Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label SLMC. Show all posts
Showing posts with label SLMC. Show all posts

மத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது?



இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

  • எப்படியும் ஐமசுமு வெல்லத்தான் போகிறது
  • ரணில் இருக்கும் வரை ஐதேக பலம் பெறாது
  • இதுவரை காலமும் இருந்த கொஞ்ச நஞ்ச ஆறுதல்களும் இந்த ஐமசுமு அரசாங்கத்தில் பறிக்கப்படுகின்றன
  • வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் சிறுபான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதா?
  • தனியாக கேட்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதா? அந்த வாக்குகள் கடைசியில் யாரை போய்ச்சேரும்?
போன்ற பல்வேறு நம்பிக்கைகளும் சந்தேகங்களுமே இந்த குழப்பங்களுக்கு காரணம்.

இந்த குழப்பத்தை தீர்த்துக்கொள்ள  பின்வரும் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.



  1. ஐமசுமுவின் தோல்வி அலை பயம் :-
    வடமாகாண சபை தேர்தலை மட்டும்நடாத்திருக்கவேண்டிய அரசாங்கம் மத்தி சப்ரகமுவா மாகாண சபைகளையும் கலைத்து மொத்தமாக3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துகிறது. ததேகூ வெற்றிபெறுவது உறுதியான வடமாகாணசபை தேர்தலை மட்டும் நடாத்தினால் அங்கு ஆரம்பமாகும் தோல்வி அலை தொடர்ந்து வரும்தேர்தல்களில் தாக்கம் செலுத்தி இந்த அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என ஆளும் ஐமசுமுகருதுவதால் அந்த அலையை இல்லாமல் செய்யவே தனக்கும் வெற்றி வாய்ப்புள்ள இன்னும்இரண்டு மாகாணசபைகளையும் கலைத்து தேர்தலை நடாத்துகிறது. இதன்மூலம் 2 மாகாண சபைகளைவெல்வதை கொண்டு ஒரு மாகாண சபையின் தோல்வியை ஐமசுமு மறைக்க முயல்கிறது.
  2. மத்திய மாகாண சபையை வெல்வது இலகுவானதல்ல என்ற ஐமசுமுவின்பயம் :-மத்திய மாகாண சபையில் அரசாங்கத்தின் வெற்றி இலகுவானதல்ல என்ற உளவு அறிக்கைஐமசுமு தலைவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். இதனாலேயே தயாசிறி ஜயசேகரவை அதுவாங்கியிருக்கிறது. ஆக எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்துவது ஒன்றும் சாத்தியமற்ற விடயம் அல்ல. அது சத்தியம்தான் என்பதை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. ஆக மக்கள் நம்பிக்கையாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது அவசியம்.

    ஆக ஐமசுமுவுக்கே தோல்வி பயம் இருக்கும்போது நாம்மட்டும் ஏன் அவர்கள்தான் வெல்வார்கள் என்ற விரக்தி மனப்பான்மையில் இருக்கவேண்டும்?
  3. பஷீர் சேகுதாவூத் ஏன் வடக்கை தவிர்த்து கண்டியில்பிரச்சாரம் செய்கிறார்? :- வடமாகாண சபை தேர்தலில் பிரச்சாரம் செய்யகேட்டுக்கொள்ளப்பட்ட பஷீர் சேகுதாவூத் ஏன் அங்கு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடாமல்மத்திய மாகாணத்தில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்களின் வாக்குகள்ஐதேகவுக்கு செல்வதை தடுத்து எப்படியாயினும் முகாவுக்கு வாக்களிக்க செய்வதற்கானமுயற்சியே யாக அது இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஐமசுமு அரசாங்கத்தின்பங்காளியாக இருக்கும் முகாவுக்கு கிடைக்கும் வாக்குகளால் கிடைக்கும்உறுப்பினர்களையும் சேர்த்து ஐமசுமு மத்திய மாகாணசபையை குறைந்த நெருக்கடிகளோடுகைப்பற்றிக்கொள்ளும்.
  4. அதிக உறுப்பினர்களை பெறும் கட்சியே வெற்றி பெறும் :-
    மாகாணசபையை வெல்வதற்கு கட்சி தனியாக கூடுதலான உறுப்பினர்களை பெறவேண்டும். மத்தியஅரசாங்கத்தைப்போல் கூட்டரசாங்கம் அமைக்க முடியாது. ஆனால் அங்கு பெரும்பான்மையை கூட்டணியூடாக உறுதி செய்வதன்மூலம் மாகாண சபையில் சட்ட மூலங்களை இலகுவாகவெற்றிபெறச்செய்ய மட்டுமே முடியும். ஆக சிறிய கட்சிகளால் ஆட்சியமைப்பவரை தீர்மானிக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  5. சிறிய கட்சிகள் பேரம் பேசும் நிலமையில் இல்லை :-
    சிறுபான்மை கட்சிகளின் வழமையான தேர்தல் பிரசாரம், அவர்களுக்கு கிடைக்கும் உறுப்பினர்களை கொண்டு பேரம் பேசி சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதாகும். இரு பிரதான கட்சிகளும் ஏறத்தாள சமமான வாக்குகளை பெறாதவரை சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் இவர்களின் பேரம் பேசும் சக்தியை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாண சபையில் எதையும் கிழிக்கமுடியவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது. தென்கிழக்கு நிர்வாக மாவட்டம் என்ற கவர்ச்சியான வாக்குறுதி, அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்களை அரசாங்கம் “ பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எனவே இந்த நிலமையில் சிறிய கட்சிகளை நம்பி பலன் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆக மத்திய மாகாண சபையில் ஐமசுமு வெற்றி பெறாமல் இருக்கவேண்டுமானால் ஐதேக அதிகஉறுப்பினர்களை பெறவேண்டும். இதை உறுதி செய்ய சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல்ஐதேகவுக்கே வாக்களிக்கவேண்டும்.

இந்த அரசாங்கத்தின்ஜனநாயகவிரோத போக்கை கட்டுப்படுத்தவேண்டுமானல், மக்களின் கையில் இருக்கும் ஒரேயொருஜனநாயக ரீதியான ஆயுதம் இதுதான்.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

அஷ்ரப் - மறக்க முடியாத ஆளுமை. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் சிதறுண்டிருந்த பலத்தை ஒருமுகப்படுத்தி அதை லாவகமாக கையாண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி.

இன்று முஸ்லிம் அரசியலில் ஈடுபடுவோர் எல்லோருக்கும் அஷ்ரப் ஒரு மாமனிதர் என்று சொல்வதும், அவர் பாசறையில் தாம் வளர்ந்தவர்கள் என்று சொல்வதும் மிகுந்த அவசியமாகி இருக்கிறது. இது இவர்களின் அரசியலுக்கு அடிப்படையான மூலதனமாக இருந்தாலும் இதில் இருக்கும் ஆபத்தை சரியாக புரிந்துகொள்வது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்.

நேற்றுவரை முகவரியற்று இருந்தபலர் திடீரென தான் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவதை காண்கிறோம். அல்லது ஏதாவது ஒரு அரசியல் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்க வெறுமனே அஷ்ரப் அன்று இப்படி செய்தார் என்று கூறுவதோ அல்லது ஒரு ஒலிக்கீற்றை ஒலிக்கச்செய்வதோ போதுமாக இருக்கின்றது. இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வரலாற்றில் நபிகள் நாயகத்தை விட உயர்ந்த தலைவர் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் அவருக்குப்பின் வெறுமனே வாய்ப்பேச்சால் அவரை புகழ்ந்துகொண்டு இருந்ததா? இல்லை! ஆனால் அவரின் இலட்சியங்களுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்பங்களிப்பை வழங்க நபிகளாரின் இலட்சியத்தை இன்றுவரை மழுங்கடிக்காமல் சமூகம் முன்னேறிச்செல்கிறது.

அதேபோல் காலித் இப்னு வலீத் (ரழி) என்ற உலகவரலாற்றில் தோல்வியையே சந்திக்காத தளபதியையும் இங்கு ஞாபகப்படுத்துவதும் அவசியம். முஸ்லிம்களின் இராணுவ தளபதியாக தொடர்ச்சியாக வெற்றிகளைத்தேடித்தந்த அந்த தளபதி; அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களால் பதவி நீக்கப்பட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள் சொன்ன காரணம், "வெற்றிகளை பெற்றுத்தருவது இறைவனே.. ஒரு தனிமனிதர் அல்ல என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடையே பாதுபாப்பதாகும்".

I have not dismissed Khalid because of my anger or because of any dishonesty on his part, but because people glorified him and were misled.[97] I feared that people would rely on him. I want them to know that it is Allah who give us victory; and there should be no mischief in the land
—Caliph Umar.

அதனால்தான் ராணுவ தளபதியாக பதவி நீக்கப்பட்டபோதும் தனக்குப்பின் ஆட்சிசெய்ய தகுதியானவராக உமர் (ரழி) அவர்களால் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் பெயரிடப்பட்டார்கள்.

இதன்மூலம் ஒரு தனி நபரில் ஒரு சமூகம் தங்கியிப்பதை இஸ்லாமும் அதன்பின் இஸ்லாமிய வழி வந்த இஸ்லாமிய தலைவர்களும் ஒருபோதும் ஆதரித்ததிலலை என்பது தெளிவாகின்றது.

ஆனால் இன்று அஷ்ரப் பாடுபட்ட இலட்சியங்களை சமூகம் மறந்து தனி மனித வழிபாடு போன்ற ஒன்றை செய்து கொண்டிருப்பதால்தான் அன்று அஷ்ரப்பினால் சாதிக்க முடிந்த பலவற்றை எம்மால் இன்று சாதிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே இன்று முஸ்லிம் சமூகம் செய்யவேண்டியிருப்பதெல்லாம் அஷ்ரப் என்ற இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் பேசிப்பேசி எதிர்காலத்தை இழக்காமல் அவர் பயணித்த பாதையில் பயணிக்ககூடிய தகுதியான தலைவரின்பின் அணிசேர்வதே..

அஷ்ரப் அவர்கள் மரணித்து இன்றோடு 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி இரண்டு கட்டுரைகள்
அஷ்ரப் - அவர் வயற்காரனாக இருந்தார்
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முகாவின் முடிவு சரியா?

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (முகா)அரசுக்கு யாப்பு தொடர்பான இருமாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்தவுடன் உடன் படிக்கைக்கு வந்திருக்கிறது..

முதலில் மக்கள் ஏன் முகா வுக்கு ஆதரிவளிதார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்?

மகிந்த அரசின் மீதான வெறுப்பினாலா?

இல்லை என்பதை நீங்கள் அறியாவிட்டால் நீங்கள் இன்னும் அரசியல் களத்தில் போதிய அறிவு பெறவில்லை என்பது நிரூபணமாகும். ஒரு சிலர் கொண்ட வெறுப்புக்கும் காரணமாக இருப்பது முகாவை மகிந்த பிரித்திருக்கிறார் என்பதே தவிர மகிந்த மீது தீரா பகை கொள்ள வேறு காரணம் இல்லை..

மஹிந்த அரசு சேவை செய்யவில்லையா?
அது யுத்தத்தை முடிக்கவில்லையா?
தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லையா?
அபிவிருத்திகள் செய்யவில்லையா?
இன்னும் 6 வருடத்திற்கு அல்லது பெரும்பாலும் 12 வருடத்திற்கு இவ்வரசு ஆட்சியில் இருக்காதா?

இல்லை என்ற பதில் நீங்கள் மகிந்த மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிபாடாகதான் அமையும்.
I supported Ranil in the 2005 election, but he didn’t run in 2010, so there isn’t really anything to support. I don’t see why a guy who won’t run for President still wants to retain control of the opposition though, in reality, he no longer has control. Some people really believe in the UNP or are simply to incompetent to cross, and that’s who’s left. Most of the bright lights have left the UNP and now it looks like Rauf Hakeem and the Sri Lanka Muslim Congress are on the way out.

indi.ca

ஐதேக ஆட்சிக்கு வரும் அறிகுறி எங்காவது தெரிகிறதா?
இல்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.. அடுத்த தலைவராக வரக்கூடிய சஜித்க்கும் தெரியும்.. இவ்வளவு ஏன்? தனக்கும் சஜித்துக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக நாமல் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் வாக்களித்து வந்த நாமலை சஜித் இன் அம்மா ஹேமா உச்சிமோர்ந்ததும் ரகசியம் அல்ல..

இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக மகிந்தவை தனியாக ரணில் சந்தித்ததும் சபா நாயகர் பதவியை விட்டுகொடுக்க முன்வந்ததும் நேற்றுவரை மகிந்தவுடன் தேநீர் அருந்தி பேசிக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டிருக்கும்போது
முகாவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் இந்த தலைவர் மட்டும் ஐதேகவுடன் ஒட்டிகொண்டிருக்கிறார் என்று விமர்சிக்க மாட்டார்களா?

ஒற்றை உறுப்பினரை கொண்ட கணேசனின் கட்சியில் பிரபா கணேசன் அரசுக்கு தாவிவிட்டார். மின்னலில் சீறிக்கொண்டிருந்த ரங்கா நாமளுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாட எல்லையில்லா ஆசைகொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி தராததால் ஐதேக மீது கோபம் கொண்டிருந்த மனோ கணேசன் பிரபா கணேசனை பிரித்த கோபத்தினால் மட்டும் ஐதேகவுடன் ஒட்டி இருப்பார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரபா கணேசன் ஊடாக வேண்டிய அரச ஒத்தாசைகள் கிடைக்கும் .

ததேகூ கூட என்று அரசிலிருந்து ஒரு கண்சாடை கிட்டும்.. ஓடிப்போய் சேரலாம் என்று தருணம் பார்த்திருக்கும்போது ஏன் முகா மட்டும் எதிர்த்து நின்று கால விரயம் செய்யவேண்டும்? இந்த ததேகூ ஆதரவு ஊடகங்கள்தான் இப்போது முகா அரசுடன் சேர்ந்துவிட்டது என்றுஓலமிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்தால் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதே தெளிவாகின்றது..

இதில் மிகப்பெரிய கோமாளியாகியிருக்கிறார் ஐதேக பிரதி தலைவர் கரு. முகா யானை சின்னத்தில் போட்டியிட்டது என்றும் அது ஐதேகவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஐதேக பலமாக இருந்தபோது பல தலைகளை மஹிந்த அணிக்கு கூடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி வந்தவர் இந்த லாஜிக் தனக்கு பொருந்தாது என்றுநினைத்திருக்கிறாரோ..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

TV உடன் ஞாயிறு

இந்த ஞாயிறு உடன் வீட்டில் கழிந்தது. அதில் சில சுவாரசியங்களை உங்களுடன் பகிரலாம்.

  • வெற்றி TV முதல் தடவையாக பார்த்தேன். (பயணங்கள் காரணமாக பிந்திப்போனது). Tune பண்ணி முடித்தபோது நேபாளி படம் போய்க்கொண்டிருந்தது.

    நேபாளி என்ற பெயர் காரணமாக படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அதனால் அதைப்பார்த்திருக்கவில்லை. காதல் காட்சிகளாகட்டும் மற்றவையாகட்டும், எல்லாம் பிடித்திருந்தது. பரத்தின் மரணம் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடித்திருந்தது. கதாநாயகனின் மரணம் சோகமின்றி ஜீரணிக்க கூடியதாக இருந்தது படத்தின் தரத்துக்கு சான்று.

    தம்பதியர் தனியாக வாழ்வது எவ்வளவு பெரிய என்பது பயமுறுத்தி புரியவைக்கப்பட்டுள்ளது. இனி எல்லா நண்பர்களுக்கும் தனியாக வாழ வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

    அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மது போதை அல்லாத காட்சிகள் censor செய்யப்பட்டதும் இப்படத்தில் தான் காணக்கிடைத்தது. சிறையில் ஆண் கைதிகள் குளிக்கும் காட்சியும் censor செய்யப்பட்டது.

  • வெற்றிக்கு Tune பண்ணியபோது இலவச இணைப்பாக டாண் TV கிடைத்தது. ஒரு ஆரோக்கியமான போட்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது டாண் TV இல் கிடைக்குமா என்பது சந்தேகமே..

  • டில்ஷானின் மீது ஆத்திரம். மலை போல் ஒரு இலக்கு இருக்கும்போது பொறுப்பற்று; ஜயசூரிய ஆட்டமிழந்த பின்னும் நிதானமாக டில்ஷான் ஆடவில்லை. அவ்வளவு விரைவாக அடித்தாடவேண்டியிருக்கவில்லை. தான் அப்படித்தான் என்று காட்டப்போய் விக்கட்டை தாரை வார்த்தார். அதேபோல் மகேலவும். வெட்டோரியின் அந்த ஓவரில் பொறுமை காத்திருக்கலாம். வெல்ல முடியாவிட்டாலும் இலக்குக்கு அருகில் கொண்டு சென்றிருந்திருக்கலாம். Run Rateக்காவது உதவியிருக்கும்.

  • அசத்தப்போவது யாரு பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டும். இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபற்றுவது எனக்கு உடன்பாடு இல்லாத விடயம். சுயமாக சிந்தித்து ஒரு 16 வயதுக்கு மேல் அவர்கள் கொமடி பண்ணினால் பரவாயில்லை. அம்மாவின் அப்பாவின் திணிப்புகளால் பிஞ்சில் வெம்பி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பிரக்ஞை உள்ள ஒருவராவது எதிர்க்கவில்லயா?

  • மின்னல் நிகழ்ச்சி ஆர்வத்துடன் பார்க்க வேண்டியதாகியது. ரங்காவுக்கோ அல்லது அஸாத் சாலிக்காகவோ அல்ல. நீண்ட காலத்தின் பின் சுவாரசியமாக்கிய ஹரீஸுக்காக.

    மின்னலின் ஆஸ்த்தான அரசியல்வாதிகளாக இருந்த ரவி ராஜ், சிவாஜிலிங்கம், பஷீர் சேகுதாவூத், இராதா கிருஷ்ணனின் வரிசையில் விரைவில் அஸாத் சாலியும் ஆனந்த சங்கரியும் சேர்ந்திருகிறார்கள் என்று தெரிகிறது,

    தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய ரங்காவின் பேச்சுக்கள் மகா கொமடி. இவர்தான் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட்டிவிட்டு கூத்து பார்க்க நினைத்தவர். (இருவரும் சண்டை பிடிக்க வேறு நாள் வருகிறோம். இப்போது மூதூர் பற்றியே பேசுவேம் என்று ரங்காவுக்கு ஆப்படித்தது பசுமையாக இன்றும் இனிக்கிறது) மூதூர் சம்பவம் தொடர்பாக மழுப்பல் போக்கை கையாண்டவர். சாத்தான் வேதம் ஓதுகிறது. தயவு செய்து அந்த நாய் கதையை விடுமாறு அவரை யாராவது சொல்லுங்கள். வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவன்..

    அதில் மகா கொமடி, ஹரீஸிடம் கேள்விகேட்ட அந்த கல்முனை நபரை உங்களுக்கு தெரியுமா என்று ஹரீஸிடம் கேட்டதுதான். ஒரு நகரத்தில் வாழும் எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டியது மேயரின் கடமையா என்ன? பட்டதாரி ஒருவர் கேட்கும் கேள்வியா இது? என்ன கொடும சார்.

  • EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்

    காலத்தை வென்ற Cartoonகள்

    நேற்று இரவு யதேச்சையாக என் pen driveஇல் சேமிக்கபட்டிருந்த படங்களை பார்த்த்போது 2007இல் நான் save பண்ணி வைத்திருந்த 8 cartoonகளை காண நேரிட்டது. 2009இல் இவை புது அவதாரம் கருத்து ரீதியாக எடுத்திருப்பதாக நான் உணர்ந்ததால்உங்களுடன் பகிர்கிறேன். இந்த cartoonகள் ஜெfப்ரி, கிஹான் டி சிக்கேரா, அவந்த ஆட்டிகல ஆகியோரால் வரையப்பட்டவை.



























    c








    EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்