Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label advertisment. Show all posts
Showing posts with label advertisment. Show all posts

சம்பளம் 25,000/- ++


சில மாதங்களுக்கு முன் வீரகேசரி பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஒன்றை  Personal Secretry என்றால் யார்?  என்ற தலைப்பில்  தந்திருதேன். 

சென்ற ஞாயிறு The Island இல் வெளியான விளம்பரம் கீழே..

இளம் பெண் உதவியாளரை இந்த இளம் ஒண்டிக்கட்டை வர்த்தகர் தேடுகிறார். சம்பளம் 25,000/- (குறைந்தது). உணவுடன் சுடுநீர் வசதி, சலவை இயந்திரம் தொலைக்காட்சி வசதிகள் கொண்ட தங்குமிடமும் பெக்கேஜ் இல் அடங்குகிறது! 

இவ்வாறான விளம்பரத்தை வெறும் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக வெளியிடும் பத்திரிகை அரசியல் வாதிகளை சாடுகிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஜேவிபி பத்வா தடை என்று தலைப்பும் எழுதுகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தமிழ் வளர்க்கும் மெட்ரோ நியூஸ

இலங்கையில் மெட்ரோ நியூஸ் என்று ஒரு பத்திரிகை வீரகேசரி பத்திரிகை குழுமத்திலிருந்து வருகிறது.

மெட்ரோ நியூஸ் என்றதுமே ஆங்கில பத்திரிகை என்று நினைத்துவிடாதீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கான பத்திரிகையே அது. ஏன் ஆங்கில பெயர் என்று சில தமிழ் வளர்க்கும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள். எல்லாம் பிரபலம் எனும் போதை.

முதல் பக்கம் ஒரு பெரியபடம் அத்துடன் இரண்டுவரி செய்திகள் நடுவில் 2 பக்கம் சினிமா ஒருபக்கம் தொலக்காட்சி நிகழ்ச்சி நிரல் ஒரு பக்கம் விளையாட்டு அத்துடன் ஓரிரண்டு பக்கம் மசாலா கதை (உண்மை சம்பவமாக அல்லது துப்பறியும் கட்டுரையாக) ஏறத்தாள ஜனனி தரத்தில் இருக்கும்.

இந்தப்பத்திரிகையின் தரம் பற்றி ஒரு பானை சோற்றுக்கு இரண்டு சோறு பதம் பார்ப்போமா?

இப்பத்திரிகையில் கேள்வி பதில் அம்சமும் இருக்கிறது. அதில்



கே: இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால தலைமைப்பொறுப்பு டில்ஷானிடம் வளங்கப்படுமா?

ப: ... ஒரு நாள் போட்டி ஒன்றின்போது டில்ஷான் தலைமை ஏற்று நடத்தியபோது மிகுந்த பதற்றமடைந்தார்.



கே: இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக யாரை கருதுகிறீர்கள்?

ப: ....ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுக்கும் சமிந்த வாஸ், பின்னுக்கு இடைஞ்சல் கொடுக்கும்..

இது பிரசுரமாகி ஒரு மாதம்ளவே இருக்கும். எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்?

வீரகேசரியில் வந்த விளம்பரம் Personal Secretry ? 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூபா. 10 மில்லியன் செலவு!


3 நிமிடம் மாத்திரம் நீளமானது இவ்விளம்பரம்!

தனியார் விளம்பர நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இவ்விளம்பரத்தில் 200 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ரூபா. 1500/- ஒரு நாளைக்கு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது. அத்துடன் புகையிரதம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் இதற்கு பயன்படுத்தப்படுவதால் ரயில்வே துறைக்கு மில்லியன் கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

யாழ் பாதை சீரமைப்பு திட்டத்துக்காக அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டு நிதி சேகரிக்கப்படுகிறது..

திட்டம் பற்றிய விபரங்கள்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

இந்த வாரம் நான் சந்தித்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

கடந்த செவ்வாய் கிழைமை திகதியை பார்த்தால் இப்படி ஒரு அதிர்ச்சி



















அன்றிரவு Cricinfoஇல் score பார்த்தால் New Zealand இன் எல்லா wicketகளும் வீழ்ந்த பின்னும் வெற்றி பெற இன்னும் 49 runகள் தேவை என்றது












BIG or small, Ceylinco protects them all என்பது Ceylinco இன் பிரபலமான விளம்பர வாசகம். அதன் குழும நிறுவனம் ஒன்றில் நடந்த மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட நிறுவன தலைவர் கொத்தலாவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது ..














EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

லோசனுடன் ஒரு shopping அனுபவம்


கடந்த புதன் கிழமை அர்த்த ராத்திரி 1மணிக்கு என் phone, ring ஆனது . யார்ரா இது இந்த நேரத்தில் call எடுக்கிறது என்று அலுத்துக்கொண்டு phoneஐ எடுத்து பார்த்தால் அட நம்ம லோசன்! என்னடா இது இந்த நேரத்தில் இந்த மனுஷன் call எடுக்குது? ஏதாவது breaking news கிடைத்து அதை எனக்கு சொல்ல போகிறாரோ என்று ஆர்வத்துடன் எடுத்தேன்

ஹலோ... லோசன் பேசுறேன். Good Evening

Good Morning சொல்லுங்க. என்ன விஷயம் சொல்லுங்க அண்ணா

இல்ல்ல்ல தூக்கமா?
(தெரிஞ்சிகிட்டு கேக்கிறாரா தெரியாம கேக்கிறாரா)

இல்ல அண்ணா தூக்கம் இல்ல. சொல்லுங்க

நாளைக்கு என்ன Plan
(அடப்பாவி plan கேக்கிற நேரமா இது )

இதுவரைக்கும் ஒண்ணும் இல்ல. என்ன விஷயம்

நாளைக்கு பின்னேரம் shopping போகணும் நீங்களும் வாறீங்களா?

பிரச்சினை இல்ல அண்ணா வாரேன். எங்க வர?

Town Hall க்கு பக்கத்தில இருக்கிற Odelக்கு

எத்தன மணிக்கு

சரியா 5.30க்கு

சரிண்ணா.

அப்ப சரி நளைக்கு பேசுவம். இப்ப தூங்குங்க. Good night

இப்பவும் Good Morning தான் சொல்லணும்.

நான் கடைசி வசனத்தை முடிப்பதற்குள் call ஆகி விட்டிருந்தது

அதுக்கப்புறம்

1.30 வரைக்கும் ஏன் இந்த நேரம் இந்த மனுஷனுக்கு shopping idea வந்தது என்று யோசித்த்தேன்

அதுக்கப்புரறம் 2.00 மணி வரைக்கும் எதுக்கு என்ன கூப்பிடுது என்று யோசித்த்தேன்

2.30 மணி வரைக்கும் என்ன வாங்கவா இருக்கும் என்று யோசித்த்தேன்

3.00 மணி வரைக்கும் எனக்கும் ஏதாவது வாங்கி தந்து birthday க்கு கொடுக்காத குறையை தீர்ப்பாரா என்று யோசித்த்தேன்

அதுக்கப்புறம் தூங்கினேன் என்று நம்புகிறேன்

அடுத்த நாள் 5 முறை லோசன் call எடுத்தார்.
எல்லாவற்றின் சாராம்சமும் வாரீங்கதானே என்றுதான் இருந்தது

5.20 க்கு நான் Odel ஐ அடைந்த போது லோசன் வந்திருந்தார்.

என்ன late?

?!?!?!?!

என்ன வாங்க அண்ணா?

T shirt வாங்க

யாருக்க்கு?

எனக்குத்தான்

என்ன விஷேஷம்? திடீரென்று?

ஒண்ணும் இல்ல சும்மா தான்

பிறகு நேரே ஆண்களுக்கான் ஆடைகள் இருக்கும் இடம் சென்றோம். ஏதோ ஒரு Brand இன் பெயரை சொல்லி கேட்டார். Sales staff காட்டிய பக்கம் சென்று மும்முரமாக t shirt தேடினார். அது ஆண்கள் பிரிவாக இருந்தாலும் அதிகளவு குட்டீஸ். அவங்க Boy friendக்கு ஏதாவது வாங்க வந்திருப்பாங்க போல. நான் நிம்மதியா குதிரைகளை நேட்டம் விட்டு கொண்டிருந்தேன். லோசனும் குட்டிகளை பார்த்து குறும்பாக சிரித்ததும் தெரிந்தது.

*1
5 நிமிடத்தில் ஒரு t shirtஐ தேர்ந்தெடுத்த லோஷன் புன்னகையுடன் fit on roomக்கு சென்றார். வெளியில் வரும்போது வெற்றிப்புன்ன்கையுடன் நிமிர்ந்த தோளும் ஏறு நடையுமாக வந்தார்.

எப்படி இருக்கு

கொஞ்சம் சத்தமாகவே கேட்டார் சத்தத்தில் disturb ஆன குட்டிகள் எங்கள் பக்கம் பார்த்து விட்டு ஓரிரு வினாடிகளில் மீண்டும் தங்கள் வேலையில் மும்முரமானார்கள்.

நல்லா இருக்கு


லோசனின் முகம் வாடியிருந்தது. அவர் குட்டிகளையே பார்த்து கொண்டிருந்தது அவர் உண்மயில் என் கருத்தை கேட்கவில்லை என்று புரிந்தது.


குட்டிகள் யாரும் கவனிக்காததால் t shirt இல் திருப்தி அடையாமல்


*போட்டு தடித்த எழுத்தில் இருப்பதை 3 முறை வாசிக்கவும்.

மூன்றாவது முறையும் குட்டீஸ் கவனிக்காததால் கடுப்பாகி போன லோஷன் Sales Boyஐ அழைத்தார்.

இது originalஆ?

ஆமா சார். Original தான் நல்லா பாவிக்கும்.

இல்ல.. பொய் சொல்ல வேணாம். நான் யார் என்று தெரியும்தானே? நுகர்வோர் அதிகார சபைக்கு complain பண்ண வேண்டி வரும்

இல்ல சார் original தான்

இப்ப TVல advertismentபோற Rebornஇதா?

ஆமா சார்

Advertismentல இந்த T shirtட போட்ட்தும் பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து கட்டி பிடிப்பாங்க

அதுக்கு?

அப்படி ஒண்ணையும் காணல்லியே

Sales Boy முறைத்தவனாக லோசனை பார்க்கும் சமயம்

என் கால்கள் Odel ஐ விட்டு வெளியே வந்திருந்தன..

குறிப்பு: அதுக்கப்புறம் என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக என்ன யாரும் சக்கரக்கட்டி இல் சொல்வது போல் நண்பத்துரோகி என்று சொல்ல வேண்டாம். அவருக்கு என்ன ஆகியது என்று அறியவே இந்த பதிவு. லோசன் அண்ணாவாவது வந்து பின்னூட்டத்துல மிச்சத்த சொல்லிட்டு போங்க

நீதி : முந்த நாள் செய்தது இன்று விளையும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Personal Secretry என்றால் யார்?

கடந்த 8 ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் இப்படியும் ஒரு விளம்பரம்.. இந்த விளம்பரத்தை பிரசுரித்த பத்திரிகையை நினைத்து பார்க்கிறேன்.. இவர்களின் விளம்பர கரும பீடத்தில் உள்ள ஊழியர்களை நினைத்து பார்க்கிறேன்.. (பெரும்பாலும் அதுவும் ஒரு பெண்ணாக இருக்க கூடும்) இவர்கள்தான் விடுதலை, சுதந்திரம் பற்றியும் எழுதுகிறார்கள்.. ஆனால் இவர்கள் காசு கொடுத்தால் எதையும் பிரசுரிப்பார்கள்.

இந்த விளம்பரத்தில் உள்ள அன்பு, பண்பு, அர்பணிப்பு, தோழி, சேவை என்ற சொற்கள் எந்த அர்த்தத்தில் பாவிக்க பட்டிருக்கிறது?

கடத்தல் வெள்ளை வான் கப்பம் என்று பல விஷயம் இருப்பதாக பத்திரிகை ஒவ்வொருநாளும் அலறும்போது ஒருவர் பயமில்லாமல் தன்னை கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டி தன் இலக்கத்தையும் பிரசுரிப்பதென்றால்?

வீரகேசரி Adventure - பெரிய adventure தான் போங்க.....!!!!


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்