நலம். உங்கள் நலத்திற்கு இறைவன் எப்போதும் அருள்பாலிக்க வேண்டிக்கொள்கிறேன்.
முதலில் பதிவுலகில் நான் இருப்பதற்கான காரணங்களையும் சொல்லவேண்டும்.
லோசனின் பதிவுகளினூடாக பதிவுலகு பற்றிய அறிமுகத்தை பெற்றுக்கொண்டபோதும் அதே காலத்தில் ஹிஸாம் எழுதிய "வடபுல சோனிகள் .." என்று ஆரம்பிக்கும் பதிவில் நடந்த விமரிசனங்கள்தான் என் பாதையை தீர்மானித்தது.
எல்லோரும் ஒன்றை பற்றி மற்றும் பேசுகின்ற கடிவாளம் போட்டமாதிரியான இலங்கை பதிவுலகில், எனக்குத்தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவுசெய்தல் அவசியம் என உணர்ந்தேன். கருத்துக்கள் சரியோ பிழையோ (அது அவரவர் பார்வையை பொறுத்து என்பது நீங்கள் அறிந்ததே) அவை சொல்லப்படுவதன்மூலம் இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது என்று உணரச்செய்வதே என் எழுத்தின் நோக்கம். இது ஆரோக்கியமான ஜனநாயத்திற்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.
எனது முதல் 3 பதிவுகள் நானே எழுதி நான் மட்டுமே படித்திருக்கிறேன். அதை பெரிதாக ரீச் ஆகவில்லை.
நவீன தொடர்பாடல் தொழிநுட்பமும் பெட்ரோலும்
ROBIN HOOD அரசாங்கம்
பெட்ரோல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைச்சரவையும்
ஆனால் இவையே நான் எழுத நினைக்கும் பதிவுகள். என்ன செய்ய.. இவை எவை பற்றியும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமிலலை. இவையெல்லாம் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் ரீச் ஆகும். ஆனால் அது பற்றி எழுத அங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அதன்பின் கொஞ்சம் தமிழ் மக்கள் படிக்கிறமாதிரி பதிவுகள். ஆனால் அவற்றைபற்றி பதிவுலக ஆசானிடம் கருத்து கேட்டால் எல்லாம் மொக்கை என்றார். பிறகு நான் கவலைப்படுவேன் என்று நினைத்தாரோ என்னவோ பலருடையதும் மொக்கைதான் என்றார்.
ஆக மீண்டும் எழுதவேண்டிய தலைப்புகள் பற்றி என்னுடைய சீர்தூக்கலை செய்தேன். இப்போது என் பதிவுகளை "என்ன கொடுமை சார்" என்கிறார்கள். அப்பாடா.. அது போதும்.. இந்தப்பாதையிலேயே இனியும் தொடர இருக்கிறேன்.
ஆயினும் பலர் குற்றஞ்சாட்டுதல் போல் கவனிக்கப்படவேண்டும், பெருமை பெறவேண்டும் என்பது என் நோக்கமல்ல. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
ஏறத்தாள 10 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது "அறிவிப்பாளர்கள் ஏன் சமூகத்திற்கு பெரிதாய் எதுவும் செய்வதில்லை" என்ற பேச்சு வந்தது. அப்போது என் நண்பன் ஒருவன் கூறிய காரணம், "அது புகழை மையமாக கொண்டு இயங்கும் உலகு.. அவ்வாறான உலகில் தனது புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்று நினைப்பதை எதிர்ப்புகள் வரக்கூடும் என்று நினைப்பதை அவர்கள் செய்யமாட்டார்கள்" என்பது இன்றும் என் மனதில் இருக்கிறது.(அண்ணண் மாரே இதுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன் 10 வருஷத்திற்கு முன் இருந்த பிரபல அறிவிப்பாளர்கள் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை கவனித்தல் நலம்)
அதனால்தான் நான் எக்சார் ஆகவே அடையாளம் காட்டுகிறேன். எனது தனிப்பட்ட அடையாளம் இருந்தால்தானே புகழுக்கு ஆசை வரும்...
யாழ் நூலக எரிப்பு தொடர்பாக என்னுடைய பதிவு தொடர்ந்தும் பிழையாகவே விளங்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். எனவே என்பார்வையில் பொருத்தமற்ற பின்னூட்டங்களை நீக்க நான் முடிவெடுத்தால் ஏறத்தாள எல்லா பின்னூட்டங்களையும் நீக்கவேண்டிவரும்.
ஆனாலும்
நான் பின்னூட்டங்களை ஒருபோதும் மட்டுறுத்தியதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். எனவேதான் என்னைப்பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பின்னூட்டங்கள் கூட அப்படியே இன்றும் இருக்கின்றன. (என்னுடைய பெயரை இழுத்த ஓரிரண்டு பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன். எடிட் செய்திருக்கிறேன்.)
ஆயினும் இப்பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வந்த அழுத்தங்களை தொடர்ந்து, பின்னூட்டங்களை மட்டுறுத்துவதிலலை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் முகமாக, பதிவை நீக்க முடிவெடுத்தேன்.
அம்முடிவு உலகில் யாரையும் விட எனக்கே வலிதருவது. ஆயினும் அம்முடிவை எடுக்கவெண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்ய..
தொடர்ந்தும் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கும்
எக்சார்
குறிப்பு
1) தம்பி அசோக்பரனுக்கு, நான் உங்களை சாரு என்று கூறியதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது உண்மை. அது உங்கள் எழுத்து நடைக்காக அலல.. Buy me a Coffee என்ற உங்களது widget க்காக மட்டுமே. சாருதான் எல்லாத்துக்கும் காசு கேக்கிறார். அவர் பாசையில் சொல்வதானல் உங்கள் "அது" (சிறுவர் என்றால் என்ன பெரியவர் என்றால் எனக்கு என்ன?) விறைப்படைவதற்காக எழுதினால் சுகம் உங்களுக்கு. எதற்கு எங்களிடம் காசு கேட்கிறீர்கள்? நாங்கள் ஏன் காசு செலவழித்து உங்களுக்கு "சரக்கு" புடிச்சுத்தரணும்? மற்றப்படி நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். வாகன தீர்வை பற்றி நீங்கள் மட்டும்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
2) லோசன் அண்ணா, கங்கொன், ஆதிரை போல் சண்டைபிடுச்சுக்கிட்டே என்னோடு நட்பாக இருக்க நீங்கள் தயார் என்றால் வலது இடது பக்கத்தில் இருக்கும் Facebook, Twitter link களை click செய்யவும். :D :D :D
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.