07 March 2010

நான் அவன் இல்லை - இலங்கையில்


நான் அவன் இல்லை படத்தைபோல் அச்சு அசலாக இல்லாவிட்டாலும், ஏறத்தாள அந்த பாணியில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிவந்த ஒரு நபர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செல்வந்த வர்த்தகராக தன்னை பெண்களிடம் இனம்காட்டியிருக்கும் இவர் மணமகன் தேவை விளம்பரத்திலிருந்தே மஹரகம், மாத்தறை, சிலாபம் ஆகிய பிரதேசத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இவர்களில் விவாகரத்து பெற்றவர்களும் அடங்குகின்றனர்.

திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை காட்டும் இவர், பெண்கள் இவர்மீது அதிக நம்பிக்கை கொள்வதற்காக பெருந்தொகையான பணத்தை திருமண மண்டபத்திற்கு முற்பணமாக செலுத்தி வந்திருக்கிறார்.

இதன் பின், புதுமண தம்பதியினரின் பாவனைக்கான வாகனத்தை இறக்குமதிசெய்ய அவசரமாக தேவைப்படுவதாக கூறி பெருந்தொகைப்பணத்தை இவர் பெண்களிடமிருந்து பெற்றுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டதும் ஹோட்டல் அறையில் குறிப்பிட்ட பெண்ணை சந்திக்கும் இவர், அதை mobile phone camera ஊடாக முழுவதுமாக பதிவுசெய்திருக்கிறார். பின்னர் இந்த videoஐ காட்டி திருமணத்தை நிறுத்துமாறும் அவ்வாறு செய்யாவிடின் இந்த videoஐ பகிரங்கப்படுத்தப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதற்கு பணியாத பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார்.

கைதுசெய்யப்படும்போது 15 லட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு ஆடம்பர வாகனங்களும் இவரிடம் இருந்ததாகவும், இவர் ஆகக்குறைந்தது 20 பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.