2011 இன் முதல் பதிவு ஒரு அறிவித்தலாக வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
பதிவின் கருப்பொருளுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் பதிவுலகில் வழமை என்றாலும், வேறொருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எனது வலைப்பதிவை அண்மைக்காலமாக சிலர் பாவிக்கத்தொடங்கியிருப்பதனால் இன்று முதல் பின்னூட்டங்கள் எனது அனுமதியின் பின்னரே பிரசுரிக்கப்படும் என்பதை அறியத்தருகிறேன்.
எனது கடைப்பதிவான ரத்த சரித்திரத்திற்கு தேவையற்ற பின்னூட்டங்கள் வந்திருந்தன. ஏதாவது ஒன்றை சொல்ல ஆயிரம் வழி இருக்கும் இக்காலத்தில் என்னை ஒரு கருவியாக்குவதை அனுமதிக்கப்போவதில்லை.
இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.
இன்னும் எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.