04 August 2011

யாழ் பாரளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை

அண்மையில் தேர்தல் ஆணையாளரினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதிநிதித்துவத்தை 9 இலிருந்து 6 ஆக குறைக்கும் முடிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களாக யுத்தம் காரணமாக யாழ் மக்கள் நாட்டிற்குள்ளேயும், யுத்தத்தை காரணமாக காட்டி பொருளாதார நலன்களுக்காக வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடப்பெயர்வு தற்காலிகமானதாவோ அல்லது நிரந்தரமானதாவோ வகைப்படுத்தப்படமுடியுமானபோதும்து பெரும்பாலும் பல சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் தற்காலிகமான இடப்பெயர்வுகளாகவே ஒரு பக்கச்சார்பாளர்களினால் காட்டப்படுகின்றது.

இவ்வாறான பல நிரந்தர இடப்பெயர்வுகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படாமையினால் அரச புள்ளிவிபரங்களில் கணக்கெடுக்கப்படமுடியாமல் போயிருந்தது.

வாக்காளர் இடாப்பு இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால்

1.) கள்ள வாக்கு பதிவோருக்கும் சவுகரியமாக இருந்தது.

 2) உண்மையில் அப்பிரதேசத்தில் இருந்த வாக்காளர்கள் பதுவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக்காட்டிலும் குறைவாக இருந்தமையால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தல்களில் ஆர்வம் காட்டவில்லை என்று அரச எதிர்ப்பாளர்களுக்கு சொல்ல முடியுமாக இருந்தது.

மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பது நியாயமானது. இந்த அடிப்படையில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மக்கள் எண்ணிக்கை குறைந்தால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் குறைக்கப்படலும், சனத்தொகை அதிகரிக்கும் இடங்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படலும் கட்டாயமானதாகும்.

ஆயினும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு தற்காலில் இடப்பெயர்வுகள் காரணமாக ஏற்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு அரசு அநீதியிழைப்பதாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதைவிடுத்து குறிப்பிட கால இடைவெளிகளில் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் இலங்கை பூராவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் என்ற உறுதி மொழியை அரசு வழங்கவேண்டும். இது குழப்பக்காரர்களின் வாயை அடைக்கும்.

இன்னும் வேறு இடங்களில் குடிபெயர்ந்துள்ளவர்களை அந்தந்த பிரதேசங்களிலேயே வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும்.

இதேபோல் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகிரப்படும் அரச வளங்கள் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டு சரியாக பகிரப்பட வேண்டும். இதன் மூலம் நாடலாவிய ரீதியில் மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.