும் நேற்றுவரை மகிந்தவுடன் தேநீர் அருந்தி பேசிக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டிருக்கும்போது
முகாவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் இந்த தலைவர் மட்டும் ஐதேகவுடன் ஒட்டிகொண்டிருக்கிறார் என்று விமர்சிக்க மாட்டார்களா?

ஒற்றை உறுப்பினரை கொண்ட கணேசனின் கட்சியில் பிரபா கணேசன் அரசுக்கு தாவிவிட்டார். மின்னலில் சீறிக்கொண்டிருந்த ரங்கா நாமளுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாட எல்லையில்லா ஆசைகொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி தராததால் ஐதேக மீது கோபம் கொண்டிருந்த மனோ கணேசன் பிரபா கணேசனை பிரித்த கோபத்தினால் மட்டும் ஐதேகவுடன் ஒட்டி இருப்பார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரபா கணேசன் ஊடாக வேண்டிய அரச ஒத்தாசைகள் கிடைக்கும் .

ததேகூ கூட என்று அரசிலிருந்து ஒரு கண்சாடை கிட்டும்.. ஓடிப்போய் சேரலாம் என்று தருணம் பார்த்திருக்கும்போது ஏன் முகா மட்டும் எதிர்த்து நின்று கால விரயம் செய்யவேண்டும்? இந்த ததேகூ ஆதரவு ஊடகங்கள்தான் இப்போது முகா அரசுடன் சேர்ந்துவிட்டது என்றுஓலமிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்தால் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதே தெளிவாகின்றது..

இதில் மிகப்பெரிய கோமாளியாகியிருக்கிறார் ஐதேக பிரதி தலைவர் கரு. முகா யானை சின்னத்தில் போட்டியிட்டது என்றும் அது ஐதேகவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஐதேக பலமாக இருந்தபோது பல தலைகளை மஹிந்த அணிக்கு கூடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி வந்தவர் இந்த லாஜிக் தனக்கு பொருந்தாது என்றுநினைத்திருக்கிறாரோ..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஐபாவைப்போல் சீபாவையும் தமிழர்கள் புறக்கணிப்பர் - சீமான்

ஐபாவை புறக்கணித்த தமிழ் உணர்வாளர்கட்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் சீமான் இப்போது சீபாவை இந்தியா நிராகரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு ஆயத்தம் ஆவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழின் தலை சிறந்த நடிகனான ரஜனியையும் உலகத்தர திரைப்படங்களை தந்த கமலையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இதன்போது எந்திரன் திரைப்படத்தினை இலங்கையில் சீபா ஊடாக நல்ல இலாபத்திற்கு விற்கமுடியுமென்றபோதும், தமிழ் உணர்வை பறைசாற்றும் முகமாக சீபாவில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்ற தன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று உறுதி மொழி வழங்கினார்.

காவிரி நீர்ப்பிரச்சினையில் தெலுங்கு தேசத்திடம் தான் மண்டியிட்டதைப்போல் இதில் மண்டியிடமாட்டேன் என்றும் உறுதிபடக்கூறினார்.

Sri Lanka's Industries and Commerce Minister Rishad Bathiudeen told the parliament today (08) that the government is yet to arrive at a final decision on signing the Comprehensive Economic Partnership Agreement (CEPA) with India.

He said the government had not made any final decision on the matter yet.

Bathiudeen further noted that the government was currently exploring the possibility of entering in to similar trade agreements with Pakistan.

Colombo Page

கமல்ஹாசன், சீபாவுக்கு இலங்கையில் எதிர்ப்பு வலுத்து வருவதால் அதை இலங்கையின் நலன்களுக்கு எதிராக பாவிக்கும் முகமாக அதை ஆதரிக்கவேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆயினும் சீமான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயக்குனர் ராம் இது தொடர்பாக பல பதிவுகளை இடப்போவதாகவும், தன்னைப்போன்ற புகழ் பூத்த இயக்குனர்களை தமிழ் சினிமா உலகம் பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தது அறிந்ததே..

இதேவேளை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், சீபா இந்தியாவின் நலன்களை உறுதிசெய்தபோதும், இலங்கை தொடர்பாக தொடர்ந்தும் எதிர்ப்போக்கை கடைப்பிடித்து தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி ஈழம் பெற்றுத்தருவதாக முழங்கினார்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து இந்திய நடுவன் அரசு நடந்துகொள்ளாவிடின் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு சகல நியாயங்களையும் உறுதிப்படுத்தும் எனவும் தன் உயிரைக்கூட அர்ப்பணித்தேனும் அடை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்..

இன்னும் இந்திய திரைப்படங்கள், முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் இனி இலவசமாக திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். இது ஐபாவை எதிர்க்கும் தமிழ் சினிமா உலகம் நிர்க்கதியான நிலையில் அநாதரவான நிலையில் பட்டினியில் இருக்கும் தமிழர்களை திரைப்படங்கள் ஊடாக சுரண்டுகிறது என்று சிலர் சக்திகள் சொல்வதை கேள்விக்குட்படுத்தும்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பூனை இளைச்சா எலிக்கு மச்சாள் முறையாம் - "இந்தவகையில்" ரங்கா?

மஹாராஜா குழும ஊடகங்களில் ஐதேக தலைமை பற்றித்தான் பாதி செய்தி வருகிறது. ஐதேக வின் தோல்விகளுக்கு காரணம் ரணில்தான் என பரவலாக ஐதேக ஆதரவாளர்கள் நம்பினாலும், இந்த ஊடகங்களுக்கு இன்றுதான் இதெல்லாம் தெரிந்ததுபோல் செய்தி வெளியிடுவதுதான் தாங்கமுடியவில்லை. 


இச்செய்திகளில் அடிக்கடி வரும் வசனம், "அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்" என்பது. யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள் என்று தேடினால்

அது அந்த "இந்தவகையில்" புகழ் மின்னல் ரங்கா என ஆங்கிலப்பத்திரிகை ஒன்று தோலுரித்துள்ளது. இந்த "இந்தவகையில்" கூட தனது கட்சிக்கும் ஒரு தேசியப்பட்டியல் கேட்டுச்சாம். ஆனால் அந்த கட்சிக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லையாம். எப்பிடி இருக்குது கத?

பூனை இளைச்சா எலிக்கு மச்சாள் முறையாம் எம்பாங்க.. அதமாதிரி ஐதேக தோற்க, நேத்து முழச்ச காளான் எல்லாம் விருட்சம் எங்கிறாப்பல இருக்கு. தானே அரும்பொட்டுல தெரிவாகியிருக்கிற நிலையில தேசியப்பட்டியல் ஒரு கேடு!

"இந்தவகையில்"க்கு தேசியப்பட்டியல் கிடைக்காத நிலையில்; தானும் ஒரு கட்சித்தலைவர், எனக்கும் பாராளுமன்றத்துல முன்வரிச ஆசனம் தர வேணும் எண்டும் அடம்புடிச்சுதாம். ஆனா அத கூட ஐதேக தலைமை கவனிக்கலயாம்.


இந்த ஆத்திரம்தான் அரசியல் ஆய்வாளரா தன்ன நினச்சிக்கொண்டு ஒருகட்சியின் பிரச்சினைய முக்கிய செய்தியா ஆக்கிருக்கு. இப்பவே தனக்கிருக்கிற பதவி அதிகாரம் எல்லாத்தையும் வெச்சி மக்கள ஏமாத்துறது, அமைச்சரானா எப்படி இருக்கும்?

இவருக்கு ஒரு தேசியப்பட்டியலும், முன்வரிசை ஆசனமும் குடுத்திருந்தா இன்னேரம் ரணில தலையில தூக்கி வைச்சு ஆடியிருக்கும்.

சில தமிழ்ச்சனம் எதோ ரங்காதான் தமிழ் மக்களின்ட விடிவெள்ளி போல நெனச்சுக்கிட்டு இருக்கு..

இந்த ரங்கா ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு பின்னால் பவ்வியமாக பௌத்த மத வழிபாடு செய்யிறதையும், தோளுக்கு மேல கைபோடுற அளவுக்கு நட்பு கொண்டாடுறதயும் பாருங்கோ..


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

காண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக்கார அமைச்சர்கள். சார்க்

கெட்டிக்கார அமைச்சர்கள்

இலங்கையின் அமைச்சர்வை கடந்தவாரம் பதவியேற்றது. அதன்பின் ஊடகங்களில் அவ்வமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்தான் அதிசயிக்கவைத்தன. பதவியேற்பு வைபவம் முடிந்த கையோடு, அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார்கள். அட.. சரியான சுட்டி.. இவ்வளவு கெட்டிக்காரர்களா?

சார்க்

சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகும். பாடசாலைக்காலத்தில் இருந்து சார்க் ஒரு ரோதனையாகவே இருக்கிறது. பரீட்சைகளில் அதைபற்றிய கேள்விகளை எதிர்கொண்டதை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் நன்மைகளை சாதாரண பொதுமக்கள் அடைந்ததாக தெரியவில்லை. (சில பொருளாதார ஒப்பந்தங்கள் சார்க் என்ற அமைப்பு ரீதியான தோற்றமளிக்காமல் இருதரப்பு ஒப்பந்தங்களாகவே தெரிகின்றன்). கூடி கூடி என்ன செய்கிறார்கள்?

சக்தியின் சமர்

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி என்று பேசும்போது சக்தியை தவிர்க்க முடியவில்லை. பல தமிழ் தொலைக்காட்சிகள் பார்வையாளர் இன்றி இயங்குகின்றன.

சக்தியில் மின்னல் நிகழ்ச்சி இல்லாமல் போனது மிக்க மகிழ்ச்சி. ஆனால் ரங்கா ஒருவரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை கழித்து பார்த்தால் அது நல்ல நிகழ்ச்சி. தமிழ் பேசும் மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பவும், விமர்சனம் ஊடாக அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவசியம். துரதிஷ்டவசமாக அதை தர யாரும் தயாரில்லை.

சிரசவின் சட்டன நிகழ்ச்சியின் theme இல் சமர் நிகழ்ச்சி கடந்தவாரம் பார்க்கக்கிடைத்தது. 3 மணித்தியாலங்கள் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணித்தியாலத்திற்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு குப்பை நிகழ்ச்சியை விட்டுவிட்டு இன்னொரு மணித்தியாலம் சேர்க்கலாம். அல்லது சட்டணவில் இருந்த சில (தமிழில் வெற்றிகரமாக செய்யமுடியாத) அம்சங்களை விட்டுவிடலாம்.

காண்டீபனின் கேள்வி

புத்தளத்தில் இருக்கும் முஸ்லிம் அகதிகள் வசதியாக இருப்பதாக காண்டீபன் சொன்னார். கேள்வியில் இடம்பெற்ற ஒரு விஷயமென்றாலும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது இந்த எரிச்சலே. 

ஊடகத்தில் இருக்கும் ஒருவர் (எல்லாரையும் ஊடகவியலாளர் என்று புனிதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை). ஆண்டுகளாக மக்கள் அகதிமுகாமில் இருந்துகொண்டு பிச்சை எடுக்கவேண்டும் என்று இவர் நினைக்கிறாரா? சொந்த இடங்களில் இருந்திருந்தால் இதைவிட வசதியாக இருக்கமாட்டார்களா?

இவ்வாறு கேள்விகேட்பவர்கள் ஏன் "புலம்பெயர்ந்தவர்கள்" வசதியாக இருப்பது பற்றி பேசுவதில்லை? அவ்ர்களை வைத்துக்கொண்டு இங்கு இருப்பவர்கள் KFCஇலும் Pizza Hutஇலும் தின்று திரிவதை பற்றி பேசுவதில்லை? எல்லோரும் உப்பு புளிக்கு அரசின் கைகளையா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மைக்கும் குரலும் மட்டும் இருந்தால் போதாது. மண்டையிலும் வேணும்.

அல்லது இவர்களின் நிகழ்ச்சி இதுவரை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யவில்லை?
இன்னும் இந்நிகழ்ச்சி முழுவதும் முகா அரசுடன் சேரக்கூடாது, இம்முறை வாய்ப்பு ததேகூக்கு தான் என்ற தொனி விரவியிருந்தது. இந்த பிச்சைக்காரப்புத்தி எப்போது போகுமோ?

சரியான வார்த்தை "கடப்படித்தனம்" (நன்றி ஆனந்த சங்கரி அவர்கள்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்

தேர்தல் முடிந்த நாள்முதல் மனோகணேசனின் ஒப்பாரிச்சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வழமையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த மனோ கணேசன் இம்முறை அரசியல் சூதாட்டம் ஒன்றை நடத்தினார். வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள கொழும்பை தனது தம்பிக்கு விட்டுக்கொடுத்து கண்டி மாவட்டத்தில் அவர்போட்டியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஐதேக தனது பலத்தை சரியாகவே கணித்திருந்தது என்று தெரிகிறது. 4 பேருக்கு மேல் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஐதேக அங்கு போட்டியிட இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியது. இது தெரியாமல் அடம்பிடித்து கண்டியை பெற்றுக்கொண்ட மனோ ஆப்பை தேடிச்சென்று சொருகிக்கொண்டார்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு ஆகக்குறைந்தது தனது பதவியையேனும் தக்கவைக்க தெரிந்திருக்கவேண்டும். திடிரென தொகுதி மாற்றமுன் குறைந்தது தனக்குள்ள ஆதரவையாவது கணித்திருக்க வேண்டும். கம்பஹாவில் வந்து போட்டியிட்ட பசிலும் அம்பாறையில் வந்து போட்டியிட்ட வீரசேகரவும் தமது பதவிகளினூடாக பாரிய சேவைகளை செய்தே தமது வெற்றியை உறுதிசெய்தனர். ஆனால் மனோவோ எப்போதும்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கண்டிக்கு சென்றுவிட்டார்.

தேர்தலில் தோல்வி உறுதியான பின்னராவது அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி நெருக்குதல்களை கொடுத்திருக்கவேண்டும்.. ஆனால் தனக்கு ஆசனம் கிடைக்கும் என உறுதியாக நம்பிய அவர் கொழும்பில் தோல்வியுற்ற குருபரனுக்கு அவர் யாழ் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கிறார் என தேசியப்பட்டியல் ஆசனம் கோரிக்கொண்டிருந்தார். அந்தோ பரிதாபம்.. அப்போதும் கூட தன்து நிலை என்ன என்பதை அறியாதவராகவே இருந்திருக்கிறார்.

இப்படி மனோ நடந்துகொண்டதால்தான் ஐதேகவும் இழக்காரமாக நினைத்திருக்கும். அவர் கொழும்பில் வெற்றிபெற்ரிருந்தால் அதைக்கொண்டு தனது தம்பிக்கு ஆசனமொன்றை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் தோற்றதால் அவர் கட்சியையே கணக்கெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

அவர் கண்டியில் தோற்றாலும் தோற்றவர்களில் முதல் இடத்திலாவது இருக்கவில்லை. அதுகூட அவரை சொல்வாக்கற்றவராக ஆக்கியிருக்கலாம்.

இன்னும் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களில் எல்லா கட்சிகளிலும் ஆகக்குறைய விருப்பு வாக்கு பிரபா கணேசனுக்கு கிடைத்திருந்தது. இந்த லட்சணத்தில் எப்படி ஐதேகவை நெருக்கமுடியும்?

மனோகணேசன் கொழும்பில் தனித்துப்போட்டியிட்டிருந்தால் இந்த 43,000 ஆயிரம் வாக்குகளை பெற்றீருந்தால் ஒரு ஆசனத்தையெனும் பெற்றிருக்க முடியாது. ஐதேக ஆதரவாளர்களான தமிழர்களின் வாக்குகளை கழித்தால் இந்த என்ணிக்கையையே அடைந்திருக்கமுடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

இதுபோதாதென்று நுவரெலியாவில் போட்டியிட்ட இவர்களது கட்சியச்சேர்ந்த ரங்காவும் அங்கும் வெற்றிபெற்றவார்களில் ஆகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது.

இன்றும் மனோ தன்து வழமையான எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ரணில் இருக்கும் வரை ஐதேகவோடு கூட்டு இல்லை என்றும், ஐதேகவில் இருக்கும் 5 பேரை துரத்தப்போவதாகவும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? தனது பதவியையே காப்பாற்றத்தெரியாதவர் எப்படி அரசியல் நரியான ரணிலை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்?

இதுபோதாதென்று ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் துக்கம் விசாரித்ததைவேறு பகிரங்கப்படுத்தியுள்ளார். (நக்கலுக்கு கேட்டாரோ யாருக்கு தெரியும்?). இவ்வழைப்பு மூலமாக ரணில் துரோகியாக மாற ராஜபக்ச நண்பர் ஆகியுள்ளார். ஆனால் இதுவரை இவர்செய்தது ராஜபக்ச எதிர்ப்பு அரசியலே..

முதலில் மனோ அரசியலில் சில பால பாடங்களை படிக்கவேண்டும். (மனோவும் ரங்காவும் தெளிவாக பேச பழகவேண்டும். தமிழைக்குதப்பிக்கொண்டு வாக்குகேட்டால் உங்கள் நியாயமாவது மக்களுக்கு புரியுமா?)

அத்துடன் இனியாவது ஆழம் பார்க்க தெரியணும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

100ஐ நோக்கி பயணிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை - கவுன்டிங் ஸ்டாட்



கண்டி, திருகோணமலை மாவட்ட மீள்தேர்தல்கள் முடிவுவரும்வரை பிற்போடப்பட்டிருந்த அமைச்சரவை பதவியேற்பு வைபவம் நேற்று பிற்பகல் சுபவேளையில் நடந்து முடிந்தது.

இதன்மூலம் பாராளுமன்றத்தேர்தல் நடந்த நாள் முதல் இன்று வரை ஆளும்கட்சியின் அமோக வெற்றி பற்றி தலைப்புச்செய்தி வெளியிட்டு வந்த அரசஊடகங்கள் இனி அமைச்சரவை பட்டியலை வாசித்தும் பிரசுரித்தும் அதன் பின் அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு சென்று பதவியேற்றது தொடர்பான செய்திகளையும் அவர்களை சகல மத பிரமுகர்கள் வாழ்த்துவதையும் அவர்தம் பிரதேசங்களில் நடைபெறபோகும் வரவேற்புக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை தலைப்புச்செய்திகளாக்கியும் காலம் தள்ளுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பதவியேற்ற அமைச்சரவையில் 37 அமைச்சர்களும் (ஜனாதிபதியைச்சேர்த்து 38) 39 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

நேற்று 37பேரை மாத்திரம் அமைச்சர்களாக பதவியேற்கச்செய்ததன் மூலம் ஜனாதிபதி;  தான் வாக்களித்த 35 பேர் கொண்ட அமைச்சர்வையை செய்து காட்டியுள்ளதாக அவரது தீவிர ஆதரவாளர்களை நம்பவைக்க முயற்சித்திருப்பது தெளிவு.

இங்கு 
  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 அமைச்சரும் 3 பிரதியமைச்சர்களும்
  • துறைமுக விமானசேவைகள் அமைச்சுக்கு 2 பிரதியமைச்சர்களும்
நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கப்படல்வேண்டும்

நாவலப்பிட்டிய சம்பவம் தொடர்பாக கட்சிக்குள் விசாரணைகள் நடைபெறுவதால் அதன் முடிவு வரும் வரையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பொறுப்புகள் வழங்கப்படவில்லை. எனவே இவ்வமைச்சரவை இன்னும் வளரும் என்பது தெளிவு.

பட்டியலை பெரிதாக பார்க்க படத்தின்மீது click செய்யவும்



எப்போதும் ஜனாதிபதி வசம் இருக்கும் 
  • பாதுகாப்பு மற்றும் 
  • நிதி அமைச்சுகளை 
தவிர்த்து, 
  • துறைமுகம் , விமானசேவை, 
  • பெருந்தெரு 
ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர
  • ஊடகம், தகவல்கள்
  • கால்நடை அபிவிருத்தி
  • உயர் கல்வி
  • தொழிநுட்பம், ஆராய்ச்சி
ஆகிய 4 அமைச்சுக்கள் இன்னமும் ஜனாதிபதி வசம் இருக்கின்றன / யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் 6 அமைச்சுக்கள் காத்திருக்கின்றன என்று தெரிகிறது.

அத்துடன்
  • இளைஞர் அலுவல்கள்
  • விளையாட்டு 
  • சுற்றாடல்
  • தொழில் உறவு, உற்பத்தி மேம்பாடு 
  • தேசிய மொழி, சமூக நல்லிணக்கம்
  • பௌத்த, மத விவகாரம்
  • பொது முகாமை, மறுசீரமைப்பு
பாராளுமன்ற அலுவல்கள்
ஆகிய 8 அமைச்சுக்களுக்கு பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இவையும் கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் காத்திருப்பதாகவே கருத தோன்றுகின்றது.

2/3 பெரும்பான்மையைப்பெற வெறும் 6 பாராளுமன்ற உறுப்பினர்களே தேவையாக இருக்கையில் மொத்தமாக 14 பதவிகளை ஆசைகாட்டுவதற்காக வைத்திருப்பதுபோல் தெரிகிறது. இந்த 14 பதவிகளில் 4; எஸ்.பி., கெஹலிய, அமுனுகம, பைசர் முஸ்தபா ஆகியோருக்கு கிடைக்கக்கூடும்.

சுற்றுலாத்துறைக்கு அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ நியமிக்கப்படவில்லை. இவ்வமைச்சு வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டால் இன்னும் 2 பதவிகளும் இருக்கின்றன.

இவையாவும் நிரப்பப்பட்டபின்
அமைச்சர்கள் 37 + 6 + 1 = 44 ஆகவும்
பிரதியமைச்சர்கள் 39 + 8 + 1 = 48 ஆகவும்
அமையக்கூடும். ஈற்றில் அமைச்சரவை 100ஐத்தொடும். இது ஆளும் தரப்பில் 2/3 பங்காகும்.

அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான சுவையான சம்பவங்களை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல்

இலங்கை பாராளுமன்றத்தேர்தலின் சகல முடிவுகளும் நேற்று நள்ளிரவு வெளியானதை தொடர்ந்து, சற்றுமுன் சகல கட்சிகளும் தத்தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.

இலங்கையின் 14ஆவது பாராளுமன்றத்தில்; மொத்த உறுப்பினர்களில் 27 தமிழர்களும் 18 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.

2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு


List of Tamil, Muslim MPs
14th Sri Lankan parliamentary election

நிறக்குறியீடு
ஐதேமு
ஐமசுமு
ததேகூ
மாவட்டம்
நுவரெலியா ஆறுமுகம் தொண்டமான்
ராதாகிருஷ்ணன்
பெருமாள் ராஜதுரை

பழனி திகாம்பரம்
சிறீரங்கா ஜயரட்ணம்

X
வன்னி

செல்வம் அடைகலநாதன்
N.லிங்கம்
சிவசக்தி ஆனந்தன்

ரிஷாட் பதியுதீன்
உனைஸ் பாரூக்

நூர்தீன் மஷூர்
கேகாலை X கபீர் ஹாஷிம்
யாழ்ப்பாணம் மாவை சேனாதிராஜா
சுரேஷ் பிரேமசந்திரன்
வினாயகமூர்த்தி
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

டக்ளஸ் தேவானந்தா
உதயன்
சந்திரகுமார்

மகேஸ்வரன் விஜயகலா
X
திருகோணமலை சம்பந்தன்
தௌபீக்
அம்பாறை (திகாமடுல்ல) X அதாவுல்லா
ஹரீஸ்
பைசல் காசிம்
கொழும்பு பிரபா கணேசன் பௌசி
கண்டி X காதர்
ஹக்கீம்
ஹலீம்

பைசர்
மட்டக்களப்பு யோகேஸ்வரன்
பொன்னம்பலம் செல்வரா
அரியநேத்திரன்
பஷீர் சேகுதாவூத்
ஹிஸ்புல்லா
தேசியப்பட்டியல் முத்து சிவலிங்கம்
கருணா

சுவாமிநாதன்
யோகராஜன்

சுமந்திரன்
அஸ்வர்
ஹசன் அலி
முஹமட் சாலிம்
மொத்தம் 27
18

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வெற்றிபெற்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல்

தேசியப்பட்டியல் தவிர்ந்த கண்டி திருகோணமலை உள்ளடங்கலான முடிவுகளின்படி விருப்பு வாக்குமுறைமூலமாக தேர்வுசெய்யப்பட்டவர்களில் 22 தமிழர்களும் 15 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.

2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு

.. >> தேசியப்பட்டியல் விரைவில் update பண்ணப்படும்

மாவட்டம்
நுவரெலியா ஆறுமுகம் தொண்டமான்
ராதாகிருஷ்ணன்
பெருமாள் ராஜதுரை

பழனி திகாம்பரம்
சிறீரங்கா ஜயரட்ணம்

X
வன்னி

செல்வம் அடைகலநாதன்
N.லிங்கம்
சிவசக்தி ஆனந்தன்

ரிஷாட் பதியுதீன்
உனைஸ் பாரூக்

நூர்தீன் மஷூர்
கேகாலை X கபீர் ஹாஷிம்
யாழ்ப்பாணம் மாவை சேனாதிராஜா
சுரேஷ் பிரேமசந்திரன்
வினாயகமூர்த்தி
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

டக்ளஸ் தேவானந்தா
உதயன்
சந்திரகுமார்

மகேஸ்வரன் விஜயகலா
X
திருகோணமலை சம்பந்தன்
தௌபீக்
அம்பாறை (திகாமடுல்ல) X அதாவுல்லா
ஹரீஸ்
பைசல் காசிம்
கொழும்பு பிரபா கணேசன் பௌசி
கண்டி X காதர்
ஹக்கீம்
ஹலீம்

பைசர்
மட்டக்களப்பு யோகேஸ்வரன்
பொன்னம்பலம் செல்வரா
அரியநேத்திரன்
பஷீர் சேகுதாவூத்
ஹிஸ்புல்லா
தேசியப்பட்டியல் .. ..
மொத்தம் 22*
15*

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

அரசியல் புதுவருடப்போட்டிகள்

சுவர்ணவாஹினியில் சனிக்கிழமை 7.30க்கு ஒளிபரப்பாகும் அரசியல் நிகழ்ச்சி And Company. சமகால இலங்கை அரசியலை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி. தேர்தல் காலங்களில் அரசுக்கு சாதகமாக செயற்பட்டாலும் மற்றைய நாட்களில் இது சிறந்த நிகழ்ச்சியே.

கடந்த 10ஆம் திகதி ஒளிபரபான நிகழ்ச்சியில் புதுவருடப்போட்டிகளையும் அரசியலையும் கலந்து சிறப்பாக செய்திருந்தார்கள். அதன் videoஐ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்நிகச்சியில்

பணிஸ் சாப்பிடும் போட்டியில் ரணில் பணிஸ் சாப்பிட தெரியாமல் தடவிக்கொண்டிருப்பார். அவருக்கு உதவ மங்கள சென்றாலும் அவரையும் விடமாட்டார். ஆனால் விமல் வீரவன்ச சம்பிக்க, மேர்வின் என எல்லோருடைய பணிஸையும் சாப்பிடுவார்.

கயிறிழுத்தல் போட்டியில் கயிறிழுக்கும்போது சோமவன்ச, தனக்கும் வாய்ப்பு வழங்குமாறும் ஆனால் ரணிலின் தலைமையின் கீழ் கயிறிழுக்க முடியாது எனவும் கூறுவார்.

இன்னும்

  • யானைக்கு கண்வைத்தல் போட்டியில் கண்ணைத்திறந்துகொண்டாவது யானைக்கு கண் வைக்க தடுமாறும் ரணில்
  • பொய்சொல்லும்போட்டியில் ஒரே விடயத்தையே கூறும் வீரவன்ச, சம்பிக்க
  • ரணில் மஹிந்த இடையே தலையணை சண்டை
  • முட்டியுடைக்க முயற்சிக்கும் ரணில் மற்றவரின் மண்டையை உடைப்பது
  • விநோத உடைப்போட்டியில் வெற்றி பெற்ற பொதுஜனம்
என சிரித்து சிரித்து வயிறு வலிக்கவைக்கும் பல அம்சங்கள் உண்டு.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முகா - ததேகூ பேச்சுவார்த்தை , அசாத் சாலியின் ஒப்பாரி

முகாவுடன் இணைந்து செயற்பட ததேகூ விருப்பம் தெரிவித்துள்ளது. ஒருபுறத்தில் நாங்கள் இருக்கிறோம், ஒரு சமிக்ஞை மட்டும் காட்டுங்கள், சரணாகதி ஆக ஓடிவருகிறோம் என்பதுபோல் அடிக்கடி அரசுக்கு ஊடகங்களினூடாகவும் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கும் ததேகூ இன்னொரு புறத்தில் இப்படியான செய்திகளையும் தருகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இப்படியான பேச்சுவார்த்தை நடந்தபோது கடைசிதருணத்தில் "வட கிழக்கு" இணைப்பு பற்றி பேசி அதை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஏதோ முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படாமல் இருப்பதன் மூலம் வட கிழக்கை இணைத்து விடப்போகிறமாதிரி..

இனி பேச்சுவார்த்தை நடத்தினால்கூட இதே பிரச்சினையை கடைதருணத்தில் பேசமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி இருக்கையில் எந்தூத்தரவாதத்தில் பேசப்போவது?

அரசாங்கத்திற்கு வெறும் 6 உறுப்பினர்களைமாத்திரம் எதிர்த்தரப்பில் இருந்து பிடுங்கவேண்டிய நிலையில் அந்த 6 பேருக்குள் இடம்பிடிக்க ததேகூ இடம்பிடிக்க முண்டியடிப்பது தெரிகின்றது. அதற்கிடையில் முகா இணைந்துவிடுமோ என்ற பயத்தில்தான் இந்த இணைந்து செயற்படுதல் பற்றி பேசப்படுகிறது. அதுவும் அமைச்சரவை அமைக்கப்பட முன் ஓடவேண்டும் என்ற அவசரம் தெளிவாகவே தெரிகிறது.

தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் அசாத் சாலி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் முஸ்லிம்வாக்குகள் ஐதேமுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் தனக்கு முழு ஆதரவு தந்ததாகவும், தனது தீவிர பிரச்சாரம் காரணமாக ஐதேமு இல் போட்டியிட்ட 3 பேரும் தோல்வியடைந்ததாகவும் மார்தட்டிகொள்ளும் அவர்; ஐதேமு இன் வாக்கு வங்கியில் இருந்து தனக்கு கிடைத்த வாக்குகளில் 30ஆயிரம் கொள்ளையிடப்ப்ட்டுள்ளதாக பத்திரிகைகளில் ஒப்பாரி வைக்கிறார்.

இது உங்களுக்கு நடக்கும் என்பது எப்போதோ எங்களுக்கு தெரியும்.. திருடனுக்கு தேள் கொட்டினா வாய்திறக்க கூடாது ராசா..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்