Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

காண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக்கார அமைச்சர்கள். சார்க்

கெட்டிக்கார அமைச்சர்கள்

இலங்கையின் அமைச்சர்வை கடந்தவாரம் பதவியேற்றது. அதன்பின் ஊடகங்களில் அவ்வமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்தான் அதிசயிக்கவைத்தன. பதவியேற்பு வைபவம் முடிந்த கையோடு, அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார்கள். அட.. சரியான சுட்டி.. இவ்வளவு கெட்டிக்காரர்களா?

சார்க்

சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகும். பாடசாலைக்காலத்தில் இருந்து சார்க் ஒரு ரோதனையாகவே இருக்கிறது. பரீட்சைகளில் அதைபற்றிய கேள்விகளை எதிர்கொண்டதை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் நன்மைகளை சாதாரண பொதுமக்கள் அடைந்ததாக தெரியவில்லை. (சில பொருளாதார ஒப்பந்தங்கள் சார்க் என்ற அமைப்பு ரீதியான தோற்றமளிக்காமல் இருதரப்பு ஒப்பந்தங்களாகவே தெரிகின்றன்). கூடி கூடி என்ன செய்கிறார்கள்?

சக்தியின் சமர்

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி என்று பேசும்போது சக்தியை தவிர்க்க முடியவில்லை. பல தமிழ் தொலைக்காட்சிகள் பார்வையாளர் இன்றி இயங்குகின்றன.

சக்தியில் மின்னல் நிகழ்ச்சி இல்லாமல் போனது மிக்க மகிழ்ச்சி. ஆனால் ரங்கா ஒருவரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை கழித்து பார்த்தால் அது நல்ல நிகழ்ச்சி. தமிழ் பேசும் மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பவும், விமர்சனம் ஊடாக அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவசியம். துரதிஷ்டவசமாக அதை தர யாரும் தயாரில்லை.

சிரசவின் சட்டன நிகழ்ச்சியின் theme இல் சமர் நிகழ்ச்சி கடந்தவாரம் பார்க்கக்கிடைத்தது. 3 மணித்தியாலங்கள் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணித்தியாலத்திற்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு குப்பை நிகழ்ச்சியை விட்டுவிட்டு இன்னொரு மணித்தியாலம் சேர்க்கலாம். அல்லது சட்டணவில் இருந்த சில (தமிழில் வெற்றிகரமாக செய்யமுடியாத) அம்சங்களை விட்டுவிடலாம்.

காண்டீபனின் கேள்வி

புத்தளத்தில் இருக்கும் முஸ்லிம் அகதிகள் வசதியாக இருப்பதாக காண்டீபன் சொன்னார். கேள்வியில் இடம்பெற்ற ஒரு விஷயமென்றாலும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது இந்த எரிச்சலே. 

ஊடகத்தில் இருக்கும் ஒருவர் (எல்லாரையும் ஊடகவியலாளர் என்று புனிதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை). ஆண்டுகளாக மக்கள் அகதிமுகாமில் இருந்துகொண்டு பிச்சை எடுக்கவேண்டும் என்று இவர் நினைக்கிறாரா? சொந்த இடங்களில் இருந்திருந்தால் இதைவிட வசதியாக இருக்கமாட்டார்களா?

இவ்வாறு கேள்விகேட்பவர்கள் ஏன் "புலம்பெயர்ந்தவர்கள்" வசதியாக இருப்பது பற்றி பேசுவதில்லை? அவ்ர்களை வைத்துக்கொண்டு இங்கு இருப்பவர்கள் KFCஇலும் Pizza Hutஇலும் தின்று திரிவதை பற்றி பேசுவதில்லை? எல்லோரும் உப்பு புளிக்கு அரசின் கைகளையா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மைக்கும் குரலும் மட்டும் இருந்தால் போதாது. மண்டையிலும் வேணும்.

அல்லது இவர்களின் நிகழ்ச்சி இதுவரை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யவில்லை?
இன்னும் இந்நிகழ்ச்சி முழுவதும் முகா அரசுடன் சேரக்கூடாது, இம்முறை வாய்ப்பு ததேகூக்கு தான் என்ற தொனி விரவியிருந்தது. இந்த பிச்சைக்காரப்புத்தி எப்போது போகுமோ?

சரியான வார்த்தை "கடப்படித்தனம்" (நன்றி ஆனந்த சங்கரி அவர்கள்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்

தேர்தல் முடிந்த நாள்முதல் மனோகணேசனின் ஒப்பாரிச்சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வழமையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த மனோ கணேசன் இம்முறை அரசியல் சூதாட்டம் ஒன்றை நடத்தினார். வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள கொழும்பை தனது தம்பிக்கு விட்டுக்கொடுத்து கண்டி மாவட்டத்தில் அவர்போட்டியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஐதேக தனது பலத்தை சரியாகவே கணித்திருந்தது என்று தெரிகிறது. 4 பேருக்கு மேல் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஐதேக அங்கு போட்டியிட இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியது. இது தெரியாமல் அடம்பிடித்து கண்டியை பெற்றுக்கொண்ட மனோ ஆப்பை தேடிச்சென்று சொருகிக்கொண்டார்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு ஆகக்குறைந்தது தனது பதவியையேனும் தக்கவைக்க தெரிந்திருக்கவேண்டும். திடிரென தொகுதி மாற்றமுன் குறைந்தது தனக்குள்ள ஆதரவையாவது கணித்திருக்க வேண்டும். கம்பஹாவில் வந்து போட்டியிட்ட பசிலும் அம்பாறையில் வந்து போட்டியிட்ட வீரசேகரவும் தமது பதவிகளினூடாக பாரிய சேவைகளை செய்தே தமது வெற்றியை உறுதிசெய்தனர். ஆனால் மனோவோ எப்போதும்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கண்டிக்கு சென்றுவிட்டார்.

தேர்தலில் தோல்வி உறுதியான பின்னராவது அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி நெருக்குதல்களை கொடுத்திருக்கவேண்டும்.. ஆனால் தனக்கு ஆசனம் கிடைக்கும் என உறுதியாக நம்பிய அவர் கொழும்பில் தோல்வியுற்ற குருபரனுக்கு அவர் யாழ் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கிறார் என தேசியப்பட்டியல் ஆசனம் கோரிக்கொண்டிருந்தார். அந்தோ பரிதாபம்.. அப்போதும் கூட தன்து நிலை என்ன என்பதை அறியாதவராகவே இருந்திருக்கிறார்.

இப்படி மனோ நடந்துகொண்டதால்தான் ஐதேகவும் இழக்காரமாக நினைத்திருக்கும். அவர் கொழும்பில் வெற்றிபெற்ரிருந்தால் அதைக்கொண்டு தனது தம்பிக்கு ஆசனமொன்றை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் தோற்றதால் அவர் கட்சியையே கணக்கெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

அவர் கண்டியில் தோற்றாலும் தோற்றவர்களில் முதல் இடத்திலாவது இருக்கவில்லை. அதுகூட அவரை சொல்வாக்கற்றவராக ஆக்கியிருக்கலாம்.

இன்னும் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களில் எல்லா கட்சிகளிலும் ஆகக்குறைய விருப்பு வாக்கு பிரபா கணேசனுக்கு கிடைத்திருந்தது. இந்த லட்சணத்தில் எப்படி ஐதேகவை நெருக்கமுடியும்?

மனோகணேசன் கொழும்பில் தனித்துப்போட்டியிட்டிருந்தால் இந்த 43,000 ஆயிரம் வாக்குகளை பெற்றீருந்தால் ஒரு ஆசனத்தையெனும் பெற்றிருக்க முடியாது. ஐதேக ஆதரவாளர்களான தமிழர்களின் வாக்குகளை கழித்தால் இந்த என்ணிக்கையையே அடைந்திருக்கமுடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

இதுபோதாதென்று நுவரெலியாவில் போட்டியிட்ட இவர்களது கட்சியச்சேர்ந்த ரங்காவும் அங்கும் வெற்றிபெற்றவார்களில் ஆகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது.

இன்றும் மனோ தன்து வழமையான எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ரணில் இருக்கும் வரை ஐதேகவோடு கூட்டு இல்லை என்றும், ஐதேகவில் இருக்கும் 5 பேரை துரத்தப்போவதாகவும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? தனது பதவியையே காப்பாற்றத்தெரியாதவர் எப்படி அரசியல் நரியான ரணிலை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்?

இதுபோதாதென்று ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் துக்கம் விசாரித்ததைவேறு பகிரங்கப்படுத்தியுள்ளார். (நக்கலுக்கு கேட்டாரோ யாருக்கு தெரியும்?). இவ்வழைப்பு மூலமாக ரணில் துரோகியாக மாற ராஜபக்ச நண்பர் ஆகியுள்ளார். ஆனால் இதுவரை இவர்செய்தது ராஜபக்ச எதிர்ப்பு அரசியலே..

முதலில் மனோ அரசியலில் சில பால பாடங்களை படிக்கவேண்டும். (மனோவும் ரங்காவும் தெளிவாக பேச பழகவேண்டும். தமிழைக்குதப்பிக்கொண்டு வாக்குகேட்டால் உங்கள் நியாயமாவது மக்களுக்கு புரியுமா?)

அத்துடன் இனியாவது ஆழம் பார்க்க தெரியணும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்